விகடன்
30 நிமிட சன் பாத்… பிளாஸ்டிக் போன்று மாறிய முகம்! இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்..
லண்டனைச் சேர்ந்த பெண் ஒருவர் வெயிலில் அதிகம் நேரம் இருந்ததால் அவரது முகத்தில் உள்ள சருமம் பிளாஸ்டிக் உருகியது போன்று மாறியது. காண்பவரை கலங்க வைத்தது. 25 வயதாகும் சிரின் முரத், லண்டனில் வசித்து வருகிறார். இவர் தனது விடுமுறை நாள்களைக் கழிப்பதற்கு குடும்பத்துடன் பல்கேரியாவுக்குச் சென்றுள்ளார். Sun பல்கேரியாவிலுள்ள சன்னி கடற்கரையில் சுமார் 21 செல்சியஸ் வெயிலில் இளைப்பாறியுள்ளார், அப்படியே சற்று தூங்கி விட்டார். தூக்கத்திலிருந்து விழித்தபோது அவர் முகம் சிவந்திருந்தது. அது வலியைத் தரும் … Read more
புலியிடம் தப்பிய யானைக் குட்டி; கூட்டத்துடன் சேர்த்த வனத்துறை! வலுக்கும் ஆதரவும் எதிர்ப்பும்!
கேரள மாநிலம், வயநாடு மாவட்டம் மானந்தவாடி தாலுகா பேகூர் வனப்பகுதியில் வனத்துறையினர் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பபாறா என்ற பகுதியில் யானை குட்டி ஒன்று தனியாக உலவுவதைக் கண்டு அருகில் சென்றுள்ளனர். மேலும் அந்த குட்டியின் உடலில் காயங்கள் இருப்பதையும் கண்டறிந்தனர். இதனைத் தொடர்ந்து, உடனடியாக முத்தங்கா வனவிலங்குகள் சரணாலயத்தில் இருந்து கால்நடை மருத்துவர்களை அழைத்து யானை குட்டிக்கு சிகிச்சை அளித்துள்ளனர். காயங்கள் ஓரளவிற்கு குணமடைந்து உடல்நிலை தேறி வருகிறது. தாயைப் பிரிந்து தவிக்கும் … Read more
வாட்ஸ்அப் லிங்கை க்ளிக் செய்த ஆசிரியை… ரூ.21 லட்சத்தை அபேஸ்செய்த டிஜிட்டல் கொள்ளையர்கள்!
இந்த டிஜிட்டல் யுகத்தில் ஆன்லைன் மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமாகவே இருந்து வருகின்றன. இந்தியாவில் இத்தகைய சைபர் குற்றங்களைத் தடுக்க சைபர் க்ரைம் போலீஸார் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இருப்பினும் மக்களின் அறியாமையை தங்களுக்குச் சாதகமாக்கிக்கொள்ளும் மோசடிக்காரர்கள், பல வகைகளில் பணப் பறிப்பில் ஈடுபடுகின்றனர். அப்படியான சம்பவம் ஒன்றுதான் ஆந்திராவில் நடந்திருக்கிறது. ஆந்திர மாநிலம், அன்னமய்யா மாவட்டம், மதனப்பள்ளி நகரில் உள்ள ரெட்டப்பநாயுடு காலனியைச் சேர்ந்தவர் வரலக்ஷி (Varalakshi). ஓய்வு பெற்ற ஆசிரியையான இவருக்கு … Read more
Rajinikanth ட்விட்டரில் பின்தொடரும் பிரபலங்கள் இவர்கள்தான்!
இன்றைய காலக்கட்டத்தில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தாத நபர்கள் மிகக்குறைவு. அந்த வகையில் சினிமா நட்சத்திரங்களும் தங்களது படங்கள் குறித்தும் பர்சனலான விஷயங்கள் குறித்தும் ரசிகர்களுடன் பகிர்ந்துகொள்வதற்காக பேஸ்புக் மற்றும் ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் இணைந்து, அவர்கள் குறித்த தகவல்களை ரசிகர்ளுடன் பகிர்ந்து வருகின்றனர். அந்தவகையில், நடிகர் ரஜினிகாந்த்தும் கடந்த 2013 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ட்விட்டரில் இணைந்தார். ரஜினிகாந்த் ட்விட்டரில் இணைந்ததும் அவரைப் பலரும் ஃபாலோ செய்யத் தொடங்கினர். அந்தவகையில் ரஜினியை தற்போது … Read more
டெல்லி: திருமணம் மீறிய உறவு; 48 வயது பெண்ணின், 17 வயது மகளை இடைஞ்சல் எனக் கொன்ற 18 வயது இளைஞர்!
