“காவல்துறையினர், ஆசிரியர்கள் சாதிப் பெயரில் வாட்ஸ்அப் குழு நடத்துகிறார்கள்'' – CPM பெ.சண்முகம்

“சாதிப் பெயர்களில் வாட்ஸ்அப் குழுக்களை காவல்துறையினர், ஆசிரியர்கள் நடத்தி வருகிறார்கள். அரசின் உயர் பொறுப்புகளில் உள்ள ஒரே சமூகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் உடனடியாக மாற்றப்பட வேண்டும்” என சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார். கருத்தரங்கில் ‘நாட்டைக் காப்போம்’ அமைப்பு சார்பில் சாதி ஆணவப் படுகொலைகளைத் தடுப்பது தொடர்பாக நடத்தப்பட்ட கருத்தரங்கில் சண்முகம் பேசும்போது, “மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை சாதி கொடுமைகள் அதிகம் நடைபெறும் மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. வழக்குகளில் … Read more

Court Tamil Remake: மீண்டும் பிரசாந்தை இயக்கும் தியாகராஜன் – ஹீரோயினாக தேவயாணியின் மகள்!

தமிழ் சினிமாவில் நீதிமன்றக் கதைகள் உலகப் பிரசித்தி பெற்றவை. சிவாஜி அறிமுகமான ‘பராசக்தி’ படத்தில் நீதிமன்றக் காட்சி வசனம் முக்கிய ஹைலைட்டாக இருந்தது. அதன்பிறகு மோகன் நடிப்பில் ‘விதி’ வந்தது. ஆரூர் தாஸ் எழுதிய வசனங்கள் ஆடியோ வடிவில் பட்டி தொட்டியெல்லாம் பரபரப்பை ஏற்படுத்தின. இந்த ஃபீவர் தெலுங்கு தேசத்தில் பரவிக் கிடக்கிறது. பெரிய ஹீரோக்கள் நடிக்காமல் சாதாரண நடிகர்களை வைத்து தயாரிக்கப்பட்ட ‘கோர்ட்’ திரைப்படம் தியேட்டரில் கொண்டாடப்பட்டது. Court – State vs A Nobody … Read more

US: நடுரோட்டில் `கட்கா' வாளை சுழற்றிய குர்ப்ரீத் சிங்; சுட்டுக்கொன்ற போலீசார் – அதிர்ச்சி வீடியோ

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உயிரிழந்தவர் சீக்கிய சமூகத்தைச் சேர்ந்த குர்ப்ரீத் சிங். சுமார் 35 வயதான இவர், பஞ்சாபி மரபுக் கலைகளில் ஆழ்ந்த ஆர்வம் கொண்டவராக இருந்தார். குறிப்பாக, சீக்கிய சமூகத்தின் பாரம்பரிய யுத்தக்கலை கட்காவைக் காட்சிப்படுத்துவதில் பெரும் ஈடுபாடு கொண்டவர். Gurpreet Singh ஜூலை 13, 2025 அன்று, சாலையின் நடுவே தனது வாகனத்தை நிறுத்தி வைத்து, கையில் பாரம்பரிய கூர்மையான வாள் போன்ற கண்டாயுடன் கட்கா கலைகளை வெளிப்படுத்திக் கொண்டிருந்தபோது, காவல்துறையினர் அவரை ஆபத்தான … Read more

“எடப்பாடி முதல்வராக அண்ணாமலை உயிரை கொடுக்க வேண்டாம்; பாஜகவினரை தூண்டினாலே போதும்'' – செல்லூர் ராஜூ

“எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராவதற்கு அண்ணாமலை உயிரைக் கொடுக்க வேண்டாம், பாஜகவினரை தூண்டினால் போதுமானது” என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் பிரசாரப் பயணத்தை எடப்பாடி பழனிசாமி தொடங்கவுள்ள நிலையில், அதற்கான பிரசார வாகனத்தை முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, செல்லூர் ராஜூ தொடங்கி வைத்தனர். அண்ணாமலை. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜூ கூறியதாவது:“மதுரை மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் 8,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை அதிமுக ஆட்சி காலத்தில் … Read more

US tariffs: “வரி விதிக்க அதிபருக்கு அதிகாரம் இல்லை'' -அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு; ட்ரம்ப் முரண்டு

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உலகின் பெரும்பாலான நாடுகள் மீது பரஸ்பர வரி விதித்துள்ளார். ஏன் இந்த வரி? பிற நாடுகள் அமெரிக்காவிற்கு அதிக வரி விதிக்கிறார்கள் என்றும், பிற நாடுகளுடன் அமெரிக்காவிற்கு வர்த்தகத்தில் பற்றாக்குறை இருப்பதால் தான் இந்த வரிகள் விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த வரிகள் தேசிய அவசரநிலை மற்றும் சர்வதேச அவசர பொருளாதார அதிகாரச் சட்டம், 1977 கீழ் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டன. நீதிமன்றம் நீதிமன்றத்தின் தீர்ப்பு உலக நாடுகளின் மீதான இந்த வரிகளை எதிர்த்த … Read more

“முதல்வரின் வெளிநாட்டுப் பயணம், சுற்றுப்பயணமா? வெற்றுப்பயணமா?'' – ஆர்.பி. உதயகுமார் கேள்வி

