16.08.22 செவ்வாய்க்கிழமை – Today RasiPalan | Indraya Rasi Palan | August – 16 இன்றைய ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். #இன்றையராசிபலன் #DailyHoroscope​ #Rasipalan​ #Horoscope​ #Raasi​ #Raasipalan Daily Rasi Palan in Tamil, Indraya Rasi Palan in Tamil #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #சந்திராஷ்டமம் #chandrastamam. Source link

சென்னை: அரசுப் பேருந்து மோதி பள்ளி மாணவி பலி – சுதந்திர தின விழா முடிந்து திரும்பும்போது நடந்த சோகம்

சென்னை அஸ்தினாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமி ஸ்ரீ. இவர் குரோம்பேட்டை பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்துவருகிறார். இந்த மாணவி இன்று பள்ளியில் சுதந்திர தின விழாவைக் கொண்டாடிவிட்டு தனது சைக்கிளில் ராஜேந்திர பிரசாத் சாலையில் தனது தோழிகளுடன் சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மாநகரப் பேருந்து மாணவி மீது எதிர்பாராதவிதமாக ஏறி இறங்கியது. விபத்தில் மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், அந்தப் பேருந்து ஓட்டுநர் அங்கிருந்து தப்பித்துவிட்டார். பள்ளி மாணவி அரசுப் … Read more

சென்னை: வங்கிக் கொள்ளையர்கள் சிக்கியது எப்படி? – மாஸ்டர் மைண்ட் முருகனின் பகீர் பின்னணி

சென்னை அரும்பாக்கம், ரசாக் கார்டனில் உள்ள தனியார் வங்கிக் கிளையில் கடந்த 13-ம் தேதி பட்டப்பகலில் காவலாளிக்கு குளிர்பானம் கொடுத்தும், ஊழியர்களைக் கட்டிப்போட்டும் 32 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்தச் சம்பவம் தொடர்பாக வங்கியின் கிளை மேலாளர் சுரேஷ் என்பவர் அரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர். மேலும் சிசிடிவி கேமரா பதிவுகளையும் போலீஸார் ஆய்வுசெய்தனர். இந்தக் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின் … Read more

இந்தியா 75: 4வது பெரிய ரயில்வே; 19 லட்சம் மைல் நீளச் சாலைகள் – போக்குவரத்தில் இந்தியாவின் சாதனைகள்!

சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளைக் கடந்திருக்கிறோம். இந்தச் சந்தர்ப்பத்தில் இந்தியா என்னும் ஜனநாயக நாடு மக்கள் போக்குவரத்து தொடர்பாகச் சாதித்திருக்கும் விஷயங்களை இந்தக் கட்டுரையில் காண்போம்! 1. அமெரிக்காவுக்கு அடுத்து அதிகம் சாலைகள் இருப்பது இந்தியாவில்தான். 19 லட்சம் மைல் நீளத்துக்குச் சாலைகள் உள்ளன. சென்னை – பெங்களூரு ஹைவே 2. டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை ஆகிய நான்கு நகரங்களையும் தேசிய நெடுஞ்சாலைகளால் இணைக்கும் 5,846 நீளத் தங்க நாற்கரச் சாலைப் பணி 2012-ம் ஆண்டு … Read more

கேலோ இந்தியா நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம், வஞ்சிக்கப்படுகிறதா தமிழகம்? தரவுகள் சொல்வது என்ன?

குஜராத்திற்கு 608.37 கோடி, உத்தரப் பிரதேசத்திற்கு 503.02 கோடி, தமிழ்நாட்டிற்கு 33 கோடி, தெலங்கானாவிற்கு 24.11 கோடி – 2022-23ம் ஆண்டிற்கான கேலோ இந்தியா விளையாட்டு மேம்பாட்டிற்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியின் விவரம் இது! ஒரு பக்கம் காமன்வெல்த் போட்டிகள் நடந்து கொண்டிருக்க 2022-23 ஆண்டுக்கான மக்களவை மழைக்கால கூட்டத்தொடர் சமீபத்தில் நடந்து முடிந்தது. அதில் கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதி தொடர்பாகக் கேட்கப்பட்ட கேள்விக்கு விளையாட்டுத் துறை அமைச்சகம் பதிலளித்துள்ளது. அதில் தரப்பட்டுள்ள தகவல்களை … Read more

185 பயணிகளுடன் புறப்படத் தயாரான விமானம்; தோழியின் வாட்ஸ்அப் செய்தியால் 6 மணிநேரம் தாமதம்!

