ஓரமாக நிற்கச் சொன்ன ஏற்பாட்டாளர்கள்; என்ன செய்தார் சிரஞ்சீவி? 90-களின் டோலிவுட் ஸ்டோரி #AppExclusive

(“டெல்லியில் என்னை ஒதுக்கினார்கள் – சிரஞ்சீவி என்ற தலைப்பில் 27.09.1992 தேதியில் ஆனந்த விகடன் இதழிலிருந்து…) ஆந்திர மாநிலத்தின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள ஒரு சின்ன ஊர் மொகுலுதுரு. இந்த ஊரைச் சேர்ந்த சிவசங்கர் வரப்பிரசாத் அப்போதுதான் (1977) பி.காம், பாஸ் செய்திருந்தார். அரசாங்கத்தின் எக்சைஸ் துறையில் பணிபுரிந்து கொண்டிருந்த சிவசங்கரின் அப்பா வெங்கட்ராவுக்குத் தன் மகன் ஒரு பெரிய ஆடிட்டர் ஆக வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை! ஆனால், சிவசங்கர் “நான் சினிமாவில் … Read more

சுகமான தூக்கத்திற்கு! | முதுமை எனும் பூங்காற்று | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர் உடம்பிற்கு காற்று, தண்ணீர், உணவு எவ்வளவு அவசியமோ அந்தளவிற்கு துாக்கமும் அவசியமே. நமது வாழ்க்கையில் சுமார் மூன்றில் ஒரு பங்கு துாக்கத்தில் கழிந்து விடுகிறது. இந்த முக்கியமான செயலுக்கு நாம் சற்று கவனம் செலுத்துவது அவசியம். முதுமையில் துாக்கம் சற்று குறைவது உண்மையே. … Read more

கண் பாதுகாப்பில் நீங்கள் செய்யும் தவறுகளை அறிவீர்களா?|கண்கள் பத்திரம்- 29

கண்களைப் பாதுகாப்பதில் ஒவ்வொருவருக்கும் அதீத கவனம் தேவை. ஆனால் பலரும் சாதாரண அறிகுறிகள் என அலட்சியப்படுத்தும் பல விஷயங்கள் பிற்காலத்தில் பார்வையிழப்பு வரை வழிவகுப்பதை அறிவதில்லை. அப்படி பலரும் செய்யும் அலட்சியம் பற்றி விளக்குகிறார் சென்னையைச் சேர்ந்த விழித்திரை சிறப்பு மருத்துவர் வசுமதி வேதாந்தம். அறிகுறிகளை அலட்சியம் செய்வது… கண்களில் அரிப்பு அல்லது எரிச்சல், சிவந்துபோவது, கண்ணீர் வடிவது போன்றவை ஒவ்வாமைக்கான அறிகுறிகளாக இருக்கலாம். கண்களில் கசிவு, வலி, வெளிச்சத்தைப் பார்க்கும்போது கூச்சம், மங்கலான பார்வை போன்ற … Read more

வருமான வரித்துறையின் நோட்டீஸ்; அதிர்ந்த தினசரி கூலித்தொழிலாளி – வரி பாக்கி எவ்வளவு தெரியுமா?

நீங்கள் தினசரி கூலி வேலை பார்த்து பிழைப்பு நடத்திவருபவர் என்று வைத்துக்கொள்ளுங்கள், உங்களுக்கு திடீரென ஒரு நாள் வருமான வரித்துறையிலிருந்து, `நீங்கள் வருமான வரித்துறைக்கு லட்சக்கணக்கில் பணம் பாக்கி வைத்திருக்கிறீர்கள்’ என நோட்டீஸ் வந்தால் எப்படியிருக்கும். அதுபோன்ற ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் பீகாரை சேர்ந்த நபர் ஒருவருக்கு நேர்ந்திருக்கிறது. பீகார் மாநிலத்தில் ககாரியா மாவட்டத்தில் வசிப்பவர் தான், கிரிஷ் யாதவ். இவர் தினசரி கூலி வேலை செய்து வருமானம் ஈட்டி வருகிறார். இவருடைய ஒருநாள் வேலைக்கான கூலியே … Read more

புதுச்சேரி: முதல்வர், அமைச்சர்களின் வாகன எரிபொருள் ஆண்டு செலவு… ஆர்.டி.ஐ தகவல் கூறுவதென்ன?

