Ukraine Russia Crisis: உக்ரைன் தலைநகரை தாக்கும் ரஷ்ய படைகள்… கச்சா எண்ணெய் விலை 100 டாலரை தொட்டது! Live Updates

கச்சா எண்ணெய் விலை 100 டாலரை தொட்டது! கச்சா எண்ணெய் ரஷ்ய அதிபர் புதினின் உத்தரவை தொடர்ந்து, தற்போது அந்நாட்டு படைகள், உக்ரைன் தலைநகர் கீவ்-வில் தனது தாக்குதலை தொடங்கி உள்ளது. இந்த நிலையில், கச்சா எண்ணெய் விலை 100 டாலரை தாண்டியுள்ளது. தொடர்ந்து தாக்குதல் தொடரும் பட்சத்தில், கச்சா எண்ணெய் விலை மேலும் பல மடங்கு அதிகரிக்கும் என கூறப்படுகிறது. உக்ரைன் தலைநகரை தாக்க தொடங்கியது ரஷ்ய படைகள் உக்ரைன் – ரஷ்யா போர்ப் பதற்றம் … Read more

கரூர்: ரூ.9 லட்சம் செக் மோசடி வழக்கு; குளித்தலை திமுக எல்.எல்.ஏ-வுக்கு பிடிவாரன்ட்! -நடந்தது என்ன?

குளித்தலை தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம் மீது, பெண் ஒருவர் தொடர்ந்த செக் மோசடி வழக்கில், கரூர் நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ள சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. குளித்தலை கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர், இரா.மாணிக்கம். இவர், இந்த தொகுதியில் இரண்டாவது முறையாக சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார். இந்தநிலையில், குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம், கரூரைச் சேர்ந்த ராஜம்மாள் என்பவரிடம், கடந்த ஆண்டு ரூ. 9 லட்சம் கடன் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. … Read more

இன்றைய ராசி பலன் | 24/02/2022 | Daily Rasi Palan | Daily Horoscope | Astrology | Sakthi Vikatan

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். #இன்றையராசிபலன் Today’s Horoscope | rasi palan #DailyHoroscope​ | #Rasipalan​ | #Horoscope​ #Raasi​ #Raasipalan #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #சந்திராஷ்டமம் #chandrastamam 12 ராசிகளுக்கான ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் 2022 : https://bit.ly/3srMOs Source link

வைப்பு தொகைக்கு 1,000% வட்டி… வீட்டுக்கு ரேஷன்; ஆசை காட்டி மும்பையில் ரூ.100 கோடி மோசடி!

அதிக வட்டி கொடுப்பதாகக் கூறி மக்களை ஏமாற்றும் சம்பவங்கள் ஆங்காங்கே நடந்து கொண்டிருந்தாலும், மக்கள் வட்டிக்கு ஆசைப்பட்டு போலி கம்பெனிகளிடம் பணம் கட்டி ஏமாறுவது மட்டும் குறையவே இல்லை. மும்பையில் அது போன்ற ஒரு மோசடியில் 25 ஆயிரம் பேர் தங்களது பணத்தை பறிகொடுத்துவிட்டு என்ன செய்வது என்று தெரியாமல் திண்டாடிக்கொண்டிருக்கின்றனர். மும்பை போரிவலியைச் சேர்ந்தவர் கிஷோர் காக்டே. இவர் காக் எகனாமிக் மார்க்கெட்டிங் பிரைவேட் லிமிடெட் என்ற கம்பெனியை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கினார். … Read more

சிவகங்கை: நகராட்சித் தலைவர் ரிமோட் பாம் வைத்து கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் விடுதலை!

15 வருடங்களுக்கு முன்பு தமிழகத்தையே அதிரவைத்த சிவகங்கை நகராட்சித் தலைவர் முருகன் கொலை வழக்கில், இன்று குற்றவாளிகளை விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. கொலை தி.மு.க உட்கட்சி பிரச்னையால் 2007-ல் நடந்த நகராட்சித் தேர்தலில், கட்சித்தலைமை முருகன் என்பவருக்கு சிவகங்கையில் போட்டியிட வாய்ப்பு கொடுக்காத நிலையில், சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றிபெற்றார். பின்னர், பெரும்பாலான தி.மு.க உறுப்பினர்களின் ஆதரவில் முருகன் நகராட்சித் தலைவரானார். இதனால் சிவகங்கை நகர தி.மு.க-வுக்குள் சலசலப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், 2007-ம் ஆண்டு ஜூன் … Read more

"மரியாதையைக் கற்றுக் கொடுங்கள்" – விமான ஊழியர்களைச் சாடிய பாலிவுட் நடிகை!

