விகடன்
"பாஜகவின் 'இந்த' செயல் 'Operation Success Patient Dead' நிலைமை" – ஸ்டாலின் பேச்சு
இன்று திருப்பூரில் ’வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ என்கிற பெயரில் திமுக மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு நடந்தது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் கலந்துகொண்டு பேசியதாவது, “கருப்பு சிவப்பு உடைகளில் இவ்வளவு பெண்களை எங்கேயும் பார்த்திருக்கவே முடியாது. பவர்ஃபுல்லாக இருக்கிறது. வுமன் பவரில் திமுக மீண்டும் பவருக்கு வரப்போகிறது என்பது உறுதியாகி உள்ளது. தேர்தல் என்று வந்துவிட்டால், திமுகவின் ஹீரோ ‘தேர்தல் அறிக்கை’. அந்த ஹீரோவையே தயாரிக்கும் பொறுப்பை ஏற்றிருக்கிறார் கனிமொழி. திமுக மாநாடு “எங்கள் வாக்குறுதிகளை … Read more
திண்டுக்கல்: பிரபல நகைக்கடையில் ரூ.1.14 கோடி மதிப்பிலான நகைகளை திருடிய ஊழியர்கள்!
திண்டுக்கல்லில் ஸ்ரீ வாசவி தங்க மாளிகை செயல்பட்டு வருகிறது. இங்கு தணிக்கையாளராக வைஷ்ணவி இருந்து வந்துள்ளார். இவர், கடந்த 02.12.2025ஆம் தேதி தரைத்தளத்தில் உள்ள தங்க நகை (Short Necklace) பிரிவில் உள்ள நகைகளை தணிக்கை செய்ததில் 1010.500 கிராம் எடையுள்ள 45 எண்ணங்கள் (தங்க நகைகள் மதிப்பு ரூ.1,43,23,022) குறைவாக இருந்தது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து உடனடியாக நகை கடையின் துணைப் பொது மேலாளர் ரேணுகேசனிடம் தகவல் தெரிவித்துள்ளார். நகை மதிப்பு குறைவாக உள்ளதாக சொல்லபட்ட … Read more
“எங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றினோமா? 'இவர்கள்' பறைசாற்றுவார்கள்" – மகளிர் மாநாட்டில் கனிமொழி
திருப்பூர், காரணப்பேட்டையில் ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ என்கிற பெயரில் திமுக மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் மக்களவை எம்.பி கனிமொழி பேசியதாவது… “இந்த மேடையில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இந்திய அரசியலமைப்பு சாசனத்தைப் பரிசளித்தோம். காரணம், இந்த மேடையில் முதலமைச்சருக்கு தமிழ்நாட்டை அல்ல… இந்த நாட்டை ஒப்படைத்திருக்கிறோம். கனிமொழி நம்முடைய அரசியலமைப்பு சட்டம் தரக்கூடிய செய்தி – நீதி, சமத்துவம், சுதந்திரம், சகோதரத்துவம். இதை காப்பாற்றக்கூடிய ஒரே முதலமைச்சர் ஸ்டாலின் தான். … Read more
இரண்டே நாள்கள்தான் டைம்; ஆதார்-பான் இணைந்திருக்கிறதா? வெறும் 4 ஸ்டெப்களில் தெரிந்துகொள்ளலாம்|How to?
