“அரசியல் குறித்து விவாதித்தோம்; ஆனால்…” – ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்த ரஜினி

நடிகர் ரஜினிகாந்த், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை இன்று நேரில் சந்தித்துப் பேசினார். ஆர்.என்.ரவியுடனான சந்திப்புக்கு பின்னர் ரஜினிகாந்த், தனது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். ஆர்.என்.ரவி அப்போது சந்திப்பு குறித்து பேசிய ரஜினிகாந்த், “இது ஒரு மரியாதை நிமித்தமான ஒரு சந்திப்பு. கிட்டத்தட்ட 20, 25 நிமிஷம் பேசினோம். தமிழ்நாட்டை அவர் மிகவும் நேசிக்கிறார். முக்கியமாகத் தமிழ் மக்கள், அவர்களுடைய நேர்மை, கடின உழைப்பு எல்லாம் அவருக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இங்கே இருக்கிற ஆன்மீக உணர்வு அவரை ரொம்பவும் … Read more

“குஜராத் காங்கிரஸ் விரைவில் குஜராத் பாஜக-வில் இணைய போகிறது” – அரவிந்த் கெஜ்ரிவால்

பா.ஜ.க ஆளும் குஜராத்தில், இந்தாண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த நிலையில், ஏற்கெனவே டெல்லி, பஞ்சாப் என இரண்டு மாநிலங்களில் ஆட்சியிலிருக்கும் ஆம் ஆத்மி, மூன்றாவது மாநிலமாக குஜராத்திலும் ஆட்சியைப் பிடிக்க ஆயத்தமாகிவருகிறது. அதற்கான வேலைகளை ஏற்கெனவே தொடங்கிவிட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தொடர்ச்சியாக பா.ஜ.க-வை கடுமையாக சாடி வருகிறார். இந்த நிலையில், தற்போது பாஜக, காங்கிரஸ் இரண்டையும் ஒன்றாக சேர்த்து விமர்சித்திருக்கிறார். பாஜக – காங்கிரஸ் நேற்று செய்தியாளர்களிடையே பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், … Read more

அயோத்தி நில சர்ச்சை: பாஜக மேயர், எம்.எல்.ஏ மீது அயோத்தி மேம்பாட்டு ஆணையம் புகார்!

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ஏற்கனவே கோயில் இருந்த இடத்திற்கு அருகில் உள்ள நிலம் விலைக்கு வாங்கப்பட்டது. அந்த நிலத்தை ராமர் கோயில் டிரஸ்ட் நிர்வாகம் அதிக விலை கொடுத்து வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆம் ஆத்மி கட்சி கடந்த ஆண்டு நவம்பர் மாதம், அயோத்தியில் மேயரின் உறவினர் உட்பட சில முக்கிய பிரமுகர்கள், நிலத்தை குறைந்த விலைக்கு வாங்கி ராமர் கோயில் கட்ட அதிக விலைக்கு விற்பனை செய்ததாக குற்றம் சாட்டி இருந்தது. தற்போது அதனை … Read more

`நிர்பயாவை கேலி செய்திருக்கிறார்’ – ராஜஸ்தான் முதல்வரின் சர்ச்சை கருத்துக்கு குவியும் கண்டனங்கள்

டெல்லியில் 2012-ம் ஆண்டு பேருந்தில், நிர்பயா எனும் மருத்துவ மாணவி, 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் இந்தியா முழுவதுமே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்குப் பிறகு 2020-ல், குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், கொலை சம்பவங்கள் அதிகரித்துவருவது குறித்து நிர்பயா வழக்கை அடிகோடிட்டு பேசியதற்கு, டெல்லி மகளிர் ஆணையம் கண்டனம் தெரிவித்திருக்கிறது. பாலியல் வன்கொடுமை அசோக் கெலாட் … Read more

Motivation Story: சாப்பாட்டுக்காக நாயை விற்ற Sylvester Stallone; ஹாலிவுட்டின் ராக்கி பாயான கதை!