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே எடப்பாடி பழனிசாமியின் பிரசாரப் பயண ஏற்பாடுகளை ஆய்வு செய்ய சென்ற முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறியதாவது, “உசிலம்பட்டி பகுதியில் பல்வேறு கோரிக்கைகளை எடப்பாடி பழனிசாமி நிரைவேற்றியுள்ளார். மிக எழுச்சியாக, ஆட்சி மாற்றத்திற்கு அடித்தளம் அமைக்கும் வகையில் உசிலம்பட்டி தொகுதியில் அவரது பேருரை நடைபெறும். மதுரை மாவட்டத்தில் நடைபெறும் எழுச்சிப் பயணம் வரலாற்றில் முத்திரை பதிக்கும் வகையில் அமையும். அரசியல் தலைநகரான மதுரையில் அவரது பேச்சை கேட்க … Read more

Mohammed Shami: "எனக்கு ஒரேயொரு நிறைவேறாத கனவு இருக்கு" – மனம் திறந்த முகமது ஷமி

இந்தியாவில் 2023-ல் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பையில் வெறும் 7 போட்டிகளில் 24 விக்கெட்டுகள் வீழ்த்தி, அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்த முகமது ஷமி, அந்தத் தொடருக்குப் பிறகு காயம் காரணமாக ஒன்றரை ஆண்டு கழித்துத்தான் சர்வதேச போட்டியில் ஆடினார். கடைசியாக சாம்ப்பின்ஸ் டிராபியில் ஆடிய ஷமி, இங்கிலாந்துக்கெதிரான டெஸ்ட் தொடரிலும் தேர்வாகவில்லை, தொடங்கவிருக்கும் ஆசியக் கோப்பை தொடருக்கான இந்திய அணியிலும் இப்போது தேர்வாகவில்லை. முகமது ஷமி இந்த நிலையில், தனக்கு நிறைவேறாத கனவு … Read more

Madharaasi: "கல்லூரி காலத்தில் எனக்கு கிடைத்த நண்பர்களால்தான் இங்கு இருக்கிறேன்" – சிவகார்த்திகேயன்

கோவை சரவணம்பட்டியில் உள்ள எஸ்.என்.எஸ் கல்லூரிக்கு நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய “மதராஸி” படத்தின் புரமோஷன் நிகழ்விற்காக நேற்று வந்திருந்தார். மதியம் 3 மணிக்குத் தொடங்கிய இந்த மீட் அண்ட் க்ரீட் நிகழ்வில் மாணவர்கள் பெரும் உற்சாகத்துடன் கலந்துகொண்டனர். Madharaasi – Coimbatore முதலில் மேடையேறிய பாடகர் ஆதித்யா ஆர்.கே, ‘மதராஸி’ மற்றும் அதற்கு முன் ‘டான்’ படங்களில் பாட வாய்ப்பு வழங்கியதற்காக சிவகார்த்திகேயனுக்கு நன்றியைத் தெரிவித்தார். பின்னர் மேடைக்கு வந்த நடிகை ருக்மிணி வசந்த், “இது என் … Read more

Putin – Kim: 'ஷி, புதின், கிம் சந்திப்பு' – அமெரிக்காவுக்குச் சொல்லவரும் செய்தி என்ன?

பெய்ஜிங்கில் ஒரு வரலாற்றுச் சந்திப்பு அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப், “அமெரிக்காவுக்கு முதல் இடம்” என்ற தனது கொள்கையின் கீழ் உலக வர்த்தக அமைப்பையே உலுக்கி வருகிறார். அவரது வர்த்தகப் போர் மற்றும் பொருளாதாரத் தடைகள், பல நாடுகளைக் கடுமையாகப் பாதித்துள்ளன. குறிப்பாக, சீனா, இந்தியா, மெக்சிகோ, கனடா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் இந்த வரிவிதிப்புகளால் பெரும் நெருக்கடியைச் சந்தித்து வருகின்றன. இந்தச் சூழலில்தான், அமெரிக்காவின் நீண்டகால எதிரிகளான மூன்று நாடுகள், … Read more

GVM: "என்னுடைய ஒரு வெளிவராத படத்தின் மீது அவர் அதிக நம்பிக்கை வைத்திருக்கிறார்!'' – கெளதம் மேனன்

இயக்குநர் லிங்குசாமியின் ‘பெயரிடப்படாத ஆறுகள்’ என்ற புதிய ஹைக்கூ கவிதைத் தொகுப்பை இன்று, முனைவர் கு. ஞானசம்பந்தன் தலைமையில், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் வெளியிட்டார். வெளியிடப்பட்ட நூலை நடிகை அபிராமி பெற்றுக்கொண்டார். `என்னை சிரிக்க வைக்கும் ஒருவர் லிங்குசாமி’ மேடையில் பேசத் தொடங்கிய இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், “லிங்குசாமி என்னோட நெருங்கிய நண்பர். நான் அவரின் அனைத்தும் விஷயங்களையும் ரசிப்பேன் என்று அவருக்குத் தெரியும். அதற்காகதான் இந்தப் புத்தகத்தை இன்று நான் வெளியிட்டிருக்கிறேன். நாங்கள் … Read more