How to: பாஸ்போர்ட்டில் முகவரி மாற்றம் செய்வது எப்படி? | How To Change Address In Passport?

படிப்பு, பணி, சுற்றுலா என எந்தவொரு காரணத்திற்காக வெளிநாட்டுக்குச் செல்வதாக இருந்தாலும், அதற்குக் கண்டிப்பாக பாஸ்போர்ட் அவசியம். இதனை பலகட்ட நடைமுறைகளுக்குப் பிறகே பெற முடியும். அந்த ஆவணத்தில் முகவரியை மாற்றம் செய்ய வேண்டுமானால், எப்படி மாற்றுவது? பாஸ்போர்ட்டில் முகவரி மாற்றத்தை, புதிய பாஸ்போர்ட் பெறாமல் செய்ய முடியாது. எனவே அதற்கான வழிமுறைகள் இங்கே… Online registration How to: குளிர்காலத்தில் சருமத்தை பராமரிப்பது எப்படி? |How To Take Care Of Skin In Winter? … Read more

சியாச்சினில் சிங்கப்பெண்: உலகின் உயரமான போர்க்களத்தின் முதல் பெண் அதிகாரி கேப்டன் ஷிவா சவுகான்!

உலகின் மிக உயரமான போர்க்களமான, பனிபடர்ந்த சியாச்சின் மலைப்பகுதி இந்திய ராணுவப்படைப் பிரிவின் முதல் பெண் ராணுவ அதிகாரி என்ற பெருமையை, கேப்டன் ஷிவா சவுகான் பெற்றுள்ளார். இமயமலையில், காரகோரம் மலைத்தொடரில் அமைந்துள்ள சியாச்சின் பனிப்பாறை, சுமார் 20,000 அடி உயரத்தில் உள்ள உலகின் மிக உயர்ந்த ராணுவமயமாக்கப்பட்ட மண்டலம். இங்கு, சுமார் 15,600 அடி உயரத்தில் அமைந்துள்ள குமார் போஸ்ட்டில், தன்னுடைய மூன்று மாத கடுமையான பயிற்சிக்குப் பிறகு, கடந்த திங்கள்கிழமை அன்று ராணுவ அதிகாரியாக … Read more

“பாலின மாற்று அறுவை சிகிச்சையின் சிக்கல்கள் சரிசெய்யப்படணும்” – அனுபவம் பகிரும் கிரேஸ் பானு

இந்திய சமூகத்தில் ஆண் – பெண் என்ற இரு பாலினத்தவர்களில் சமூக அங்கீகாரத்தில் ஆண்களின் கையே ஓங்கியிருக்கிறது. பெண்களின் உரிமைகள் பல இன்றுவரை பெரும்பாலும் கிடைக்கப்பெறவில்லை. இந்நிலையில், திருநர் சமூகத்தின் நிலை இன்னும் மோசமாகப் பின்தங்கியிருக்கிறது. அவர்களும் இயற்கையின் அங்கம் என்பதை சமூகம் பெரும்பாலும் புரிந்துகொள்வதில்லை. ஓர் ஆண் திருநங்கையான பின், அவரால் ஆண் உடலிலேயே தொடர முடியாது. அதேபோல் ஒரு பெண் திருநம்பியான பின்னர், தன் உடலையும் அவர் ஆணாக மாற்ற விரும்புவார். இப்படி, மனதால், … Read more

நடிகர் கிஷோரின் ட்விட்டர் கணக்கு முடக்கம் – எலான் மஸ்க்கைக் கேள்வி கேட்கும் ரசிகர்கள்!

வெற்றிமாறன் இயக்கத்தில் ‘பொல்லாதவன்’ திரைப்படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமானவர் நடிகர் கிஷோர். அதன் பிறகு ‘வெண்ணிலா கபடிக்குழு’, ‘ஆடுகளம்’ போன்ற பல படங்களில், குணச்சித்திர நடிகராகவும், வில்லனாகவும் நடித்திருக்கிறார். ‘வனயுத்தம்’, ‘கடிகார மனிதர்கள்’, ‘ஹரிதாஸ்’ போன்ற சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார். சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற ‘காந்தாரா’ திரைப்படத்தில்  வனத்துறை அதிகாரியாக நடித்திருந்தார். இதனிடையே சமூக பிரச்னைகள் குறித்து அவ்வப்போது பேசி வரும் நடிகர் கிஷோர் தனது கருத்துகளை ட்விட்டர் பக்கத்தில் பதிவிடுவது வழக்கம். அந்த வகையில் … Read more

வந்தே பாரத் ரயில் மீது கல்வீச்சு: “நல்ல மனநிலையில் இருக்கிறேன் அதைப்பற்றிக் கேட்காதீர்கள்!" – மம்தா

கடந்த சில நாள்களுக்கு முன்பு, மேற்கு வங்கத்தில் ஹவுரா மற்றும் நியூ ஜல்பைகுரியை இணைக்கும் வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி காணொலி வாயிலாக கொடியசைத்துத் தொடங்கிவைத்தார். மோடியின் தாயார் இறந்த காரணத்தால், கடைசி நேரத்தில் காணொலி வாயிலாக இந்த நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்டார். இதில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தாவும் கலந்துகொண்டார். மே.வ – வந்தே பாரத் ரயிலை காணொளிக் காட்சி மூலம் மோடி தொடங்கிவைத்தார் இந்த நிலையில் மோடி தொடங்கி வைத்த இந்த … Read more

மதுரவாயலில் நடந்த கொடூர விபத்து; தம்பியின் கண் முன்னே பறிபோன அக்காவின் உயிர் – என்ன நடந்தது?

சென்னை அருகில் உள்ள போரூர் பகுதியைச் சேர்ந்தவர் ஷோபனா (22). இவர் கூடுவாஞ்சேரியிலுள்ள தனியார் ஐ.டி நிறுவனத்தில் சாஃப்ட்வேர் இன்ஜினீயராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில், நேற்று ஷோபனா தன் தம்பியை திருவேற்காட்டிலுள்ள பள்ளியில் விடுவதற்காகத் தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் சென்றிருக்கிறார். மதுரவாயல் சர்வீஸ் சாலையில் பயணம் செய்யும்போது, சாலையில் எதிரே வந்த வேன் ஷோபனாவின் இரு சக்கர வாகனத்தில் மோதியதாக கூறப்படுகிறது. விபத்து நடந்த சாலை இதில் நிலைதடுமாறி ஷோபனா பைக்குடன் சாலையில் விழுந்தார். … Read more