Nitish effect: இப்போது மோடியின் செல்வாக்கு?-இந்திராவின் வங்கி புரட்சி-இந்திய Cricket|விகடன் ஹைலைட்ஸ்

Nitish effect: இப்போது தேர்தல் நடந்தால் மோடியின் செல்வாக்கு என்னவாக இருக்கும்? மோடி- நிதிஷ் குமார் நாட்டின் 75-வது சுதந்திர தின விழாவைக் கொண்டாடுவதற்கு இன்னும் மூன்று தினங்களே உள்ள நிலையில், பீகார் மாநிலத்தில் நடந்த அரசியல் மாற்றம் நாட்டின் எதிர்கால அரசியலில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறி உள்ளது. பாஜக-வுக்கு ‘செக்மேட்’ * வேறெந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் காங்கிரஸ், இடதுசாரிகள், ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் முதலமைச்சர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் … Read more

தெலுங்கு பட உலகின் தொடர் வேலை நிறுத்தம்; எப்போது முடிவுக்கு வருகிறது?

தெலுங்கு படவுலகில் கடந்த 1ம் தேதி முதல் ஸ்டிரைக் அறிவிக்கப்பட்டு பத்து நாட்களுக்கும் மேலாக ஸ்ட்ரைக் நடந்துவருகிறது. இப்போது அங்கே நிலவரம் எப்படி உள்ளது என்பது குறித்து தெலுங்கு பட வட்டாரத்தில் விசாரித்தேன். தெலுங்கு பட உலகில் `பாகுபலி’, `ஆர்.ஆர்.ஆர்.’ போன்ற ஒருசில படங்களைத் தவிர, பெரிய ஹீரோக்களின் படங்கள் கூட தியேட்டர்களில் ஓடுவதில்லை. இதனால் தயாரிப்பாளர்களுக்கு தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. ஹீரோ உள்பட நடிகர் நடிகையர், தொழில்நுட்பக் கலைஞர்கள், தொழிலாளர்கள் என ஒட்டுமொத்த திரையுலகினரின் … Read more

பழைமை மாறாமல் புனரமைக்கப்படும் 250 ஆண்டுகள் பழைமையான ஹுமாயூன் மஹால்!

சென்னை மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை எதிரே, எழிலக வளாகத்தில் பாரம்பர்யத்தையும், பழைமையையும் கம்பீரமாகத் தாங்கி நிற்கிறது `ஹுமாயூன் மஹால்’. 250 ஆண்டுகள் பழைமைவாய்ந்த இந்தக் கட்டடத்தை, பழமை மாறாமல் புனரமைக்கும் பணியில் தமிழ்நாடு அரசு ஈடுபட்டிருக்கிறது. ஹுமாயூன் மஹால் தனிச் சிறப்பையும், பெரிய வரலாற்றையும் தன்னகத்தே கொண்டிருக்கும் ஹுமாயூன் மஹாலைப் பார்த்தாக வேண்டுமென்ற ஆவல் மனதில் எழ…. வாகனத்தைச் செலுத்தினோம் ஹுமாயூன் மஹாலுக்கு..! புனரமைப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்றுக்கொண்டிருக்க, பெருநகரத்தின் பேரிரைச்சலுக்கு நடுவில் நிசப்தத்தின் பேரமைதியை … Read more

“என்னால ஒருகையால கம்பிய பிடிச்சிக்கிட்டு நிற்க முடியலம்மா…கைநழுவிட்டு!"- மாணவிக்கு நேர்ந்த துயரம்

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலை, பள்ளி முடிந்து வீடுத்திரும்பிய ரெங்கன்பட்டியைச் சேர்ந்த சிறுமி சக்திமாரி (16) ஓடும் பேருந்திலிருந்து தவறிவிழுந்து உயிரிழந்த சம்பவம் பெருஞ்சோகத்தை ஏற்படுத்தியது. தினந்தோறும் நிகழும் சம்பவங்களில் இதுவும் ஒன்றாகக் கடந்துவிட்ட நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பத்தில் சிறுமியின் தந்தையிடம் பேசினோம். “என் பெயர் சுப்புராஜ் (46). என் மனைவி பெயர் மலைச்செல்வி. எங்களுக்கு ஒருபையன் 3 பொண்ணுங்கன்னு மொத்தம் 4 பிள்ளைங்க. இதுல சக்திமாரி (16) எங்க வீட்டுல 3-வது குழந்தை. ரொம்ப … Read more

கரையானை அழிக்க வைத்த தீ.. மகளை எரித்த சோகம்! கரையான்களை அழிப்பது எப்படி?

உசேன்பாட்ஷா என்பவர் தன் மனைவி, மகளுடன் சென்னை பல்லாவரம் அடுத்துள்ள அனகாபுத்தூரில் ஓட்டு வீட்டில் வசித்து வந்தார். அவர் வீட்டில் அடிக்கடி கரையான் அரிப்பு ஏற்பட்டு வந்தது. இதனால் கடந்த 31-ந்தேதி உசேன்பாட்ஷா, கரையான்கள் மீது பெயின்ட்டில் கலக்கும் தின்னரை ஊற்றி தீ வைத்துள்ளார். அருகில் நின்று பார்த்துக்கொண்டிருந்த அவரின் 13 வயது மகள் பாத்திமா மீது தீப்பற்றியது. கரையான் 3 வயது குழந்தைக்கு ஹெச்.ஐ.வி! காரணம் அறிய மருத்துவமனையில் நடந்த விசாரணை… உசேன்பாட்ஷாவும், அவரின் மனைவியும் … Read more

ம.பி: மீண்டும் கணவருடன் சேர்ந்த பெண்… நடுத்தெருவில் நிர்வாணப்படுத்தி தாக்கிய நபர்!

