பல்கலைக்கழகத் தேர்வில் ஆள்மாறாட்டம்; பாஜக திருவாரூர் மாவட்டத் தலைவர் கைது! – என்ன நடந்தது?

தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழக தேர்வில் திருவாரூர் மாவட்ட பாஜக தலைவர் பாஸ்கர், தனக்கு பதிலாக வேறொரு நபரை தேர்வு எழுத வைத்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஸ்கர்- பா.ஜ.க. மாவட்ட தலைவர் திருவாரூர் மாவட்டம், கடாரம் கொண்டானில் திரு.வி.க அரசு கலைக் கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகத்தின் இளங்கலை பட்டத்திற்கான தேர்வு நடைபெற்று வரும் நிலையில், நேற்று நடைபெற்ற தேர்வில் இளைஞர் ஒருவர் ஆள் மாறாட்டத்தில் ஈடுபட்டது … Read more

அத்துமீறி பூட்டை உடைத்த விவகாரம்; பாஜக மாநிலத் துணைத் தலைவர் கைது – என்ன நடந்தது?

75-வது ஆண்டு சுதந்திர தின விழாவையொட்டி கடந்த ஆகஸ்ட் 11-ம் தேதி தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில் பாஜக சார்பில் பாதயாத்திரை நடைபெற்றது. அதில் பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பாஜக-வினர் கலந்துகொண்டனர். பாப்பாரப்பட்டி பழைய பேருந்து நிலையத்திலிருந்து தியாகி சுப்பிரமணிய சிவா மணி மண்டபம் சென்று அங்குள்ள பாரதமாதா நினைவாலயத்தில் மாலை அணிவிப்பதாக இருந்தது. உடைக்கப்பட்ட பூட்டு பாதயாத்திரையாகத் தியாகி சுப்பிரமணிய சிவா நினைவிடத்துக்கு பாஜக-வினர் சென்ற நிலையில், அங்குள்ள பாரதமாதா … Read more

“இது தமிழ்நாடு… உங்கள் அரசியல் விளையாட்டு எடுபடாது..!" – முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை

மதுரையில் நேற்று தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார்மீது பா.ஜ.க-வினர் காலணி வீசிய சம்பவம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அந்த அறிக்கையில், “இந்திய ஒன்றியத்தின் 76-வது விடுதலைநாள் விழா, உணர்வில் கலந்த கொண்டாட்டமாக நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. மாநில முதலமைச்சர்கள் அந்தந்த மாநிலங்களில் கொடி ஏற்றும் உரிமையைப் பெற்றுத்தந்தவர் நம் உயிர்நிகர் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர். இறையாண்மைமிக்க ஒன்றிய அரசு – இறையாண்மை மிக்க மாநில அரசுகள் என்கிற அரசியல் சட்டத்தின் … Read more

தாம்பத்திய உறவை நினைத்தாலே வலி… என்ன பிரச்னை இது?|காமத்துக்கு மரியாதை S 3 E 3

தாம்பத்திய உறவு பலருக்கும் இன்பமானதொரு வைபவமாக இருக்க, ஒரு சிலருக்கு மட்டும் அது வலிமிகுந்த அனுபவமாகி விடுகிறது. நம்முடைய வாசகி ஒருவர் தானும் இப்படிப்பட்ட வேதனையில் இருப்பதாக நமக்கு மெயில் செய்திருந்தார். ‘திருமணமான புதிதில் தாம்பத்திய உறவு வைத்துக் கொள்ளும்போதுதான் பிறப்புறுப்பு வலிக்கும். ஆனால், தற்போது, உறவு வைத்துக் கொள்ள வேண்டுமென்று நினைத்தாலே பிறப்புறுப்பு வலிக்கிறது. எனக்கு என்ன பிரச்னை ‘ என்று கேட்டிருந்தார். வாசகிக்கான பதிலை, மூத்த பாலியல் மருத்துவர் நாராயண ரெட்டி சொல்கிறார். sex … Read more

“அமைச்சரின் பேச்சு ஏற்றுக்கொள்ள முடியாதது; சரவணன் திமுக-வுக்குச் சென்றது அவர் உரிமை!" – அண்ணாமலை

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு இரண்டு நாள் சுற்றுப்பயணமாக வந்த தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். காலை ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அங்கிருந்து மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் இல்லத்திற்குச் சென்று, அங்கு தேசியக்கொடியை ஏற்றிவைத்து, அவர் குடும்பத்தினருடன் உணவருந்தினார். அப்போது அப்துல் கலாமின் பேரன், அப்துல் கலாம் கடைசியாக பயன்படுத்திய பேனாவை அண்ணாமலைக்கு பரிசளித்தார். அப்துல் கலாம் இல்லத்தில் அண்ணாமலை அதனைத் தொடர்ந்து ராமேஸ்வரம் … Read more

“நாட்டிலுள்ள அனைத்து மொழிகளும் தேசிய மொழிகள்தான்..!'' – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்

