New Year 2023: 5 லட்சம் ஆர்டர்களைப் பெற்ற Swiggy, Zomato; முதல் இடம் பிடித்த பிரியாணி!

புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு நேற்று முன்தினமான  டிசம்பர் 31-ம் தேதி இரவு மட்டும் ஐந்து லட்சத்துக்கும் அதிகமானோர் ஆன்லைன் மூலம் உணவு ஆர்டர்  செய்துள்ளனர் என்று Zomato மற்றும் Swiggy உணவு டெலிவரி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பாக அந்நிறுவனங்கள் அறிக்கைகளையும் வெளியிட்டுள்ளன. அதில், 5 லட்சத்திற்கும் அதிகமானோர் உணவுகளை ஆர்டர் செய்திருந்த நிலையில் பிரியாணி மற்றும் பீட்சா ஆகியவை பட்டியலில் முதல் மற்றும் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளன. 3.5 லட்சம் பேர் பிரியாணியும், 2.5 லட்சம் பேர் பீட்சாவும் ஆர்டர் செய்துள்ளனர். … Read more

IPL 2023-ல் முக்கிய வீரர்களுக்கு ஓய்வு; பிசிசிஐயின் புதிய திட்டம் கைகொடுக்குமா?

பிசிசிஐ தங்களின் செயல்பாடுகளை ஆராய்ந்தறியும் கூட்டத்தைச் சமீபத்தில் நடத்தி முடித்திருக்கிறது. இதில், மிக முக்கியமாக ஐ.பி.எல் போட்டிகள் குறித்தும் ஒரு முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. அதன்படி, ஐ.பி.எல் போட்டிகளில் ஆடும் முக்கிய வீரர்களின் உடற்திறன் தேசிய கிரிக்கெட் அகாடமியால் பரிசோதிக்கப்பட்டு அவர்களுக்குத் தேவையான ஓய்வை வழங்க வேண்டும் என்றும் முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. Team India இந்திய அணி சமீபமாக முக்கியமான ஐ.சி.சி தொடர்களிலும் பன்னாட்டுத் தொடர்களிலும் கடுமையக்ச் சொதப்பி வருகிறது. இந்திய அணியின் சொதப்பல்களுக்குப் பல்வேறு காரணங்கள் … Read more

Vijay 67: தொடங்கியது படப்பிடிப்பு; விஜய், த்ரிஷா, மன்சூர் அலிகான், மனோபாலா உள்ளிட்டோர் பங்கேற்பு!

கடந்த நவம்பரில் பூஜை போடப்பட்ட விஜய், லோகேஷ் கனகராஜின் ‘விஜய் 67’க்கான படப்பிடிப்பு இன்று தொடங்கியிருக்கிறது. இது குறித்து இயக்குநரும் நடிகருமான மனோபாலா, “தளபதி 67 இன்று படப்பிடிப்பு தொடங்கியிருக்கிறது. லோகேஷ் மற்றும் எங்கள் தளபதி இருவரும் ஒரே எனர்ஜியில் ஃபுல் ஸ்விங்கில் உள்ளனர். முதல்நாளே, தூள்!” எனத் தெரிவித்திருக்கிறார். விஜய் – த்ரிஷா ‘மாஸ்டர்’ படத்துக்குப் பின் விஜய் – லோகேஷ் இணையும் படமிது. கடந்த டிசம்பரில் இதன் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ‘வாரிசு’ … Read more

"என்னை கொள்ளையடிக்கச் சொல்கிறீர்களா?"- மகன் குறித்து கேள்வியெழுப்பிய நிர்வாகி; கடுகடுத்த ப.சிதம்பரம்

`வறுமையில் வாடும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுக்கு கார்த்தி சிதம்பரம் ஒரு 100 ரூபாய் கொடுக்க முடியாதா?’ என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திடம் காங்கிரஸ் நிர்வாகி கேள்வி எழுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சிவகங்கை மாவட்டம், மானாமதுரை காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையில் கட்சி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. மானாமதுரை கூட்டத்தில் அப்போது கட்சியினர் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்துக் கொண்டிருந்தனர். ‘சில நாள்களுக்கு முன்பு சிவகங்கை நாடாளுமன்ற … Read more

நேற்றைய‌ அதே நகரம் தான்‌ இன்றும்! | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர் 2023 புது வருடத்தின்‌ என் முதல் நாள் அனுபவம் இதோ.‌ நேற்றிருந்த உலகம் இன்றைக்கு மாறிவிடப் போகிறதோ எனத் தோன்றும்படி வாட்ஸ் ஆப்பில் புத்தாண்டு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம்‌ இருந்தன.‌ அதே உணர்வுடன் புதிய‌ வானம் புதிய‌ பூமி என்று‌ பாடியபடியே , … Read more

ராகுல் காந்தி – கமல் உரையாடல்: "`ஹே ராம்'-இல் நான் ஏன் காந்தியைக் கொலை செய்ய நினைப்பவனாக நடித்தேன்?"

காந்தியையும், அவர் முன்னெடுத்த அரசியலையும் பற்றி, தான் கலந்துகொள்ளும் மேடைகளில் எல்லாம் பேசிவருகிறார் கமல். அந்த வகையில் அண்மையில் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் கலந்துகொண்டு ‘நான் காந்தியின் பேரன்’ என்று உரக்கச் சொல்லிப் பேசியிருந்தார். இதையடுத்து ராகுலும் கமலும் இணைந்து உரையாடும் வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதில், இருவரும் நாட்டின் அரசியல் சூழல் குறித்தும் ராணுவம், நாட்டின் பாதுகாப்பு, தற்சார்பு பொருளாதாரம், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு, தமிழ் நாட்டின் தனித்தன்மையான அரசியல் எனப் பல்வேறு … Read more

கன்னிமாராவும், நானும்! | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர் சென்னையில் கன்னிமாரா ஹோட்டல் தெரிந்திருக்கும் அளவுக்கு, வரலாற்று சின்னமான கன்னிமாரா பொது நூலகம் ஒன்று இருப்பது, பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஒரு சில பேருக்கு தான் தெரியும், கன்னிமாரா பெயரில் நூலகம் இருக்கின்றது என்று. அதன் அவசியமும் புரியும். அந்த ஒரு சிலரில் … Read more