பஞ்சாப்: உளவுத்துறை அலுவலகத்தில் குண்டு வெடிப்பு தாக்குதல்! – கெஜ்ரிவால் கண்டனம்

மொஹாலியில் உள்ள பஞ்சாப் காவல்துறையின் உளவுத்துறை அலுவலகத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்புச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ராக்கெட் மூலம் இயக்கப்படும் கையெறி குண்டு வீசப்பட்டதாகவும், அதில் அலுவலகத்தின் ஜன்னல்கள் உடைந்து சேதமடைந்ததாகவும் கூறப்படுகிறது. பஞ்சாப் உளவுத்துறை அலுவலகத்தின் மூன்றாவது மாடியில் இந்த குண்டு வெடிப்புச் சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து பஞ்சாப் போலீஸார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். அதன் காரணமாக அந்தப் பகுதியில் போலீஸார் அதிக அளவில் குவிக்கப்பட்டனர். உயரதிகாரிகள் பலரும் சம்பவ … Read more

பிரதமர் மகிந்த ராஜபக்சே ராஜினாமா – இலங்கையில் நடக்கப்போகும் அரசியல் மாற்றங்கள் என்னென்ன?

இலங்கை பிரதமர் கோத்தபய ராஜபக்சே பொதுமக்களின் கடும் எதிர்ப்புக்கு இடையே நேற்று ராஜினாமா செய்தார். பிரதமர் ராஜினாமா செய்து விட்டதால், இலங்கை நாடாளுமன்றம் கூட்டப்பட்டு புதிய அமைச்சரவை மற்றும் பிரதமரை நாட்டுக்கு தேர்ந்தெடுக்க வேண்டும். புதிய அமைச்சரவை உருவாக்கப்படவில்லையென்றால், அதிபர் கோத்தபய பதவி விலக நேரிடும் எனக் கூறப்படுகிறது. அதிபர், பிரதமர் என இருவரும் பதவியில் இல்லையென்றால் நாடாளுமன்ற சபாநாயகர் நாட்டின் அதிபராகப் பதவியேற்க வேண்டும். சபாநாயகர் அதிபராகப் பதவியேற்கவில்லையெனில், நாடாளுமன்றம் ஏகமானதாக புதிய அதிபரைத் தேர்ந்தெடுக்க … Read more

புலிட்சர் பரிசை வென்ற 28 வயது காஷ்மீர் புகைப்பட பத்திரிகையாளர்; யார் இந்த சன்னா இர்ஷாத் மட்டூ?

பத்திரிகை, புத்தகங்கள், நாடகம் இசை எனப் பல துறைகளில் சிறப்பாகச் செயல்பட்டவர்களுக்கான 2022-ம் ஆண்டுக்கான புலிட்சர் பரிசுப் பெயர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், பத்திரிகைத் துறையில் ராய்ட்டர்ஸ் (Reuters) செய்தி நிறுவனத்தைச் சேர்ந்த அட்னான் அபிடி, சன்னா இர்ஷாத் மட்டூ, அமித் டேவ் மற்றும் மறைந்த டேனிஷ் சித்திக் ஆகியோருக்கு புலிட்சர் பரிசு திங்கள் கிழமை அறிவிக்கப்பட்டது. இந்தியாவில் ஏற்பட்ட கொரோனா நெருக்கடி குறித்து செய்திகள் வெளியிட்டதற்காக இவர்கள் நால்வருக்கும் புலிட்சர் பரிசு வழங்கப்பட உள்ளது. சன்னா … Read more

“மோடி குஜராத்தில் செய்ததைத்தான் இப்போது நாட்டுக்குச் செய்துவருகிறார்!'' – ராகுல் காந்தி தாக்கு

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி குஜராத் சட்டமன்றத் தேர்தலுக்கான பேரணியில் கலந்து கொண்டார். அப்போது அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், “2014- ல் மோடி ஜி இந்தியாவின் பிரதமரானார். அதற்கு முன்னர் அவர் குஜராத் முதல்வராக இருந்தார். பிரதமர் மோடி குஜராத்தில் முதல்வராக இருந்தபோது என்ன பணியை செய்யத் தொடங்கினாரோ, அதையே தற்போது மொத்த இந்தியாவிலும் செய்து வருகிறார். பணக்காரர்களுக்கான இந்தியா, ஏழைகளுக்கான இந்தியா என இரண்டு வகையான இந்தியாவை உருவாக்கி உள்ளார். இதற்கு … Read more

3 சென்ட் நிலத்துடன் 3 பெட்ரூம் வீடு ரூ.2000… கேரளாவை அதிர வைத்த தம்பதியின் பலே கூப்பன் திட்டம்!

வீடு அல்லது நிலம் விற்க வேண்டுமென்றால் நாம் அதற்கான புரோக்கர்களை அணுகுவோம், அல்லது விளம்பரம் கொடுக்கவோ, நமக்கு தெரிந்த நண்பர்களிடம் கூறவோ செய்வோம். அதன் மூலம் வரும் நபர்களிடம் நமக்கு இசைந்த விலை கிடைத்தால் விற்பனை செய்துவிடுவோம். ஆனால் கேரள மாநிலம் திருவனந்தபுரம் வட்டியூர்காவு பகுதியைச் சேர்ந்த அஜோய் – அன்னா தம்பதிகள் தங்கள் வீட்டை அதிக விலைக்கு விற்பனை செய்ய எடுத்த அதிரடி நடவடிக்கை கேரள அரசையே அதிர வைத்திருக்கிறது. திருவனந்தபுரம் வட்டியூர்காவைச் சேர்ந்த அஜோய் … Read more

