Vijay66: பிரகாஷ்ராஜ்,யோகிபாபு, சம்யுக்தா; விஜய் படத்தின் Cast & Crew இவர்கள்தான்!|Photo Story

வம்சி பைடிபலி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு என பை-லிங்குவலாக உருவாகும் விஜய் 66 படத்தில் ஹீரோயின் ராஷ்மிகா தான். பிதா மகன் படத்தில் தன்னுடைய இயல்பான நடிப்பால் பலரையும் கவர்ந்தவர் சங்கீதா. மகேஷ்பாபுவின் `சரிலேரு நிக்கேவரு’ படத்தில் ராஷ்மிகாவுக்கு அம்மா கேரக்டரில் இவர் நடித்திருந்தார். தமிழ் சினிமாவில் இது யோகி பாபுவின் Era. காமெடி கேரக்டரில் நடித்து வரும் யோகி பாபு விஜய்யின் இந்த படத்தில் இணைகிறார். கில்லி படத்தில் விஜய்க்கு டப் கொடுத்த பிரகாஷ்ராஜ் இந்த … Read more

தேசதுரோக வழக்கு பதிய தற்காலிக தடை – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

தேசதுரோக வழக்கு சில அரசியல் காரணங்களுக்காகவும், பழிவாங்கும் நோக்கத்துடனும் போடப்படுவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதையடுத்து, தேசதுரோக வழக்கில் உள்ள சில சட்டப்பிரிவுகளை நீக்கக்கோரி பொதுநல அமைப்புகள் மற்றும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இந்தியர்களை அடக்குவதற்காக, இந்திய தண்டனைச் சட்டத்தின் 124-ஏ பிரிவை கொண்டு வந்தனர். மத்திய அரசு சமீபத்தில் இந்த சட்டத்தில் உள்ள சில சட்டப்பிரிவுகளை நீக்கலாம் அல்லது சில திருத்தங்களை கொண்டு வரலாம் என மத்திய … Read more

ஆர்.ஏ. புரத்தில் புல்டோசர்; தீக்குளிப்பு… ஸ்டாலின் அரசின் ஓராண்டு நிறைவில் பெருங்கறையா?!

தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. அதிலும், தலைநகர் சென்னையில் பல்வேறு பகுதிகளில் நீர்நிலை ஆக்கிரமிப்பு கட்டங்கள் நீதிமன்ற உத்தரவின் பெயரில் அரசு அதிகாரிகள் அகற்றி வருகின்றார்கள். கடந்த 2011-ம் ஆண்டு சென்னை பக்கிங்ஹாம் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி தனிநபர் ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். ஆக்கிரமிப்பு அகற்றம் அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பக்கிங்ஹாம் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றச் சொல்லி உத்தரவிட்டனர். இந்த … Read more

வேலூர்: அறுந்து கிடந்த மின்கம்பி… கையிலெடுத்த மனநலம் பாதித்த பெண் துடிதுடித்து மரணம்

கடும் வெயில் வாட்டும் வேலூர் மாவட்டத்தில் நேற்று இரவு திடீரென பலத்த காற்றுடன் பரவலாக மழை பெய்தது. காற்றின் தாக்கத்தினால், ஒரு சில இடங்களில் மின்கம்பிகள் அறுந்து விழுந்தன. மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. கே.வி.குப்பம் அருகேயுள்ள மேல்மாயில் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகிலிருக்கும் ஒன்பதாவது தெருவின் சாலையோரத்தில் மின்கம்பி அறுந்து கிடந்தது. இரவு நேரம் என்பதால் அப்பகுதி மக்கள் யாரும் கவனிக்கவில்லை. இன்று விடியற்காலை 4 மணியளவில், அதே பகுதியைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட 50 வயதாகும் … Read more

“ராஜபக்சே குடும்பம் இந்தியாவில் தஞ்சமடைந்ததா?” – இந்திய தூதரகம் சொல்வதென்ன?

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக , அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆகியோர் பதவி விலக வேண்டுமென பொதுமக்கள் வீதியில் இறங்கிப் போராட்டம் நடத்தி வருகின்றனர். கொழும்பில் நடைபெற்ற மிகப்பெரிய போராட்டத்தில் ராஜபக்சே ஆதரவாளர்கள் போராட்டக்காரர்கள் மீது கடுமையான தாக்குதல் நடத்தியதால், பல இடங்களில் கலவரம் பெரிய அளவில் உருவானது. இதையடுத்து இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்தார். ராஜபக்ச குடும்பத்தினரின் வீடுகள் போராட்டக்காரர்களால் தீவைத்து எரிக்கப்பட்டது. இலங்கை … Read more

`ஒண்ணு, நீ இருக்கணும்… இல்லைனா நான் இருக்கணும்’ – கொல்ல முயன்ற கணவனை வெட்டிக் கொன்ற மனைவி

