விகடன்
"லண்டனில் வெங்கட் பிரபு நைட் ஷிஃப்ட் வேலை செய்து எங்களை கவனித்துக் கொண்டார்!" – நெகிழும் வைபவ்
தமிழ் சினிமா ஹீரோக்களில் நம் பக்கத்து வீட்டு பையனாக, தனக்கென தனி இடத்தை பிடித்திருப்பவர் வைபவ். பேச்சிலும் அதே எளிமை, இனிமை. தெலுங்கில் ஒரு படம், தமிழில் ஒரு படம் (மலேஷியா டு அம்னீஷியா) எனத் தயாரித்தும் இருக்கிறார். வெங்கட் பிரபுவின் ஜாலி நட்பு வட்டத்தில் ஒருவரான வைபவ்விடம் பேசினேன். “நான் படிச்சது, வளர்ந்தது சென்னையில்தான். சாந்தோம்ல செயின்ட் பீடர்ஸ்லதான் படிச்சேன். மகேஷ் பாபு என் ஸ்கூல் மேட். எனக்கு ஒரு வருஷம் சீனியர் அவர். வெங்கட் … Read more
Sita Ramam:"நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு நல்ல படம் பார்த்திருக்கிறேன்" -வெங்கையா நாயுடு புகழாரம்!
துல்கர் சல்மான், மிருனாள் தாகூர் நடிப்பில் இயக்குநர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் தெலுங்கிலிருந்து தமிழ், மலையாளம், இந்தி எனப் பல மொழிகளில் வெளியான படம் `சீதா ராமம்’. இப்படத்தின் கதை இந்தியா-பாகிஸ்தான் அரசியலை மையமாக வைத்து நகர்ந்தாலும் தோட்டாக்கள் இல்லாத காதல் கதையாக அமைந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்நிலையில் இப்படத்தைப் பார்த்த முன்னாள் துணை ஜனாதிபதியான வெங்கையா நாயுடு இப்படம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் படம் குறித்துப் பதிவிட்டுள்ளார். “సీతారామం” చిత్రాన్ని వీక్షించాను. … Read more
திருமா பிறந்தநாள் விழாவில் பாஜக-வை சீண்டிய ஸ்டாலின்… கூட்டணியைச் சமாளிக்கவா?! பின்னணி என்ன?
புதிதாக பதவியேற்ற குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் ஜெக்தீப் தன்கர் ஆகியோருக்கு வாழ்த்துத் தெரிவிக்கவும், செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு வருகை புரிந்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்கவும் முதல்வர் ஸ்டாலின் டெல்லி சுற்றுப்பயணம் மேற்கொண்டார். டெல்லி செல்வதற்கு முன்பாக, சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற திருமாவளவனின் 60-வது பிறந்தநாள் விழாவில் பங்கேற்று, பா.ஜ.க-வுக்கு எதிராக எகிறிவிட்டுத்தான் சென்றார் ஸ்டாலின். இதன் பின்னணி குறித்து, தி.மு.க முக்கியப்புள்ளி ஒருவரிடம் பேசினோம். திரௌபதி முர்முவுடன் ஸ்டாலின் … Read more
திருச்சிற்றம்பலம்: இழப்புகளும் வலிகளும் கலந்த ஃபீல் குட் சினிமா – ஸ்கோர் செய்வது தனுஷா நித்யாமேனனா?
இழப்புகளைக் கடந்துவர முடியாமல் தவிக்கும் ஓர் இளைஞனின் வாழ்வில் வரும் காதல்களும் (?), என்றுமே தொடரும் நட்பும்தான் (!) இந்த ‘திருச்சிற்றம்பலம்’. ஒரு சாதாரண நடுத்தர குடும்பத்தின் கதை. மகன், அப்பா, தாத்தா என மூன்று தலைமுறை ஆண்கள் மட்டும் ஒரு வீட்டில் வசித்து வருகிறார்கள். அப்பாவுக்கும் மகனுக்கும் ஏழாம் பொருத்தம். அதற்குக் காரணம், அப்பாவின் அஜாக்கிரதையால் நேர்ந்த இரு இழப்புகள். பேசாத மகனுக்கும் பேரனுக்குமான பாலமாக தாத்தா இருக்க, தன் அப்பாவின் மீது வெறுப்பின் உச்சத்தில் … Read more
விருதுநகர்: திருத்தங்கலில் வீடுகளுக்கு முறைகேடான குடிநீர் இணைப்பு – குற்றவியல் நடவடிக்கைக்கு உத்தரவு
விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் நகராட்சி சுப்ரமணியர் கோயில் தெருவை சேர்ந்தவர்கள் இந்திராதேவி – மாரீஸ்வரன் தம்பதியினர். இவர்கள், தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவத்தில் திருத்தங்கல் நகராட்சி முறைகேடுகள் குறித்து மனு ஒன்றினை தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை, உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவர் மாலிக் ஃபெரோஸ்கான் முன்பு விசாரணைக்கு வந்தது. அந்த புகார் மனுவில், “கடந்த 10 ஆண்டுகளாக திருத்தங்கல் நகராட்சியில் மானூர் கூட்டுக்குடிநீர் திட்டத்தின்கீழ் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க எதிர்க்கட்சிகளின் … Read more
பாம்பை கொன்ற இரண்டு வயது சிறுமி, திகிலூட்டிய சம்பவம்: என்ன நடந்தது?