இன்னும் இரண்டு நாள்கள்தான் உள்ளன. அதற்குள் (டிசம்பர் 31) பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க வேண்டும். இல்லையெனில், பான் செல்லாமல் போய்விடும். பான் செல்லாமல் சென்றுவிட்டால் வருமான வரி தாக்கல் முதல் வருமான வரி ரீஃபண்ட் வரை அனைத்துமே சிக்கல் தான். ஒரு சிலருக்கு, நம்முடைய பான் எண்ணை ஆதாருடன் இணைத்துவிட்டோமா என்கிற சந்தேகம் இருக்கும். அவர்கள் ஆதார் – பான் இணைப்பை எப்படி செக் செய்ய வேண்டும் என்பதைப் பார்க்கலாம். ஆதார் அட்டை – பான் … Read more
பாமக: “என்னை 20 – 30 துண்டுகளாக கூட வெட்டி வீசியிருக்கலாம்" – மேடையில் கண்ணீர்விட்ட ராமதாஸ்
பா.ம.க நிறுவனர் ராமதாஸுக்கும் அவரின் மகன் அன்புமணிக்கும் இடையே மோதல்போக்கு நீடித்து வருகிறது. இதற்கிடையில், சேலத்தில் ராமதாஸ் தலைமையில் பொதுக்குழு கூட்டம் இன்று (டிச. 29) காலை தொடங்கி நடைபெற்றுவருகிறது. இந்தப் பொதுக்குழு கூட்டத்தில் பா.ம.க தலைவராக இருந்த அன்புமணியின் பதவிக்காலம் மே 29-ம் தேதியுடன் முடிவடைந்துவிட்டதாகவும், அதனால், பா.ம.க-வின் தலைவராக ராமதாஸ் தேர்வு செய்யப்பட்டிருப்பதாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் தேர்தல் கூட்டணியை முடிவு செய்யவும் தேர்தலில் வேட்பாளர்களைத் தேர்வு செய்யவும் ராமதாஸுக்கு முழு அதிகாரம் வழங்கி … Read more
"இந்த 28 வருடங்களில் நான் பார்த்த பொக்கிஷம் ரஞ்சித் தான்" – புகழ்ந்து பேசிய மிஷ்கின்
இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் நடத்தும் ‘மார்கழியில் மக்களிசை’ நிகழ்ச்சி கடந்த மூன்று நாள்களாக நடைபெற்றது. அந் தவகையில் நேற்று (டிச. 29) மிஷ்கின் ‘மார்கழியில் மக்களிசை’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருந்தார். இதில் கலந்துகொண்டு பேசிய மிஷ்கின், “இந்த சினிமாவில் 28 வருடங்களாக இருக்கிறேன். பா.ரஞ்சித் ஒவ்வொரு நாளும் இரண்டு சல்லடைகளால் நான் மனிதர்களை சல்லடை போட்டு பார்க்கிறேன். அதில் முதல் சல்லடை ஆளுமை. அந்த ஆளுமை என்ற சல்லடையில் போட்டு சலித்துப் பார்த்ததில் நான் ஆச்சர்யப்பட்டு … Read more
மும்பை: நீதிபதி சந்திரசூட் பெயரில் மோசடி; ஆன்லைன் நீதிமன்றத்தில் விசாரித்து ரூ.3.75 கோடி பறிப்பு
மும்பையைச் சேர்ந்த பெண் ஒருவருக்குக் கடந்த ஆகஸ்ட் மாதம் மர்ம நபர் ஒருவர் போன் செய்து பேசினார். உங்களது பெயர் பணமோசடியில் பயன்படுத்தப்பட்டு இருப்பதாக அந்த நபர் தெரிவித்தார். இதில் தனக்கு தொடர்பு இல்லை என்று அப்பெண் தெரிவித்தார். ஆனால் அப்பெண் மீதான வழக்கு ஆன்லைன் கோர்ட்டில் விசாரிக்கப்படும் என்று அக்கும்பல் தெரிவித்தது. அதன்படி ஆன்லைன் கோர்ட்டில் அக்கும்பல் மும்பை பெண்ணிடம் விசாரணை நடத்தியது. நீதிபதியாக இருந்த நபர் தன்னை நீதிபதி சந்திரசூட் என்று அறிமுகம் செய்து … Read more
BB Tamil 9: "சுயநலமா பேசுற மிகப்பெரிய ஃபிராட்; அவங்க ஒரு கோழை" – திவ்யாவைக் கடுமையாகச் சாடிய விக்ரம்
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 84 நாள்களைக் கடந்துவிட்டது. கடந்த வாரம் நடந்த எவிக்ஷனில் அமித், கனி இருவரும் வெளியேறிருக்கின்றனர். இந்நிலையில் இன்று வெளியான முதல் புரொமோவில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் நடக்கிறது. BB Tamil 9: “எதுக்கு என் மனைவிய இங்க இழுக்குற திவ்யா”- ஆக்ரோசமான விக்ரம் BB Tamil 9 இதில் திவ்யாவை விக்ரம் நாமினேட் செய்கிறார். “நியாயத்துக்காக குரல் கொடுக்கிறேன்னு சொல்லி வெறும் சுயநலமா பேசுற மிகப்பெரிய ஃபிராட் (Fraud). மாற்றுக் … Read more