வேலூர் வேலப்பாடி பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் குமரவேல். 60 வயதாகும் இந்த நபர், லாரி ஷெட்டில் வேலை செய்து வந்தார். குமரவேலுவுக்கு கோமதி என்ற மனைவியும், 2 மகள்களும் இருக்கிறார்கள். மூத்த மகள் திருமணமாகி கணவர் பாலாஜியுடன் தாம்பரம் அருகேயுள்ள சிட்லபாக்கத்தில் வசித்து வருகிறார். இளைய மகள் வி.ஐ.டி பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டப்படிப்பு படிக்கிறார். இந்த நிலையில், குமரவேல் தினமும் மாலை நேரத்தில் குடித்துவிட்டு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபட்டிருக்கிறார். அடிக்கடி கத்தியை எடுத்து, மனைவியை … Read more

திருச்சி: மின்கம்பியில் உரசிய விளம்பர பேனர்; 2 உயிர்கள் பலியான சோகம் – அதிர்ச்சி சம்பவம்

திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் அருகே மேனகா நகர் பகுதியில், `வைரம் அப்பார்ட்மென்ட்ஸ்’ என்னும் குடியிருப்பு உள்ளது. 20 வீடுகளைக் கொண்ட இந்த அப்பார்ட்மென்ட்டில் 16 வீடுகள் விற்பனையாகிவிட, 4 வீடுகள் மட்டும் விற்பனையாகாமல் இருந்துள்ளது. இதனைத் தெரியப்படுத்தும் விதமாக வைரம் அப்பார்ட்மென்ட்டின் உரிமையாளர், பிரமாண்டமான பிளக்ஸ் போர்டு ஒன்றினை, அப்பார்ட்மென்ட் முன்பிருந்த டிரான்ஸ்பார்மர் அருகே வைத்திருந்தார். நேற்று முந்தினம் பெய்த மழை மற்றும் காற்றினால் காலை அந்த பேனர் கழன்று சாலையில் சரிந்து விழுந்தது. உயிரிழந்த … Read more

Video: 4 மில்லியன் யூரோ மதிப்பிலான ரஷ்ய பீரங்கி; 18,000 யூரோ மதிப்பிலான லாஞ்சர் மூலம் அழித்த உக்ரைன்

ரஷ்யா – உக்ரைன் இடையே டான்பாஸில் நடந்த சண்டையின் போது ரஷ்யாவின் மிகவும் விலையுயர்ந்த அதிநவீன பீரங்கி உக்ரைனியப் படைகளால் அழிக்கப்பட்டதைக் காட்டும் புதிய காட்சிகள் வெளிவந்துள்ளன. உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சகத்தால் நேற்று வெளியிடப்பட்ட ட்ரோன் காட்சிகள், £4 மில்லியன் (இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 84 மில்லியன் ரூபாய்) மதிப்புள்ள சமீபத்திய தலைமுறை போர் இயந்திரம் T-90M எனப் பெயர் கொண்ட பீரங்கி, கடந்த வாரம் கார்கிவின் வடக்கே உள்ள ஸ்டாரி சால்டிவ் என்ற இடத்தில் போரின் … Read more

உயிர் தப்பும் முயற்சியில் மகிந்த ராஜபக்சே… இலங்கை மக்களின் உச்சக்கட்ட கோபத்தின் பின்புலம் என்ன?!

`ராஜபக்சே அரசு ஆட்சியிலிருந்து பதவி விலக வேண்டும்’ என்று கடந்த ஒரு மாத காலமாகவே இலங்கையின் கால் ஃபேஸ் என்ற இடத்தில் போராட்டம் நடந்துவந்தது. அமைதியாக நடந்துவந்த இந்த மக்கள் போராட்டம், வன்முறையாக மாறியது. மகிந்த ராஜபக்சே தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்ததால், அவரின் ஆதரவாளர் போராட்டக்காரர்களைத் தாக்கினர். இதனால் போராட்டக் களம், வன்முறைக் காடாக மாறியிருக்கிறது. கால் ஃபேஸைத் தாண்டி இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் வன்முறைகள் வெடித்திருக்கின்றன. இலங்கையில் என்ன நடக்கிறது… மகிந்த நாட்டைவிட்டுத் … Read more

LSG v GT: அசைக்கவே முடியாத குஜராத் ராஜ்ஜியம்; லக்னோவை ஊதித்தள்ளி ப்ளேஆஃப்ஸூக்கு முன்னேறிய டைட்டன்ஸ்!

நடப்பு சீசனின் டான்களாக உருவெடுத்து நிற்கும் லக்னோ மற்றும் குஜராத் அணிகள் தங்களுக்குள்ளேயே மோதிக்கொண்டு யார் பெரிதென அடித்துக்காட்டும் போட்டி நடந்து முடிந்திருக்கிறது. குஜராத் அணி ரொம்பவே சுலபமாக 62 ரன்கள் வித்தியாசத்தில் இந்தப் போட்டியை வென்றிருக்கிறது. லக்னோ அணி 145 ரன்களைகூட சேஸ் செய்ய முடியாமல் 82 ரன்களுக்கே ஆல் அவுட் ஆகியிருக்கிறது. Hardik & Rahul புனேவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் குஜராத் அணியின் கேப்டனான ஹர்திக் பாண்டியாவே டாஸை வென்றிருந்தார். முதலில் பேட்டிங் … Read more