சப் இன்ஸ்பெக்டர் ஆள்சேர்ப்பு ஊழல்: `முதல்வர் பசவராஜ் பதவி விலக வேண்டும்’ – காங்கிரஸ் வலியுறுத்தல்

ஊழல் குற்றச்சாட்டில் கர்நாடக மாநிலத்தின் ஏடிஜிபி அம்ரித் பாலை குற்றப் புலனாய்வுத்துறை சிஐடி காவல்துறையினர் திங்கள்கிழமை கைது செய்துள்ளனர். கர்நாடகாவில் கடந்தாண்டு காவல் உதவி ஆய்வாளர் நியமனத்தில் மோசடி செய்ததாக புகார் எழுந்த நிலையில், இந்த வழக்கை சிஐடி காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இதுகுறித்து கர்நாடக உள்துறை அமைச்சர் ஞானேந்திரா கூறுகையில், “எஸ்.ஐ. நியமன முறைகேட்டில் ஏடிஜிபி அம்ரித் பாலுக்கு எதிராக ஆவணங்கள் சிக்கியுள்ளன. இந்த முறைகேட்டில் யார் ஈடுபட்டாலும் அவர்கள் தப்ப முடியாது” எனத் … Read more

திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயில்: 418 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த கும்பாபிஷேகம்

ஸ்ரீரங்கம் ரங்கநாதர், திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில்களைவிடப் பழைமையான திருத்தலமான திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் 418 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. 108 திவ்ய தேசங்களில் ஒன்றான இக்கோயிலில் 22 அடி நீளத்திற்கு அனந்த சயனத்தில் மேற்கு நோக்கி பெருமாள் காட்சி தருகிறார். அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழாவுக்கான யாகசாலைகள், பூஜைகள் கடந்த 29-ம் தேதி தொடங்கியது. இன்று அதிகாலை 3.30 மணிக்கு யாகசாலைகள், உபதேவன்மார்களுக்கு பிரதிஷ்டை போன்றவை நடைபெற்றன. காலை 6.30 … Read more

ஹெல்மெட் அணிந்து வந்தால் `அல்வா’ – நெல்லை காவல்துறையின் நூதன முயற்சி

தமிழகம் முழுவதும் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனாலும் கூட தலைக்கவசம் அணிவதன் அவசியத்தைப் புரிந்து கொள்ளாமல் ஹெல்மெட் அணியாமல் ஆபத்தான பயணம் செய்வது தொடர்கிறது. அத்தகைய நபர்களுக்கு போலீஸார் அபராதம் விதித்து வருகிறார்கள். வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை வழங்கும் போலீஸார் நெல்லை மாநகர போலீஸார் வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிந்து பயணிக்க வேண்டியது பற்றி தொடர்ச்சியாக விழிப்புஉணர்வு ஏற்படுத்துகிறார்கள். அத்துடன், பள்ளிக் குழந்தைகளிடம் ஹெல்மெட் அணிந்து வாகனங்களை … Read more

ஸ்கெட்ச் வேலுமணிக்கா… எடப்பாடிக்கா? – நமது அம்மா நாளிதழ் வெளியீட்டாளர் ரெய்டு பின்னணி

அதிமுக ஆட்சியில் பவர்புல்லாக வலம் வந்தவர் எஸ்.பி. வேலுமணி. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் வேலுமணி சம்மந்தப்பட்ட இடங்களில் இரண்டு முறை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் ரெய்டு நடத்தியது. கடந்த மாதம் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் பேசிய வேலுமணி, வேலுமணி “வழக்குதானே போட முடியும்… தூக்கிலா போட்டுவிடுவார்கள்?!” – ஐடி விங்குக்கு சிக்னல் கொடுத்த வேலுமணி “திமுகவுக்கு சாவுமணி அடிப்போம்.” என்று கூறியிருந்தார். அதன் பிறகு அவர் தொடர்புள்ள இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை மீண்டும் விசாரணையில் இறங்கியிருந்தது. இந்நிலையில் … Read more

நலமடைந்தார் டி.ராஜேந்தர்; சென்னை திரும்புகிறார் சிம்பு; `பத்து தல' படப்பிடிப்பில் பங்கேற்பு

உயர் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருந்த டி.ராஜேந்தர், சிகிச்சைக்குப்பின் பூரண நலமடைந்திருக்கிறார். சமீபத்தில் திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலி காரணமாக சென்னையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார் டி.ராஜேந்தர். அங்கே அவரைப் பரிசோதித்ததில் அவருக்கு வயிற்றில் சிறிய இரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளதாகவும், அவருக்கு உயர் சிகிச்சை தரவேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தினார்கள். இதையடுத்து அவர் உடல் நலன் கருதியும், உயர் சிகிச்சைக்காகவும் வெளிநாட்டுக்கு அவரை அழைத்துச் செல்ல வேண்டியிருந்ததால், தன் படப்பிடிப்பு வேலைகளையும் தள்ளிவைத்துவிட்டு அமெரிக்காவில் 12 நாள்கள் … Read more

பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களுக்கு `ஆன்லைன்’ பயிற்சி… அனைத்து வகையிலும் தயாராகும் எடப்பாடி!

