சர்ச் நிகழ்ச்சியில் சாப்பிட்ட 70 பேருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு; கேட்டரிங் நிறுவன லைசன்ஸ் ரத்து!
கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள மல்லப்பள்ளி செயின்ட் தாமஸ் சர்ச்சில் கடந்த வியாழக்கிழமை (டிசம்பர் 29) ஞானஸ்நானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுமார் 190 பேருக்கு அசைவ உணவு பரிமாறப்பட்டது. அதை சாப்பிட்ட சுமார் நூறு பேருக்கு ஒவ்வாமையும், உடல்நலக்குறைவும் ஏற்பட்டது. சுமார் 70 பேருக்கும் மேல் வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி ஏற்பட்டுள்ளது. கடந்த வெள்ளி, சனிக்கிழமைகளில் இவர்கள் ரானி, அடூர், கொம்பநாடு பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்ந்தனர். … Read more