புனே: தொழிலதிபர் வீட்டில் சரத் பவாரை ரகசியமாகச் சந்தித்துப் பேசிய அஜித் பவார்!

மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் அஜித் பவார் தலைமையில் 8 பேர் கடந்த மாத தொடக்கத்தில் பா.ஜ.க கூட்டணி அரசில் அமைச்சர்களாக சேர்ந்துள்ளனர். கட்சித் தலைவர் சரத் பவாரை எதிர்த்துக்கொண்டு பா.ஜ.க-வுடன் கூட்டணி சேர்ந்துள்ள அஜித் பவார், தற்போது கட்சியை முழுமையாக தனது கட்டுப்பாட்டில் எடுப்பதற்கான வேலையில் ஈடுபட்டுள்ளார். அதோடு சரத் பவாருடன் சமாதானமாக போகவும் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருக்கிறார். ஏற்கெனவே சரத் பவாரை அஜித் பவார் மூன்று முறை சந்தித்து … Read more

Doctor Vikatan: ஒற்றைத் தலைவலி, நீர்கோத்தல்… சித்த மருத்துவத்தில் தீர்வு உண்டா?

Doctor Vikatan: என் வயது 35. கடந்த வருடம் இரண்டாவது குழந்தை பிறந்தது. அதற்குப் பிறகு எனக்கு அடிக்கடி தலை பாரமாக இருப்பதாகவும், நீர் கோத்தது போலவும் உணர்கிறேன். ஒற்றைத் தலைவலியும் வாந்தியும் வருகிறது. சித்த மருத்துவத்தில் இதற்கு ஏதேனும் நிரந்தர சிகிச்சை உண்டா? – Bhavani Priya, விகடன் இணையத்திலிருந்து. சித்த மருத்துவர் வரலட்சுமி சைனஸ் காரணமாகவும் இப்படிப்பட்ட வலி வரலாம். தலையில் ஒரு பக்கம் வலி வரும். வாந்தி வரும். சத்தமோ, வெளிச்சமோகூட வலியை … Read more

பஞ்சாங்கக் குறிப்புகள் – ஆகஸ்ட் 14 முதல் 20 வரை #VikatanPhotoCards

பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் Source link

வீட்டில் எந்த எண்ணெயில் தீபம் ஏற்ற வேண்டும் ? | ஆன்மிக கேள்வி பதில் | சிவஶ்ரீ சண்முக சிவாசார்யார்

பரிகாரம், வழிபாடு, ஆன்மிகம் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்துவருகிறார் காளிகாம்பாள்கோயில் சிவஶ்ரீ சண்முக சிவாசார்யர். இந்த வீடியோவில் வீட்டில் தீபம் ஏற்றி வழிபடுவது குறித்துப் பேசியிருக்கிறார் சிவாசார்யர். Source link

`பாரதிய…’ – சட்டங்களின் பெயர் இந்தியில் மாற்றம்; எதிர்க்கும் கட்சிகள் – I.N.D.I.A பெயரால் அச்சமா?

பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு, இந்திய தண்டனைச் சட்டம் உள்ளிட்ட சில சட்டங்களின் பெயரை மாற்றுவது மற்றும் சில திருத்தங்களைக் கொண்டுவருவதற்கான மசோதாக்களை அறிமுகம் செய்திருக்கிறது. இது தொடர்பான மசோதாக்களை நாடாளுமன்றத்தில் நடப்பு மழைக்காலக் கூட்டத்தொடரின் இறுதி நாளில் மத்திய அரசு தாக்கல் செய்தது. அதாவது, நமது நாட்டில் வழக்குகள் பதிவுசெய்யப்படும் முறை, விசாரணை நடைமுறை உள்ளிட்டவற்றில் மாற்றங்கள் கொண்டுவரும் வகையில் மூன்று சட்டத் திருத்தங்கள் மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவால் நேற்று … Read more

“படிப்பு ஒன்றே பெரிய சொத்து”- ஏழை மாணவரை நெகிழவைத்த தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர்!

