கால்நடைகளை திருடிச் செல்வதற்கு இடையூறு; நாய்களை விஷம் வைத்துக் கொன்ற கொடூரம்! – போலீஸ் விசாரணை

திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகேயுள்ள போத்தம்பாளையம் பகுதியில் ஆடு, மாடு, கோழி வளர்ப்பில் அதிகமானோர் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் பகுதியில் சில மாதங்களாக இரவில் வந்து ஆடு, கோழிகளை மர்ம நபர்கள் திருடிச் செல்வது வழக்கமாகி வருகிறது. இந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை இரவு, போத்தம்பாளையம் பகுதியில் கர்ணன், ராஜசேகர், ராஜேஷ்குமார் ஆகியோரின் தோட்டங்களில் இருந்த 2 நாய்கள் மர்மான முறையில் இறந்துகிடந்தன. விஷம் மேலும், ஒரு நாய் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தது. இது தொடர்பாக போலீஸில் … Read more

புத்தாண்டுப் பரிசு – சிறுகதை | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர் புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்காகத் தேவாலயம் தயாராகிக் கொண்டிருந்தது. தச்சர்கள், துணி, காகித அலங்கார நிபுணர்கள், பந்தல் கட்டுவோர், ஓவியர்கள் எலக்ட்ரீஷியன்கள், வண்ணம் தீட்டுவோர் எனப் பல்வேறுக் கலைஞர்களும் குழுமிக் கோல கலமாக இருந்தது வளாகம். மறுநாள் புத்தாண்டு என்பதால் அனைத்து வேலைகளும் ஒவ்வொன்றாக முடிவுக்கு … Read more

1000 கிலோ எடையில் ராட்சத திருக்கை மீன்… ரூ.61000 க்கு விலை போனது!

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் மீன்பிடித்துறைமுகத்தில் இருந்து சுமார் 300 -க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன் பிடித்தொழில் செய்து வருகின்றன. இது தவிர 1000- க்கும் மேற்பட்ட பைபர் வள்ளங்களும் மீன்பிடித்தொழில் ஈடுபட்டு வருகின்றன. விசைப்படகுகள் ஆழ்கடல் பகுதிவரை சென்று 15 முதல் 20 நாட்கள் வரை தங்கி மீன் பிடித்துவிட்டு கரை திரும்பும். ஆழ்கடல் பகுதியில்தான் சுறா, கேரை, இறால், புல்லன், கணவாய் போன்ற உயர் ரக மீன்கள் அதிகமாக கிடைக்கும். மீன் ஏலக்கூடத்தில் வைக்கப்பட்ட திருக்கை … Read more

இருமல் டானிக் குழந்தைகளுக்கு உயிரிழப்பு வரை ஏற்படுத்துமா? மருத்துவர் விளக்கமும் எச்சரிக்கையும்!

சமீபத்தில் உஸ்பெகிஸ்தான் நாட்டில், இருமல் டானிக் பருகிய குழந்தைகள் மரணமடைந்திருப்பதாக வந்திருக்கும் செய்தி அனைவரையும் திடுக்கிடச் செய்துள்ளது. இதற்கு முன்பு இந்தோனேசியாவிலும், ஆப்பிரிக்க நாடான கானாவிலும் இதேபோல இருமல் டானிக் உட்கொண்ட குழந்தைகள் இறந்த துயர் சம்பவத்தை எளிதில் கடந்து செல்ல முடியாது. இதில் கானா நாடு, அதன் ஆரம்பகட்ட விசாரணைக்குப் பிறகு, டானிக் அருந்தாத குழந்தைகளும் இறந்துள்ளதால் இருமல் டானிக்கை உறுதியாகக் குற்றம் சாட்ட முடியாது என்று கூறியிருக்கிறது. குழந்தைகள் இறப்புக்குக் காரணமாகக் குற்றம்சாட்டப்படும் இருமல் … Read more

`நல்ல சமயம்' சினிமாவில் போதைப் பிரசாரம்? தியேட்டரிலிருந்து திரும்பப்பெற்ற படம் ஓ.டி.டி-யில் ரிலீஸ்!

நடிகை பிரியா வாரியாரைக் கதாநாயகியாகக்கொண்டு ‘ஒரு அடார் லவ்’ படத்தை இயக்கிப் பிரபலமானவர் இயக்குநர் ஒமர் லுலு. இப்போது இவர் ‘நல்ல சமயம்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். அந்தப் படத்துக்கு சென்சார்பொர்டு ‘ஏ’ சான்றிதழ் வழங்கியிருந்தது. படத்தின் டிரெய்லர் கடந்த ஆறு நாள்களுக்கு முன்பு வெளியானது. அதில் மது குடித்தும் கிடைக்காத கிக் ஒரு குறிப்பிட்ட குட்கா பாக்கை உண்பதால் கிடைப்பதாகவும், அதன் மூலம் மகிழ்ச்சி, ஃபுல் அன் ஃபுல் எனர்ஜி கிடைப்பதாகவும் ஓர் இளம் பெண் … Read more

Sani Peyarchi 2023 | சனிப்பெயர்ச்சி பலன்கள் 2023 துலாம் முதல் தனுசு வரை | அர்த்தாஷ்டம சனி யாருக்கு?

