மதுரைத் தெருக்களின் வழியே – 15: பழங்கால திரையரங்க அனுபவங்களுக்கு மாற்றாகுமா நவீன மல்டிபிளக்ஸ்?
தியேட்டரில் திரைப்படத்தைப் பார்த்துவிட்டு, கனவுலகில் மிதக்கிற பெரும்பான்மையினர் ஒருபோதும் அறிந்திராத பெரிய உலகம் விரிந்திருக்கிறது. திரைப்படத்தைத் தியேட்டரில் வெளியிடுவது தொடர்புடைய பல்வேறு வேலைகளில் நூற்றுக்கணக்கானோர் ஈடுபட்டிருக்கின்றனர். சினிமா தயாரிப்பில் தொடர்புடைய நடிக நடிகையர், இயக்குநர், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர் போன்றோரின் ஊதியத்துடன் எவ்விதத்திலும் தொடர்பில்லாத மிகவும் குறைந்த பணத்துக்காகப் பலர் வேலை செய்கின்றனர். மதுரை, மேலக்கோபுரத் தெருவிலிருந்து பிரிகின்ற தானப்ப முதலி தெரு, கீழ அனுமந்தராயன் தெரு போன்ற தெருக்களில் பிலிம் கம்பெனிகள் செயல்படுகின்றன. ஆங்கிலத் திரைப்படங்களை வெளியிடுகிற … Read more