`2029-ல் அமித் ஷா காலியாகிவிடுவார்' – சொல்கிறார் அமைச்சர் ஐ.பெரியசாமி

திண்டுக்கல் மாவட்டத்துக்குப் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜனவரி 7-ம் தேதி வருகை தர உள்ளார். இதற்காக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மைதானத்தில் மேடைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனை பார்வையிடுவதற்காக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி வருகை தந்தார். பின் அமைச்சர் ஐ.பெரியசாமி செய்தியாளர்களைச் சந்தித்து பேசும்போது, ” திண்டுக்கல்லுக்கு வருகை தரும் முதலமைச்சர் ரூ.1,500 கோடிக்கு அதிகமான மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார். மேலும் 2 … Read more

ரூ.5 கோடி மோசடி புகார்; மனைவியுடன் தேனிலவுக்கு சென்ற பிக் பாஸ் பிரபலம் மும்பை விமான நிலையத்தில் கைது

பிக் பாஸ் பிரபலமான ஜெய் துதானே, கடந்த 10 நாட்களுக்கு முன்புதான் தனது நீண்ட நாள் காதலி ஹர்ஷலா பாட்டீலை திருமணம் செய்து கொண்டார். அவர் தனது மனைவி, சகோதரர் மற்றும் சகோதரரின் மனைவி ஆகியோருடன் தேனிலவுக்கு புறப்பட்டார். மும்பை விமான நிலையத்தில் அவர் வெளிநாடு செல்ல தடை விதிக்கும் வகையில் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டு இருந்தது. விமானநிலையத்தில் அவரது பாஸ்போர்ட்டை சோதித்தவுடன் அவருக்கு எதிராக தேடப்படும் நபர் நோட்டீஸ் வெளியிடப்பட்டு இருப்பதை அதிகாரிகள் தெரிந்து கொண்டு … Read more

"அதிகாரப் பகிர்வு குறித்து விவாதிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது" – காங். எம்.பி மாணிக்கம் தாகூர்

“அதிகாரம் மட்டும் அல்ல – அதிகாரப் பகிர்வையும் விவாதிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதுதானே” என்று காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருப்பது மீண்டும் பேசுபொருளாகி இருக்கிறது. விஜய்யின் தமிழக வெற்றிக் கழத்துடன், காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகப் பேச்சுகள் அடிபட்டு வரும் நிலையில், மாணிக்கம் தாகூரின் இந்தப் பதிவு மீண்டும் கவனம் பெற்றிருக்கிறது. தவெக தலைவர் விஜய் இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “யாருக்கு வாக்கு?” – IPDS தரவு சொல்லும் … Read more

BB Tamil 9: பிக் பாஸ் வீட்டில் வியானா; பணத்தை சேர்க்கும் போட்டியாளர்கள்! – இது பணப்பெட்டி டாஸ்க் 2.O

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 91 நாள்களைக் கடந்துவிட்டது. கடந்த வராம் 9 பேர் பிக் பாஸ் வீட்டில் இருந்த நிலையில் தற்போது 6 பேர் தான் இருக்கின்றனர். கம்ருதீன், பார்வதி இருவரும் ரெட் கார்ட் வாங்கி வெளியேறிய நிலையில் சுபிக்ஷா கடந்த வாரத்திற்கான எவிக்ஷனில் வெளியேறியிருக்கிறார். BB Tamil 9 BB Tamil 9: “தப்பு பண்ணிட்டேன்.!”- சாண்ட்ராவிடம் மன்னிப்பு கேட்ட பாரு; காலில் விழுந்த கம்ருதீன் இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் புரொமோவில், வியானா … Read more

Doctor Vikatan: பிரசவ தேதியைத் தாண்டியும் குழந்தை பிறக்காவிட்டால் காத்திருக்கலாமா?

Doctor Vikatan: கர்ப்பிணிகளுக்கு மருத்துவர்கள் பிரசவ தேதியைக் குறித்துக்கொடுக்கிறார்கள். சில பெண்களுக்கு அந்தத் தேதியில் பிரசவம் நடப்பதில்லை. அதைத் தாண்டிப் போவதும் நடக்கிறது. மருத்துவர்கள் குறித்துக்கொடுத்த  தேதியில் பிரசவம் நடக்கவில்லை என்றால் அதற்காகக் காத்திருப்பதில் என்ன பிரச்னை…  அப்படி எத்தனை நாள்கள் காத்திருக்கலாம்?  பதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி   மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி பிரசவ தேதியைத் துல்லியமாகக் கணிக்க வேண்டுமென்றால் கர்ப்பம் உறுதியான காலகட்டமும் சரியாக … Read more

காஞ்சிபுரம் கயிலாசநாதர் கோயில்: போரை நிறுத்திய பொக்கிஷம்; இந்த ஈசனை சுற்றி வந்தால் மறுபிறவி இல்லை!

