சென்னை பெண் காவலரைக் கத்தியால் குத்தியவர் கைது – குற்றவாளி சிக்கியது எப்படி?!

சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து செங்கல்பட்டு வரை செல்லும் மின்சார ரயில் கடந்த 23-ம் தேதி இரவு 8.30 மணியளவில் புறப்படத் தயாராக இருந்தது. இந்த ரயிலின் பெண்கள் பெட்டியில் மர்மநபர் ஒருவர் ஏறினார். பாதுகாப்புப் பணியிலிருந்து பெண் காவலர் ஆசிர்வா, இதனைப் பார்த்தும் அந்த நபரை அங்கிருந்து இறங்கும்படி கண்டித்திருக்கிறார். இதனால், ஆத்திரமடைந்த அந்த போதை ஆசாமி, தான் மறைந்துவந்திருந்த கத்தியை எடுத்து ஆசிர்வாவின் கழுத்திலும், நெஞ்சிலும் குத்திவிட்டு அங்கிருந்து தப்பிவிட்டார். காவலர் ஆசிர்வா – … Read more

“அன்று எட்டு வழிச் சாலையை எதிர்த்த ஸ்டாலின், இப்போது அனுமதி அளிக்கிறார்…” – ஹெச்.ராஜா

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக பா.ஜ.க. முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா வந்திருந்தார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “தில்லை நடராஜனை இழிவாக பேசிய யூ-டியூபர் மைனர் விஜயனை போலீஸ் கைது செய்யவில்லை. கனல் கண்ணனை மட்டும் ஏன் கைது செய்கிறார்கள். இது காவல்துறையா? அல்லது முதல்வர் ஸ்டாலினின் ஏவல் துறையா?. ஹெச்.ராஜா இந்த ஆட்சியில், காவல்துறை அரசாங்கத்திற்கு எடுப்படியாக உள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் கூட திருமஞ்சனத்திற்கு தண்ணீர் … Read more

தூங்கினால் 5 லட்சம் பரிசு, தூங்கியே சாதித்த கொல்கத்தா பெண்; இப்படியெல்லாமா போட்டிகள்?

`தூங்குவதெல்லாம் ஒரு வேலையா? இதற்குச் சம்பளமெல்லாம் வேறு தருவார்களா?’ என்று எல்லோர் மனதிலும் கேள்வி எழுவது புரிகிறது. ஆம், `Wakefit.co’ என்ற நிறுவனம் கடந்த மூன்று ஆண்டுகளாக ஸ்லீப் இன்டர்ன்ஷிப் திட்டங்களை ஏற்பாடு செய்துவருகிறது. இத்திட்டத்தில் ஸ்லீப் போட்டிகளை ஏற்பாடு செய்து அதிக நேரம் நன்றாகத் தூங்குபவர்களுக்கு மதிப்பெண் வழங்கி அதில் வெற்றி பெரும் நபர்களுக்குப் பரிசும் வழங்கி வருகிறது. அந்தவகையில் இதன் முதல் சீசன் முடிவடைந்த நிலையில் அதன் இரண்டாம் சீசன் சமீபத்தில் நடைபெற்றது. View … Read more

கோலிவுட் ஸ்பைடர்: இந்தியன் 2-வில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் | தனுஷ் – ஐஸ்வர்யா மீண்டும் இணைவார்களா?

* சசிகுமார் சென்னை வீட்டை காலி செய்துவிட்டு மதுரை வீட்டுக்குப் போய்விட்டார். சென்னைக்கு ஷுட்டிங் மற்றும் பட வேலையாக வந்தால் ஹோட்டலில்தான் தங்குகிறார். கொரோனாவின் போது வீட்டிலிருந்தவருக்கு இப்போது வீட்டை விட்டு தனியாகத் தங்குவது பிடிக்கவில்லையாம். இதனால் அவரிடம் கதை சொல்கிறவர்கள் இப்பொழுதெல்லாம் மதுரைக்குத்தான் போகிறார்கள். அங்கே வீட்டிலிருந்து கொண்டு தனது இயக்கத்தில் உருவாகவிருக்கும் அடுத்த படத்துக்கான ஸ்க்ரிப்ட் வேலைகளையும் பார்க்கிறார். இடையில் பொழுதுபோக்காக அவர் பார்ப்பது விவசாய வேலைதான். எல்லா ஞாயிறுகளிலும் வயலில் இறங்கிவிடுகிறார் சசிகுமார். … Read more

“முதலீடு செய்யுங்கள்… இரட்டிப்பு செய்து தருகிறேன்" – ரூ.20 கோடி மோசடி செய்த இன்ஜினியர் கைது

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் சர்வபொம்மன், சி.ஏ படித்துவருகிறார். கடந்தாண்டு இவருக்கு வேங்கைவாசல், மாம்பாக்கம் பகுதியைப் பிரசன்ன வெங்கடேச பாலாஜி என்பவர் அறிமுகமாகியிருக்கிறார். பாலாஜி, சர்வபொம்மனிடம் தான் சி.ஏ முடித்து, பங்குச்சந்தையில் முதலீடு தொடர்பான தொழில் செய்துவருவதாகக் கூறியிருக்கிறார். தன்னிடம் பணம் கொடுத்தால், அந்த பணத்தைப் பங்குச் சந்தையில் முதலீடு செய்து அதனை இரட்டிப்பு செய்து தருவதாகக் கூறியிருக்கிறார். சேலையூர் காவல் நிலையம் இந்த ஆசை வார்த்தையில் மயங்கிய சர்வபொம்மன் அவரிடம் 70 லட்சம் வரை … Read more

துபாயில் கொரோனாவால் இறந்தவரின் அஸ்தி; இரண்டு ஆண்டுகளுக்குப் பின் மகனிடம் ஒப்படைத்த கேரள பெண்!

