மிளகாய்பொடி தூவி, கடத்தப்பட்ட தொழிலதிபர்; 2 நாள்கள் கழித்து சடலமாக மீட்பு – நாமக்கல்லில் அதிர்ச்சி

நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம் அருகே உள்ள வெப்படை பாதரை செட்டுக்காரன் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் கௌதம் (36). இவருக்கு திவ்யபாரதி (29) என்ற மனைவி இருக்கிறார். கௌதம் வெப்படையில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். அதோடு, கௌதம் அவர் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பள்ளிப்பாளையம் வடக்கு ஒன்றிய இளைஞரணி தலைவராகவும் உள்ளார். இதனால், அந்தப் பகுதியில் கௌதம் பலராலும் நன்கு அறியப்படும் நபராக இருந்தார். இந்த நிலையில், கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு இரவு நேரத்தில், … Read more

சுவை, நிறம்… அசலான சாக்லேட் எது? சாக்லேட் பற்றிய ஸ்வீட் தகவல்கள்! #VisualStory

Yummy Chocolates முதன்முதலில் ஐரோப்பாவில் 1550, ஜூலை 7-ம் தேதி சாக்லேட் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த தினமே சாக்லேட் தினமாகக் கொண்டாடப்படுகிறது. பண்டைய மாயன்கள் (Mayans) cocoa beans-ஐ நாணயமாகப் பயன்படுத்தி வந்துள்ளனர். தங்கத்தை விட உயர்ந்ததாக அவர்கள் சாக்லேட்டை கருதினர். மனித ரத்தத்தின் வெப்பநிலையிலேயே சாக்லேட் உருகும் தன்மை உடையது. எனவேதான் வாயில் வைத்தவுடன் உருகி, இனிப்புச் சுவையின் திருப்தியை அளிக்கிறது. 400 கோகோ பீன்ஸ்களை கொண்டு ஒரு பவுண்டு சாக்லேட்டை தயாரிக்க முடியும். ஆறு நிமிடங்களில் … Read more

`இப்படியும் ஆசைப்படுவாங்களா?’ 100-வது பிறந்தநாளில் நிறைவேறிய விசித்திர ஆசை… கைது செய்த போலீஸ்!

ஆசைகள்… ஆசைகளை வளர்த்துக்கொள்வதும், இதுலதான் ஆசைப்படணும், இதுக்கு தான் ஆசைப்படணும், இந்த வயசுல தான் ஆசைப்படணும்னு எந்தவொரு எல்லைகோடுமே கிடையாது. மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகிட்ட கூட உன்னோட கடைசி ஆசை என்னனு கேப்பாங்க. சிறுமி அதுமட்டுமில்லாம நமக்கு நெருக்கமானவங்க, நம்மள புடிச்சவங்கனு பலபேர் நம்மளோட ஆசை என்னனு நமக்கு தெரியாமலே தெரிஞ்சிக்கிட்டு நம்மள சர்ப்ரைஸ் பண்ணுவாங்க. அப்போ நாம உணர்ந்த அந்த சந்தோஷத்தை வெளிப்படுத்த வார்த்தைகள் கூட கிடைக்காது. என்னதான் ஹோட்டல்ல சாப்டாலும், நாம சமைச்ச … Read more

விருதுநகர்: வழக்கு விசாரணைக்காக வந்தவர்கள்… பெண்ணை கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்!

அருப்புக்கோட்டை அருகே வசிக்கும் 40 வயது பெண் ஒருவர் தனது உறவினர் இல்ல நிகழ்ச்சிக்காக விருதுநகர் சென்றுவிட்டு மீண்டும் பஸ்ஸில் ஊர் திரும்பியுள்ளார். இந்நிலையில் அவருக்கு, நன்கு அறிமுகமான கரிசல்குளத்தை சேர்ந்த முத்துச்செல்வம் என்பவர், பெண்ணை தொடர்புக்கொண்டு பேசியுள்ளார். அப்போது பேசியவர், தானே காரில் கூட்டிச்சென்று இறக்கிவிடுவதாக கூறியுள்ளார். இதையடுத்து பாலவநத்தம் அருகே பஸ்ஸிலிருந்து இறங்கிய பெண், முத்துச்செல்வத்துடன் காரில் புறப்பட்டுள்ளார். அவர்கள் அருப்புக்கோட்டை அருகே பாலவனத்தம்-கோபாலபுரம் சாலையில் நின்று பேசிக்கொண்டிருக்கும் போது, முத்துச்செல்வத்தை பின்தொடர்ந்து பைக் … Read more