“பயிற்சி செய்யும் ஒவ்வொரு நிமிடத்தையும் நான் வெறுத்தேன். அதேநேரத்தில் எனக்கு நானே சொல்லிக்கொள்வேன்… `இப்போது கஷ்டப்பட்டால்தான் வாழ்நாள் முழுக்க நீ சாம்பியனாக இருக்க முடியும்’ என்று’’. – அமெரிக்க குத்துச்சண்டை வீரர் முகமது அலி. ஹாலிவுட் கதாநாயகர்களில் தனக்கென தனி அடையாளத்தைப் பதித்துவைத்திருப்பவர் சில்வெஸ்டர் ஸ்டாலோன். முழுப்பெயர் Michael Sylvester Gardenzio Stallone. அவர் நடிப்பில் வெளியான பல படங்கள் காலம் கடந்தும் ரசிகர்களின் கண்ணில் நிழலாடுபவை. அவர் பிறப்பே பிரச்னையில்தான் தொடங்கியது. பிரசவத்தின்போது ஃபோர்செப்ஸ் (Forceps) … Read more

மூணாறு நிலச்சரிவு: 142 தேயிலைத் தோட்டத் தொழிலாளர் குடும்பங்கள் மீட்பு! – சீரமைப்புப் பணிகள் தீவிரம்

கேரளாவில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் திருச்சூர், எர்ணாகுளம், கோட்டயம், ஆலப்புழா, பத்தனம்திட்டா, இடுக்கி உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் மழைநீரில் மூழ்கின. இதனால் கடந்த 2018-ல் ஏற்பட்ட மழை பாதிப்பைப்போல பேரழிவை நினைவுகூரும் வகையில் மழை அதிகமாக இருந்துவருகிறது. நிலச்சரிவு இடுக்கியில் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு மழை குறைந்திருந்த நிலையில், நேற்று முன்தினம் மீண்டும் மழை அதிகமாக பெய்யத் தொடங்கியது. அதிகபட்சமாக பீர்மேடு தாலுகாவில் 140 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. இந்நிலையில் நேற்று 24 மணி நேரத்தில் … Read more

ஆன்லைன் ரம்மி தடை விவகாரத்தில் மெத்தனம் காட்டுகிறதா திமுக அரசு?!

சென்னை மணலி அறிஞர் அண்ணாநகரைச் சேர்ந்த நாகராஜன் என்ற பெயின்டிங் கான்டிராக்டர் ஆன்லைன் சூதாட்டத்தில் 20 லட்ச ரூபாய் வரை இழந்ததால் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். சில நாள்களுக்குமுன் அதேபகுதியின் புதுநகரைச் சேர்ந்த பவானி என்பவர் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் 3 லட்ச ரூபாயை இழந்ததோடு 20 சவரன் தங்க நகைகளை விற்று அதில் வந்த பணத்தையும் இழந்திருக்கிறார். இதனால் மன உளைச்சலிலிருந்தவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். கடந்த வாரத்தில் ஆன்லைன் ரம்மி விளையாடி 5 லட்சம் ரூபாய் … Read more

“பாசிச எதிர்ப்பில், திமுக இதே வேகத்தோடு இயங்குவதுதான் தமிழ்நாட்டுக்கு நல்லது” – சொல்கிறார் ஜோதிமணி

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் ஜூலை 18-ம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அமளிகளுக்கு இடையே இந்த முறை நாடாளுமன்றத்தில் பா.ஜ.க மற்றும் அதன் எதிர்க்கட்சிகளுக்கு இடையே விவாதங்கள் அனல் பறக்கின்றன். இந்தச் சூழலில் நாடாளுமன்ற நடவடிக்கைகள், பா.ஜ.க-வின் செயல்பாடுகள், தமிழ்நாட்டின் அரசியல் சூழல் குறித்து காங்கிரஸ் கட்சியின் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணியுடன் ஒரு நேர்காணல்… ஜோதிமணி “`அதானி, அம்பானி குறித்துப் பேசும் திமுக, அவர்களோடும் ஒப்பந்தம் செய்திருக்கிறது’ என பா.ஜ.க விமர்சிக்கிறதே?” “புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் … Read more