Jailer: “ `ஜெயிலர்' படத்தின் சிறப்புக் காட்சி ரத்து!" – உண்மையை விளக்கும் திருப்பூர் சுப்ரமணியம்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி காந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம், ‘ஜெயிலர்’. இம்மாதம் 10ம் தேதி திரைக்கு வருகிறது. அதிகாலை சிறப்புக் காட்சியாக ‘ஜெயிலர்’ திரைப்படம் வெளியாகும் என ரஜினி ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், சிறப்புக் காட்சி இல்லை என்றும், முதல் காட்சியே காலை 9 மணிக்குத்தான் தொடங்குகிறது என்றும் திரையரங்குகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் சுப்ரமணியம். இதற்கு முன்பு வெளியான ‘வாரிசு’, ‘துணிவு’ படங்களுக்கு சிறப்புக் காட்சிகள் இருந்தன. அதே சமயம், ‘பொன்னியின் … Read more

மூன்று ரவுண்ட்: என்கவுன்டரில் கொல்லப்பட்ட இரண்டு ரௌடிகள் – யார் இந்த சோட்டா வினோத், ரமேஷ்?

தாம்பரத்தை அடுத்த கூடுவாஞ்சேரி காவல் நிலையத்துக்குட்பட்ட கீரப்பாக்கம் – காரணை புதுச்சேரி அருங்கல் சாலையில் இன்று (01.08.23) அதிகாலை 3.30 மணியளவில் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது கார் அவ்வழியாக வந்த கறுப்பு நிற சொகுசு காரை போலீஸ் எஸ்.ஐ சிவகுருநாதன் நிறுத்த முயன்றார். அப்போது அந்தக் கார், எஸ்.ஐ சிவகுருநாதன் மீது மோதுவது போல சென்றது. பின்னர் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போலீஸ் வாகனத்தின் மீது மோதி சொகுசு … Read more

Rajkiran: `அதன் விளைவு மிக மோசமாயிருக்கும்!' இணையத்தில் வைரலாகும் நடிகர் ராஜ்கிரணின் பதிவு

தமிழ் திரையுலகில் 80 -களின் காலகட்டத்தில் வெற்றி வாகை சூடிய பல படங்களில் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தவர் ராஜ்கிரண். அவ்வப்போது தனது சமூக வலைதளங்களில் கருத்துக்களைப் பகிர்வதை  ராஜ்கிரண் வழக்கமாக கொண்டிருக்கிறார். அந்தவகையில் இஸ்லாமிய சமூகம் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்தும், இஸ்லாமிய சமூகத்தின் எதார்த்த குணம் குறித்தும் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றைப் பகிர்ந்து இருக்கின்றார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. ராஜ்கிரண் அவர் வெளியிட்டிருந்த அந்தப்பதிவில், “ இஸ்லாமியர்களுக்கு, எவ்வளவு அநீதிகள் … Read more

82 வருட பாரம்பரியம்; மோதிக்கொண்ட இந்திய – இலங்கை படகுகள்; போட் க்ள்ப்பில் நடந்த போட்டி!

சென்னையில் மெட்ராஸ் போட் கிளப்பில் கொழும்பு ரோவிங் க்ளப் மற்றும் மெட்ராஸ் போட் கிளப்புக்கும் இடையே படகுப் போட்டி இரண்டு நாட்களுக்கு முன்பு நடைபெற்றிருந்தது. 82 வருடங்களாக நடக்கும் இப்போட்டி ஒரு வருடம் சென்னையிலும் ஒரு வருடம் கொழும்புவிலும் மாறி மாறி நடைபெறும். தீபம் கோப்பைக்காக ஆண்களும் அடையார் கோப்பைக்காக பெண்களும் ஆக்ரோஷமாகப் போட்டியிடுவார்கள். கொரோனா பெருந்தொற்று காரணமாக மூன்று வருடம் முடங்கி இருந்த இப்போட்டி தற்போது கோலாகலமாக நடைபெற்று முடிந்திருக்கிறது. இப்போட்டியை ரசிகர்கள் பெரும் ஆரவாரத்துடன் … Read more

மும்பை: பாலத்துக்கு தூண்களை பொருத்தியபோது கிரேன் சாய்ந்து விபத்து – 17 தொழிலாளர்கள் உயிரிழந்த சோகம்

மகாராஷ்டிராவில் மும்பையில் இருந்து நாக்பூர் வரை சம்ருத்தி எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் புதிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இச்சாலையில் பெரும் பகுதி போக்குவரத்திற்காக திறக்கப்பட்டுவிட்டது. எஞ்சிய பகுதி அதாவது ஷீரடியில் இருந்து மும்பை வரையிலான பகுதியில் கட்டுமானப்பணி நடந்து கொண்டிருக்கிறது. இச்சாலைக்காக மும்பை அருகில் உள்ள தானே மாவட்டத்தில் இருக்கும் இருக்கும் சஹாப்பூர் அருகில் உள்ள சர்லம்பே என்ற கிராமத்தில் பாலம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. நேற்று இரவு இப்பாலத்திற்கு தேவையான இரும்பு தூண்களை ராட்சத கிரேன்களை … Read more

