தம்பதியினர் நல்வாழ்வுக்கும் ஒற்றுமைக்கும் அவசியமான அர்த்தநாரீஸ்வரர் வழிபாடு! கடைப்பிடிப்பது எப்படி?
சிவபெருமானின் மாகேஸ்வர மூர்த்தங்களில் ஒன்று அர்த்தநாரீஸ்வரர் திருக்கோலம். சிவபெருமானும் பார்வதிதேவியும் சரிபாதியினராக இடப்பக்கம் சிவபெருமானும், வலதுபக்கம் சக்தியுமாக விளங்கிடும் அற்புதக்கோலம் இது. தலைசிறந்த சிவபக்தரான பிருங்கி முனிவர் சிவபெருமானைத் தவிர வேறெவரையும் வணங்காதவர். ஈசனும், தேவியும் திருக்கயிலாயத்தில் மகிழ்வுடன் நெருங்கி அமர்ந்திருந்தபோது, அங்குசென்ற பிருங்கி முனிவர் வண்டுரு தாங்கியவராய், அன்னையை விடுத்து ஈசனை மட்டும் துளைத்து வலம் செய்தார். அர்த்தநாரீஸ்வரர் இது கண்டு வெகுண்ட உமையானவள் பிருங்கியின் உடலிலிருந்து சக்தி விலகும்படி சாபமிட்டாள். சக்தியை இழந்த முனிவரின் உடல் தளர்வுற்று வீழ்ந்தது. … Read more