திருமணத்துக்கு அழைத்தது 70 பேர்; கலந்துகொண்டது ஒரேயொருவர்! – விரக்தியில் வேலையை ராஜினாமாசெய்த பெண்

பொதுவாகவே திருமணம் என்றால் மணமக்கள் தங்களுடன் பணியாற்றும் சக ஊழியர்களை திருமணத்துக்கு அழைப்பது வழக்கமான ஒன்றாகும். அப்படி திருமணத்துக்கு அழைக்கப்படுபவர்கள் வராமல் போகும்பட்சத்தில் அழைத்தவர்களின் மனம் நொந்து போகும். அந்த வகையில் தன் திருமணத்துக்கு அலுவலக நண்பர்கள் வராததால், சீன பெண் ஒருவர் மனவிரக்தியில் வேலையை ராஜினாமா செய்திருக்கிறார். சீனாவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தன்னுடைய திருமணத்துக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பாக அலுவலக நண்பர்கள் 70 பேருக்கு அழைப்பிதழ் கொடுத்திருக்கிறார். “கட்டாயம் வந்துவிடுவோம்..!” என அந்தப் பெண்ணிடம் … Read more

பிரான்ஸ் நாட்டைத் தொடர்ந்து இங்கிலாந்திலும் வறட்சி; நீர்ப் பயன்பாட்டுக்கு பெருகும் கட்டுப்பாடுகள்!

வறட்சி என்ற நிலை வரும்போதே நீரின் அவசியத்தை அறிந்து கொள்கிறோம். ஆடம்பரமாகச் செலவழிக்கும் நீரைப் பார்த்துச் செலவழிக்க வேண்டும் என முற்படுகிறோம். அப்படியான ஒரு சூழ்நிலை தான் தற்போது தென் – கிழக்கு இங்கிலாந்தில் நிலவி வருகிறது. வறட்சி அதாவது, இப்பகுதியில் குளிர்காலத்தில் சராசரிக்கும் அதிகமான மழை பெய்யாமல் பொய்த்ததால், அதிகப்படியான வறட்சி ஏற்படலாம். எனவே லண்டன் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள நீர் பயன்பாடு குறித்த கட்டுப்பாடுகள் புத்தாண்டு வரை தொடர்ந்து நடைமுறையில் … Read more

"அரசுக் கல்லூரியில் படித்து முதல் முயற்சியிலேயே ஐபிஎஸ் ஆனேன்!"- மாணவர்களை ஊக்கப்படுத்திய எஸ்.பி நிஷா

மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் அமைந்திருக்கிறது முதலைமேடுதிட்டு கிராமம். இந்த கிராமத்தைப் பெருவெள்ளம் சூழ்ந்து தற்போது நீர் வடிந்து வருகிறது. இதனால் இங்கு இயங்கிவந்த அரசு உயர்நிலைப் பள்ளிக்கு கடந்த 10 நாள்களாக விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. மயிலாடுதுறை எஸ்.பி இந்த நிலையில், இன்று (16.08.2022) பள்ளி மீண்டும் திறக்கப்பட்டிருக்கிறது. மயிலாடுதுறை மாவட்ட எஸ்.பி நிஷா முதலைமேடுதிட்டு அரசு உயர்நிலைப்பள்ளிக்கு நேரில் வந்து,  மாணவர்களுக்கு தன்னுடைய சொந்த செலவில் ஒவ்வொரு மாணவருக்கும் தலா ரூ.500 மதிப்புள்ள புத்தகம் மற்றும் எழுதுபொருள்கள் அடங்கிய … Read more

`Copy&Paste' பிழையால் அடித்த ஜாக்பாட்! – ஒத்த வீட்டுக்குப் பணம் கட்டியதால் சொந்தமான 84 வீடுகள்

அமெரிக்காவின் நெவேடா மாகாணத்தின் ரேனோ பகுதியில் ஒரு வீட்டை வாங்கவேண்டும் எனப் பெண் ஒருவர் ஆசைப்படுகிறார். அதற்காக சிறிது சிறிதாகப் பணத்தை சேமித்து இறுதியில் 5,94,481 அமெரிக்க டாலர் கொடுத்து குறிப்பிட்ட பகுதியில் ஒரே ஒரு வீடு வாங்குகிறார். இந்த நிலையில், சமீபத்தில் எதார்த்தமாக அந்த வீட்டின் பத்திரப்பதிவை பார்த்தபோது அவருக்கு பெரும் ஆச்சர்யம் காத்திருந்தது. ஒரே ஒரு வீடு வாங்க மட்டும் பணம் கொடுத்த அந்தப் பெண்ணுக்கு அந்தப் பகுதியில் உள்ள 84 வீடுகள், மற்றும் … Read more

செல்போனில் ஆபாச படம் காட்டி, சிறுவர்களுக்குப் பாலியல் தொல்லை! – போக்சோவில் லோடுமேன் கைது

ராமநாதபுரத்தைச் சேர்ந்த அண்ணன்-தம்பியான இரு சிறுவர்கள், அந்தப் பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வருகின்றனர். இந்த நிலையில், அண்மையில் அவர்கள் பள்ளியில் பாலியல் விழிப்புணர்வு தொடர்பான நிகழ்ச்சி நடந்திருக்கிறது. அதில் அவர்களுக்கு ‘குட் டச்’, ‘பேட் டச்’ என்றால் என்ன என்பது குறித்து விளக்கமாக விவரிக்கப்பட்டிருக்கிறது. விழிப்புணர்வு நிகழ்ச்சி முடிந்து அண்ணன்-தம்பி இருவரும் தங்கள் வகுப்புக்குச் சென்றனர். அப்போது இருவரில் தம்பி தன்னுடைய வகுப்பு ஆசிரியரிடம், “லோடுமேன் அண்ணா ஒருவர் செல்போனில் ஆபாசப் படங்களை காட்டி என்னிடமும் … Read more

Cricket: தேசிய ஒப்பந்தத்திலிருந்து விலகிய ட்ரென்ட் போல்ட்; முன்வைக்கும் கேள்விகள் என்ன?