மராட்டிய மாநிலம், நாக்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ராஷ்டிரிய சுவயம்சேவக் சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்) தலைவர் மோகன் பகவத் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், “பன்முகத்தன்மையை நிர்வகிக்கும் திறமைக்காக ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உற்று பார்க்கிறது. பன்முகத்தன்மையை திறம்பட நிர்வகிப்பதில் இந்தியாவை உலகம் சுட்டிக்காட்டுகிறது. உலகம் முரண்பாடுகளால் நிறைந்தது. நமக்குச் சொல்லப்படாத அல்லது சரியான முறையில் கற்பிக்கப்படாத பல வரலாற்று நிகழ்வுகள் உள்ளன. உதாரணமாக, சம்ஸ்கிருத இலக்கணம் பிறந்த இடம் இந்தியாவில் இல்லை. ஏன் என்று நாம் எப்போதாவது கேள்வி … Read more

நாம் அதிகம் செலவு செய்ய ஜீபே, போன்பே தான் காரணமா?

உட்கார்ந்த இடத்திலிருந்தே நம் அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் அளவுக்கு பணம் இருக்கிறது. இதனாலேயே ஒரு பொருள் தேவையா, தேவை இல்லையா, அது நம் செலவுக்குள் அடங்குமா, அடங்காதா என்பதை யோசிக்காமல் பல தேவையற்ற செலவுகளை செய்கிறோம். ஷாப்பிங் செலவு உண்டியல் வருமானம் இப்படித்தான் செலவு செய்ய வேண்டும்! விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் தினசரி வாழ்க்கையில் “சந்தோஷத்திற்கு பணமா, இல்லை பணத்தால் சந்தோஷமா” என்று தெரியாமல் செலவு செய்கிறோம். இதனாலேயே பல பேர் என்னால் சேமிக்க முடியவில்லை. நிறைய … Read more

சோனு சூட் வீட்டுக்கு உதவி கேட்டு படையெடுக்கும் மக்கள்… அதற்கு அவர் சொன்னதென்ன தெரியுமா?

நடிகர் சோனு சூட் கொரோனா முதல் அலையின்போது பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உதவிகளை செய்து கொடுத்ததன் மூலம், மக்கள் மத்தியில் ஹீரோவார். சொந்த ஊர்களுக்குச் செல்ல முடியாமல் கஷ்டப்பட்டவர்களுக்கு வாகன வசதி, உயிர் காக்கும் ஆக்ஸிஜன் உட்பட அனைத்து உதவிகளையும் சோனு சூட் செய்துகொடுத்தார். கொரோனா காலத்தில் தொடங்கிய சேவையை சோனுசூட் இன்னும் தொடர்ந்துகொண்டிருக்கிறார். அதோடு திரைப்படத்துறையில் நுழையவேண்டும் என்ற நோக்கத்தோடு மும்பை நோக்கி வருபவர்களுக்கு உதவி செய்யப்போவதாகவும் அறிவித்திருக்கிறார். சோனு சூட் அவர்களுக்குப் பயிற்சி கொடுக்கவும் … Read more

விவாத அலையை எழுப்பிய மோடியின் `கறுப்பு' கருத்து… தமிழ்நாட்டு அரசியல்வாதிகளின் ரியாக்‌ஷன் என்ன?

நாடாளுமன்ற வளாகத்தில் ஆகஸ்ட் 5-ம் தேதி விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், பணவீக்கம் ஆகியவற்றை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. இந்தப் போராட்டத்தில் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள், தொண்டர்கள் அனைவரும் கறுப்பு சட்டை அணிந்து கலந்துகொண்டனர். இது நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்தது. இதையடுத்து ஹரியானாவின் பானிபட்டில் நடந்த 900 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 2ஜி எத்தனால் ஆலையைத் திறந்து வைக்கும் நிகழ்வில் பேசிய பிரதமர் மோடி, “அமிர்த பெருவிழா காலகட்டத்தில், நாடு முழுவதும் … Read more

சென்னை: கட்டிபோடப்பட்ட வங்கி ஊழியர்கள்.. கொள்ளையடிக்கப்பட்ட 32 கிலோ தங்க நகைகள்! – அதிர்ச்சி சம்பவம்

சென்னை, அரும்பாக்கம் பகுதியில் உள்ள ரசாக் கார்டன் சாலையில் பெடரல் வங்கியின் தங்க நகைக் கடன் பிரிவின் கிளை செயல்பட்டுவருகிறது. நேற்று மேலாளர், நகை மதிப்பீட்டாளர், காவலாளி உட்பட ஐந்து பேர் பணியிலிருந்ததாகச் சொல்லப்படுகிறது. மதியம் மூன்று மணியளவில் வாடிக்கையாளர் ஒருவர் வங்கிக்கு வந்திருக்கிறார். வெளியில் கதவு மூடப்பட்ட நிலையில் உள்ளே யாரோ ஒருவரின் சத்தம் கேட்டிருக்கிறது. கதவைத் திறந்து பார்க்கும்போது வங்கி ஊழியர்கள் அனைவரும் கட்டப்பட்டிருந்திருக்கின்றனர். இதனையடுத்து காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவமறிந்து அரும்பாக்கம் பகுதி … Read more