உ.பி: டூ வீலர் மீது மோதிய கார்; 1 கி.மீ தூரம் இழுத்துச் செல்லப்பட்டு இறந்த உணவு டெலிவரி ஊழியர்!

உத்தரப்பிரதேச மாநிலம், நொய்டாவின் மைன்புரியில் வசிக்கும் கவுஷல் யாதவ் என்பவர், உணவு டெலிவரி நிறுவனமொன்றில் டெலிவரி பார்ட்னராகப் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், இவர் புத்தாண்டு அன்று இரவு ஒரு மணியளவில் நொய்டாவின் செக்டார் 14 மேம்பாலத்தை கடந்து சென்று கொண்டிருந்தபோது, கவுஷலின் பைக் மீது அடையாளம் தெரியாத கார் ஒன்று மோதியிருக்கிறது. உணவு டெல்வரி இரு சக்கர வாகனத்தின் மீது கார் மோதிய பிறகு, விபத்து நடந்த இடத்திலிருந்து சுமார் ஒரு கி.மீ தொலைவுக்கு அவர் … Read more

காப்புக் காடுகளுக்கு அருகில் குவாரி… போராட்டம் வெடிக்கும்! பூவுலகின் நண்பர்கள் அறிவிப்பு!

கடந்த ஆண்டு டிசம்பர் 14-ம் தேதி, காப்பு காடுகளுக்கு அருகில் குவாரிகள் செயல்பட தடை இல்லை என்று அரசாணை வெளியிட்டது தமிழக அரசு. புவியியல் மற்றும் சுரங்கத்துறை ஆணையர் தலைமையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம், மாவட்ட அளவில் கூட்டம் ஒன்று நடந்தது. குவாரி ( கோப்புப் படம் ) “குவாரி உரிமையாளர்களின் நலனைப் பாதுகாக்க, இயற்கை வளங்களை தமிழக அரசு அழிக்கிறது” – சீமான் காட்டம் அந்தக் கூட்டத்தில் பலர், தடை சட்டத்தை நீக்க கோரிக்கை … Read more

பில்கிஸ் பானோ வழக்கை விசாரிப்பதில் இருந்து விலகிய உச்ச நீதிமன்ற நீதிபதி; காரணம் என்ன?

குஜராத் மாநிலம், கோத்ரா கலவரத்தில் ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானோவை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து, அவர் குடும்பத்தார் ஏழு பேரைக் கொலை செய்த வழக்கில், 11 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், தண்டனைக் காலம் முடியும் முன்பே, குஜராத் அரசால் கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யப்பட்டனர். விடுதலை செய்யப்பட்ட குற்றவாளிகள்! 11 பேரின் விடுதலைக்கு எதிராக பொதுநல வழக்குகள் தொடரப்பட்டன. அந்த … Read more

சென்னை: ரூ.3,500-க்காக நடந்த கொலை – ஆந்திராவிலிருந்தவரைக் காட்டிக் கொடுத்த செல்போன் சிக்னல்!

சென்னை, வியாசர்பாடி, மெகசின்புரம் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (70). இவர், வீட்டில் இறந்துகிடப்பதாக கடந்த 29.12.2022-ம் தேதி வியாசர்பாடி காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பன்னீர்செல்வத்தின் சடலத்தைக் கைப்பற்றிய போலீஸார் பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில் பன்னீர்செல்வம், கழுத்து நெரிக்கப்பட்டுக் கொலைசெய்யப்பட்டிருப்பதாக டாக்டர்கள் குறிப்பிட்டிருந்தனர். அதனடிப்படையில் வியாசர்பாடி போலீஸார், சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். மேலும் சம்பவம் நடந்தபோது … Read more

Jailer: ஜெயிலர் இசை, டீசர் எப்போது வெளியாகிறது? – லேட்டஸ்ட் அப்டேட்ஸ்!

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நான்காவது முறையாக ரஜினியும், இரண்டாவது முறையாக நெல்சன் திலீப்குமாரும் இணையும் படம் ‘ஜெயிலர்’. இதற்கு முன்னர் ரஜினி, அதே தயாரிப்பு நிறுவனத்திற்கு ‘எந்திரன்’, ‘பேட்ட’, ‘அண்ணாத்த’ படங்களில் நடித்திருக்கிறார். இயக்குநர் நெல்சனும் விஜய்யை வைத்து ‘பீஸ்ட்’ கொடுத்திருந்தார். சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் விறுவிறுப்பாக தொடங்கப்பட்ட ‘ஜெயிலர்’ படப்பிடிப்பு இப்போது எந்தக் கட்டத்தில் இருக்கிறது. படத்தின் இசை வெளியீடு எப்போது? படத்தின் டீசர், டிரைலர் எப்போது வெளியாகும் என விசாரித்தோம். ரம்யாகிருஷ்ணன் ‘ஜெயிலர்’ … Read more

மதமாற்றத் தடைச் சட்டம்: "அனைத்து மத மாற்றங்களும் சட்ட விரோதமானது எனக் கூறமுடியாது" – உச்ச நீதிமன்றம்