Doctor Vikatan: பித்தப்பை கற்களுக்கு பித்தப்பையை நீக்குவதுதான் தீர்வா?

Doctor Vikatan: பித்தப்பை கற்கள் ஏற்பட என்ன காரணம்? பித்தப்பையை அகற்றுவது மட்டும்தான் இதற்குத் தீர்வா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, இரைப்பை, குடல் அறுவை சிகிச்சை மருத்துவர் பி.செந்தில்நாதன். மருத்துவர் பி.செந்தில்நாதன் கடந்த சில வருடங்களில் அதிக நபர்கள் பித்தப்பை கற்கள் பிரச்னையால் பாதிக்கப்படுவதைப் பார்க்கிறோம். இதற்கான முக்கிய காரணம், மாறிவரும் உணவுப்பழக்கம். குறிப்பாக கொழுப்புச்சத்து அதிகமுள்ள உணவுகளை எடுத்துக்கொண்டால் பித்தப்பை கற்கள் உருவாகும் வாய்ப்புகள் அதிகம். கொழுப்பு அதிகமுள்ள மட்டன் போன்ற அசைவ உணவுகள், … Read more

`கும்பகர்ணன் போல் தூங்குகிறது இந்த அரசு; நாங்கள்தான் தட்டி எழுப்புகிறோம்" – எடப்பாடி பழனிசாமி

கோவையில் அதிமுக கட்சி பிரமுகரின் இல்ல நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பின் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது பேசிய அவர், “கோவை வெள்ளலூர் புதிய பேருந்து நிலையம் இடம் மாற்றப்படுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால் அதிமுக சார்பில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும். கோவை மாநகராட்சியில் 150 கோடி செலவில் 500 பணிகள் அதிமுக அரசால் கொண்டு வரப்பட்டது. அதை திமுக அரசு முடக்கி விட்டது” எனக் குற்றம்சாட்டினார். … Read more

“ராகுல் காந்தியே தலைவராக இருந்தார்… அவரே தலைவராக இருக்கவேண்டும்" – அசோக் கெலாட்

5 மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியடைந்ததிலிருந்தே, கட்சியின் தலைவர் பதவிக்குத் தேர்தல் நடவேண்டுமென்று, காங்கிரஸுக்குள்ளேயே பல்வேறு பேச்சுக்கள் எழுந்தன. இந்த நிலையில், காங்கிரஸில் தற்போது தலைவர் பதவிக்கான தேர்தல் வேலைகள் நடைபெற்றுவருகிறது. இருப்பினும், தலைவர் பதவிக்கு யார் யார் போட்டியிடப்போகிறார்கள் என்பது குறித்த அறிவிப்புகள் ஏதும் வெளிவரவில்லை. ராகுல் காந்தி இருந்தும், காங்கிரஸின் மூத்த தலைவர் மற்றும் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், ராகுல் காந்தியே மீண்டும் தலைவராகப் பொறுப்பேற்க வேண்டும் எனக் கூறிவந்தார்.இதற்கிடையில், தலைவர் … Read more

25.08.22 வியாழக்கிழமை – Today RasiPalan | Indraya Rasi Palan | August – 25 | இன்றைய ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். #இன்றையராசிபலன் #DailyHoroscope​ #Rasipalan​ #Horoscope​ #Raasi​ #Raasipalan Daily Rasi Palan in Tamil, Indraya Rasi Palan in Tamil #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #சந்திராஷ்டமம் #chandrastamam. Source link