அயன் திரைப்பட பாணியில் ஒரு கிலோ தங்கம் கடத்தல்! – துபாயில் இருந்து வந்தவர் கைது

நெல்லை மாவட்டம் வழியாக கடத்தல் தங்கத்துடன் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து ஒருவர் காரில் வருவதாக நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சரவணனுக்கு தகவல் கிடைத்தது. அதனால் மாவட்டம் முழுவதும் உள்ள போலீஸாரை உஷார்படுத்திய எஸ்.பி., நாங்குநேரி டோல்கேட் பகுதியில் தீவிர சோதனைக்கு உத்தரவிட்டார். அதன்படி டோல்கேட் வழியாகச் சென்ற வாகனங்களை போலீஸார் தீவிரமாக சோதனையிட்டனர். கைது செய்யப்பட்ட அலாவுதீன் அப்போது, ஒரு சொகுசு காரில் வந்த அலாவுதீன் என்பவர் மீது போலீஸாருக்கு சந்தேகம் வந்தது. ஆனால் … Read more

கருணைக் கொலை செய்துகொள்ள வெளிநாடு செல்லும் நண்பர்… தடுத்து நிறுத்த போராடும் தோழி!

நொய்டாவில் வசிக்கும் 48 வயதான ஆண் ஒருவருக்கு மயால்ஜிக் என்செபலோமைலிடிஸ் (Myalgic Encephalomyelitis) என்ற நோய் ஏற்பட்டிருக்கிறது. இந்த அந்த நபர் 2014 முதல் நாள்பட்ட சோர்வு, உடல்நலக்குறைவு, (Brain fog) நினைவு இழப்பு, தலைவலி, தூக்கக் கலக்கம், மூச்சுத் திணறல் மற்றும் மார்பு வலி ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார். இவருக்கு ஒரு சகோதரியும், எழுபது வயதைக் கடந்த பெற்றோரும் இருக்கிறார்கள். இந்த நிலையில், இனி மற்றவர்களுக்கு பாரமாக இருக்கக் கூடாது என முடிவு செய்த அந்த நபர், … Read more

இருக்கண்குடி மாரியம்மன் கோயிலில் ஆடித் திருவிழா; அம்மன் ரிஷப வாகனத்தில் பவனி!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தாலுகாவில் தென் தமிழகத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற ஆன்மிக ஸ்தலமான இருக்கன்குடி மாரியம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் ஆடி மாதக்கடைசி வெள்ளி திருவிழா மிகவும் பிரசித்தம். இந்த திருவிழாவைக் காணத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வர். இந்த நிலையில் இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடி மாதத் திருவிழா ஆகஸ்ட் 5-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இருக்கன்குடி அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலின் ஆடி மாத கடைசி வெள்ளி … Read more

சிறியதே அழகானது! காந்தியடிகள், ஜே.சி.குமரப்பாவை கொண்டாடும் வெளிநாட்டு அறிஞர்! #IndependenceDay2022

ஒரு முறை பீஹார் மாநிலத்தில் உள்ள புத்த கயா சென்றிருந்த போது, ஒரு புத்த மதத் துறவியை சந்தித்தேன். அவர் துறவி மட்டுமல்ல. பெரிய படிப்பாளி. அவர் பரிந்துரை செய்த ‘சிறியதே அழகானது’ (Small Is Beautiful) ஆங்கில நூலைச் சென்னையில் தேடிப்பிடித்து வாங்கினேன். இப்போது அமேசான் இணைய தளத்தில் தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளிலும் விற்பனைக்குக் கிடைக்கிறது. Small Is Beautiful 1969 ஜுலை 19-ம் தேதி, இரவு 8.30… வங்கிகளை தேசியமயமாக்கிய இந்திரா … Read more

பெட்ரோலுடன் எத்தனால் கலப்பதால் கிடைத்த 50,000 கோடி: விவசாயிகளுக்கே சென்றது,.. மோடி பேச்சு!

கடந்த 7 முதல் 8 ஆண்டுகளில் பெட்ரோலுடன் எத்தனாலை கலப்பதன் மூலம் அந்நிய செலாவணியில் இருந்து சுமார் 50,000 கோடி சேமித்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். petrol punk அரியானா மாநிலம் பானிப்பட்டில், 900 கோடி ரூபாய் மதிப்பில் 2 ஆம் தலைமுறை எத்தனால் ஆலையை பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக திறந்து வைத்தார். அதில் பேசியவர், ‘இந்திய ஆயில் கார்ப்பரேஷனின் இரண்டாம் தலைமுறை எத்தனால் ஆலையை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறேன். கடந்த 7 முதல் … Read more