நியூசிலாந்து கிரிக்கெட் அணி கடைசியாக விளையாடிய நான்கு ஐசிசி தொடர்களின் இறுதிப்போட்டிகளிலும் இடம்பிடித்தவர் ட்ரென்ட் போல்ட். அந்தளவுக்கு, அந்த அணியில் போல்ட்டின் பங்கு அளப்பரியது. நடப்பாண்டிற்கான டி20 உலகக்கோப்பைக்கு நியூஸிலாந்து அணி தயாராகி வரும் நிலையில் போல்ட் நியூஸிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் ஒப்பந்தத்திலிருந்து தாமாக முன்வந்து விலகியிருக்கிறார். அவரின் இம்முடிவு அந்நாட்டு கிரிக்கெட் ரசிகர்களுக்கு மட்டுமின்றி உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருக்கும் பேரதிர்ச்சியாக அமைந்துள்ளது. Trent Boult இது குறித்து போல்ட் தெரிவிக்கையில் ” கடந்த 12 … Read more

`விலங்குகளே உஷார்': மனிதர்களிடமிருந்து செல்லப்பிராணிகளுக்குப் பரவும் குரங்கு அம்மை!

விலங்குகளில் இருந்து மனிதர்களுக்கு நோய்த்தொற்று பரவுவதைக் கேள்விப் பட்டிருப்போம். ஆனால் முதன் முறையாக குரங்கு அம்மை நோய்த்தொற்று மனிதரில் இருந்து விலங்குக்குப் பரவியுள்ளது என மருத்துவ இதழ் ஒன்று ஆதாரத்துடன் வெளியிட்டுள்ளது. Italian greyhound பிரான்சில் இரண்டு ஆண்களுடன் 4 வயதான இத்தாலிய கிரேஹவுண்ட் வகை நாய் ஒன்று வசித்து வந்துள்ளது. ஆண்கள் இருவரும் குரங்கு அம்மை நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், இவர்களுடன் வசித்து வந்த நாய்க்கு 12 நாள்கள் கழித்து அதன் அடிவயிற்றில் கொப்புளங்கள் … Read more

ஜம்மு-காஷ்மீர்: ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான பேருந்து… 6 ITBPF வீரர்கள் பலி, பலர் படுகாயம்!

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், அனந்த் நாக் பகுதியில் இந்தோ-திபெத் எல்லை காவல் படை வீரர்கள் பயணம்செய்த பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பேருந்து பிரேக் பிடிக்காமல் பஹல்கம் என்ற இடத்தில் சாலையிலிருந்து விலகி ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாகக் கூறப்படுகிறது. விபத்துக்குள்ளான பேருந்தில் இந்தோ- திபெத் எல்லை காவல் படை வீரர்கள் 39 பேர் பயணித்தனர். ஆற்றில் பேருந்து கவிழ்ந்து 6 வீரர்கள் பலி இந்த விபத்தில் 6 வீரர்கள் உயிரிழந்துவிட்டதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. காயமடைந்த பலர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக … Read more

`ஊழலும், வாரிசு அரசியலும்…' – மீண்டும் பழைய முழக்கத்தை மோடி கையிலெடுப்பது எடுபடுமா?!

“இன்று நாம் எதிர்கொள்ளும் இரண்டு பெரிய சவால்கள், ஒன்று ஊழல், மற்றொன்று உறவுமுறை (நெப்போட்டிசம்). ஊழல், நாட்டைக் கரையான்போல் குழிபறிக்கிறது, அதை எதிர்த்து நாம் போராட வேண்டும். நாட்டில் ஊழலுக்கு எதிராக முழு பலத்துடன் போராட வேண்டும்” – நாட்டின் 76-வது சுதந்திரதினவிழா உரையில் பிரதமர் மோடி பல விஷயங்களைப் பேசியிருந்தாலும், அவர் இறுதியாகக் கூறிய இந்த வார்த்தைகள் அரசியல் அரங்கில் மிகப்பெரிய விவாதப் பொருளாக மாறியிருக்கிறது. தேசியக் கொடியை ஏற்றினார் பிரதமர் மோடி! இந்தியாவின் 76-வது … Read more

“தாக்கரே ஆதரவாளர்கள் காலை உடையுங்கள்; ஜாமீனில் எடுக்கிறேன்” – ஷிண்டே ஆதரவு எம்எல்ஏ பேச்சால் சர்ச்சை

மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, கடந்த ஜூன் இறுதியில் இரண்டாக உடைந்தது. சிவசேனா மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் தனி அணி செயல்பட்டு வருகிறது. தற்போது இரண்டு அணிகளும் தங்களது பிரிவுதான் உண்மையான சிவசேனா என்று கூறிக்கொண்டிருக்கின்றனர். இப்பிரச்னை தேர்தல் கமிஷனுக்கு சென்று இருக்கிறது. மாநிலம் முழுவதும் உள்ள சிவசேனா அலுவலங்களை கைப்பற்றுவதில் இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான போட்டி ஏற்பட்டுள்ளது. இதனால் ஒரு சில இடங்களில் வன்முறையும் ஏற்பட்டுள்ளது. இது குறித்து மும்பை … Read more