திருச்சி: "தமிழ்நாட்டிற்கு ஆயிரம் அமித் ஷாக்கள் வந்தாலும் எந்த மாற்றமும் இருக்காது" – சீமான் காட்டம்

திருச்சி விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, பேசிய அவர், “திராவிடம் தமிழ்த்தேசியத்திற்கு எதிரானது எனக் கற்பித்தவர் திருமாவளவன்தான். தமிழ்நாட்டில் தமிழ் படிக்கவோ, பேசவோ, எழுதுவோ வராதவர்கள்தான் அதிகம் இருக்கிறார்கள். மொழி, கலை, இலக்கியம், வரலாறு, அரசியல் எனத் தமிழர்களுக்கு எதுவும் இல்லாமல் போய்விட்டது. இந்தி எதிர்ப்புக்காகப் போராடிய மாணவர்களை துப்பாக்கியால் சுடச் சொன்னவர் ஈவெரா. தமிழ்நாட்டில் எல்லா இடங்களிலும் இந்தி உள்ளது. இந்தி எதிர்ப்பு என்பது ஒரு நாடகம்தான். … Read more

Parasakthi Audio Launch: "சுதாகிட்ட இருந்து ஒரு நடிகரும் தப்பிக்க முடியாது" – மணிரத்னம்

சிவகார்த்திகேயனின் 25வது திரைப்படமான ‘பராசக்தி’ திரைப்படம் வருகிற 10-ம் தேதி திரைக்கு வருகிறது. சுதா கொங்கரா இயக்கியிருக்கும் இப்படத்தில் ரவி மோகன் வில்லனாக நடித்திருக்கிறார். ஶ்ரீலீலா, அதர்வா ஆகியோரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். ஜீ.வி. பிரகாஷ் இசையமைக்கும் 100-வது திரைப்படம் இது. SK Parasakthi இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சாய்ராம் கல்லூரியில் பிரமாண்டமான முறையில் நடைபெற்று வருகிறது. படக்குழுவினர், சிறப்பு விருந்தினர்கள் எனப் பலரும் இந்த நிகழ்வில் பங்கேற்றிருக்கிறார்கள். இந்த நிகழ்வில் கலந்துகொண்ட இயக்குநர் … Read more

Parasakthi : "என் வாழ்க்கையில நானும் சுயமரியாதைய திரும்ப பெறுவதற்கு போராடுனேன்!" – ரவி மோகன்

சிவகார்த்திகேயனின் 25வது திரைப்படமான ‘பராசக்தி’ திரைப்படம் வருகிற 10-ம் தேதி திரைக்கு வருகிறது. சுதா கொங்கரா இயக்கியிருக்கும் இப்படத்தில் ரவி மோகன் வில்லனாக நடித்திருக்கிறார். ஶ்ரீலீலா, அதர்வா ஆகியோரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். ஜீ.வி. பிரகாஷ் இசையமைக்கும் 100-வது திரைப்படம் இது. SK Parasakthi இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சாய்ராம் கல்லூரியில் பிரமாண்டமான முறையில் நடைபெற்று வருகிறது. படக்குழுவினர், சிறப்பு விருந்தினர்கள் எனப் பலரும் இந்த நிகழ்வில் பங்கேற்றிருக்கிறார்கள். ரவி மோகன் பேசுகையில், “ஹாப்பி … Read more

போதைப்பொருள் கடத்தல் வழக்கு: கோர்ட் கஸ்டடியிலிருந்த ஆதாரம் அழிப்பு; கேரள முன்னாள் அமைச்சருக்கு சிறை

கேரள மாநிலம் திருவனந்தபுரம் சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ-வாக இருப்பவர் ஆண்டனி ராஜூ. ஜனாதிபத்திய கேரளா காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இவர் அக்கட்சியின் துணைத் தலைவராகவும் உள்ளார். பினராயி விஜயன் கேரள மாநில முதல்வராக இரண்டாவது முறை பதவியேற்றபோது கூட்டணி ஒப்பந்தத்தின்படி முதல் இரண்டரை ஆண்டுகள் அமைச்சராக இருந்தார் ஆண்டனி ராஜூ. சாலைப் போக்குவரத்து மற்றும் நீர்வழிப் போக்குவரத்துத் துறை அமைச்சராகப் பதவி வகித்தார். ஆண்டனி ராஜூ வழக்கறிஞராக இருந்த சமயத்தில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கோர்ட் கஸ்டடியில் … Read more

Decode Jana Nayagan Trailer: 'பகவந்த் கேசரி' ரீமேக்கா? டிரெய்லரில் ஒத்துப்போகும் காட்சிகள் என்னென்ன?

விஜய்யின் கடைசித் திரைப்படமான ‘ஜனநாயகன்’ படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி இருக்கிறது. படத்தில் மமிதா பைஜு, பிரகாஷ் ராஜ், பாபி தியோல் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இத்திரைப்படம் தொடங்கப்பட்ட நாள் முதல், இது பாலய்யா நடிப்பில் வெளியான ‘பகவந்த் கேசரி’ படத்தின் ரீமேக் எனத் தகவலாகப் பேசப்பட்டது. Jana Nayagan Trailer – Vijay இது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக படக்குழுவினர் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. இயக்குநர் அ.வினோத் ஆனந்த விகடனுக்கு அளித்த பேட்டியில், “இந்தக் கதை … Read more

"கண்டா வரச்சொல்லுங்க" – அமைச்சர் கே.என். நேருவைத் தேடும் தூய்மைப் பணியாளர்கள்; பின்னணி என்ன?

