17.08.22 புதன்கிழமை – Today RasiPalan | Indraya Rasi Palan | August – 17 | இன்றைய ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். #இன்றையராசிபலன் #DailyHoroscope​ #Rasipalan​ #Horoscope​ #Raasi​ #Raasipalan Daily Rasi Palan in Tamil, Indraya Rasi Palan in Tamil #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #சந்திராஷ்டமம் #chandrastamam. Source link

"பாலிவுட்டில் இந்த நடிகையுடன் நடிக்க ஆசை, இவர்தான் என்னுடைய முதல் க்ரஷ்!" -மனம் திறந்த நாக சைதன்யா

தெலுங்கு நடிகரான நாக சைதன்யா, அண்மையில் ஆமீர் கானின் ‘லால் சிங் சத்தா’ படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஹாலிவுட்டில் வெளியான ‘Forrest Gump’ படத்தைத் தழுவி எடுக்கப்பட்ட இப்படம் பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இதையொட்டி நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகர் நாக சைதன்யா, பாலிவுட் நடிகைகளான கத்ரீனா கைஃப், ஆலியா பட் இருவர் பற்றியும், தான் சேர்ந்து பணியாற்ற விரும்பும் நடிகைகள் பற்றியும் கூறியுள்ளார். நாக சைதன்யா இதுபற்றி நாக சைதன்யா, “நான் … Read more

“டெல்லிக்கு காவடி தூக்கவா போகிறேன்… கலைஞரின் பிள்ளை நான்!" – திருமா மணிவிழாவில் கொதித்த ஸ்டாலின்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவனின் 60-வது பிறந்தநாளை முன்னிட்டு அவர் கட்சியின் சார்பில், சென்னை கலைவாணர் அரங்கில் மணிவிழா நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது மேடையில் பேசிய ஸ்டாலின், “இந்த ஆட்சி இருப்பதே தந்தை பெரியாரின், பேரறிஞர் அண்ணாவின், முத்தமிழறிஞர் கலைஞரின் திராவிட கருத்தியல்களை நிறைவேற்றுவதற்காகத்தான். கோட்டையிலிருந்தாலும், அறிவாலயத்திலிருந்தாலும் தி.மு.க-வின் கொள்கை ஒன்றுதான் என்பதை யாரும் மறந்துவிடவேண்டாம். ஸ்டாலின் பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் ஆகிய அமைப்புகளுடன் குறைந்தபட்ச … Read more

“சாவர்க்கரும் சுதந்திரப் போராட்ட வீரர்தான்… அவர் படம் வைப்பதில் என்ன தவறு!" – கர்நாடக அமைச்சர்

கருநாடக மாநிலம், ஷிவமோகாவில் சுதந்திர தினத்தன்று சாவர்க்கரின் பேனர் வைக்கப்படதைத் தொடர்ந்து, இன்னொரு பிரிவினர் திப்பு சுல்தான் பேனர் வைக்கவேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், கலவரம் வெடித்தது. அந்தக் கலவரத்தில், பிரேம் சிங் என்ற இளைஞர் ஒருவர் கத்திக் குத்துக்கு ஆளானார். அதையடுத்து அந்தப் பகுதியில் நிலைமை இன்னும் மோசமடைய… வரும் 18-ம் தேதிவரை போலீஸ் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பித்தது. சாவர்க்கர் மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை 4 பேர் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர். அதுமட்டுமல்லாமல், … Read more

குடும்பத் தகராறு; அக்கா கணவரை அடித்துக் கொலைசெய்த மைத்துனர்! – குன்றத்தூரில் பயங்கரம்

குன்றத்தூர் அருகில் உள்ள நந்தம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (45). இவருக்குத் திருமணமாகி தேவி என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். வெங்கடேசனுக்குத் தீவிர குடிபோதை பழக்கம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், வெங்கடேசனுக்கும் தேவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கமாக இருந்துள்ளது. மேலும், இவர்மீது பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. வெங்கடேசன் தேவியைப் பிரிந்து வேறு சில பெண்களுடன் தொடர்பிலிருந்ததாகக் கூறப்படுகிறது. வெங்கடேசன் இதற்கிடையில் வெங்கடேசன் அடிக்கடி வீட்டுக்குவந்து குடிக்கப் பணம் தரும்படி தேவியை அடித்துத் … Read more

திருமணமாகி 6 ஆண்டுகள் கழித்து பாலிவுட் நடிகை பிபாஷா பாசு கர்ப்பம் – வைரலாகும் புகைப்படங்கள்!