காஞ்சியின் பெருமைக்குப் பெருமை சேர்க்கும் அதிசயம் கயிலாசநாதர் கோயில் என்பர். இந்தக் கயிலாசநாதர் கோயிலின் பிரமாண்ட வடிவமே பின்னர் உருவான தஞ்சை பெரிய கோயில், கங்கை கொண்ட சோழபுரம், தாராசுரம் போன்ற பிரம்மாண்ட கோயில்களின் எழுச்சிக்கு அடிப்படையாக அமைந்தது என்றும் சொல்வார்கள். இந்த ஆலயத்தைப் பற்றிச் சொல்ல ஆயிரம் ஆயிரம் விஷயங்கள் உண்டு. இன்னும் அபூர்வமான சூட்சும வடிவங்களை இந்தக் கோயில் தாங்கிக் கொண்டுள்ளது என்றே ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். காஞ்சிபுரம் நகரின் மத்தியிலிருந்து சுமார் 1 மைல் … Read more

'தர்மயுத்தம் – 100, Audio Release யாத்திரை, குட்டிக் கதைப் பயணம்' – தமிழகத் தலைவர்களின் நடைபயணங்கள்!

ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ திருச்சியில் இருந்து மதுரை வரை மேற்கொள்ளும் சமத்துவ நடைபயணத்தை திருச்சியில் தொடங்கினார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து நடைபயணத்தைத் தொடங்கிவைத்தார். இதுபோல் நமது எல்லாத் தலைவர்களும் என்னென்ன நடைபயணத்தை, எங்கிருந்து, என்ன காரணத்துக்காகத் தொடங்கலாம் என்று காரில் வாக்கிங் சென்றபடி யோசித்தோம்… மு.க. ஸ்டாலின் பயணத்தின் பெயர்: ஊழல் இல்லா திராவிட மாடல் நடைபயணம் பாதை: சென்னை சட்டமன்றத்திலிருந்து அவரோட வீடு வரை. நோக்கம்: தி.மு.க-வின் பொற்கால ஆட்சியில் தமிழகம் போதையில்லாத … Read more

பொங்கல் பரிசுத் தொகை: “திமுக அஞ்சி நடுங்கிக் கொண்டிருக்கிறது" – அன்புமணி ராமதாஸ் காட்டம்

தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாகக் கொண்டாடும் வகையில் ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசு சார்பில் ரேஷன் கடைகள் மூலம் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. ஸ்டாலின் இந்நிலையில், தமிழ்நாட்டில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.3000 வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக பா.ம.க தலைவர் அன்புமணி தன் எக்ஸ் பக்கத்தில், “தமிழர் திருநாளாம் தைப்பொங்கலையொட்டி அரிசி குடும்ப அட்டை வைத்திருக்கும் அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் தலா ரூ.3,000 … Read more

வெனிசுலா அதிபர் சிறைப்பிடிப்பு: கண்டனமும் பேச்சுவார்த்தை அழைப்புகளும்; உலக நாடுகள் சொல்வது என்ன?

வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மாதுரோவை அமெரிக்கா சிறைப்பிடித்ததற்கு அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்குப் பல நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. ரஷ்யா – “வாஷிங்டனின் இந்த முடிவு கண்டனத்திற்குரியது. வாஷிங்டன் கூறும் காரணம் அவர்கள் செய்த காரியத்தை நியாயப்படுத்தாது. நடைமுறைக்குச் சாத்தியமான விஷயத்தைத் தாண்டி இதில் அரசியல் வெறுப்புணர்வுதான் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளது. மதுரோ மற்றும் அவரது மனைவி வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டது குறித்து அமெரிக்கா உடனடியாக விளக்கம் வழங்க வேண்டும்”. நிக்கோலஸ் மதுரோ வெனிசுலா: ‘டார்கெட் எண்ணெய் வளம்?’ – அதிபர் … Read more