கன்னியாகுமரி மாவட்டம் அருமனையை அடுத்த குழிச்சல் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் (44). இவரின் மனைவி லதா புஷ்பம் 2012-ல் ஒரு விபத்தில் உயிரிழந்தார். இவர்களுக்கு புக்லீன் ரிக்ஸி (22) என்ற மகளும், அக்லீன் ரகுல் (20) என்ற மகனும் உள்ளனர். ராஜ்குமார் ஐக்கிய அரபு நாட்டில் வேலைசெய்துவந்தார். இதற்கிடையே கொரோனா காரணமாக இரண்டு ஆண்டுகளுக்கு முன் ராஜ்குமார் உயிரிழந்தார். கோவிட் நெறிமுறையின்படி, கொரோனாவால் இறந்தவர்கள் உடலை வீட்டிற்கு கொண்டு வர முடியாததால் அரபு நாட்டிலேயே ராஜ்குமார் உடல் … Read more

புனே: நள்ளிரவில் துப்பாக்கிச்சூடு; 4 வாகனங்களில் பல கி.மீ சேஸிங் – ரூ.3.60 கோடி ஹவாலா பணம் கொள்ளை

மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் இருந்து சோலாப்பூர் செல்லும் நெடுஞ்சாலையில், பாவேஷ் குமார், விஜய்பாய் ஆகியோர் ஹவாலா பணம் ரூ.3.60 கோடியை கார் ஒன்றில் எடுத்துச்சென்று கொண்டிருந்தனர். அவர்கள் காரில் பணத்துடன் செல்வதை முன்கூட்டியே தெரிந்து கொண்ட சிலர் அப்பணத்தை கொள்ளையடிப்பதற்காக நான்கு வாகனங்களில் பணம் எடுத்துச்செல்லப்பட்ட காரை பின் தொடர்ந்து சென்றனர். வேகத்தடை ஒன்றில் பணத்துடன் சென்ற கார் மெதுவாக சென்ற போது அதனை பின் தொடர்ந்து வந்த கார்கள் அதனை தடுத்து நிறுத்த முயன்றன. ஆனால் … Read more

“எடப்பாடி, சசிகலாவுக்கு துரோகம் பண்ணுனத பத்தி கேளு” – அதிமுக தொண்டரிடம் ஆறுக்குட்டி காட்டம்

கோவை விளாங்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் ஆறுக்குட்டி . இவர் 2011 முதல் 2021 வரை அதிமுக எம்.எல்.ஏ வாக பதவி வகித்தார். அதிமுக ஓ.பி.எஸ், இ.பி.எஸ் அணிகளாக பிரிந்த போது முதலில் ஓ.பி.எஸ் அணியில் இருந்து, பின்னர் இ.பி.எஸ் அணிக்குத் தாவினார். கொடநாடு வழக்கு குறித்து ஆறுக்குட்டியிடம் விசாரணை நடைபெற்ற நிலையில், அதிமுக-வில் இருந்து விலகி திமுகவில் இணைந்துள்ளார். இதற்கு, `ஆறுக்குட்டி வேடந்தாங்கல் பறவை போல’ என இ.பி.எஸ் விமர்சித்திருந்தார். மேலும், அதிமுக வட்டாரங்களிலும் பல்வேறு விமர்சனங்கள் … Read more

“ராகுலை கட்டாயப்படுத்துவோம்; அவரே தலைவராகப் பொறுப்பேற்க வேண்டும்" – மல்லிகார்ஜுன் கார்கே

2014, 2019 நாடாளுமன்ற தேர்தல்களில் தோல்வியடைந்த காங்கிரஸ், கடைசியாக நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தலிலும் படுதோல்வியடைந்திருந்தது. அதைத்தொடர்ந்து, காங்கிரஸுக்கு புதிய தலைவர் நியமிக்கப்பட வேண்டும் என்று கட்சிக்குள்ளேயே பேச்சுக்களும் எழுந்தது. தற்போது அதற்கான வேலைகளும் நடைபெற்றுவருகிறது. மேலும் தேர்தலில் யார் யார் போட்டியிடுகின்றனர் என்பது பற்றி எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. அசோக் கெலாட், ராகுல் காந்தி ஒருபுறம், 2019-ம் ஆண்டு தேர்தலின் தோல்வி காரணமாகத் தலைவர் பதவியை ராஜினாமா செய்த ராகுல் காந்தி, மீண்டும் … Read more

வெந்து தணிந்தது காடு – சிம்பு ஸ்பெஷல்! | Exclusive Photo Album

வெந்து தணிந்தது காடு வெந்து தணிந்தது காடு வெந்து தணிந்தது காடு வெந்து தணிந்தது காடு வெந்து தணிந்தது காடு வெந்து தணிந்தது காடு வெந்து தணிந்தது காடு வெந்து தணிந்தது காடு வெந்து தணிந்தது காடு வெந்து தணிந்தது காடு வெந்து தணிந்தது காடு வெந்து தணிந்தது காடு வெந்து தணிந்தது காடு வெந்து தணிந்தது காடு வெந்து தணிந்தது காடு வெந்து தணிந்தது காடு கௌதம் மேனன் வெந்து தணிந்தது காடு வெந்து தணிந்தது … Read more