அரசு ஊழியர்களின் கோரிக்கையையும் போராட்டத்தையும் ஏற்று பழைய ஓய்வூதியத் திட்டத்தின் அம்சங்களோடு கூடிய டேப்ஸ் என்ற ஓய்வூதியத் திட்டத்தை அறிவித்திருக்கிறார் முதல்வர். செவிலியர்களின் போராட்டத்துக்குச் செவி சாய்த்திருக்கிறார் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், போராடும் ஆசிரியர்கள் என் குடும்பத்தைப் போன்றவர்கள் என அக்கறைக் காட்டுகிறார் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ். கே.என்.நேரு எல்லா அமைச்சர்களும் தங்களின் துறைசார்ந்த ஊழியர்களின் போராட்டத்தைச் செவிமடுக்கையில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மட்டும் தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்தைக் கண்டுகொள்ளாமலேயே இருக்கிறார். சென்னையில் மண்டலங்கள் … Read more

Jana Nayagan Trailer: "மக்கள் அவனைக் கொண்டாடிட்டு இருக்காங்க" – வெளியான ஜனநாயகன் படத்தின் ட்ரெய்லர்!

விஜய்யின் கடைசிப் படமான ‘ஜனநாயகன்; படம் ஜனவரி 9-ம் தேதி ரிலீஸிக்குத் தயாராகி வருகிறது. அ.வினோத் இயக்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பிரியாமணி, பிரகாஷ் ராஜ், நரேன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தின் நான்கு பாடல்கள் இதுவரை வெளியாகி இருக்கிறது. Jana Nayagan – Stills – Vijay கூடிய விரைவில் படத்தின் மொத்த மியூசிக் ஆல்பமும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த வாரம் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா … Read more

மும்பை: வாட்ஸ்ஆப்பிற்கு வந்த இ-செல்லான்; திறந்து பார்த்த தொழிலதிபரிடம் ரூ.21 லட்சம் திருடிய மாணவர்

இணையத்தளக் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. இதனைக் கட்டுப்படுத்த போலீஸார் பல்வேறு வழிகளில் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆனாலும் குற்றங்கள் குறையவில்லை. ஆன்லைன் பங்குச்சந்தை மோசடி, டிஜிட்டல் கைது, பணமோசடி என்று கூறி மிரட்டி பணம் பறிப்பது போன்ற பல வழிகளில் இந்த ஆன்லைன் குற்றங்கள் நடக்கின்றன. மும்பை மலாடு பகுதியைச் சேர்ந்த தொழிலதிபருக்கு வாட்ஸ் ஆப் மூலம் டிராபிக் போலீஸாரின் இ-செல்லான் ஒன்று வந்தது. தொழிலதிபர் தனது உறவினர் ஒருவரின் திருமணத்தில் பங்கேற்க குஜராத்திற்குச் … Read more

Thalaivar 173: "அதனருகில் வரை வந்து மிஸ் ஆகியது; அது இன்று.!" – நெகிழும் இயக்குநர் சிபி சக்ரவர்த்தி

ரஜினியின் 173வது படத்தை ‘டான்’ பட இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கவிருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. கமல் ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். Thalaivar 173 6வது முறையாக ரஜினி நடிக்கும் படத்திற்கு இசையமைக்கிறார் அனிருத். குடும்ப திரைப்படமாக இப்படம் உருவாகவிருப்பதாகவும் கூறப்படுகிறது. இத்திரைப்படம் குறித்தும், ரஜினியை இயக்குவது குறித்தும் இயக்குநர் சிபி சக்ரவர்த்தி நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டிருக்கிறார். அந்தப் பதிவில் அவர், ” ஒரு … Read more

'வெற்றிகரமான தாக்குதல்; அதிபரை வெளியேற்றிவிட்டோம்' – வெனிசுலாவை குறிவைத்த ட்ரம்ப்

தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் நிக்கோலஸ் மதுரோ அதிபராக பதவியேற்றதில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இந்த நிலையில், இன்று வெனிசுலா மீது வான்வழித் தாக்குதல் நடத்தியது அமெரிக்கா. இதையடுத்து வெனிசுலாவில் ‘தேசிய அவசரநிலை’ அமல்படுத்தப்பட்டது. தற்போது நிக்கோலஸ் மதுரோ நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டிருக்கிறார். இதுகுறித்து தனது ட்ரூத் பக்கத்தில் ட்ரம்ப் பதிவிட்டிருப்பதாவது… “வெனிசுலா மீது அமெரிக்கா வெற்றிகரமாக தாக்குதலை நடத்தி முடித்துள்ளது. வெனிசுலா மீதான அமெரிக்காவின் தாக்குதல் OP Sindoor: “நான்தான் நிறுத்தினேன்” … Read more