அரசு ஒப்பந்ததாரர்களுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை!

தமிழகத்தில் அண்மையில் இரண்டு அரசு ஒப்பந்ததாரர்களின் இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அதாவது, ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சேர்ந்த அரசு ஒப்பந்ததாரரான செய்யாதுரை என்பவர் தனது எஸ்.பி.கே நிறுவனம் மூலம் பெருமளவில் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக புகார் எழுந்தது. இவர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சம்மந்திக்கு நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது. மேலும் அதேபோல் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணியின் நண்பரும், அரசு ஒப்பந்ததாரருமான சந்திரசேகருக்கு தொடர்புடைய இடங்களிலும் வரி ஏய்ப்பு காரணங்களுக்காக … Read more

“பாஜக-வும், ஆர்.எஸ்.எஸ்ஸும் தேசியக் கொடியை ஒருபோதும் மதித்ததில்லை" – அகிலேஷ் யாதவ் சாடல்

உத்தரப்பிரதேச மாநிலத்தின் எதிர்கட்சித்தலைவர் அகிலேஷ் யாதவ், சுதந்திர தினத்தை முன்னிட்டு முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவிப்பு வெளியிட்டதைத்தொடர்ந்து, பா.ஜ.க-வையும் ஆர்.எஸ்.எஸ்-ஸையும் கடுமையாகச் சாடியுள்ளார். முன்னதாக யோகி ஆதித்யநாத், ‘ஹர் கர் திரங்கா’ என்ற முழக்கத்துடன் ஆகஸ்ட் 11 முதல் 17 வரை ‘சுதந்திர வாரம்’ கொண்டாடப்படும் என்று அறிவித்திருந்தார். யோகி ஆதித்யநாத் இந்த நிலையில், இதுதொடர்பாக பா.ஜ.க-வை விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ள அகிலேஷ் யாதவ், “நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் எந்தப் பங்கும் வகிக்காதவர்கள், தற்போது தேசபக்தி என்ற … Read more

பயிரை காக்க வைக்கப்பட்ட மின்வேலி; முயல் வேட்டைக்கு சென்ற மூவர் உயிரிழப்பு – திண்டிவனம் அருகே சோகம்

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ள ராஜபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் பத்மநாபன். இவருடைய நிலத்தை 3 வருடத்திற்கு முன்பு சடகோபன் என்பவர் குத்தகைக்கு பெற்று தொடர்ச்சியாக விவசாயம் செய்து வருகிறார். தற்போது, அந்த நிலத்தில் வேர்கடலை விவசாயம் செய்திருக்கும் சடகோபன், பன்றி தொல்லையில் இருந்து பயிரை காப்பதற்காக நிலத்தை சுற்றி சட்டத்திற்கு புறம்பாக 2 அடி உயரத்தில் காப்பர் கம்பிகளை கொண்டு மின்வேலி அமைத்துள்ளார். மின்சாரம் தாக்கி உயிரிழந்த மூவர் `பண்ணை வீட்டுக் கதவில் மின்சாரம்..!’ – … Read more

பவுண்டட் ஸ்க்ரிப்டும் சினாப்சிஸும் – இயக்குநர்களிடம் தயாரிப்பாளர்கள் கதை கேட்பதில்லையா? உண்மை என்ன?

தமிழ் சினிமா தயாரிப்பாளர்களில் பாதிப்பேர், புதிதாக வரும் இயக்குநர்களிடம் கதைகள் கேட்பதைவிட, அவர்களின் கதைகளை எழுத்து வடிவமாக அதாவது `பவுண்டட் ஸ்கிரிப்ட்’ ஆகவோ அல்லது `கதைச் சுருக்கமாக’வோ கேட்பதைத்தான் விரும்புகிறார்கள். ஒரு கதையை எழுத்தில் புரிய வைக்க முடியாதவர்கள், திரையில் மட்டும் எப்படிப் புரிய வைக்க முடியும் எனத் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, சமீபத்தில் கேட்டிருந்தார். இது குறித்துத் திரையுலகினர் சிலரிடம் பேசினேன். ‘துப்பாக்கி’, ‘கபாலி’, ‘அசுரன்’, ‘கர்ணன்’ உட்படப் பல வெற்றிப்படங்களைத் தயாரித்த எஸ். தாணுவிடம் இருந்து … Read more

சிவசேனா: நாடாளுமன்றத்திலும் பிளவு… ஷிண்டே ஆதரவாளரை மக்களவைத் தலைவராக அங்கீகரித்த சபாநாயகர்!

மகாராஷ்டிரா சிவசேனாவில் பிளவு ஏற்பட்ட நிலையில், பாஜக உதவியுடன் ஆட்சியை பிடித்துள்ளார், சிவசேனாவில் இருந்து எம்.எல்.ஏ.க்களை பிரித்துக்கொண்டு வந்த ஏக்நாத் ஷிண்டே. எனினும் அவரை பொம்மை முதல்வராக்கிவிட்டு பாஜகவை சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்வராக்கப்பட்டு அனைத்து அதிகாரங்களும் அவரிடம் கொடுக்கப்பட்டுள்ளது என்கிறார்கள். ஏக்நாத் ஷிண்டே சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் மத்தியில் பிளவை ஏற்படுத்தியதோடு நிற்காமல் எம்.பி.க்கள் மத்தியிலும் பிளவை ஏற்படுத்தி இருக்கிறார் என்பது தான் இப்போதைய தகவல். ஏக்நாத் ஷிண்டே மக்களவையில் சிவசேனாவிற்கு 19 எம்.பி.க்கள் இருக்கின்றனர். … Read more

“2021-ல் 1.63 லட்சம் இந்தியர்கள் இந்திய குடியுரிமையை துறந்துள்ளனர்" – மத்திய அமைச்சர் தகவல்

மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய், 2021-ம் ஆண்டில் மட்டும் 1,63,370 இந்தியர்கள் இந்திய குடியுரிமையைத் துறந்து, வெளிநாடுகளில் குடியுரிமை பெற்றிருப்பதாக மக்களவையில் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த திங்கள்கிழமை முதல் நடைபெற்று வருகிறது. இதில் எதிர்க்கட்சி எம்.பி-க்கள் பலரும், மத்திய அரசின் பல்வேறு துறைகள் சார்ந்த கேள்விகளை எழுப்பிவருகின்றனர். நாடாளுமன்ற மக்களவை இந்த நிலையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில், பகுஜன் சமாஜ் எம்.பி ஹாஜி ஃபஸ்லுர் ரஹ்மான், 2019 முதல் நடப்பு ஆண்டு வரை … Read more

புது கார் டெலிவரி,கிரகப் பிரவேசம்,சீமந்தம் ; எந்தத் திதியில் என்ன செய்யலாம்? – எளிய வழிகாட்டல்!

திதி என்றதுமே நம்மில் பலருக்கும் முன்னோர் வழிபாடுதான் நினைவுக்கு வரும். முன்னோர் ஆராதனைக்கு மட்டுமல்ல பல்வேறு சுபகாரியங்களுக்கும் புதிய முயற்சிகளுக்கும் உரிய திதி பார்த்து செயல்பட்டால் வெற்றி நிச்சயம்; அதிர்ஷ்ட யோகம் கைகூடும் என்று வழிகாட்டுகின்றன ஞான நூல்கள். அந்த வகையில் எந்தெந்த திதிகளில் என்னென்ன செய்யலாம், எந்தக் காரியத்தைத் தொடங்கலாம் என்பது குறித்த வழிகாட்டல் உங்களுக்காக! பிரம்மன் பிரதமை: இந்த திதிக்கு அதிதேவதை அக்னி. வளர்பிறை மற்றும் தேய்பிறை பிரதமை தினம் வாஸ்து காரியங்கள் செய்வதற்கு … Read more

கள்ளக்குறிச்சி மாணவி மரணம்: `பாஜக-வின் விசாரணை குழு இரண்டு நாள்களில் அமைக்கப்படும்’ – அண்ணாமலை

சேலத்தில் பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் ஒன்பதாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தமிழக பா.ஜ.க-வின் மாநில தலைவர் அண்ணாமலை, ஆடிட்டர் ரமேஷ் படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “தி.மு.கவினர் தேர்தல் வாக்குறுதியில் இரண்டு மாதம் மின் கட்டணம் என்பதை ஒரு மாதமாக கொண்டு வரப்படும், இதனால் மக்களுக்கு வருடத்திற்கு 6,000 ரூபாய் சேமிப்பு ஆகும் என்றெல்லாம் கூறி தற்போது மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. … Read more

‘‘என்னது… நான் சைக்கோவா?’’: எஸ்.ஜே.சூர்யா #AppExclusive

முறுக்கு மீசை, மொசுமொசு தாடி, பரட்டைத் தலை… ஒரு பேச்சுலர் வாழ்வதற்கான அத்தனை அடையாளங்களுடன் கலைந்துகிடக்கிற தி.நகர் ஃப்ளாட்டில் பால்கனியில் நிற்கிறார் எஸ்.ஜே.சூர்யா. ‘‘என்னங்க, கலரிங் தலையைக் காணோம்?’’ என்றால், ‘‘கடவுளே, இது நம்ம புதுப் படம் ‘திருமகன்’ கெட்-அப்புங்க’’ என்று சிரிக்கிறார். ‘‘எந்த வேலைக்குப் போனாலும், அதுல டாப்பா இருக்கணும்னு நினைக்கிறவன் நான். எதுன்னாலும் சரி, அதோட எக்ஸ்ட்ரீம் வரைக்கும் போய்ப் பார்க்க ஆசைப்படுவேன். இப்போ ஹீரோ ஆகியாச்சுல்ல… இதுல டாப் ஸ்டார் ஆகணும்னா, அதுக்கு … Read more

20.07.22 புதன்கிழமை – Today RasiPalan | Indraya Rasi Palan | July -20 இன்றைய ராசிபலன் | Astrology

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். #இன்றையராசிபலன் #DailyHoroscope​ #Rasipalan​ #Horoscope​ #Raasi​ #Raasipalan Daily Rasi Palan in Tamil, Indraya Rasi Palan in Tamil #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #சந்திராஷ்டமம் #chandrastamam. Source link