திருக்கணித முறைப்படி வரும் ஜனவரி 17 – ம் தேதி நிகழ இருக்கும் சனிப்பெயர்ச்சி பலன்களை சிறப்பு ஜோதிட சங்கமம் நிகழ்ச்சியில் தொகுத்துத் தந்திருக்கிறார்கள் பிரபல ஜோதிடர்களான பாரதி ஶ்ரீதர், ஆம்பூர் வேல்முருகன், கோமதிநாதன், ஶ்ரீரங்கம் கார்த்திகேயன் ஆகியோர். இந்த வீடியோவில் துலாம் முதல் தனுசு வரையிலான 3 ராசிகளுக்குரிய சனிப்பெயர்ச்சி பலன்களைக் காணுங்கள். Source link

நெல்லை: மருத்துவர்களின் சந்தேகம்; அரசு மருத்துவமனையில் 2 வயது குழந்தை உயிரிழப்பு – பெற்றோர் மாயம்?!

சென்னை பள்ளிப்பட்டு பகுதியில் வசித்துவந்த சக்திவேல் என்ற திலீப்குமார் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கியுள்ளார். அவருடன் ஹேமலதா என்பவரும் இரண்டு வயதுள்ள ஹரிணி என்ற குழந்தையும் வந்துள்ளனர். ஹேமலதாவை தனது மனைவி என்றும் குழந்தை ஹரிணியை மகள் என்று அக்கம்பக்கத்தில் வசித்தவர்களிடம் அறிமுதம் செய்துள்ளார். குழந்தை ஆலங்குளத்தில் உள்ள காய்கறி சந்தையில் சக்திவேல் மூட்டை தூக்கும் பணியைச் செய்துள்ளார். அவரின் மனைவி அங்குள்ள துணி்க்கடையில் வேலைக்குச் … Read more

தூக்கத்தில் பேசுவது, நடப்பது; ஏன், தீர்வு என்ன? – மருத்துவ விளக்கம்

நம்மில் சிலருக்கு தூக்கத்தில் பேசுகிற பழக்கம் இருக்கலாம். அதே நேரம், தான் தூக்கத்தில் பேசியது பெரும்பாலும் சம்பந்தப்பட்ட நபருக்கே நினைவில் இருப்பதில்லை. தூக்கத்தில் பேசுவதை பலரும் பெரிய பிரச்னையாக எடுத்துக் கொள்வதில்லை என்றாலும், சிலருக்கு அது குறித்த கேள்விகள், சந்தேகங்கள் இருக்கலாம். தூக்கத்தில் பேசுகின்ற பழக்கம் கவனம் கொடுக்க வேண்டிய பிரச்னையா என, Interventional Pulmonary and Sleep Medicine நிபுணர் பென்ஹர் ஜோயல் ஷாத்ராக்கிடம் கேட்டோம். பென்ஹர் ஜோயல் ஷாத்ராக் உங்கள் உறக்கம் சரிதானா? “மனிதர்களாகிய … Read more

'லேசான வெயில் அடிச்சாலே போதும்; மின்சாரம் கிடைக்கும்' பிரதமர் பாராட்டிய விவசாயியின் தோட்டம் விசிட்!

பிரதமர் பாராட்டிய விவசாயி… காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயி எழிலன், ‘பிரதம மந்திரி குசும் யோஜனா’ திட்டத்தின்கீழ் மானியம் பெற்று சூரிய சக்தியால் இயங்குகிற பம்பு செட் அமைத்து, விவசாயம் செய்து வருகிறார். கடந்த அக்டோபர் மாதம் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, எழிலன் சூரிய சக்தியால் இயங்குகிற பம்பு செட்டை விவசாயத்துக்கு பயன்படுத்தி வரும் முறையை குறிப்பிட்டு பாராட்டினார். ஒரு பனிபொழியும் காலையில் விவசாயி எழிலனை காணச் சென்றோம். மீன் குளம் … Read more

விஜயகாந்தை கண்டு கண்ணீர் விட்ட தொண்டர்கள்… உடல்நிலையும் தேமுதிக-வினர் மனநிலையும்!

புரட்சிகர வசனங்களினாலும் அதிரடியான சண்டைக் காட்சிகளாலும் தமிழ்த் திரையுலகின் `புரட்சிக் கலைஞராக’ வலம் வந்தவர் விஜயகாந்த். கண்கள் சிவக்க, கைகள் முறுக்க சினிமாவைப் போலவே அரசியலிலும் பல அதிரடிகளை நிகழ்த்திக் காட்டியவர். ஒரு காலத்தில் கணீர் குரலாலும் கம்பீரத் தோற்றத்தாலும் தனது ரசிகர்கள், தொண்டர்கள் மத்தியில் ராஜநடை போட்டுக்கொண்டிருந்தவர், இப்போது உடல் நலக்குறைவால் பேச வார்த்தையில்லாமலும் எழுந்து நிற்க பலமில்லாமலும் வீல் சேரில் அமர்ந்திருக்கும் கடினமான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார். முன்பு `கேப்டன்… கேப்டன்….’ என மகிழ்ச்சியோடு ஆர்ப்பரித்த … Read more