புதுடில்லியில் உள்ள தூதரகப் படையினருக்கு மத்தியில் வெளிநாட்டு அமைச்சர் பீரிஸ் உரை  

வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், 2022 பெப்ரவரி 18ஆந் திகதி புதுடில்லியை தளமாகக் கொண்டுள்ள இராஜதந்திரப் படையினருக்கு மத்தியில் உரையாற்றினார். பெப்ரவரி இறுதி வாரத்தில் ஆரம்பமாகவுள்ள மனித உரிமைகள் பேரவையின் எதிர்வரும் 49ஆவது கூட்டத் தொடருக்கு முன்னதாக மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான முன்னேற்றம் குறித்த தகவல்களைப் பகிர்வதே இந்த மாநாட்டின் நோக்கமாகும். தற்போதைய அபிவிருத்திகளைப் பகிர்ந்து கொள்வதற்காக அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட விளக்கங்களின் தொடர்ச்சியாக, புதுடில்லியைத் தளமாகக் கொண்ட இலங்கைக்கான அங்கீகாரம் பெற்ற … Read more

மறுசீரமைக்கப்பட்ட 200 பஸ்கள் மீண்டும் சேவைக்கு

பழுதடைந்த நிலையில் பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்டிருந்த 200 பஸ்களை மறுசீரமைத்து மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்ளும் நிகழ்வு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று (22) முற்பகல் ஜனாதிபதி அலுவலக வளாகத்தில் இடம்பெற்றது. வாகன ஒழுங்குறுத்துகை, பஸ் போக்குவரத்துச் சேவைகள், புகையிரதப் பெட்டிகள், மோட்டார் வாகனக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம அவர்களின் யோசனைக்கமைய, போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி அவர்களின் ஆலோசனையின் பேரில் இந்த வேலைத்திட்டம் முன்னெக்கப்பட்டது. வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டை அடுத்து, பஸ் கொள்வனவும் … Read more

முல்லைத்தீவில் முத்தையன் கட்டு குளத்தின் கீழ் இவ்வாண்டு 3,731 ஏக்கர் நிலப்பரப்பில் சிறுபோக செய்கை

முல்லைத்தீவு மாவட்டத்தின் பாரிய நீர்ப்பாசன குளமான முத்தையன் கட்டு குளத்தின் கீழ் இவ்வாண்டு 3,731 ஏக்கர் நிலப்பரப்பில் சிறுபோக செய்கை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவற்றில் 2,746 ஏக்கர் நிலப்பரப்பில் நெற் செய்கையும் 984 ஏக்கர் நிலப்பரப்பில் வேறு பயிர்ச் செய்கையும் மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. பயிர்ச் செய்கைக்கு எதிர்வரும் முதலாம் திகதி குளத்தின் நீர் திறந்துவிடப்படும் என்றும் எதிர்வரும் ஜூலை மாதம் 15ம் திகதி வரையான காலப்பகுதியில் நீர் விநியோக காலப்பகுதியாக இருக்கும் என்றும் குறித்த காலப்பகுதியில் விவசாயிகள் … Read more

5 வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகளுக்கு விரைவில் கொவிட் தடுப்பூசி

5 வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகளுக்கு விரைவில் கொவிட் தடுப்பூசி வழங்க எதிர்பார்த்திருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இவர்களுக்கு கொவிட் தடுப்பூசி வழங்கப்படாவிட்டால் நோய் நிலைமை மோசமடைந்து சிக்கல்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாக லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார். இதேவேளை, கொவிட் தடுப்பூசி வழங்கப்படாவிட்டால் பிள்ளைகளுக்கு கொவிட் தொற்றுடன் தொடர்புபட்ட ‘மிஸ் சி’ ஆரடவளைலளவநஅ ஐகெடயஅஅயவழசல ளுலனெசழஅந in ஊhடைனசநn (ஆஐளு-ஊ)நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும்;, இது … Read more

வைரஸ் தொற்று காரணமாக நாளாந்தம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

கொவிட் வைரஸ் தொற்று காரணமாக நாளாந்தம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருவதாக பொரளை லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலை அறிவித்துள்ளது. நாட்களில் கொவிட் தொற்றுக்கு சமனான வைரஸ் காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் போன்றன பரவி வருவதனால், பெற்றோர்கள் தமது குழந்தைகளின் ஆரோக்கியம் குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் ஜி. விஜேசூரிய வலியுறுத்தியுள்ளார்.

அனைத்து அரச அலுவலர்களுக்கும் விசேட அறிவிப்பு

அனைத்து அரச அலுவலர்களும் ஏப்ரல் மாத இறுதிக்குள் முழுமையாக தடுப்பூசி பெற்றுக்கொள்ள வேண்டும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. முழுமையாக தடுப்பூசி பெற்றுக்கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்குச் செல்வதை தடுக்கும் வகையில் இத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. அனைத்து அரச நிறுவனங்களும் பொது இடங்கள் என்பதால், அந்த இடங்களில் பணியாற்றும் அனைவரும் தடுப்பூசி பெற்றிருக்க வேண்டும் என சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன வலியுறுத்தியுள்ளார். ஏதேனுமொரு கடமைக்காக நிறுவனம் ஒன்றிற்கு  செல்லும் எவருக்கும், சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் அலுவலர்கள் … Read more

மலே வீதியில் இருந்து கொம்பனித்தெரு ரயில் நிலையம் வரை மேம்பாலத்தின் அடிப்பகுதியில் வாகன தரிப்பிடம்

மலே வீதியில் இருந்து கொம்பனித்தெரு ரயில் நிலையம் வரை மேம்பாலத்தின் அடிப்பகுதியில் வாகன தரிப்பிடத்தை நிர்மாணிக்கவும், வாகன நிறுத்துமிடங்களின் இருபுறமும் கொள்கலன்களுக்கான சேவை பாதைகள் மற்றும் உத்தரானந்த மாவத்தையில் நிர்மாணிக்கப்படும் மேம்பாலத்திற்கு சமாந்தரமாக வீதியின் இருபுறங்களிலும் நடைபாதைகள் நிர்மாணிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். கொழும்பு புறநகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் நீதிபதி அக்பர் மாவத்தை மற்றும் உத்தரானந்த மாவத்தை வரை நிர்மாணிக்கப்படும் இரட்டை மேம்பால பணிகளை நெடுஞ்சாலைகள் அமைச்சரும் … Read more

18.02.2022 அன்று இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்கள் வருமாறு:

18.02.2022 அன்று இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்கள் வருமாறு: