தண்ணீர் பாட்டிலில் சிறுநீர்; அருகில் லவ் லெட்டர்… அதிர்ந்த பள்ளிச் சிறுமி! – ராஜஸ்தானில் பரபரப்பு

ராஜஸ்தான் மாநிலத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் ஒரு மாணவியின் தண்ணீர் பாட்டிலில் சிறுநீர் நிரப்பப்பட்ட விவகாரம் அதிர்வலைகளைக் கிளப்பி, பெரும் பரபரப்புக்கு வித்திட்டிருக்கிறது. கடந்த வெள்ளிக்கிழமை அரசுப் பள்ளியில் படிக்கும் சிறுமி ஒருவர் தனது வகுப்பில் பை மற்றும் தண்ணீர் பாட்டிலை வைத்துவிட்டு, மதிய உணவுக்காக வீட்டுக்குச் சென்றிருக்கிறார். தண்ணீர் திரும்பி வந்து, பாட்டிலிலிருந்த தண்ணீரைக் குடிக்க முயன்றபோது துர்நாற்றம் வீசுவதை உணர்ந்திருக்கிறார். மாற்று சமூகத்தைச் சேர்ந்த சில சிறுவர்கள் சிறுநீரை தண்ணீர் பாட்டிலில் பிடித்து … Read more

`ஓபிஎஸ் போன்ற துரோகிகளுக்குப் பாடம் புகட்டவே மதுரையில் அதிமுக மாநாடு!' – தேனியில் கே.பி.முனுசாமி

க​டந்த 22 ஆண்டுகளுக்கு முன்பு எம்.பி தேர்தலில், பெரியகுளம் தொகுதியில் டி.டி.வி.தினகரன் போட்டியிட்டார். அப்போது தேனியில் நடந்த அறிமுகக் கூட்டத்தில் ஓ.பி.எஸ், டி.டி.வி.தினகரன் ஆகிய இருவரும் ஒன்றாக மேடையேறினர். அதன் பிறகு நாளை நடைபெறவிருக்கும் தி.மு.க-வுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் இருவரும் ஒன்றாக மேடையேறவிருக்கின்றனர். இந்த நிலையில், அ.தி.மு.க பொன்விழாவை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 20​-ம் தேதி மதுரையில் எழுச்சி மாநாடு நடைபெறவிருக்கிறது. ​தேனி மாவட்ட அ.தி.மு.க ​சார்பில் இ​ந்த மாநாட்டுக்கு தொண்டர்களை ஒருங்கிணைப்பது, அழைத்து வருவது தொடர்பா​க நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் … Read more

கருக்கலைப்பு செய்த டாக்டர்களிடம் மாமூல்; தலைமறைவாக இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சிக்கியது எப்படி?!

கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டராகப் பணியாற்றியவர் மகிதா அன்ன கிறிஸ்டி. இவரின் கணவரும் காவலராகப் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்ட ஒரு வழக்கில் சிறுமிக்கு கருக்கலைப்பு நடந்த தகவல், இன்ஸ்பெக்டர் மகிதாவுக்குத் தெரியவந்தது. உடனடியாக இன்ஸ்பெக்டர் மகிதா, பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் அவரின் பெற்றோரிடம் விசாரித்தார். அதன் பிறகு சிறுமிக்கு எந்த மருத்துவமனையில் கருக்கலைப்பு நடந்தது என்ற விவரங்களைச் சேகரித்த இன்ஸ்பெக்டர் மகிதா, கருக்கலைப்பு குற்றச்சாட்டில் … Read more

நீங்கள் விரும்பும் வாழ்க்கையை எவ்வாறு உருவாக்குவது? | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர் வாழ்க்கை தணிக்கை (Life Audit) செய்யுங்கள்: வாழ்க்கை தணிக்கை செய்வது, உங்கள் வாழ்க்கையில் எங்கு மாற்றங்களை செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்வதற்கும், புதிய பயணத்தை தொடங்குவதற்கும் உதவுகிறது. வாழ்க்கையின் இந்த 8 பகுதிகளில் நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்பதை கண்டறியுங்கள், ஆரோக்கியம், … Read more

"இனிமேல் என் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இல்லாத படங்களில் நடிக்க மாட்டேன்"- மாளவிகா மோகனன்

‘Pattam Pole’ என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை மாளவிகா மோகனன், தமிழில் ‘பேட்ட’, ‘மாஸ்டர்’ போன்ற நடித்து தமிழ் ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர். இந்த இரண்டு படங்களிலும் மாளவிகா முன்னணி நடிகர்களுடன் நடித்திருந்தாலும் சில காட்சிகளில் மட்டுமே வந்திருப்பார். இவரது கதாபாத்திரத்திற்கான முக்கியத்துவம் கொஞ்சம் குறைவாகவே இருக்கும். இதைத்தொட்ர்ந்து தற்போது விக்ரமின் ‘தங்கலான்’ படத்தில் நடித்துள்ளார். இந்தியிலும் ‘Yudhra’ என்ற படத்தில் நடித்து வருகிறார். ரஜினி, விஜய், மாளவிகா மோகனன் இந்நிலையில் அண்மையில் நேர்காணல் … Read more

சென்னை: “ஆன்டியைக் கொலை செய்ததற்கு இதுதான் காரணம்'' – மருமகனின் தகவலால் ஷாக்கான குடும்பத்தினர்!

சென்னை கொடுங்கையூர் கிருஷ்ணமூர்த்தி நகர், கண்ணன் தெருவைச் சேர்ந்தவர் அன்பு. இவர் தனியார் கம்பெனியில் வேலைப்பார்த்து வருகிறார். இவரின் மனைவி வேளாங்கண்ணி. இவர்களுக்கு மரியன் லாசர் என்ற மகனும், 23 வயதில் மகளும் உள்ளனர். வேளாங்கண்ணிக்கு இடது காலில் குறைபாடு உள்ளதால் அவர் தாங்கி தாங்கித்தான் நடப்பார். இந்த நிலையில் கணவர், மகன், மகள் என மூன்று பேரும் வேலைக்குச் சென்று விட்டதால் வேளாங்கண்ணி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். வேலை முடிந்து மகன் மரியன் லாசர் … Read more

வணங்கான்: அறிவிப்பின்றி தொடங்கிய ஷூட்டிங்; சூர்யாவுக்கு பதிலாக அருண் விஜய்; கதாபாத்திரம் இதுதான்!

2022 மார்ச் 28 ஆம் தேதி, பாலா இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி ஷெட்டி, மமிதா உட்பட பலர் நடிப்பில் வணங்கான் படம் தொடங்கப்பட்டது. முதல்கட்ட படப்பிடிப்புக்குப் பின் அடுத்தகட்டப் படப்பிடிப்பு பற்றிய செய்தி வரும் என்று பார்த்தால், டிசம்பர் 4, 2022 அன்று இயக்குநர் பாலா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் வணங்கான் படத்தில் இருந்து சூர்யா விலகிவிட்டதாகச் சொல்லியிருந்தார். அவர் வெளியிட்டிருந்த செய்திக்குறிப்பில், என் தம்பி சூர்யாவுடன் இணைந்து வணங்கான் என்ற புதிய திரைப்படத்தை இயக்க விரும்பினேன். சூர்யா, … Read more

ஜன் விஸ்வாஸ் மசோதா: தொழில்முனைவோர்கள் செய்யும் சிறு தவறுகளுக்கு சிறைத் தண்டனை கிடையாது…!

‘இனிமேல் தொழில்முனைவோர்கள் செய்யும் சின்ன சின்ன தவறுகளுக்கு சிறை தண்டனை கிடையாது’ என்று கடந்த வியாழக்கிழமை மக்களவையில் ஒப்புதல்பெற்ற ‘ஜன் விஸ்வாஸ்’ சட்டத்திருத்த மசோதா கூறுகிறது. ‘ஜன் விஸ்வாஸ்’ என்றாலே மக்களின் நம்பிக்கை அல்லது மக்களின் மேலுள்ள நம்பிக்கை என்று பொருள் ஆகும். இந்த சட்டத் திருத்தத்தில் 19 அமைச்சரவைக்கு கீழுள்ள, பல்வேறு தொழில் மற்றும் மக்கள் செயல்பாடுகள் குறித்த 42 சட்டங்களில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த சட்டங்களில் ஏற்கனவே குறிப்பிடப்பட்டுள்ள சிறிய, நடைமுறையில் நடக்கக்கூடிய மற்றும் … Read more

இனி சிவில் சர்வீஸ் தேர்வைப் பற்றி பயமேன்!- திருச்சியில் சிறப்பாக நடந்த ஆனந்த விகடனின் பயிற்சி முகாம்

சிவில் சர்வீஸ் தேர்வு மற்றும் டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் ஆனந்த விகடன் மற்றும் கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி இணைந்து ‘UPSC / TNPSC group I & II தேர்வுகளில் வெல்வது எப்படி’ என்கிற இலவச பயிற்சி முகாமினை இன்று திருச்சியில் நடத்தியது. இந்த நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட ஆட்சியர் திரு M. பிரதீப் குமார் IAS , திருச்சி மாநகரக் காவல்துறை ஆணையர் திருமதி M. சத்தியபிரபா IPS, திரு V … Read more