துருக்கி நாட்டின் பிங்கோல் பகுதியில் உள்ள காந்தார் கிராமத்தில் இரண்டு வயது சிறுமி ஒருவர் தனது வீட்டின் பின்புறத்தில், நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அப்போது, சிறுமி அந்த இடத்தில் சுற்றித் திறிந்த பாம்பினைப் பிடித்து விளையாடி உள்ளார். பாம்போடு விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை எதிர்பாராத விதமாக, அந்த பாம்பு உதட்டுப் பகுதியில் கடித்துள்ளது. பதிலுக்கு கோபத்தில் அந்தச் சிறுமியும், பாம்பை பற்றிய பயம் அறியாத குழந்தையாக, அந்தப் பாம்பினை கடித்துள்ளார். அதன் பிறகு, அழுகுரலோடு கூச்சலிட்டுள்ளார். பாம்பை … Read more
“தனிமையில் இருப்பவனுக்குதான் உறவின் அவசியம் தெரியும்’’ – ரத்தன் டாடா இப்படி சொல்ல என்ன காரணம்?
இந்தியத் தொழிலதிபர்களில் ரத்தன் டாடாவுக்கு மிகப் பெரிய மரியாதை உண்டு. டாடா நிறுவனத்தின் தலைமையை அவர் ஏற்றுக்கொண்ட பிறகுதான் இந்தியத் தொழில் துறை அதிவேகத்தில் வளர ஆரம்பித்தது. சுமார் 21 ஆண்டுகள் டாடா குழுமத்தை தலைமை தாங்கி பெரும் தொழில் புரட்சிக்கு வித்திட்டார். அதனால்தான் இன்றைய இளைய தொழிலதிபர்கள் பலரும் ரத்தன் டாடாவைத் தங்கள் குருவாகப் பின்பற்றி நடக்கிறார்கள். டாடா நிறுவனத்தின் நிர்வாகத்தைத் தலைமையேற்று நடத்தும் பொறுப்பை என்.சந்திரசேகரிடம் தந்து அவருக்கு வழிகாட்டிவரும் அதே வேளையில், தனக்குப் … Read more
“பில்கிஸ் பானோ பெண்ணா… முஸ்லிமா என்பதை தேசமே முடிவுசெய்யட்டும்..!" – மஹுவா மொய்த்ரா
மார்ச் 3, 2002 அன்று கோத்ராவுக்குப் பிந்தைய கலவரத்தின்போது தஹோத் மாவட்டத்தில் லிம்கேடா தாலுகாவில் உள்ள ரந்திக்பூர் கிராமத்தில் பில்கிஸ் பானோவின் குடும்ப உறுப்பினர்கள் ஒரு கொடூரமான கும்பலால் தாக்கப்பட்டனர். அப்போது ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானோ கூட்டுப் பாலியல் வன்கொடுமைசெய்யப்பட்டார். அவரின் 2 வயதுக் குழந்தை தரையில் அடித்துக் கொல்லப்பட்டது. அவர் குடும்ப உறுப்பினர்களும் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பாக குற்றவாளிகள் 11 பேர் கைதுசெய்யப்பட்டு, அவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு … Read more
டியூஷன் சென்று திரும்பிய சிறுமிமீது துப்பாக்கிச் சூடு! – பட்டபகலில் நடந்த பயங்கரம்
பீகார் மாநிலம், பாட்னாவில் 16 வயது சிறுமி ஒருவர் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். சிறுமி எப்போதும் அதிகாலை டியூசன் சென்று காலை 8 மணியளவில் வீடு திரும்புவது வழக்கம். இந்த நிலையில், நேற்று காலை டியூசன் முடிந்து பீர் நகர் காவல் நிலையத்தின் சிபாரா பகுதி வழியாக சிறுமி வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது இளைஞர் ஒருவர் சுவரின் பின்னால் ஒளிந்துகொண்டு அந்தச் சிறுமி கடந்து சென்றபிறகு அவர்மீது துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கிறார். துப்பாக்கிக் குண்டு அந்தச் … Read more