சித்ரங்கடா சிங் பாலிவுட் நடிகை. சமீபத்தில் அவர் பயணித்த Go First (முன்பு Go Air என்ற பெயரில் இருந்தது) விமானத்தில் நடந்த சம்பவத்தைத் தன்னுடைய இன்ஸ்டா ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டு இருப்பதாவது, “மும்பையில் இருந்து டெல்லி செல்லும் கோ ஏர் 391 விமானத்தின் பணிப்பெண், மிக மூர்க்கத்தனமானவர், (சில பெயர்களை குறிப்பிட்டு) பணியாளர்களுக்கு எப்படி நடந்து கொள்வது என கற்றுக்கொடுங்கள். மரியாதை குறைவாக இத்தனை கர்வமாக நடந்து கொள்வதை இதற்கு முன் நான் … Read more

உக்ரைனிலிருந்து வெறும் 20 கிலோமீட்டரில் ரஷ்ய படைகள் – அதிர்ச்சி தரும் செயற்கைக்கோள் படங்கள்!

ரஷ்யா-உக்ரைன் விவகாரமானது எப்போது வேட்மண்டுமானாலும் போர் வெடிக்கும் சூழ்நிலையிலேயே இருப்பதாக அமெரிக்கா உட்பட பல நாடுகளும் ரஷ்யாவுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றன. மேலும், கடந்த திங்கள்கிழமை, ரஷ்யாவின் அண்டை நாடுகளான டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் ஆகிய குடியரசுகளின் சுதந்திரத்தை அங்கீகரிப்பதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அறிவித்திருந்தார். இது உக்ரைனில் மேலும் அச்சத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில், மாக்ஸர் எனப்படும் விண்வெளி ஆராய்ச்சி தொழில்நுட்ப நிறுவனம் உக்ரைனுக்கு அதிர்ச்சி தரும் வகையிலான செயற்கைக்கோள் படங்களை வெளியிட்டுள்ளது. உக்ரைன் … Read more

"அம்மா பிறந்தநாளில் `வலிமை' ரிலீஸ்… காரணம் இதுதானா?"- ஜெயலலிதாவின் முன்னாள் உதவியாளர் பூங்குன்றன்

‘வலிமை’ பிப்ரவரி 24 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. நடிகர் அஜித்தின் ரசிகர்கள், பல நாள்கள் காத்திருப்புக்கு பிறகு இந்தப் படத்தை வரவேற்க ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறார்கள். ஜெயலலிதாவின் உதவியாளராக பணியாற்றிய பூங்குன்றன் ஜெயராமன் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் அஜித் குறித்தும், ‘வலிமை’ ரிலீஸ் குறித்தும் பதிவு செய்திருக்கிறார். பூங்குன்றன் “புரட்சித்தலைவியின் மீது அதீத அன்பும், மரியாதையும் கொண்ட அஜித் அவர்கள் அரசியலுக்கு வருவதற்கு தன்னை ஆயத்தம் செய்து கொள்கிறார் என்றே நினைக்கத் தோன்றுகிறது. அம்மாவின் தொண்டர்களை அரவணைக்க … Read more

உக்ரைன் பதற்றம்; 100 டாலரைத் தொட்ட கச்சா எண்ணெய்; இந்தியாவை எப்படி பாதிக்கும்?

ரஷ்யா – உக்ரைன் போர் பதற்றத்தால் சர்வதேச சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணெயின் விலை 100 டாலரை நெருங்கியுள்ளது. இதனால் இந்தியாவில் பெட்ரோல் விலை 7- 8 ரூபாய் வரை உயர வாய்ப்புள்ளது எனச் சொல்லப்படுகிறது. அதே சமயம் இந்தியா, ரஷ்யாவிலிருந்து மேற்குப் பாதை வழியாக எண்ணெய் இறக்குமதி செய்வதால், விநியோகத்தில் எந்தத் தடையும் இருக்காது என்றும் கருதப்படுகிறது. 2020-ல் கொரோனா தொற்று பரவ ஆரம்பித்ததும், பல நாடுகளில் முழுமையான ஊரடங்கு போடப்பட்டது. அதனால் மக்கள் … Read more

“பருத்தி வீரன் க்ளைமாக்ஸ்ல என்னால பேசவே முடில!"- பிரியாமணி #15 years of Paruthiveeran

‘பருத்தி வீரன்’ வெளியாகி இன்றோடு 15 ஆண்டுகள் ஆகின்றன. இன்றைக்கும் கல்ட் படங்களில் அந்தப் படத்திற்கு எப்பவும் தனி இடம் உண்டு. கார்த்தி முதல் படத்திலேயே தனிப்பட்ட கதாநாயகன் அந்தஸ்து கிடைக்கவும் இதுதான் காரணம். கார்த்தியை செதுக்கியதில் அமீருக்கு பெரும் பங்கிருக்கிறது. அதில் முத்தழகாக நடித்து, தேசிய விருது பெற்று மொத்த தமிழ் சினிமாவையையும் திரும்பிப் பார்க்க வைத்த ப்ரியாமணியிடம் பேசினேன். மும்பையில் இடைவிடாத படப்பிடிப்பில் இருந்தாலும் கூட ‘பருத்தி வீரன்’ நினைவுகளில் கரைந்தார். ”பருத்திவீரன்’ வெளியாகி … Read more