அ.தி.மு.க-வில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த முறை ஒற்றைத் தலைமை விவகாரம் கொளுந்துவிட்டு எரியும் நிலையில், நடைபெற்ற பொதுக்குழு, ஓ.பன்னீர்செல்வத்தின் வெளிநடப்பில் முடிந்தது. ஆனாலும், ஜூலை 11-ம் தேதி மீண்டும் பொதுக்குழுவைக் கூட்டி, ஒற்றைத் தலைமையை ஏற்க எடப்பாடி பழனிசாமி கங்கணம் கட்டிக் கொண்டு மும்மரமாக பணிகளை மேற்கொள்கிறார். அதிமுக பொதுக்குழு அதற்காக, 16 தீர்மானங்கள் தயாராகி இருக்கிறது. ஏற்கனவே நடந்த பொதுக்குழுவுக்காகப் பல ஸ்வீட் பாக்ஸ்களை இறக்கிய எடப்பாடி இந்த முறை பொதுக்குழு தனக்குச் … Read more

"தி.மு.க-வில் இருந்தாலும் சாமியாராக நடிப்பதில் தவறில்லை!" – `பன்னிகுட்டி' பட அனுபவம் பகிரும் லியோனி

“அடேயப்பா… 25 வருசத்துக்கப்புறம் மீண்டும் சினிமாவுல நடிக்கிறாரு” என்று ஆச்சர்யப்படும் அளவுக்கு ‘பன்னிகுட்டி’ படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்திருக்கிறார் பட்டிமன்ற நடுவரும் தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் தலைவருமான திண்டுக்கல் ஐ.லியோனி. வரும் ஜூலை 8-ம் தேதி படம் ரிலீஸாக இருக்கும் நிலையில் லியோனியை தொடர்புகொண்டோம். அதே கிண்டல் கேலியுடன் ஜாலியாகப் பேசினார். பன்னிகுட்டி சினிமாவில் மீண்டும் ரீ-என்ட்ரி, எப்படி இருக்கிறது? “‘கங்கா கெளரி’ படத்திற்குப்பிறகு நிறைய வாய்ப்புகள் வந்தன. சூழலால் பல படங்களைத் தவறவிட்டுவிட்டேன். இடையில் ‘காதலர் … Read more

`காளி’ படம்: லீனா மணிமேகலைக்கு மிரட்டல் விடுத்த இந்து அமைப்பின் நிர்வாகி `அதிரடி சரஸ்வதி’ கைது

மதுரையைச் சேர்ந்த கவிஞரும், ஆவணப்பட இயக்குநருமான லீனா மணிமேகலை இயக்கத்தில் `காளி’ என்கிற டெலி ஃபிலிம் எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி விமர்சனத்துக்குள்ளானது. காளி காளி போஸ்டர் விவகாரம்: மஹுவா மொய்த்ரா கருத்துக்கு திரிணாமுல் காங்கிரஸ் கண்டனம்! அதில் காளி வேடத்தில் இருக்கும் பெண் புகை பிடிப்பது போல் இருப்பதற்கு, இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. டெல்லி காவல்துறை மணிமேகலை மீது வழக்குப்பதிவும் செய்துள்ளனர். இதையடுத்து, போஸ்டர் குறித்து மணிமேகலை விளக்கம் அளித்திருந்தார். … Read more

"விதைகளை வாங்கிட்டு போனவங்க, இயற்கை விவசாயிகளா வந்து நிக்குறாங்க!" விழுப்புரம் விதைத் திருவிழா..!

நம் முன்னோர்களின் பாரம்பர்ய விவசாயத்தின் சிறப்பை உணர்ந்து, இயற்கை விவசாயத்தில் இன்று இளைஞர்கள் உட்பட பலரும் ஈடுபட்டு வருகின்றனர். பாரம்பர்ய விதைகள் கையில் எடுக்கப்பட்டு தற்சார்பை நோக்கிய பயணம் தொடங்கியுள்ளது. இயற்கை விவசாயம் செய்பவர்களுக்கு வழிகாட்டவும், விதைத் தேர்வு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், இயற்கை விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த தானியங்களை எளிதில் விற்பனை செய்யும் விதமாகவும் விழுப்புரத்தில் உள்ள ஜெயசக்தி மஹாலில் ‘பாரம்பரிய விதை மற்றும் இயற்கை அரிசி திருவிழா’ நடத்தப்பட்டது. விதைகள் `இயற்கைதான் விவசாயம் … Read more