“குதுப் மினாரை `விஷ்ணு ஸ்தம்பம்' எனப் பெயர் மாற்ற வேண்டும்" – இந்து அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

டெல்லி பா.ஜ.க-வினர், அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசிடம் 40 கிராமங்களின் பெயர்களை மாற்றுமாறு கோரிக்கை வைத்திருந்தது. இது தொடர்பாக டெல்லி பா.ஜ.க தலைவர் ஆதேஷ் குப்தா கடந்த 28-ம் தேதி செய்தியாளர்களிடம், “முகலாயர்காலப் பெயர்கள் கொண்ட 40 கிராமங்களின் பெயர்களை மாற்ற வேண்டும்” எனத் தெரிவித்தார். குதுப் மினார் முன்பு ஆர்ப்பாட்டம் அதைத் தொடர்ந்து, அகில பாரத இந்து மகாசபா மற்றும் சாந்த் மகாசபா தலைவர் சுவாமி சக்ரபாணி, டெல்லியின் பெயரையே `இந்திரபிரஸ்தா’ என்று … Read more

“சிலரைத் திருப்திப்படுத்த அளவுக்கு அதிகமாக ஆன்மிகம் எனத் தம்பட்டம் அடிக்கவேண்டுமா அரசு?" -கீ.வீரமணி

தருமபுரம் ஆதீனத்தை பல்லக்கில் தூக்க தடைவிதிக்கப்பட்டிருந்த நிலையில், பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில், ஆதீனங்களுடன் முதல்வர் ஸ்டாலின் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின்னர், தருமபுரம் ஆதீனத்தின் பட்டினப்பிரவேசத்துக்கு அரசு அனுமதி வழங்கியது. இந்த நிலையில், தமிழ்நாடு அரசின் இத்தகைய நடவடிக்கை குறித்து, திராவிடர் கழகத் தலைவர் கீ.வீரமணி அறிக்கை மூலம் தன் அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கிறார். இது தொடர்பாக வீரமணி வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “மன்னார்குடி ஜீயர் – அமைச்சர்களையும், எம்.எல்.ஏ-க்களையும் நடமாட விட முடியாது என்று பகிரங்கமாக சவால் விடுகின்றார் என்றால், … Read more

வெள்ளை ஈ தாக்குதலால் அழியும் தென்னை விவசாயம்; நாகை விவசாயிகள் புகார்!

தென்னைச்  சாகுபடியில் வெள்ளை நோய் தாக்குதலை தடுத்து நிறுத்த  வேளாண்துறை அதிகாரிகள் முன்வரவில்லையென  விவசாயிகள் வேதனைத் தெரிவிக்கின்றனர். நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா நாலுவேதபதி, புஷ்பவனம், தலைஞாயிறு, தாமரைபுலம் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பல ஆயிரக்கணக்கான ஏக்கரில் தென்னை மரங்கள் இருந்தன. கஜா புயல் தாக்கத்தில் லட்சக்கணக்கில் தென்னை மரங்கள் அழிந்தது போக, தென்னை மரங்கள் கொஞ்சம்தான் எஞ்சியது. கஜா புயலால் பாதித்த தென்னை விவசாயிகளுக்கு சுமார் 3 லட்சம் தென்னங் கன்றுகளை அரசு இலவசமாக … Read more

ஷூட்டிங்கில் டைரக்டர் – டி.ராஜேந்தர்

தன்னுடைய படங்களின் தலைப்பில்  எல்லாம் மறக்காமல் ஒரு இ’யைச் சேர்த்துக் கொள்கிறார் டைரக்டர் டி. ராஜேந்தர்! (‘இரயில் பயணங்களில் ‘இராகம் தேடும் பல்லவி’.)   ” ‘ர’கரத்தில் ஆரம்பமாகும் தமிழ்ச் சொற்களுக்கு முன்னால் ‘இ’ வந்தே தீர வேண்டும் என்ற இலக்கணத்தை நான் பின்பற்றுகிறேன். . ” என்று சொன்ன டைரக்டரின் பெயரில் மட்டும் ‘இ’ கிடையாது! காரணம் கேட்டபோது, “ஆரம்பத்திலிருந்தே மற்றவர்கள் போடாமல் இருந்து விட்டார்கள்!’ என்று பழி சுமத்துகிறார்.   க்ரீம்ஸ் ரோடிலுள்ள ஸ்ரீலங்கா … Read more

தமிழ் சினிமாவில் என்ட்ரியாகும் தோனி… நயன்தாரா நாயகியா?

கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி, தமிழில் படங்களைத் தயாரிக்க உள்ளார். அவர் தயாரிக்கும் புதிய படத்தில் நயன்தாரா நடிக்க உள்ளார் என்ற தகவல் இன்று பரவியிருக்கிறது. இது குறித்து விசாரித்தோம். சென்னை மீதும், தமிழ் சினிமா மீதும் பெரிய மரியாதை வைத்திருக்கிறார் தோனி. தோனியின் தயாரிப்பு நிறுவனத்தை ரஜினியின் முன்னாள் உதவியாளரான சஞ்சய், கவனிக்க உள்ளார் என்றும், முதல் தயாரிப்பாக நயன்தாரா நடிக்கும் படத்தை கொண்டு வர திட்டமிட்டுள்ளதாகவும் சொல்கிறார்கள். இது குறித்து நயன்தாராவிடம் பேசி வருகிறார்கள். நயன்தாரா … Read more