பட்டுக்கோட்டை அருகேயுள்ள சித்துக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 16). இவருக்குப் பெற்றோர் இல்லை. இவருடைய தாய்மாமன் பழனி, அவரின் மனைவி மல்லிகா கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு பெண், ஓர் ஆண் என இரண்டு பிள்ளைகள். இருவருக்கும் திருமணமாகி தனியாக வசிக்கின்றனர். பழனி, மல்லிகா ரமேஷுக்கு அப்பா, அம்மா இரண்டு பேரும் இல்லாததால் ரமேஷை சின்ன வயதிலிருந்தே பழனியும், மல்லிகாவும் வளர்த்து வந்திருக்கின்றனர். இந்த நிலையில், அரசுப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்த … Read more

Jailer: “தனுஷ் உடன் அடுத்த படமா?; ஜெயிலர் படத்தில் பாலகிருஷ்ணா!" மனம் திறக்கும் இயக்குநர் நெல்சன்

ஜெயிலர் படத்தை பொறுத்தவரைக்கும் ரஜினி சார்னு ஒரு மாஸ் ஹீரோ இருக்காரு. அப்புறம் மோகன்லால் சார், சிவராஜ்குமார் சார் வந்தாங்க. இவங்க எல்லாரையும் வச்சி படம் எடுத்தது எப்படி இருந்துச்சு? ஸ்கிரிப்ட் எழுதும்போதே இதை முடிவு பண்ணிட்டீங்களா ? “அந்தக் கதை பண்ணும்போதே, கர்நாடகாவுல இருந்து ஒருத்தரும், மங்களூர்ல ஒருத்தரும், கேரளா, பாம்பேவுல பெரிய ஆளா இருக்குற மாதிரி தேவைப்பட்டுச்சு. அந்தந்தப் பகுதில இருக்கிற பெரிய ஆர்டிஸ்ட்ட வச்சோம். ஆனா ரெண்டு மூணு சீன் தான் இருக்கும். … Read more

ஏலம் போகும் ட்விட்டர் பொருள்கள்… எந்த பொருளுக்கு என்ன விலை? அதிரடி காட்டும் எலான் மஸ்க்..!

எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கியதிலிருந்து அதிரடிகளுக்கு பஞ்சமில்லை. அந்த வரிசையில் தற்போது எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்திற்கு சொந்தமான சில பொருள்களை ஏலமிட திட்டமிட்டுள்ளார். இந்த ஏலத்தை ஹெரிடேஜ் குளோபல் பார்ட்னர் என்னும் ஏல நிறுவனம் நடத்த உள்ளது. இந்த ஏலத்தில் ட்விட்டர் பில்டிங்கில் உள்ள பறவை, காபி டேபிள்கள், நாற்காளிகள், DJ பூத்துகள் உள்ளிட்ட 584 பொருள்கள் ஏலமிடப்பட உள்ளன. இந்த ஏலத்தில் இடம்பெற உள்ள பொருட்களில் ஆரம்ப விலை 25 டாலாராம். இந்த ஏலத்திற்கு … Read more

வணங்கான்: "பணமே வேண்டாம் உங்களுக்கு நான் கால்ஷீட் கொடுக்கிறேன்" – மிஷ்கின்

ரொம்பவும் சந்தோஷமாக கூடிப் பேசி ஆரம்பித்த படம் தான் ‘வணங்கான்’. இரண்டு மாத காலமாக உட்கார்ந்து பேசி கதையின் முக்கியமான பகுதிகளை எல்லாம் தெளிவுபடச் சொல்லித்தான் ஆரம்பித்தார்கள். எப்போதுமே இயக்குநர் பாலாவுக்கென ஒரு ஸ்டைல் உண்டு. கதையில் நல்லபடியான மாற்றங்கள் உருவானால் உடனே அதை ஷுட்டிங் ஸ்பாட்டில் கூட சரி செய்து கொண்டு இருப்பார். பிதாமகன் படபிடிப்பின் போதே இதை எல்லோரும் பார்த்திருப்பார்கள். அப்போது இருந்த சூர்யாவைத்தான் மனதளவில் பாலா நினைத்துக் கொண்டு இருக்கிறார். கதையில் மாற்றம், … Read more