30 Years of Gentleman: "கே.பி சார், மணி சார் செய்யாததை ஷங்கர் சார் செஞ்சு காட்டினார்!"- மதுபாலா

தமிழ் சினிமாவில் பிரமாண்ட இயக்குநர் என்று பெயர் வாங்கியவர் ஷங்கர். இவருடைய முதல் படம் `ஜென்டில்மேன்’ திரைக்கு வந்து 30 வருடங்கள் ஆகின்றன. இதை இணையத்தில் `30 Years of Shankar’ என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் `ஜென்டில்மேன்’ படத்தின் ஹீரோயின் மதுபாலாவிடம் படம் குறித்த நினைவுகளுக்காகப் பேசினோம்.  ஷங்கர் ”நான் ரொம்ப லக்கின்னு பீல் பண்ணுறேன். ஏன்னா, இந்திய சினிமாவில் பலருடைய முதல் படத்தில் நான் வேலை செஞ்சிருக்கேன். ‘ரோஜா’ படத்தைப் பற்றி ரஹ்மான் சார் … Read more

Motivation Story: முதல் 5 இன்னிங்ஸில் டக்; பின் கேப்டன்; மார்வன் அட்டபட்டுவுக்கு நடந்த மேஜிக்!

`இது நம்மால் முடியாது என எது ஒன்றையும் கைகழுவிவிடுவதில்தான் நம் பலவீனம் உறைந்திருக்கிறது. எதையும் ஒரு முறை முயன்று பார்த்துவிடுவதுதான் வெற்றிக்கான உறுதியான வழி.’ – தாமஸ் ஆல்வா எடிசன். `இனி அவ்வளவுதான்’ என்று நம்மை நாமே நொந்துகொள்ளும் தருணம்தான் நம் முன்னேற்றத்தை அடியோடு வீழ்த்திவிடும் ஆயுதம். அந்த நிலையைக் கடந்துவிட்டோமென்றால் எதிலும் வெற்றியே! `இது வேலைக்காகாது’ என்று ஒரு தொழிலையோ, வேலையையோ, எந்த ஒரு செயலையோ விட்டுவிடுவதற்கு முன்பு யோசிக்க வேண்டும். திரும்பத் திரும்ப முயன்று … Read more

“திமுக யாத்திரை நடத்தினால், `எம் மகன், என் பேரன்’ என்று பெயர் வைப்பார்கள்!” – அண்ணாமலை

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பாதயாத்திரை பயணத்தில் சிவகங்கை வந்தார். அம்பேத்கர் சிலையில் இருந்து நடைப்பயணத்தை தொடங்கிய அவருக்கு பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, தொண்டர்களுடன் அங்கிருந்து மதுரை ரோடு, நெல்லுமண்டி தெரு, கோட்டை முனியாண்டி கோவில் தெரு, வாரச்சந்தை ரோடு வழியாக பேருந்து நிலையத்தை வந்தடைந்தனர். நடைபயணத்தின் போது ஆங்காங்கே கூடியிருந்த பொதுமக்கள் பலரும் அண்ணாமலையை சந்தித்து செல்ஃபி எடுத்துக் கொண்டனர். தொடர்ந்து பிரத்யேகமாக கொண்டு வரப்பட்ட திறந்தவெளி வாகனத்தில் இருந்து பேசும்போது, … Read more

இன்றைய ராசிபலன் 1.8.23 | Horoscope | Today RasiPalan | செவ்வாய்க்கிழமை | August 1 | Daily RasiPalan

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link

`மசூதி என்றால், அங்கு திரிசூலத்துக்கு என்ன வேலை?' – ஞானவாபி மசூதி விவகாரத்தில் யோகி ஆதித்யநாத்

உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசியில், காசி விசுவநாதர் கோயிலுக்கு அருகே ஞானவாபி மசூதி இருக்கிறது. அந்த மசூதி கோயிலை இடித்துக் கட்டப்பட்டிருப்பதாகவும், அதை மீண்டும் இந்துக்களிடம் வழிபாட்டுக்காக ஒப்படைக்க வேண்டும் என்றும், வாரணாசி நீதிமன்றத்தில் சில பெண்களால் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த கீழமை நீதிமன்றம், அந்தப் பகுதியில் தொல்லியல்துறை ஆய்வுசெய்வதற்கு உத்தரவிட்டது. இதை எதிர்த்து, மசூதி நிர்வாகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஞானவாபி மசூதி அப்போது மசூதி நிர்வாகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், … Read more