“நாட்டிலுள்ள அனைத்து மொழிகளும் தேசிய மொழிகள்தான்..!'' – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்

மராட்டிய மாநிலம், நாக்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ராஷ்டிரிய சுவயம்சேவக் சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்) தலைவர் மோகன் பகவத் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், “பன்முகத்தன்மையை நிர்வகிக்கும் திறமைக்காக ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உற்று பார்க்கிறது. பன்முகத்தன்மையை திறம்பட நிர்வகிப்பதில் இந்தியாவை உலகம் சுட்டிக்காட்டுகிறது. உலகம் முரண்பாடுகளால் நிறைந்தது. நமக்குச் சொல்லப்படாத அல்லது சரியான முறையில் கற்பிக்கப்படாத பல வரலாற்று நிகழ்வுகள் உள்ளன. உதாரணமாக, சம்ஸ்கிருத இலக்கணம் பிறந்த இடம் இந்தியாவில் இல்லை. ஏன் என்று நாம் எப்போதாவது கேள்வி … Read more

நாம் அதிகம் செலவு செய்ய ஜீபே, போன்பே தான் காரணமா?

உட்கார்ந்த இடத்திலிருந்தே நம் அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் அளவுக்கு பணம் இருக்கிறது. இதனாலேயே ஒரு பொருள் தேவையா, தேவை இல்லையா, அது நம் செலவுக்குள் அடங்குமா, அடங்காதா என்பதை யோசிக்காமல் பல தேவையற்ற செலவுகளை செய்கிறோம். ஷாப்பிங் செலவு உண்டியல் வருமானம் இப்படித்தான் செலவு செய்ய வேண்டும்! விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் தினசரி வாழ்க்கையில் “சந்தோஷத்திற்கு பணமா, இல்லை பணத்தால் சந்தோஷமா” என்று தெரியாமல் செலவு செய்கிறோம். இதனாலேயே பல பேர் என்னால் சேமிக்க முடியவில்லை. நிறைய … Read more

சோனு சூட் வீட்டுக்கு உதவி கேட்டு படையெடுக்கும் மக்கள்… அதற்கு அவர் சொன்னதென்ன தெரியுமா?

நடிகர் சோனு சூட் கொரோனா முதல் அலையின்போது பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உதவிகளை செய்து கொடுத்ததன் மூலம், மக்கள் மத்தியில் ஹீரோவார். சொந்த ஊர்களுக்குச் செல்ல முடியாமல் கஷ்டப்பட்டவர்களுக்கு வாகன வசதி, உயிர் காக்கும் ஆக்ஸிஜன் உட்பட அனைத்து உதவிகளையும் சோனு சூட் செய்துகொடுத்தார். கொரோனா காலத்தில் தொடங்கிய சேவையை சோனுசூட் இன்னும் தொடர்ந்துகொண்டிருக்கிறார். அதோடு திரைப்படத்துறையில் நுழையவேண்டும் என்ற நோக்கத்தோடு மும்பை நோக்கி வருபவர்களுக்கு உதவி செய்யப்போவதாகவும் அறிவித்திருக்கிறார். சோனு சூட் அவர்களுக்குப் பயிற்சி கொடுக்கவும் … Read more

விவாத அலையை எழுப்பிய மோடியின் `கறுப்பு' கருத்து… தமிழ்நாட்டு அரசியல்வாதிகளின் ரியாக்‌ஷன் என்ன?

நாடாளுமன்ற வளாகத்தில் ஆகஸ்ட் 5-ம் தேதி விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், பணவீக்கம் ஆகியவற்றை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. இந்தப் போராட்டத்தில் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள், தொண்டர்கள் அனைவரும் கறுப்பு சட்டை அணிந்து கலந்துகொண்டனர். இது நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்தது. இதையடுத்து ஹரியானாவின் பானிபட்டில் நடந்த 900 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 2ஜி எத்தனால் ஆலையைத் திறந்து வைக்கும் நிகழ்வில் பேசிய பிரதமர் மோடி, “அமிர்த பெருவிழா காலகட்டத்தில், நாடு முழுவதும் … Read more

சென்னை: கட்டிபோடப்பட்ட வங்கி ஊழியர்கள்.. கொள்ளையடிக்கப்பட்ட 32 கிலோ தங்க நகைகள்! – அதிர்ச்சி சம்பவம்

சென்னை, அரும்பாக்கம் பகுதியில் உள்ள ரசாக் கார்டன் சாலையில் பெடரல் வங்கியின் தங்க நகைக் கடன் பிரிவின் கிளை செயல்பட்டுவருகிறது. நேற்று மேலாளர், நகை மதிப்பீட்டாளர், காவலாளி உட்பட ஐந்து பேர் பணியிலிருந்ததாகச் சொல்லப்படுகிறது. மதியம் மூன்று மணியளவில் வாடிக்கையாளர் ஒருவர் வங்கிக்கு வந்திருக்கிறார். வெளியில் கதவு மூடப்பட்ட நிலையில் உள்ளே யாரோ ஒருவரின் சத்தம் கேட்டிருக்கிறது. கதவைத் திறந்து பார்க்கும்போது வங்கி ஊழியர்கள் அனைவரும் கட்டப்பட்டிருந்திருக்கின்றனர். இதனையடுத்து காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவமறிந்து அரும்பாக்கம் பகுதி … Read more

சுதந்திர தின சிறப்பு கட்டுரை: நிதிச்சுதந்திரம் அடைய 8 சுலப வழிகள்| #75th Independence Day

இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை (Financial Day) கொண்டாடும் அதே வேளையில் நாட்டு மக்கள் நிதிச் சுதந்திரம் (Financial Independence) அடைவது மூலம்தான் அதன் முழு பலனை அடைய முடியும். அது என்ன நிதிச் சுதந்திரம்? நிதிச் சுதந்திரம் என்பது ஒருவருக்கு வாழ்நாள் முழுக்க தேவையான அனைத்து தேவைகளுக்கான பணம், வருமானமாக அல்லது முதலீடு, செல்வம் மூலம் தொய்வின்றி தடையில்லாமல் வந்துகொண்டிருப்பதாகும். நிதித் சுதந்திரம் அடைய திட்டமிடுபவர்கள் செலவு மற்றும் முதலீட்டில் மற்றவர்களிடமிருந்து வேறுபட்டு கீழ்காணும் 8 … Read more

பங்குச்சந்தை முதலீட்டாளர், ஆகாஷ் ஏர்லைன்ஸ் உரிமையாளர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா மறைந்தார்..!

மும்பை பங்குச் சந்தையில் மிகப் பெரிய முதலீட்டாளர்களில் ஒருவர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா (63). ராகேஷ் எந்தப் பங்குகளை வாங்குகிறார் என்பதை மற்ற முதலீட்டாளர்கள் கவனித்து அதனை வாங்கும் அளவுக்கு பங்குச் சந்தையில் ஜுன்ஜுன்வாலா ஆதிக்கம் செலுத்தி வந்தார். இன்று காலையில், ஜுன்ஜுன்வாலாவிற்கு கடுமையான மாரடைப்பு ஏற்பட்டது. உடனே அவர் பிரீச் கேண்டி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் மருத்துவமனையில் சேர்க்கும் போதே இறந்திருந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். சமீபத்தில்தான் சிறுநீரகம் தொடர்பான பிரச்னைக்கு இதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று … Read more

Aditi Shankar – டாக்டர்; ஆனா, நடிப்புனு வந்துட்டா… – விருமன் படம் குறித்து `அப்பத்தா' வடிவுக்கரசி

1978 -ல் தொடங்கி தற்போது வரை வெள்ளித்திரை, சின்னத்திரை என தொடர்ந்து தம் இருப்பை தக்கவைத்துக் கொண்டிருக்கும் நடிகை வடிவுக்கரசி. தற்போது கார்த்தி நடித்துள்ள `விருமன்’ திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்திலும் நடித்துள்ளார். விருமன் படம் குறித்தும், தம் திரையனுபவங்கள் குறித்தும் நம்மிடையே பகிர்ந்துகொண்டார். `விருமன்’ திரைப்படத்தில் நடித்த அனுபவம் எப்படி இருந்தது? ‘விருமன்’ படத்தில்.. நான் திருமதி செல்வம் சீரியலில் நடித்துக் கொண்டிருந்தபோது, இயக்குநர் முத்தையா என்னிடம் வந்து குட்டிப் புலி கதையை சொன்னார். அதுதான் … Read more

குடிநீர் பானையை தொட்ட பட்டியலின மாணவன்… ஆத்திரத்தில் அடித்துக்கொன்ற ஆசிரியர்! – தீண்டாமை கொடூரம்

நாட்டில் இன்னும் தீண்டாமை கொடுமை இருந்து கொண்டுதான் இருக்கிறது. தமிழ்நாட்டில்கூட பஞ்சாயத்துத் தலைவர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியல் சமூக பிரமுகர்கள் தேசியக்கொடியை ஏற்ற முடியாத கொடுமைகள் அரங்கேறியிருக்கின்றன. ஆனால், வடமாநிலங்களில் இதைவிட நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது. ராஜஸ்தான் மாநிலம், ஜலோரா மாவட்டத்திலுள்ள சுரானா என்ற கிராமத்தில் இருக்கும் தனியார் பள்ளியில் 9 வயது பட்டியலின சிறுவன் ஒருவன் படித்துவந்திருக்கிறான். இந்த நிலையில், அந்த பட்டியலின மாணவன் தாகமெடுத்ததால் பள்ளியிலிருந்த தண்ணீர் பானையைத் தொட்டு தண்ணீர் மொண்டு குடிக்க … Read more

சுதந்திர வேட்கையை ஊட்டிய பெண்கள்… இந்த 75 பேரை மறக்க முடியுமா?

1. டாக்டர் பிச்சைமுத்து அம்மாள்: கதர் விற்பனையையே ஓர் ஆயுதமாகக் கொண்டு ஆங்கிலேயருக்கு எதிராகப் போராடுவதற்காக ‘சகோதரிகள் சங்கம்‘ என்ற அமைப்பு மதுரையில் தொடங்கப்பட்டது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் முப்பது பெண்கள், இரண்டு மணிநேரம் நூல் நூற்பார்கள். அவர்களுக்குக் கல்வியோடு ராட்டின பயிற்சியையும் அளித்தவர் பிச்சைமுத்து அம்மாள். 2. சேலம் அங்கச்சி அம்மாள்: சென்னை, மவுன்ட் ரோடில் இருந்த கர்னல் நீலின் சிலையை அகற்றுவதற்காக தொடங்கப்பட்ட சத்தியாகிரகத்தில், சிலையை உடைப்பதற்காக கழுத்தில் மாலை, கையில் கோடாரியுடன் வீறு கொண்டு … Read more