பாலிவுட் நடிகை பிபாஷா பாசு நடிகர் கரண் சிங் குரோவரைக் காதலித்து வந்தார். அவர்கள் கடந்த 2016-ம் ஆண்டு ஏப்ரல் 30ம் தேதி திருமணம் செய்து கொண்டனர். பாலிவுட் பிரபலங்களுக்கு பிரத்யேக திருமண வரவேற்புக்கும் ஏற்பாடு செய்திருந்தனர். இதில் நடிகர் சல்மான் கான், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் உட்படப் பலரும் கலந்து கொண்டனர். இருவரும் ‘அலோன்’ என்ற படத்தில் சேர்ந்து நடித்த போது அவர்களுக்குள் காதல் ஏற்பட்டது. திருமணம் செய்து கொண்ட பாலிவுட் நடிகைகள் பெரும்பாலானோர் … Read more

திருமணத்துக்கு அழைத்தது 70 பேர்; கலந்துகொண்டது ஒரேயொருவர்! – விரக்தியில் வேலையை ராஜினாமாசெய்த பெண்

பொதுவாகவே திருமணம் என்றால் மணமக்கள் தங்களுடன் பணியாற்றும் சக ஊழியர்களை திருமணத்துக்கு அழைப்பது வழக்கமான ஒன்றாகும். அப்படி திருமணத்துக்கு அழைக்கப்படுபவர்கள் வராமல் போகும்பட்சத்தில் அழைத்தவர்களின் மனம் நொந்து போகும். அந்த வகையில் தன் திருமணத்துக்கு அலுவலக நண்பர்கள் வராததால், சீன பெண் ஒருவர் மனவிரக்தியில் வேலையை ராஜினாமா செய்திருக்கிறார். சீனாவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தன்னுடைய திருமணத்துக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பாக அலுவலக நண்பர்கள் 70 பேருக்கு அழைப்பிதழ் கொடுத்திருக்கிறார். “கட்டாயம் வந்துவிடுவோம்..!” என அந்தப் பெண்ணிடம் … Read more

பிரான்ஸ் நாட்டைத் தொடர்ந்து இங்கிலாந்திலும் வறட்சி; நீர்ப் பயன்பாட்டுக்கு பெருகும் கட்டுப்பாடுகள்!

வறட்சி என்ற நிலை வரும்போதே நீரின் அவசியத்தை அறிந்து கொள்கிறோம். ஆடம்பரமாகச் செலவழிக்கும் நீரைப் பார்த்துச் செலவழிக்க வேண்டும் என முற்படுகிறோம். அப்படியான ஒரு சூழ்நிலை தான் தற்போது தென் – கிழக்கு இங்கிலாந்தில் நிலவி வருகிறது. வறட்சி அதாவது, இப்பகுதியில் குளிர்காலத்தில் சராசரிக்கும் அதிகமான மழை பெய்யாமல் பொய்த்ததால், அதிகப்படியான வறட்சி ஏற்படலாம். எனவே லண்டன் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள நீர் பயன்பாடு குறித்த கட்டுப்பாடுகள் புத்தாண்டு வரை தொடர்ந்து நடைமுறையில் … Read more

"அரசுக் கல்லூரியில் படித்து முதல் முயற்சியிலேயே ஐபிஎஸ் ஆனேன்!"- மாணவர்களை ஊக்கப்படுத்திய எஸ்.பி நிஷா

மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் அமைந்திருக்கிறது முதலைமேடுதிட்டு கிராமம். இந்த கிராமத்தைப் பெருவெள்ளம் சூழ்ந்து தற்போது நீர் வடிந்து வருகிறது. இதனால் இங்கு இயங்கிவந்த அரசு உயர்நிலைப் பள்ளிக்கு கடந்த 10 நாள்களாக விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. மயிலாடுதுறை எஸ்.பி இந்த நிலையில், இன்று (16.08.2022) பள்ளி மீண்டும் திறக்கப்பட்டிருக்கிறது. மயிலாடுதுறை மாவட்ட எஸ்.பி நிஷா முதலைமேடுதிட்டு அரசு உயர்நிலைப்பள்ளிக்கு நேரில் வந்து,  மாணவர்களுக்கு தன்னுடைய சொந்த செலவில் ஒவ்வொரு மாணவருக்கும் தலா ரூ.500 மதிப்புள்ள புத்தகம் மற்றும் எழுதுபொருள்கள் அடங்கிய … Read more

`Copy&Paste' பிழையால் அடித்த ஜாக்பாட்! – ஒத்த வீட்டுக்குப் பணம் கட்டியதால் சொந்தமான 84 வீடுகள்

அமெரிக்காவின் நெவேடா மாகாணத்தின் ரேனோ பகுதியில் ஒரு வீட்டை வாங்கவேண்டும் எனப் பெண் ஒருவர் ஆசைப்படுகிறார். அதற்காக சிறிது சிறிதாகப் பணத்தை சேமித்து இறுதியில் 5,94,481 அமெரிக்க டாலர் கொடுத்து குறிப்பிட்ட பகுதியில் ஒரே ஒரு வீடு வாங்குகிறார். இந்த நிலையில், சமீபத்தில் எதார்த்தமாக அந்த வீட்டின் பத்திரப்பதிவை பார்த்தபோது அவருக்கு பெரும் ஆச்சர்யம் காத்திருந்தது. ஒரே ஒரு வீடு வாங்க மட்டும் பணம் கொடுத்த அந்தப் பெண்ணுக்கு அந்தப் பகுதியில் உள்ள 84 வீடுகள், மற்றும் … Read more