மத்தியப் பிரதேச மாநிலம், ஜபுவா மாவட்டத்தில் இருக்கும் ருபாரல் என்ற கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தன் கணவனை விட்டுவிட்டு முகேஷ் என்பவருடன் சென்று வாழ்ந்து வந்தார். திடீரென அந்தப் பெண் முகேஷை விட்டுவிட்டு மீண்டும் தன்னுடைய கணவரிடம்வந்து சேர்ந்துகொண்டார். இதனால் முகேஷ் கடும் கோபமடைந்தார். அதையடுத்து, நண்பர்களுடன் அந்தப் பெண் வசிக்கும் வீட்டுக்குச் சென்ற முகேஷ், அடித்து வலுக்கட்டாயமாக இழுத்து வெளியே கொண்டுவந்தார். தாக்குதல் பின்னர் தன்னை விட்டுப் பிரிந்து … Read more

விருமன்: அதிரடி ஆக்‌ஷன் மசாலா – ஆனால், பழைய கதையும் பழைமைவாதமும் இன்னும் எத்தனை நாள்களுக்கு?

தவறான வழியில் செல்லும் தந்தையை மகன் எப்படி தட்டித் திருத்துகிறார் என்பதுதான் விருமன் படத்தின் ஒன்லைன். வருசநாட்டின் தாசில்தார் முனியாண்டி. அவருக்கு நான்கு மகன்கள். மூன்று மகன்களை முனியாண்டி வளர்க்க, ஒரு மகன் மட்டும் தாய் மாமாவின் அரவணைப்பில் வளர்கிறார். தாசில்தார் என்கிற முறையில் ஊரில் நடக்கும் எல்லா கெட்ட காரியங்களிலும் தன் பங்கை வளைத்துப் போடும் கெட்டிக்காரரான முனியாண்டிக்கு புதிய தலைவலியாக முளைக்கிறார் நான்காவது மகனான விருமன். தந்தை வெர்சஸ் மகன் பஞ்சாயத்துக்கு என்ன காரணம், … Read more

கேரளா: மாலில் குவிந்த மக்கள்; படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியைக் கேன்சல் செய்த படக்குழு!

கேரளாவில் உள்ள ஹைலைட் (HiLITE) என்ற மாலில் ‘தல்லுமாலா’ திரைப்படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியை நடத்த படக்குழு ஏற்பாடு செய்திருந்தது. ஆனால் எதிர்பார்த்ததைவிட ரசிகர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் புரோமோஷன் நிகழ்ச்சியையே படக்குழுவினர் ரத்து செய்துவிட்டனர். பிரபல மலையாள இயக்குநர் காலித் ரகுமான் இயக்கத்தில் டொவினோ தாமஸ், கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் உருவாகியுள்ள `தல்லுமல்லா’ படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே படத்திற்கான புரோமோஷன் வேலைகளில் படக்குழுவினர் ஈடுபட்டு வந்தனர். அந்த வகையில், … Read more

“எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளரா… அத்தகைய எண்ணம் எனக்கில்லை!" – நிதிஷ் குமார் திட்டவட்டம்

மத்திய அரசு நடத்திய நிதி ஆயோக் கூட்டத்தில், பீகார் முதல்வர் நிதிஷ் குமார் கலந்துகொள்ளாததையடுத்து ஐக்கிய ஜனதா தளம்-பா.ஜ.க கூட்டணியில் விழுந்த விரிசல் இறுதியாக ஆளும் கூட்டணியை முறித்து, புதிய கூட்டணி ஆட்சிக்கு வித்திட்டது. பா.ஜ.க கூட்டணியிலிருந்து வெளியேறி முதல்வர் பதவியை ராஜினாமாசெய்த நிதிஷ் குமார், மகாபந்தன் கூட்டணியில் சேர்ந்து மீண்டும் பீகாரின் முதலமைச்சராகியிருக்கிறார். நிதிஷ் குமார் – தேஜஸ்வி யாதவ் இதன் மூலம், பீகார் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக இருந்த தேஜஸ்வி யாதவும் தற்போது துணை … Read more

`20 ரூபாய் பாக்கி… 22 ஆண்டுக்கால சட்டப்போராட்டம்!' – 120 முறை விசாரணைக்கு ஆஜராகி வென்ற முதியவர்

உத்தரப்பிரதேச மாநிலம், மதுராவைச் சேர்ந்த துங்கநாத் சதுர்வேதி என்பவர் கடந்த 1999-ம் ஆண்டு டிசம்பர் 25-ம் தேதி மதுரா ரயில் நிலையத்துக்குச் சென்று டிக்கெட் எடுத்தார். ரூ.100 கொடுத்து 70 ரூபாய்க்கான டிக்கெட் எடுத்தார். ஆனால் டிக்கெட் கிளார்க் 70 ரூபாய்க்கு பதில் 90 ரூபாய் பிடித்தம் செய்துவிட்டார். அதிகமாகப் பிடித்தம் செய்யப்பட்ட பணத்தை ரயில்வே கிளார்க் திருப்பிக் கொடுக்க முடியாது என்று தெரிவித்துவிட்டார். இது தொடர்பாக ஸ்டேஷன் மாஸ்டரிடமும் சதுர்வேதி பேசிப்பார்த்தார். ஆனால் பணம் திரும்பக் … Read more