`கரியர் பெரிதா, உள்ளாடை பெரிதா எனக்கேட்டு அகற்ற சொன்னார்கள்!’ – நீட் எழுதிய கேரள மாணவிகள் கண்ணீர்

மருத்துவப் படிப்பிக்கான தகுதித் தேர்வான நீட் எக்ஸாம் நேற்று நாடு முழுவதும் நடைபெற்றது. கேரள மாநிலம் கொல்லம் ஆயூர் மார்தோமா இன்ஸ்டிட்யூட் ஆஃப் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி சென்டரில் நடந்த நீட் தேர்வில் தேர்வு எழுத வந்த சில மாணவிகளிடம், ‘பிரா’வை அகற்றிய பின்னரே எக்ஸாம் ஹாலுக்குள் செல்ல அனுமதிக்கப்படும் என்று கூறப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Stop Violence against women (Representational Image) இந்த விதியால் மனதளவில் பாதிப்படைந்த மாணவிகள் அழுதுகொண்டே நீட் தேர்வு எழுதியுள்ளனர். இதுகுறித்து … Read more

நீட் தேர்வு: "என் மகளின் உள்ளாடைகளை அகற்றச் சொன்னார்கள்!"- மாணவியின் தந்தை போலீசில் புகார்

ஜூலை 17ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை), இந்தியா முழுவதும் மருத்துவப் படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடைபெற்றது. இந்நிலையில் கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டத்திலுள்ள ஆயூரைச் சேர்ந்த ‘Marthoma Institute of Information and Technology’ கல்லூரியின் நீட் தேர்வு மையத்தில் மாணவிகளின் உள்ளாடைகளை அகற்ற வற்புறுத்தியதாகவும், உள்ளாடைகளில் உலோக ஹூக் இருப்பதால் அனுமதி மறுக்கப்பட்டதாகவும் பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார். இந்தக் கடுமையான நடவடிக்கைகளின் காரணமாக மன உளைச்சலுக்கு ஆளான தன் … Read more

டெல்லி: ரூ.3,600 கோடி வி.வி.ஐ.பி ஹெலிகாப்டர் ஊழல்; 4 முன்னாள் விமானப்படை அதிகாரிகளுக்கு சம்மன்!

வி.வி.ஐ.பி-களுக்காக ஹெலிகாப்டர் வாங்கிய ரூ.3,600 கோடி ஒப்பந்தத்தில் ஊழல் நடந்திருப்பதாகக் கூறப்பட்ட வழக்கில், இந்திய விமானப்படையைச் சேர்ந்த 4 முன்னாள் அதிகாரிகளுக்கு, ஜூலை 30-ம் நேரில் ஆஜராகுமாறு டெல்லி நீதிமன்றம் சம்மன் அனுப்பியிருக்கிறது. கடந்த 2010-ல், அப்போதிருந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின், பாதுகாப்பு அமைச்சகம், 556.262 மில்லியன் யூரோ மதிப்புள்ள 12 AW101 டூயல் யூஸ் ஹெலிகாப்டர்கள் ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. 4 முன்னாள் இந்திய விமானப்படை அதிகாரிகளுக்கு சம்மன் இந்த … Read more

குடியரசுத் தலைவர் தேர்தல்: “அது என் தனிபட்ட முடிவு!" – பாஜக வேட்பாளருக்கு வாக்களித்த காங்., எம்எல்ஏ

இந்தியக் குடியரசுத் தலைவருக்கான தேர்தல் இன்று நடைபெற்றது. இந்தத் தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக திரௌபதி முர்முவும், எதிர்க்கட்சிகளின் சார்பில் பொதுவேட்பாளராக யஷ்வந்த் சின்ஹாவும் களம் காண்கிறார்கள். குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய பிரதமர் அலுவலகத்தில் வாக்களித்தார். இந்தியா முழுவதும் எம்.எல்.ஏ, எம்.பி-க்கள் வாக்களித்தனர். முர்மு தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எம்.எல்.ஏ, எம்.பி-க்கள் தலைமைச் செயலகத்தில் வாக்களித்தனர். இந்த நிலையில், ஒடிசாவில் காங்கிரஸ் … Read more

`வலிமை'யில் கார்த்திகேயா, AK-61ல் இவரா? அஜித்துடன் மீண்டும் இணையும் `கிரீடம்' நடிகர்!

இப்போது ஐரோப்பிய டூரில் பைக்கில் வலம் வந்து கொண்டிருக்கிறார் அஜித். கடந்த சில ஆண்டுகளாக கொரோனா லாக்டௌன் சூழலினால் வெளிநாடு செல்லாமல் இருந்த அஜித், இப்போது அதற்கான சூழல் இருப்பதால், தன் ரிலாக்ஸ் ட்ரிப்பில் ரெஃப்ரெஷ் ஆகிக்கொண்டிருக்கிறார். அவர் எப்போது சென்னை திரும்புகிறார், ‘AK 61’ படப்பிடிப்பில் எப்போது இணைகிறார் என அவரது வட்டாரத்தில் விசாரித்தோம். AK 61 படப்பூஜையின் போது… போனி கபூர் தயாரிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் ‘ஏகே-61’ படத்தின் படப்பிடிப்பு … Read more

“நான் ஒன்றும் குற்றவாளியல்ல… சிங்கப்பூர் உச்சிமாநாட்டுக்கு செல்ல ஏன் தடை?" – கெஜ்ரிவால் கேள்வி

அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசால், கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பல துறைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் `டெல்லி மாடல்’, பல மாநில முதல்வர்களால் பாராட்டப்பட்டு வருகிறது. இதனை மேலும் ஒருபடி சிறப்பிக்கும் விதமாக, கடந்த ஜூன் மாதத்தில் சிங்கப்பூர் உயர் ஆணையர் சைமன் வோங், சிங்கப்பூரில் ஆகஸ்ட் முதல் வாரத்தில் நடைபெறும் உலக உச்சிமாநாட்டில் கலந்துகொள்ளுமாறு அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அழைப்பு விடுத்திருந்தார். இது தொடர்பாக கெஜ்ரிவால், உலக உச்சிமாநாட்டில் கலந்துகொள்ள அனுமதிவேண்டி, பிரதமர் மோடிக்கு நேற்று கடிதம் … Read more

`புதிய உணவுகளால் நாவுக்கு சுவை; பாரம்பரிய உணவுகளால் உடலுக்கு வலு!' – அமைச்சர் மனோ தங்கராஜ்

கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை சார்பில், நாகர்கோவில் எஸ்.எல்.பி அரசு மேல்நிலைப்பள்ளியில், உணவுத் திருவிழா நடைபெற்றது. ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள சிறப்பு மிக்க உணவு வகைகள் சமைத்து கண்காட்சி நடத்தப்பட்டது. தொடக்க நிகழ்ச்சியில் நாகர்கோவில் மாநகரட்சி மேயர் மகேஷ் பேசுகையில், “குமரி மாவட்டத்தின் சிறப்புமிக்க உணவுகளாக நேந்திரம் சிப்ஸ் மற்றும் மட்டிப்பழத்தைச் சொல்லுவார்கள். மட்டிப்பழத்தை ஓர் அறையில் வைத்தால் வீடு முழுவதும் அதன் வசனை வீசும். உணவில் எப்படி கலப்படம் நடக்கிறது என்பதை … Read more

சின்னசேலம் கலவரம்: “திமுக அரசு வெட்கி தலைகுனிய வேண்டும்!" – எடப்பாடி பழனிசாமி

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள தனியார் பள்ளியில் படித்த மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரம் தமிழ்நாடு முழுக்க பேசுபொருளாக மாறியிருக்கிறது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், “கள்ளக்குறிச்சியில் நடந்த வன்முறை திடீர் கோபத்தில் வெடித்தது அல்ல” எனக் கருத்து தெரிவித்திருக்கின்றனர். இந்த நிலையில், இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “கள்ளக்குறிச்சி சம்பவத்துக்காக தி.மு.க., அரசு வெட்கி தலைகுனிய வேண்டும். பள்ளியின் தாளாளர், செயலாளர் முதல்வர் மற்றும் மற்ற ஆசிரியர்கள் … Read more

புத்தகங்கள்; தெருக்கள்; சான்றிதழ்களில் சாதிப்பெயர் நீக்கம் – சாதி ஒழிப்பு சாத்தியங்களும் சிக்கல்களும்!

சமீபத்தில் தமிழ்நாடு அரசின் பள்ளிப்பாடப் புத்தகங்களிலும், சென்னை தெரு வீதிகளிலும் தலைவர்கள் பெயரின் பின்னொட்டிலிருக்கும் சாதிப்பெயர்கள் நீக்கப்பட்டன. விழுப்புரம் மாவட்டத்தில் புதியதாக 100 வீடுகள் அடங்கிய பெரியார் சமத்துவபுரத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பள்ளி மாணவர்கள் இனி கைகளில் எந்த விதமான கயிறும் கட்டக் கூடாது எனவும் உத்தரவிடப்பட்டிருக்கிறது. திரைப்படத்துறையிலும் சாதி எதிர்ப்பு படங்கள் ஹிட் அடிக்கின்றன, அரசால் அவை பாராட்டப்பட்டு வருகின்றன. அரசு ஒருபுறம் சாதி ஒழிப்புக்காக சில நடவடிக்கைகளை செயல்படுத்திக்கொண்டிருக்க, தனிநபர்களும் `சாதி … Read more

வாசகர்களுக்கு வணக்கம் : இலவசங்கள் வேண்டுமா, வேண்டாமா?

நம் நாட்டில் நீண்டகாலமாக நடைபெற்றுவரும் ‘இலவசங்கள்’ குறித்த விவாதம், தற்போது தீவிரமடைந்திருக்கிறது. ‘இலவசங்களால் நாட்டின் பொருளாதாரம் சீரழிந்துவிடும்’ என்ற கருத்தை சமீபகாலமாக மத்திய அரசு ஒலித்துவருகிறது. உத்தரப் பிரதேசத்தில் புந்தேல்கண்ட் விரைவுச்சாலை அமைக்கும் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் நரேந்திர மோடி, இலவசங்களுக்கு எதிரான கருத்தை முன்வைத்திருக்கிறார். அவர், ‘ஓட்டுகளைப் பெறுவதற்காக இலவசப் பொருட்களை வழங்கும் அரசியல் கலாசாரம் நாட்டின் வளர்ச்சிக்கு ஆபத்தானது’ என்று குறிப்பிட்டிருக்கிறார். சில மாதங்களுக்கு முன்பாக, மத்திய அரசில் முக்கியப் பதவிகளை வகிக்கும் … Read more