“முதலீடு செய்யுங்கள்… இரட்டிப்பு செய்து தருகிறேன்" – ரூ.20 கோடி மோசடி செய்த இன்ஜினியர் கைது

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் சர்வபொம்மன், சி.ஏ படித்துவருகிறார். கடந்தாண்டு இவருக்கு வேங்கைவாசல், மாம்பாக்கம் பகுதியைப் பிரசன்ன வெங்கடேச பாலாஜி என்பவர் அறிமுகமாகியிருக்கிறார். பாலாஜி, சர்வபொம்மனிடம் தான் சி.ஏ முடித்து, பங்குச்சந்தையில் முதலீடு தொடர்பான தொழில் செய்துவருவதாகக் கூறியிருக்கிறார். தன்னிடம் பணம் கொடுத்தால், அந்த பணத்தைப் பங்குச் சந்தையில் முதலீடு செய்து அதனை இரட்டிப்பு செய்து தருவதாகக் கூறியிருக்கிறார். சேலையூர் காவல் நிலையம் இந்த ஆசை வார்த்தையில் மயங்கிய சர்வபொம்மன் அவரிடம் 70 லட்சம் வரை … Read more

துபாயில் கொரோனாவால் இறந்தவரின் அஸ்தி; இரண்டு ஆண்டுகளுக்குப் பின் மகனிடம் ஒப்படைத்த கேரள பெண்!

கன்னியாகுமரி மாவட்டம் அருமனையை அடுத்த குழிச்சல் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் (44). இவரின் மனைவி லதா புஷ்பம் 2012-ல் ஒரு விபத்தில் உயிரிழந்தார். இவர்களுக்கு புக்லீன் ரிக்ஸி (22) என்ற மகளும், அக்லீன் ரகுல் (20) என்ற மகனும் உள்ளனர். ராஜ்குமார் ஐக்கிய அரபு நாட்டில் வேலைசெய்துவந்தார். இதற்கிடையே கொரோனா காரணமாக இரண்டு ஆண்டுகளுக்கு முன் ராஜ்குமார் உயிரிழந்தார். கோவிட் நெறிமுறையின்படி, கொரோனாவால் இறந்தவர்கள் உடலை வீட்டிற்கு கொண்டு வர முடியாததால் அரபு நாட்டிலேயே ராஜ்குமார் உடல் … Read more

புனே: நள்ளிரவில் துப்பாக்கிச்சூடு; 4 வாகனங்களில் பல கி.மீ சேஸிங் – ரூ.3.60 கோடி ஹவாலா பணம் கொள்ளை

மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் இருந்து சோலாப்பூர் செல்லும் நெடுஞ்சாலையில், பாவேஷ் குமார், விஜய்பாய் ஆகியோர் ஹவாலா பணம் ரூ.3.60 கோடியை கார் ஒன்றில் எடுத்துச்சென்று கொண்டிருந்தனர். அவர்கள் காரில் பணத்துடன் செல்வதை முன்கூட்டியே தெரிந்து கொண்ட சிலர் அப்பணத்தை கொள்ளையடிப்பதற்காக நான்கு வாகனங்களில் பணம் எடுத்துச்செல்லப்பட்ட காரை பின் தொடர்ந்து சென்றனர். வேகத்தடை ஒன்றில் பணத்துடன் சென்ற கார் மெதுவாக சென்ற போது அதனை பின் தொடர்ந்து வந்த கார்கள் அதனை தடுத்து நிறுத்த முயன்றன. ஆனால் … Read more

“எடப்பாடி, சசிகலாவுக்கு துரோகம் பண்ணுனத பத்தி கேளு” – அதிமுக தொண்டரிடம் ஆறுக்குட்டி காட்டம்

கோவை விளாங்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் ஆறுக்குட்டி . இவர் 2011 முதல் 2021 வரை அதிமுக எம்.எல்.ஏ வாக பதவி வகித்தார். அதிமுக ஓ.பி.எஸ், இ.பி.எஸ் அணிகளாக பிரிந்த போது முதலில் ஓ.பி.எஸ் அணியில் இருந்து, பின்னர் இ.பி.எஸ் அணிக்குத் தாவினார். கொடநாடு வழக்கு குறித்து ஆறுக்குட்டியிடம் விசாரணை நடைபெற்ற நிலையில், அதிமுக-வில் இருந்து விலகி திமுகவில் இணைந்துள்ளார். இதற்கு, `ஆறுக்குட்டி வேடந்தாங்கல் பறவை போல’ என இ.பி.எஸ் விமர்சித்திருந்தார். மேலும், அதிமுக வட்டாரங்களிலும் பல்வேறு விமர்சனங்கள் … Read more

“ராகுலை கட்டாயப்படுத்துவோம்; அவரே தலைவராகப் பொறுப்பேற்க வேண்டும்" – மல்லிகார்ஜுன் கார்கே

2014, 2019 நாடாளுமன்ற தேர்தல்களில் தோல்வியடைந்த காங்கிரஸ், கடைசியாக நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தலிலும் படுதோல்வியடைந்திருந்தது. அதைத்தொடர்ந்து, காங்கிரஸுக்கு புதிய தலைவர் நியமிக்கப்பட வேண்டும் என்று கட்சிக்குள்ளேயே பேச்சுக்களும் எழுந்தது. தற்போது அதற்கான வேலைகளும் நடைபெற்றுவருகிறது. மேலும் தேர்தலில் யார் யார் போட்டியிடுகின்றனர் என்பது பற்றி எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. அசோக் கெலாட், ராகுல் காந்தி ஒருபுறம், 2019-ம் ஆண்டு தேர்தலின் தோல்வி காரணமாகத் தலைவர் பதவியை ராஜினாமா செய்த ராகுல் காந்தி, மீண்டும் … Read more

