13.08.22 சனிக்கிழமை – Today RasiPalan | Indraya Rasi Palan | August – 13 | இன்றைய ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். #இன்றையராசிபலன் #DailyHoroscope​ #Rasipalan​ #Horoscope​ #Raasi​ #Raasipalan Daily Rasi Palan in Tamil, Indraya Rasi Palan in Tamil #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #சந்திராஷ்டமம் #chandrastamam. Source link

புதிய மின்சார சட்டத்திருத்த மசோதா… விவசாயிகளுக்கு சாதகமா, பாதகமா?

திருத்தப்பட்ட புதிய மின்சாரத் திட்ட மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், எதிர்க்கட்சிகள்  இம்மசோதாவுக்கு கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, “இந்த மசோதா மின் விநியோகத்தைத் தனியாருக்குத் தாரை வார்க்கும் அம்சங்களைக் கொண்டிருக்கிறது. ஏழை மக்கள், விவசாயிகள், நெசவாளர்கள் எனப் பலரும் இதனால் பாதிக்கப்படுவர்” என்று கூறியுள்ளார். இம்மசோதா மீதான விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் விதமாகப் பேசியுள்ள மத்திய மின்சாரத்துறை அமைச்சர் ஆர்.கே.சிங், “புதிய மின்சாரத் திட்ட மசோதா மக்களுக்கு ஆதரவான அம்சங்களையே கொண்டிருக்கிறது. இலவசம் மற்றும் மானிய மின்சாரத்தைத் தொடர்ந்து வழங்கலாம்” என்று தெரிவித்திருக்கிறார். இச்சூழலில் … Read more

குடும்ப உறுப்பினர்களின் நேரடித் தலையீடு இல்லை; ஆனால், வெற்றிகரமாக நடக்கும் பிசினஸ் நிறுவனம்..!

உங்களுக்குத் தெரிந்த எப்.எம்.சி.ஜி நிறுவனங்களைப் பட்டியலிடச் சொன்னால், ஹெச்.யு.எல், பி. அண்ட் ஜி, மாரிகோ, பதஞ்சலி எனப் பல நிறுவனங்கள் நினைவுக்கு வரும். வாடிகா, சவன்பிரஸ், ரெட் பேஸ்ட், மெஷ்வாக் எனப் பல பிராண்டுகளை நாம் பயன்படுத்தி வருகிறோம். ஆனால், டாபர் என்னும் நிறுவனம் நம்முடைய நினைவுக்கு வராது. ஆனால், எப்.எம்.சி.ஜி துறையில் முக்கியமான நிறுவனம். கடந்த நிதி ஆண்டில் ரூ.10,000 கோடி அளவுக்கு வருமானம் ஈட்டி இருக்கிறது. 100 ஆண்டுகளைக் கடந்தது இந்த நிறுவனம். 1884-ம் … Read more

கரூர்: பள்ளிச் சிறுமிகளை மதிய உணவுக்கு அழைத்துச் சென்று ஒயின் குடிக்கவைத்த இளைஞர்! கைதுசெய்த போலீஸ்

கரூரில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் பதினோராம் வகுப்பு படித்த மூன்று மாணவிகள் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த பொதுத்தேர்வில் தோல்வி அடைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு அவர்களுக்கான சிறப்பு தேர்வு நடைபெற்றது. அப்போது அந்த மூன்று மாணவிகளும் பசுபதிபாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் சிறப்பு தேர்வை எழுதியுள்ளனர். அந்த தேர்வை எழுதியபிறகு அவர்கள் மூன்று பேரும் வெளியில் வந்துள்ளனர். அதில் ஒரு மாணவியின் ஆண் நண்பர், அவர்களுக்கு ஒயின் வாங்கி கொடுத்ததாகக் … Read more

சாலைக்காக வெட்டப்படும் 200 வயது மரம்; ஊர்கூடி பிரியாவிடை கொடுத்த கேரள மக்கள்!

மனிதர்களுக்கு மட்டுமே கொடுத்து வந்த பிரியாவிடை நிகழ்ச்சி, முதன்முறையாக மரத்துக்கு நிகழ்த்தி அசத்தியிருக்கின்றனர் கேரள மாநிலம், திருவனந்தவுரம் அடுத்த செம்பகமங்கலம் கிராம மக்கள். சாலை விரிவாக்க பணியின் ஒரு பகுதியாக திருவனந்தபுரம் தொன்னக்கல் அருகே உள்ள செம்பகமங்கலம் பகுதியில் 200 ஆண்டுகளாக உள்ள பெரிய மரத்தை வெட்ட முடிவு செய்தது நெடுஞ்சாலைத்துறை. இதை அறிந்த செம்பகமங்கலம் மக்கள் தங்கள் பகுதியில் 200 ஆண்டுகாலமாக மக்கள் நிற்பதற்கு நிழலையும், ஏராளமான பழங்களையும் கொடுத்து வந்த மரத்திற்கு ஊர்கூடி பிரியாவிடை … Read more

“ஃபைவ் ஸ்டார் ஹோட்டலுக்கு வரச்சொல்லி வற்புறுத்தினார்!" – இளம்பெண் பாலியல் புகார்… போலீஸ் விசாரணை

பெங்களூருவில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக காவல் நிலையத்தில் பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரில், “பெங்களூர் நகரின் ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் வணிகத் தொழில்ரீதியான சந்திப்புக்குத் தொழில் கூட்டாளி என்னை அழைத்தார். அதற்கு நான் மறுத்தும், பொது இடங்களில், தான் அசௌகரியமாக இருப்பதாகக் கூறி என்னை வரச்சொல்லி வற்புறுத்தினார். அதனால், கடந்த 6-ம் தேதி அவரைச் சந்திக்க அந்த ஃபைவ் ஸ்டார் ஹோட்டலுக்குச் சென்றேன். அங்கு, எனக்கு … Read more

50 ஆண்டுகளில் இல்லாத வறட்சி; பிரான்ஸ் நாட்டைச் சோதிக்கும் இயற்கை… என்னவாகும் உணவு உற்பத்தி?

பிரான்ஸ் நாட்டில் மழைப்பொழிவு குறைந்ததாலும், வெப்பநிலை அதிகரித்ததாலும் கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளது. இதை அந்நாட்டு பிரதமர் எலிசபெத் போர்னே அறிவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. வறட்சியின் காரணமாக இதுவரை 3 முறை வெப்ப அலைகள் வீசியுள்ளது. 62 பகுதிகளில் நீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதே வெப்பநிலை தொடர்ந்தாலோ, இதைவிட அதிகரிகரித்தாலோ நீர்நிலைகளில் உள்ள தண்ணீர் அதிகளவில் ஆவியாகும். இதனால் பிரான்ஸ் கடுமையான வறட்சிக்கு உள்ளாகும் என்று எச்சரிக்கிறார்கள் ஆய்வாளர்கள். france agri land கடலுக்குள் காற்றாலை மின் உற்பத்தி… … Read more

Nitish effect: இப்போது மோடியின் செல்வாக்கு?-இந்திராவின் வங்கி புரட்சி-இந்திய Cricket|விகடன் ஹைலைட்ஸ்

Nitish effect: இப்போது தேர்தல் நடந்தால் மோடியின் செல்வாக்கு என்னவாக இருக்கும்? மோடி- நிதிஷ் குமார் நாட்டின் 75-வது சுதந்திர தின விழாவைக் கொண்டாடுவதற்கு இன்னும் மூன்று தினங்களே உள்ள நிலையில், பீகார் மாநிலத்தில் நடந்த அரசியல் மாற்றம் நாட்டின் எதிர்கால அரசியலில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறி உள்ளது. பாஜக-வுக்கு ‘செக்மேட்’ * வேறெந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் காங்கிரஸ், இடதுசாரிகள், ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் முதலமைச்சர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் … Read more

தெலுங்கு பட உலகின் தொடர் வேலை நிறுத்தம்; எப்போது முடிவுக்கு வருகிறது?

தெலுங்கு படவுலகில் கடந்த 1ம் தேதி முதல் ஸ்டிரைக் அறிவிக்கப்பட்டு பத்து நாட்களுக்கும் மேலாக ஸ்ட்ரைக் நடந்துவருகிறது. இப்போது அங்கே நிலவரம் எப்படி உள்ளது என்பது குறித்து தெலுங்கு பட வட்டாரத்தில் விசாரித்தேன். தெலுங்கு பட உலகில் `பாகுபலி’, `ஆர்.ஆர்.ஆர்.’ போன்ற ஒருசில படங்களைத் தவிர, பெரிய ஹீரோக்களின் படங்கள் கூட தியேட்டர்களில் ஓடுவதில்லை. இதனால் தயாரிப்பாளர்களுக்கு தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. ஹீரோ உள்பட நடிகர் நடிகையர், தொழில்நுட்பக் கலைஞர்கள், தொழிலாளர்கள் என ஒட்டுமொத்த திரையுலகினரின் … Read more