மங்களூரூ விமான நிலையத்திலிருந்து மும்பை செல்ல இண்டிகோ விமானம் ஒன்று தயார் நிலையில் இருந்தது. அந்த சமயம் பார்த்து விமானத்தில் இருந்த சக பயணி ஒருவரின் செல்போனில் “நீ ஒரு வெடிகுண்டு வீசுபவர்” (You Are A Bomber’) என்று வாட்ஸ்அப்பில் வந்த குறுஞ்செய்தியை அருகில் இருந்த பெண் பயணி ஒருவர் தற்செயலாகப் படித்துவிட்டார். விமானம் உடனே அவர் இது தொடர்பாக விமானத்தில் இருந்த அதிகாரிகளிடம் தெரிவித்தார். இதையடுத்து விமானத்தில் உள்ள அனைத்து பயணிகளின் உடைமைகளில் தீவிர … Read more

ஷாருக்கான் பெயரில் ஸ்காலர்ஷிப் – ஆஸ்திரேலியா பல்கலைக்கழகத்தில் படிக்க இந்திய மாணவிகளுக்கு அழைப்பு!

ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்பேர்ன் நகரில் லா ட்ரோப் என்ற பல்கலைக்கழகம் இருக்கிறது. இப்பல்கலைக்கழகம் சார்பாகக் கடந்த 2019ம் ஆண்டு நடிகர் ஷாருக்கானுக்குக் கௌரவ டாக்டர் பட்டம் கொடுக்கப்பட்டது. தொடர்ந்து, ஷாருக்கானின் மனிதாபிமான சேவைகளைப் பாராட்டி அவரது பெயரில் ஸ்காலர்ஷிப் ஒன்றையும் லா ட்ரோப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 2020ம் ஆண்டே இந்த விருது அறிவிக்கப்பட்டது. ஆனால் கொரோனா காரணமாக அது முழு அளவில் அமல்படுத்தப்படவில்லை. ஆனாலும் இந்த ஸ்காலர்ஷிப்பிற்கு இந்தியாவைச் சேர்ந்த கோபிகா என்ற மாணவி தேர்வு செய்யப்பட்டார். … Read more

"சூர்யா – சிறுத்தை சிவா படத்தில் நடிக்கிறேன். ரஜினி, விஜய், அஜித் டார்கெட்!"- ஆர்.கே.சுரேஷ்

ராமநாதபுரத்தில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகரும், சினிமா தயாரிப்பாளருமான ஆர்‌‌.கே.சுரேஷிடம் சினிமா மற்றும் அரசியல் தொடர்பான சில கேள்விகளை முன்வைத்தோம். அதற்கு, உற்சாகத்துடன் பதில் அளித்தார். சினிமா மற்றும் அரசியல் இரண்டிலும் ஒரே நேரத்தில் உங்களால் எப்படிப் பயணிக்க முடிகிறது? “இது ஒரு சவாலான விஷயம்தான். ஒரே நேரத்தில் நடிப்பு மற்றும் தயாரிப்பு என இரண்டிலும் பிசியாகத்தான் இருக்கிறேன். இதற்கிடையே அரசியலிலும் என்னுடைய பங்காற்றி வருகிறேன். வாழ்க்கையில் முன்னேற … Read more

“தாக்கரேயிடம் எஞ்சியிருக்கும் சிலரால் சேனாவை உருவாக்க முடியாது" – பட்னாவிஸ் மனைவி அம்ருதா

மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மனைவி அம்ருதா பிரபல தனியார் வங்கியில் உயர் அதிகாரியாக இருக்கிறார். கடந்த முறை மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சியில் இருந்த போது மகாராஷ்டிரா அரசு ஊழியர்களின் சம்பள கணக்கை தான் வேலை செய்த வங்கியில் திறக்கவேண்டும் என்று நிர்ப்பந்தம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் சர்ச்சையும் ஏற்பட்டது. தற்போது மீண்டும் பட்னாவிஸ் துணை முதல்வராக பதவியேற்று இருக்கிறார். இது குறித்து அம்ருதா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், கூறியதாவது, “எனது கணவர் எப்போதும் … Read more

“தேசப்பற்றை வளர்க்கும் கட்சியாக பாஜக இருக்கிறது” – வானதி சீனிவாசன் பேச்சு

நாட்டின் 75-வது சுதந்திர தினம் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் பா.ஜ.க மகளிர் அணி சார்பில் நேற்று சுதந்திர தின வந்தே மாதரம் பேரணி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பா.ஜ.கவைச்‌ சேர்ந்த எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கலந்து கொண்டார். கோத்தகிரிக்கு வருகை தந்த அவருக்கு படுகர் இன மக்களின் பாரம்பர்ய உடையை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து படுகர் இன பெண்களுடன் நடனமாடினார்‌. வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ … Read more