வெந்து தணிந்தது காடு – சிம்பு ஸ்பெஷல்! | Exclusive Photo Album

வெந்து தணிந்தது காடு வெந்து தணிந்தது காடு வெந்து தணிந்தது காடு வெந்து தணிந்தது காடு வெந்து தணிந்தது காடு வெந்து தணிந்தது காடு வெந்து தணிந்தது காடு வெந்து தணிந்தது காடு வெந்து தணிந்தது காடு வெந்து தணிந்தது காடு வெந்து தணிந்தது காடு வெந்து தணிந்தது காடு வெந்து தணிந்தது காடு வெந்து தணிந்தது காடு வெந்து தணிந்தது காடு வெந்து தணிந்தது காடு கௌதம் மேனன் வெந்து தணிந்தது காடு வெந்து தணிந்தது … Read more

"என் மனைவி எந்நேரமும் சண்டை போடுகிறார்!"- விரக்தியில் ஒரு மாதமாக மரத்தில் வாழும் கணவன் | Video

கணவன் மனைவிக்குள் சண்டை வருவது சகஜம். இச்சண்டையில் சில நேரங்களில் கணவன் அல்லது மனைவி பிரிந்து செல்வதுண்டு. உத்தரப் பிரதேசத்தில் மனைவி தொடர்ந்து சண்டை போடுவதாகக் கூறி ஒருவர் மரத்தில் ஏறி வாழ்க்கை நடத்தி வருகிறார். உத்தரப் பிரதேசத்தின் கோபகஞ்ச் என்ற இடத்தைச் சேர்ந்தவர் ராம் பிரவேஷ். 42 வயதாகும் ராம், தன் மனைவி தொடர்ச்சியாகச் சண்டை போட்டுக்கொண்டே இருப்பதாகவும், எப்போது பார்த்தாலும் வாய்த் தகராறு இருந்து கொண்டே இருப்பதாகவும் தெரிவிக்கிறார். சில நேரங்களின் அவர் தன்னை … Read more

செத்துக் கிடந்த சிறுத்தை; மின்வேலியில் சிக்கியதா? – பேரணாம்பட்டு வனப்பகுதியில் தொடரும் அதிர்ச்சி

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு வனச்சரக காப்புக் காடுகளில் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகமிருக்கின்றன. கணக்கெடுப்பில் 10-க்கும் அதிகமான சிறுத்தை ஜோடிகள் குட்டிகளோடு சுற்றுவதாக வனத்துறை தெரிவிக்கிறது. வனப்பகுதியையொட்டி மேய்ச்சலுக்கு விடப்படும் ஆடு, மாடுகளை இந்த சிறுத்தைகள் கடித்து, வேட்டையாடுவதும் அவ்வபோது நிகழ்கின்றன. சில நேரங்களில், அருகிலிருக்கும் கிராமங்களுக்குள் புகுந்தும் பொதுமக்களை அச்சுறுத்துகின்றன. இந்த நிலையில், வனப்பகுதிக்கு அருகேயுள்ள சேராங்கல் கிராமத்தில் 4 வயதாகும் பெரிய சிறுத்தை ஒன்று மர்மமான முறையில் நேற்றிரவு இறந்து கிடந்தது. தகவலறிந்ததும், வனத்துறையினர் அங்கு … Read more

காமன்வெல்த் சபாநாயகர்கள் மாநாடு: தேசியக் கொடியில் `Made In China' வாசகம்… வெடித்த சர்ச்சை!

கனடா நாட்டின் ஹேலிஃபாக்ஸ் நகரில், காமன்வெல்த் கூட்டமைப்பு நாடுகளான இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான் உட்பட பல்வேறு நாடுகளின் 65-வது சபாநாயகர்கள் மாநாடு நடைபெற்றது. இதில் இந்தியா சார்பாக நாடாளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில், அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த சட்டப்பேரவை சபாநாயகர்களும் கலந்துகொண்டனர். அப்போது ஓம் பிர்லா தலைமை வகிக்க, அனைத்து மாநில சபாநாயகர்களும் இந்திய தேசியக் கொடியைக் கையிலேந்தியபடி பேரணி சென்றனர். இந்த நிலையில், சபாநாயகர்கள் ஏந்தியிருந்த தேசியக் கொடியில் “மேட் இன் சைனா” … Read more

மரங்களுக்கு ஆம்புலன்ஸ்: டோல் ஃப்ரீ எண்ணுக்கு போன் செய்து பசுமையைக் காப்பாற்றலாம்!

மருத்துவ அவசர நிலையில் இருக்கும் மனிதர்களுக்கு உடனடி சிகிச்சை கிடைக்க வேண்டும் என்பதற்காக ஆம்புலன்ஸ் சேவை இருக்கிறது. மேலும், சாலை விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடும் விலங்குகளுக்கு உதவவும் ஆம்புலன்ஸ் சேவை இருக்கிறது. ஆனால் மத்திய பிரதேசம் இந்தூர் பகுதியில், மரங்களுக்கென்று ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தூர் பகுதியில் புதிதாக நியமிக்கப்பட்ட மேயர் புஷ்யமித்ரா பார்கவா, தோட்டக்கலை துறையின் கீழ் மரங்களுக்கென ஆம்புலன்ஸ் சேவையை துவக்கி உள்ளார். நகரினுடைய தட்பவெப்ப நிலையை மேம்படுத்தி, காற்றின் … Read more