“நான் அம்பேத்கர் மாதிரி ஆகணும்" – Dhammam பட சிறுமி பூர்வதாரணி பேட்டி

`கர்ணன்’ படத்தில் முகம் காட்டாத காட்டுப் பேச்சியாக வந்து ‘யார் அந்தக் குட்டிப் பொண்ணு?’ என பேசவைத்தவர் பூர்வதாரணி, சமீபத்தில் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான ’தம்மம்’ படத்தில் தைரிய தாரணியாக நடித்து மீண்டும் பிரமிக்க வைத்திருக்கிறார். இயக்குநர் பா.ரஞ்சித்தின் உறவினரான பூர்வதாரணியை சென்னை ஆவடி அருகிலுள்ள கர்லபாக்கம் (பா.ரஞ்சித்தின் ஊரேதான்) கிராமத்தில் சந்தித்துப் பேசினோம். பேசும்போதுதான் தெரிந்தது பூர்வதாரணியின் ’உண்மை முகம்’. “எனக்கு நடிக்கணும்ங்குற ஆர்வம் எல்லாம் இல்ல. வானம் கலை திருவிழாவுக்கு அடிக்கடி போவோம். அங்க … Read more

மாமியார் – கணவரின் அத்தை மகள் கூட்டணி, சீண்டப்படும் நான், பதிலடி கொடுப்பது எப்படி? #PennDiary79

நான், கணவர், இரண்டு குழந்தைகள் என மகிழ்ச்சியான குடும்பம். மாமியார், மாமனாருடன் கூட்டுக் குடும்பமாக வசிக்கிறோம். கணவர் மிகவும் அன்பானவர். இப்படி எல்லாம் நிம்மதியாக இருக்கும் என் வாழ்வில், என் நிம்மதியைக் குலைப்பதற்காகவே இப்போது கூட்டணி வைத்திருக்கிறார்கள் என் மாமியாரும், கணவரின் அத்தை மகளும். Happy Family பணத்தை ஏமாற்றிய என் சகோதரர்கள், கோபத்தில் கணவர்; கேள்விக்குறியாகுமா வாழ்க்கை?#PennDiary77 என் மாமியாருக்கும் எனக்கும், வழக்கமாக எல்லா மாமியாருக்கும் மருமகளுக்கும் இடையில் இருக்கும் சின்னச் சின்ன சண்டைகள், உரசல்கள், … Read more

தனியார் பால் விலை உயர்வு… ஆவினுக்கு அதிக வாடிக்கையாளர்களை கொண்டு வருமா?!

தமிழ்நாடு அரசு சார்பில் ஆவின் நிறுவனம் மூலம் தினமும் 26.40 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்துவருகிறது. அதுவே தனியாரை எடுத்துக்கொண்டால், ஒருநாளைக்கு ஒன்றேகால் கோடி லிட்டர் விற்பனையாகிறது. ஆவின் பால் பல தனியார் நிறுவனங்கள் தமிழ்நாடு முழுவதும் பால் விற்பனை செய்கிறார்கள். இதில் ஹட்சன் நிறுவனன் ஆரோக்கியா பால் விலையை லிட்டருக்கு 4 ரூபாய் உயர்த்தி இருக்கிறது. மற்ற பால் பொருள்களின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல், சீனிவாசா நிறுவனமும் ஒரு லிட்டருக்கு 2 ரூபாய் பாலுக்கு … Read more

Doctor Vikatan: புற்றுநோயை ஏற்படுத்துமா `போடாக்ஸ்' சிகிச்சை?

போடாக்ஸ் சிகிச்சை என்பது என்ன…. அதன் பலன்கள் குறித்து விளக்க முடியுமா? Karthik, விகடன் இணையத்திலிருந்து. பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சரும மருத்துவர் செல்வி ராஜேந்திரன் செல்வி ராஜேந்திரன் Botulinum toxin என்பதன் சுருக்கமே ‘போடாக்ஸ்’. இது க்ளஸ்ட்ரிடியம் (Clostridium) எனும் பாக்டீரியாவிலிருந்து எடுக்கப்படுவது. இது சுத்திகரிக்கப்பட்ட புரதம். செரிப்ரல் பால்சி, சிலவகை தசை இறுக்கத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்குத்தான் ஆரம்பத்தில் இது பயன்படுத்தப்பட்டது. இறுக்கமான தசைகளில் ஆயிரக்கணக்கான யூனிட்டுகளில் போடாக்ஸ் ஊசி செலுத்தப்பட்டு, அந்தத் தசைகள் … Read more

“என் கணவரை `கவனித்து’ கொள்ள பெண் தேவை; நமக்குள் சண்டை வராது” – வைரலான தாய்லாந்து பெண்ணின் விளம்பரம்

தாய்லாந்தை சேர்ந்த பெண்மணி ஒருவர் தன் கணவனை கவனித்து கொள்ள பெண்கள் தேவை என வெளியிட்ட விளம்பரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தாய்லாந்தை சேர்ந்த பதீமா சாம்னன் என்னும் 44 வயது பெண்மணி தன் கணவனை கவனித்து கொள்வதற்கும், அவரை திருப்திபடுத்தவும் எண்டெர்டெயின் செய்யவும் மூன்று பெண்கள் தேவை என விளம்பரம் ஒன்றை வெளியிட்டார். ஒரு வீடியோ பதிவாக வெளியிடப்பட்ட விளம்பரத்தில் பேசிய அவர், “என்னுடைய கணவனை கவனித்து கொள்வதற்கு மூன்று பெண்கள் தேவை. அவர்கள் அழகாகவும், … Read more