மரங்களுக்கு ஆம்புலன்ஸ்: டோல் ஃப்ரீ எண்ணுக்கு போன் செய்து பசுமையைக் காப்பாற்றலாம்!

மருத்துவ அவசர நிலையில் இருக்கும் மனிதர்களுக்கு உடனடி சிகிச்சை கிடைக்க வேண்டும் என்பதற்காக ஆம்புலன்ஸ் சேவை இருக்கிறது. மேலும், சாலை விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடும் விலங்குகளுக்கு உதவவும் ஆம்புலன்ஸ் சேவை இருக்கிறது. ஆனால் மத்திய பிரதேசம் இந்தூர் பகுதியில், மரங்களுக்கென்று ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தூர் பகுதியில் புதிதாக நியமிக்கப்பட்ட மேயர் புஷ்யமித்ரா பார்கவா, தோட்டக்கலை துறையின் கீழ் மரங்களுக்கென ஆம்புலன்ஸ் சேவையை துவக்கி உள்ளார். நகரினுடைய தட்பவெப்ப நிலையை மேம்படுத்தி, காற்றின் … Read more

“நானென்ன எதிர்க்கட்சி எம்.பி-யா?” – மாநகராட்சிக்கு எதிராக கொதித்த சேலம் திமுக எம்.பி; நடந்தது என்ன?

சேலம் மாநகராட்சியில் தூய்மை பணியாளராக பணிபுரியும் பணியாளர்களுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கும் நிகழ்ச்சி சேலம் மாநகராட்சி ஆணையர் கிறிஸ்துராஜ் தலைமையில் சமீபத்தில் நடைபெற்றது. இதில் 994 நிரந்தர தூய்மை பணியாளர்களும், 1,166 சுய உதவிக் குழு தூய்மை பணியாளர்களும் மொத்தமாக 2,160 பேருக்கு வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சேலம் மேயர் ராமச்சந்திரன், துணை மேயர் சாரதா தேவி தி.மு.க., எம்.எல்.ஏ., ராஜேந்திரன் உட்பட பலரும் கலந்து கொண்டனர். ஆனால் சேலம் திமுக எம்.பி … Read more

பெரம்பலூர்: ஆலைக்கு எதிரான போராட்டம்; ரெளடிகள் மீதான பிரிவில் வழக்கு – கொதிக்கும் நாடோடியின மக்கள்

பெரம்பலூர் அருகே திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலை விஜய கோபாலபுரத்தில் தனியார் டயர் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் நிலக்கரியைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்க முயற்சி நடப்பதாகவும், இதனால் தங்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படும் என அருகே வசிக்கும் மலையப்ப நகரைச் சேர்ந்த நாடோடியின மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். பெரம்பலூர் எஸ்.பி ஆபீஸ் இந்நிலையில், டயர் தொழிற்சாலையால் தங்களுக்கு ஏற்கெனவே பல்வேறு நோய்கள் ஏற்பட்டு வரும் நிலையில், தற்போது நிலக்கரியைப் பயன்படுத்தி … Read more

பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு… தீவிரம் காட்டும் அன்புமணி – பின்னணி என்ன?!

பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கு, அந்தப் பகுதியைச் சேர்ந்த 12 கிராம மக்களும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் அந்தப் பகுதி மக்களை நேரில் சந்தித்து கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தியிருப்பது அரசியலில் பெரும் கவனம் பெற்றிருக்கிறது. அன்புமணி ராமதாஸ் எங்களை உயிரோட கொளுத்திட்டு, ஏர்போர்ட் கொண்டுவாங்க… – கொதிக்கும் பரந்தூர் சுற்றுவட்டார மக்கள்! பரந்தூரில் விமான நிலையம்: சென்னைக்கு இரண்டாவது விமான நிலையம் அமைப்பதற்கு காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள பரந்தூர் சுற்றுவட்டாரப் … Read more

பெரம்பலூர்: பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – அலுவலக கண்காணிப்பாளருக்கு எதிராக அதிரடி காட்டிய டிஐஜி!

தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஹரிகரன். இவர் பெரம்பலூர் மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் கடந்த 2018-ம் முதல் அமைச்சு பணியாளர் பிரிவு கண்காணிப்பாளராக பணிபுரிந்து வந்தார். அதனைத் தொடர்ந்து அவர் போலீஸாருக்கு ஊதியம் வழங்கும் பிரிவில் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வந்தார். பெரம்பலூர் இந்தநிலையில், கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பெரம்பலூர் மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வந்த ஆயுதப்படையைச் சேர்ந்த திருமணமாகாத பெண் காவலர் ஒருவர், நிலுவையில் உள்ள ஊதிய பிரச்னைகளை பெற்றுத்தர வேண்டி. … Read more

ம.பி: கூட்டுப் பாலியல் வன்கொடுமை… பேத்தியை காப்பாற்றச் சென்ற பாட்டி – உறவினர்களால் நேர்ந்த கொடூரம்

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரை சேர்ந்த 16 வயது சிறுமி கடந்த 11-ம் தேதி தன் மாமா வீட்டில் சில நாள்கள் தங்குவதற்காகச் சென்றிருக்கிறார். இந்த நிலையில், கடந்த 19-ம் தேதி சிறுமி இருவரால் கடுமையாகத் தாக்கப்பட்டு, கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார். சிறுமி தாக்கப்படுவதைப் பார்த்த சிறுமியின் பாட்டி, தடுக்க முயன்றபோது அவரும் கடுமையாகத் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர் அவர்கள் தப்பியோடி விட்டனர். சிறுமியின் பாட்டியையும் பாதிக்கப்பட்ட சிறுமியையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் … Read more

ஆப்கானிஸ்தான்: தாலிபன் வரலாறும், ஓராண்டு ஆட்சியில் மக்களின் நிலையும் – விரிவான அலசல்!

ஆப்கனை தாலிபன்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவந்து ஓராண்டுக்கு மேலாகிவிட்டது. இந்த நேரத்தில், தாலிபன்களைப் பற்றியும், அவர்கள் ஆட்சியின் கீழ் ஆப்கன் தற்போது எப்படி இருக்கிறது என்பது பற்றியும் விரிவாகப் பார்க்கலாம்! யார் இந்த தாலிபன்கள்? அமெரிக்காவுக்கும் சோவியத் ஒன்றியத்துக்கும் நெடுங்காலமாக மறைமுக யுத்தம் நடந்துகொண்டிருந்தது. உலக நாடுகளும் அமெரிக்கா, சோவியத் என இரு நாடுகள் பக்கமும் பிரிந்து நின்றன. இந்தியாவைப் போல அணிசேரா கொள்கையை கடைபிடித்த நாடுகளும் இருந்தன. 1978-ல் சோவியத் ஒன்றியத்தின் ஆதரவுடன் ஆப்கானிஸ்தானில் இடதுசாரிகள் … Read more

வேலைவாய்ப்பைப் பெருக்க மிகச் சிறந்த வழி..!

இந்தியா, இளைஞர்களின் தேசமாக இருக்கிறது. இன்றைக்கு நம் மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் 25 முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் என்பது பாசிட்டிவ்வான விஷயம். ஆனால், இத்தனை இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தருவது எப்படி என்பதுதான் நம்முன் இருக்கும் மிகப் பெரிய சவால்.இதற்கு அருமையான வழி ஒன்றைச் சொல்லி இருக்கிறது பெங்களூருவில் உள்ள ‘டீம்லீஸ்’ (TeamLease) நிறுவனம். மனிதவளத் துறை சார்ந்த இந்த நிறுவனம், கல்லூரியில் படிக்கும்போதே மாணவர்களைத் தொழில் நிறுவனங்களில் பயிற்சி மாணவர்களாக (apprentices) சேர்த்து, … Read more

“அடிச்சது ரூ.2.5 கோடி… ஆதார் எடுத்துவந்தா உங்களுக்கு ரூ.2,500!"- ஊராட்சி மன்றத்தை அதிரவைத்த தபால்

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தாலுகாவுக்குட்பட்ட மலைப்பட்டி ஊராட்சி மக்கள் சிலருக்கு, கடந்த சில நாள்களுக்கு முன்பு மொட்டைத் தபால் வந்திருக்கிறது. அந்தத் தபாலில், மலைப்பட்டி ஊராட்சி மன்றம் குறித்து அவதூறு பரப்பும் வகையில் தகவல்கள் இடம்பெற்றிருந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்தத் தபால் விவகாரம் மலைப்பட்டி ஊராட்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நடந்தது என்னவென்பதை அறிய ஊராட்சி மன்றப் பெண் தலைவர் குணசுதாவைச் சந்தித்துப் பேசினோம். “என் கணவர் பெயர் சுதாகர். அவர் வேறு சமூகத்தைச் சேர்ந்தவர். அரசுப் … Read more