டெல்லியில் திக்ரி எல்லைப் பகுதியில் வசித்து வருபவர் ஹரிஷ் (18). பஹதுர்கரில் உள்ள ஒரு தொழிற்சாலையில் இவர் பணியாற்றி வந்திருக்கிறார். அப்போது அதே தொழிற்சாலையில் பணியாற்றி வந்த 48 வயது பெண்ணுடன் ஹரிஷுக்கு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இந்தப் பெண்ணுக்கு 17 வயதில் ஒரு மகள் இருந்திருக்கிறார். ஹரிஷ் இந்த பெண்ணின் குடும்பத்துடன் ஒன்றாக வாழ்ந்து வந்ததாக தெரிகிறது. தன்னுடைய தந்தை உயிருடன் இருக்கும் போதே, அம்மா வேறு ஒருவருடன் பழகுவது இந்த சிறுமிக்கு மனவேதனையும், கோபத்தையும் ஏற்படுத்தி … Read more
உர்ர்ருவம்! | குறுங்தை | My Vikatan
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர் வீட்டிற்கு வெளியே வேற சோ…ன்னு பேய்மழ பேஞ்சுக்கிட்டிருக்கு… என்னடாது.. சமூக வலைத்தளத்தை தொறந்தாலே எங்க பாத்தாலும் ஒரே இளவயசு மரணங்களும், அது தொடர்பான பதிவுகளும் வந்து பயமுறுத்துதே . என மனகுழப்பத்துலயே லேப்பு டாப்பை நோண்டிக்கிட்டே படுத்திருந்தவன் .. அந்த நேரம் பார்த்து … Read more
மிளகாய்பொடி தூவி, கடத்தப்பட்ட தொழிலதிபர்; 2 நாள்கள் கழித்து சடலமாக மீட்பு – நாமக்கல்லில் அதிர்ச்சி
நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம் அருகே உள்ள வெப்படை பாதரை செட்டுக்காரன் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் கௌதம் (36). இவருக்கு திவ்யபாரதி (29) என்ற மனைவி இருக்கிறார். கௌதம் வெப்படையில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். அதோடு, கௌதம் அவர் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பள்ளிப்பாளையம் வடக்கு ஒன்றிய இளைஞரணி தலைவராகவும் உள்ளார். இதனால், அந்தப் பகுதியில் கௌதம் பலராலும் நன்கு அறியப்படும் நபராக இருந்தார். இந்த நிலையில், கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு இரவு நேரத்தில், … Read more
சுவை, நிறம்… அசலான சாக்லேட் எது? சாக்லேட் பற்றிய ஸ்வீட் தகவல்கள்! #VisualStory
Yummy Chocolates முதன்முதலில் ஐரோப்பாவில் 1550, ஜூலை 7-ம் தேதி சாக்லேட் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த தினமே சாக்லேட் தினமாகக் கொண்டாடப்படுகிறது. பண்டைய மாயன்கள் (Mayans) cocoa beans-ஐ நாணயமாகப் பயன்படுத்தி வந்துள்ளனர். தங்கத்தை விட உயர்ந்ததாக அவர்கள் சாக்லேட்டை கருதினர். மனித ரத்தத்தின் வெப்பநிலையிலேயே சாக்லேட் உருகும் தன்மை உடையது. எனவேதான் வாயில் வைத்தவுடன் உருகி, இனிப்புச் சுவையின் திருப்தியை அளிக்கிறது. 400 கோகோ பீன்ஸ்களை கொண்டு ஒரு பவுண்டு சாக்லேட்டை தயாரிக்க முடியும். ஆறு நிமிடங்களில் … Read more