இன்றைய (02.03.2022) வெளிநாட்டு நாணய மாற்று விகிதம்
இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (02.03.2022) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு: இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (02.03.2022) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு:
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (02.03.2022) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு: இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (02.03.2022) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு:
மியன்மாருக்கும் இலங்கைக்கும் இடையில் நிலவும் சுமுகமான இருதரப்பு உறவுகளை நோக்காகக் கொண்டு, மனிதாபிமான அடிப்படையில் மற்றும் மியன்மார் வைர விழா யூனியன் தினத்தை முன்னிட்டு, சிறையில் அடைக்கப்பட்டு தண்டனை அனுபவித்து வரும் ஏழு இலங்கை மீனவர்களுக்கு மியன்மார் யூனியன் குடியரசு அரசாங்கம் மன்னிப்பு வழங்கியுள்ளது. மியன்மார் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்ததால், ஏழு இலங்கை மீனவர்களுடன் கூடிய ‘துஷன் புதா’ IMUL-A-0741NBO என்ற இலங்கை மீன்பிடிக் கப்பல் மியன்மார் அதிகாரிகளால் 2021 டிசம்பர் 03ஆந் திகதி கைது செய்யப்பட்டது. … Read more
ஏறாவூர் நகர பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட இளைஞர்களின் நலன் கருதி இலகு வாகன பயிற்சியும், சாரதி அனுமதிப்பத்திரமும் இலவசமாக பெற்றுக் கொடுக்கப்படவுள்ளது. இதற்காக 96 இளைஞர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர் இளைஞர்களின் பொருளாதார மேம்பாட்டினை கருத்திற்கொண்டு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான அல்ஹாஜ் அல்ஹாபிஸ் நஸீர் அஹமட் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒரு இளைஞருக்கு ரூபா 25,000 செலவில் மூன்று மாத கால வாகன சாரதி பயிற்சியும்இ … Read more
இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2022 மார்ச்02ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2022 மார்ச் 02ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது குறைந்த அழுத்தப் பிரதேசம் தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளிலும் அண்மையாகவுள்ள தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளிலும் தொடர்ந்து நிலை கொண்டுள்ளது. இது அடுத்த சில நாட்களில் மேலும் வலுவடைந்து கொண்டு மேற்கு – வடமேற்கு திசையில் இலங்கையின் கிழக்கு கரையை நோக்கி நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. … Read more
பெரும்போகத்தில் நெல் அறுவடை குறைந்ததால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஊக்குவிப்புக் கொடுப்பனவைச் செலுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஹெக்டயருக்கு 50 ஆயிரம் ரூபா வழங்கப்படவுள்ளது. அடுத்த வாரம் முதல் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும். கடந்த பெரும்போகத்தில் 11 இலட்சம் விவசாயிகளினால் மேமற்கொள்ளப்பட்ட சுமார் எட்டு இலட்சம் ஹெக்டயர் நிலப்பரப்பில் அறுவடை குறைந்துள்ளது. இவர்களுக்கு இந்த ஊக்குவிப்புக் கொடுப்பனவை வழங்க அமைச்சரவை அனுமதி அளித்திருப்பதாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். உயர்ந்த பட்சம் ஐந்து ஏக்கர் நிலப்பரப்பிற்கு இந்த இழப்பீட்டை வழங்கத் … Read more
இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (28.02.2022) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு:
எல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கித்தல் எல்ல நீர்வீழ்ச்சியை பார்வையிட சென்ற வெளிநாட்டு பிரஜை ஒருவர் நீர்வீழ்ச்சியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச் சம்பவம் நேற்று (27) நண்பகல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த 33 வயதுடைய பிரஜை ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சடலம் பதுளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இன்று (28) பிரேத பரிசோதனை இடம்பெறவுள்ளது. இந்த சம்பவம் குறித்து எல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இன்று (28) முதல் சதொச விற்பனை நிலையங்களினூடாக சலுகை விலைக்கு மஞ்சள் தூள் வழங்கக்கூடிய வகையில் வேலைத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார். அதன்படி, நுகர்வோருக்கு ஒரு கிலோகிராம் மஞ்சள் தூளை ரூ.2,400க்கு சதொச விற்பனை நிலையங்களினூடாக கொள்வனவு செய்ய முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தற்போது சந்தையில் ஒரு கிலோ கிராம் மஞ்சள் தூள் சுமார் ரூ.4,000 வரை விற்பனை செய்யப்படுகின்றது. இதேவேளை, 350,000 கிலோ கிராமுக்கும் அதிகமான மஞ்சள்களை பலசரக்கு … Read more
ஶ்ரீனந்தாராம விகாராதிபதி தெனிகே ஶ்ரீ சிரினிவாச ஆனந்த தேரருக்கு தர்மகீர்த்தி கௌரவ நாமத்துடன் சன்னஸ்கோரள மகாதிசா உபபிரதான பீடாதிபதியாக நியமிக்கும் நிகழ்வு 27 ஆம் திகதி மல்வத்து அனுநாயக்க தேரர் வண.திம்புல்கும்புரே விமலதர்ம தேரரின் தலைமையில் நடைபெற்றது. நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கௌரவ நாமத்தை வழங்கி வைத்தார்.. இதன் போது மல்வத்து பீடத்தின் அனுநாயக்க தேரர். அதி வணக்கத்திற்குரிய திம்புல்கும்புரே விமலதம்ம தேரர் கருத்துத் தெரிவிக்கையில், இந்த மத்திய மாகாண அதிவேக நெடுஞ்சாலையானது மத்திய மாகாணத்திற்கு … Read more
ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் இம்மாதம் 25 ஆம் திகதி வரையில் நாட்டில் இடம்பெற்ற வாகன விபத்துக்கள் 434 . இதில் 457 பேர் உயிரிழந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த வாரத்தில் மாத்திரம் பதிவான மரண எண்ணிக்கை 44 ஆகும். இந்த வாகன விபத்துக்களுக்கு முக்கிய காரணம் கவனயீனமாகும். இதனால் சாரதிகள் வீதி ஒழுங்குமுறைகளில் கூடுதலான கவனம் செலுத்த வேண்டும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.