புதுச்சேரியைச் சேர்ந்த ராஜீவ் காந்தி மனித உரிமைகள் விழிப்புணர்வு அமைப்பு, புதுச்சேரி சட்டப்பேரவை கடந்த ஆண்டில் கூடிய நாள்கள் எவ்வளவு, அமைச்சர்கள் வாங்கிய புதிய கார்களுக்கான எரிபொருள் செலவு எவ்வளவு என தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்டிருந்தது. அதில் கிடைத்த தகவல்களை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு புகாராக அனுப்பியிருக்கிறது அந்த அமைப்பு. அதுகுறித்து நம்மிடம் பேசிய அதன் தலைவர் ரகுபதி, “புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு பொறுப்பேற்ற அரசின் அமைச்சர்கள் பயன்படுத்துவதற்காக பழைய கார்களை தவிர்த்துவிட்டு 3.3 … Read more

Doctor Vikatan: தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள் என்னென்ன?

Doctor Vikatan: தாய்ப்பால் ஊட்டும் பெண்கள், எந்தெந்த உணவுகளை எல்லாம் தவிர்க்க வேண்டும்? பதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி… மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள், பெரும்பாலும் எல்லா உணவுகளையுமே சாப்பிடலாம். சில விதிவிலக்குகள் மட்டுமே உள்ளன. தாய்ப்பால் கொடுக்கும் காலகட்டத்தில் அவர்கள் வழக்கமாக எடுத்துக் கொள்வதைவிட, 500 கலோரிகள் அதிகமாக உணவு எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும். அப்படி அவர்கள் எடுக்கும் உணவானது சரிவிகிதத்தில், ஆரோக்கியமானதாக இருக்க … Read more

“எங்களைக் கொலை செய்ய ப்ளான் பண்ணினார்… நாங்க முந்திக்கிட்டோம்” – 2 சிறார்களின் பகீர் வாக்குமூலம்

தூத்துக்குடி பிரையண்ட்நகரைச் சேர்ந்தவர் சரவணகுமார். இவரின் மனைவி சங்கீதா. இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். பெயின்டரான சரவணகுமார், தாளமுத்துநகரில் வசித்து வந்த நிலையில், அங்குள்ள சிலருடன் அடிகடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அந்த வீட்டைக் காலி செய்துவிட்டு குடும்பத்துடன் பிரையண்ட்நகரில் வந்து குடியேறியுள்ளார். கொலை செய்யப்பட்ட சரவணகுமார் இந்த நிலையில், நேற்றுமுந்தினம் இரவு சுமார் 10 மணியளவில் தனது உறவினர் சிவாவை மதுரைக்கு பஸ் ஏற்றி விடுவதற்காக … Read more

மதுரை: 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் – பிறந்த குழந்தை இறந்ததன் மூலம் வெளிவந்த குழந்தை திருமணம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே போலக்காபட்டியிலுள்ள 28 வயதான உதயக்குமார் என்பவருக்கு14 வயது சிறுமியை சட்டவிரோதமாக திருமணம் செய்து வைத்த சம்பவம், அவர்களுக்கு பிறந்த குழந்தை இறந்தது மூலம் வெளியே தெரிந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசு மருத்துவமனை பெண் குழந்தை பிறந்தால், அக்குழந்தை குடும்பத்துக்கு பாரம், செலவு என்று கருதி பெண் குழந்தைகளை கொல்கின்ற கொடூர பழக்கம் இப்பகுதியில் ஒரு காலத்தில் இருந்தது. எனினும் தொட்டில் குழந்தை திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மூலம் அரசு எடுத்த … Read more

விருதுநகர்: ஆன்லைன் லோன்; ஆபாச படம்; தொழிலதிபரிடம் மோசடி – கிரிப்டோ கரன்சிகளாக மாற்றப்பட்ட பணம்?!

விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரிடம் ஆன்லைன் கடன் ஆப் மூலமாக 18 லட்சத்து 15 ஆயிரத்து 991 ரூபாயை மர்மகும்பல் மோசடி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக இரண்டு பேரை போலீஸ் கைது செய்துள்ளது. இந்த குறித்து போலீஸிடம் பேசினோம், “விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தாலுகாவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தொழில் விரிவாக்கத்திற்காக சிலரிடம் பணம் கேட்டுள்ளார். ஆனால், அவருக்கு வேண்டியத்தொகை கிடைக்காததால் ஆன்லைனில் உடனடி கடன் ஆப் மூலமாக … Read more