மத்தியப் பிரதேச மாநிலத்தில், மத சுதந்திர சட்டம் 2021-ம் ஆண்டு, பிரிவு 10-ன் அடிப்படையில், “கலப்பு திருமணம் செய்துகொள்பவர்கள் 60 நாள்களுக்கு முன்பாக மதமாற்றத்துக்கான நோக்கத்தை மாவட்ட ஆட்சியரிடம் அறிவிக்க வேண்டும். அதன் பிறகே சட்டப்படி திருமணம் செய்து கொள்ள முடியும். இதை மீறுவோருக்கு ரூ.50,000 அபராதம், 3 முதல் 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை” வழங்கப்படும் என மாநில அரசால் சட்டமியற்றப்பட்டிருக்கிறது. சிவராஜ் சிங் சௌஹான் இந்தச் சட்டத்துக்கு இடைக்காலத் தடைவிதிக்க வேண்டும் என … Read more

“நீங்கள் இந்தியாவிடம் சரணடைந்தது போல அவமானப்பட நேரிடும்" – பாகிஸ்தானை எச்சரித்த ஆப்கானிஸ்தான்!

ஆப்கானிஸ்தானில் அஷ்ரப் கனி தலைமையிலான தாலிபன்கள் மீண்டும் அந்த நாட்டை கைப்பற்றினர். அப்போது அவர்களுக்கு முதன் முதலில் ஆதரவு தெரிவித்தது பாகிஸ்தான். அதன் பிறகே மற்ற நாடுகள் தங்கள் ஆதரவை தெரிவிக்கத் தொடங்கினர். கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாகிஸ்தான் உளவு அமைப்பின் தலைவர் காபுல் சென்றிருந்தார். ஆனால், இன்னொரு பக்கம் தாலிபன்கள் பாகிஸ்தானையும் தங்கள் வசமாக்குவதற்காக தெஹ்ரிக் இ தாலிபான் (Tehrik-i-Taliban) எனும் குழுவை அமைத்து பாகிஸ்தான் ராணுவத்தினர் மீதும் தாக்குதல் நடத்தி வந்தனர் … Read more

ட்விட்டர் மூலம் பணமோசடி! சிக்காமல் தப்பிப்பது எப்படி?

‘எனக்கு எண்ட்கார்டே இல்லை’ என்பதுபோல் நாள்தோறும் புது புது மோசடிகள் முளைத்துக்கொண்டேதான் இருக்கிறது. இப்படி மோசடிகள் தொடர்ந்து நடப்பதற்கு என்ன காரணம்? காலம் முன்புபோல் இல்லை, இப்போது மோசடி நபர்கள் பெருகிவிட்டர்கள் என்பதுதானே உங்கள் கூற்று. ஆனால் உண்மையில் நமது அலட்சியமும், அஜாக்கிரதையும்தான் காரணம் என்பதை நாம் உணர மறந்துவிட்டோம். டிக்கெட் உறுதியாகிவிட்டதா? அடுத்தவரின் பான் எண் கொடுத்து ஆன்லைன் கடன் மோசடி; உங்கள் சிபில் ஸ்கோருக்கும் பாதிப்பா? மும்பையில் ஒரு பெண்மணி IRCTC வலைதளத்தில் ரயில் … Read more

ஓடும் ரயிலின் வாசலில் அமர்ந்து பயணம் – சர்ச்சையில் நடிகர் சோனு சூட்!

மும்பையில் புறநகர் ரயில்களில் வாசலில் நின்று பயணம் செய்து ஒவ்வொரு ஆண்டும் பலர்உயிரிழந்து வருகின்றனர். இதனை தடுக்க ரயில்வே நிர்வாகமும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் பாலிவுட் நடிகர் சோனுசூட் ரயிலின் வாசலில் அமர்ந்து மிகவும் ஆபத்தான முறையில் பயணம் செய்வது போன்ற ஒரு வீடியோவை சோசியல் மீடியாவில் பதிவிட்டு இருந்தார். இந்த வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. அவரின் வீடியோவை பார்த்த வடக்கு ரயில்வே சோனுசூட்டை கடுமையாக விமர்சனம் செய்து ட்விட்டர் பதிவு ஒன்றை … Read more

ஈரோடு: மறைந்த எம்.எல்.ஏ திருமகன் ஈவெரா-வின் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி

காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் மகனும், ஈரோடு கிழக்குத் தொகுதி எம்.எல்.ஏ.வுமான திருமகன் ஈவெரா மாரடைப்பால் நேற்று காலமானார். அவரின் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த உடலுக்கு அ.தி.மு.க., காங்கிரஸ், தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் என பல்வேறு அரசியல் கட்சியினரும் அஞ்சலி செலுத்தினர். மறைந்த எம்.எல்.ஏ-வின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக சென்னையில் இருந்து கோவைக்கு நேற்று இரவு விமானம் மூலமாக வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்து இரவு 10.05-க்கு ஈரோட்டில் உள்ள எம்.எல்.ஏ.வின் இல்லத்துக்கு … Read more