பீஷ்ம பர்வம் விமர்சனம்: `காட்ஃபாதர்' கதைதான்… ஆனால் இது கிளாஸாக எடுக்கப்பட்ட ஒரு மாஸ் சினிமா!

கொச்சியில் இருக்கும் தன் குடும்பத்தினைக் கட்டிக்காக்கும் பொறுப்பு அக்குடும்பத்தின் மூத்த தலைமுறை சகோதரர்களில் ஒருவரான மைக்கேலுக்கு இருக்கிறது. ஆனால், அவருக்கு அடுத்த தலைமுறையோ, மைக்கேலை ஒதுக்கி வைக்க முடிவு செய்கிறது. அதற்குரிய அரசியல் ஆட்டங்களையும் அரங்கேற்றுகிறது. இப்படியான நேரத்தில், மைக்கேலில் கடந்த கால கொலைகளும், அதற்காக பழிவாங்கத் துடிப்பவர்களும் ஒன்று சேர்ந்து துரத்த, மைக்கேல் என்ன செய்கிறார் என்பதை பிரமாண்டமாகச் சொல்கிறது ‘பீஷ்ம பர்வம்’. Bheeshma Parvam அஞ்சூட்டிக்காரனின் குடும்பத்தில் மூத்த மகனாக இல்லையென்றாலும் எல்லா பொறுப்புகளும் … Read more

“நான் இங்குதான் இருக்கிறேன், யாருக்கும் பயப்படமாட்டேன்…" – விமர்சனங்களுக்கு ஜெலன்ஸ்கி பதில்!

உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே 13-வது நாளாகத் தொடர்ந்து போர் நடைபெற்று வருகிறது. நேற்றைய தினம் உக்ரைனின் கார்கிவ் நகரில் உக்ரைன் ராணுவத்துக்கும், ரஷ்ய ராணுவத்துக்கும் இடையே நடந்த தாக்குதலில், ரஷ்ய ராணுவப் படையின் ஜெனரல் மேஜர் விட்டலி ஜெராசிமோவ் உக்ரைன் படையினரால் கொல்லப்பட்டார் என உக்ரைன் ராணுவ புலனாய்வு அமைப்பு அதிகாரபூர்வ தகவல் வெளியிட்டிருக்கிறது. உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி இந்த நிலையில், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி, தன் மீதான விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் விதமாக இன்ஸ்டாகிராமில் … Read more

`நியாயமில்லாத புறக்கணிப்புகள்தான் வருத்தத்தை தருது!' – சாந்தி மாஸ்டர் ஷேரிங்ஸ் #StopExploitingWomen

பெண்களுக்கான வாழ்த்துச் செய்திகள் உலகெங்கும் குவியத் தொடங்கியுள்ளன. காரணம், மார்ச் 8 – சர்வதேச மகளிர் தினம் என்பதால். `இந்தத் தினத்தை ஏன் கொண்டாட வேண்டும்?’ என்ற காரணம் அறிந்து, அதற்கு எல்லா விதத்திலும் நியாயம் சேர்த்தால்தானே, ஒருநாள் சம்பிரதாய நிகழ்வாக இல்லாமல், முக்கியத்துவம் வாய்ந்த இந்தக் கொண்டாட்டத்துக்கான முழுமையான பலனை அறுவடை செய்ய முடியும்? மகளிர் தினம் வீடு, பணியிடம் என எல்லாத் தளங்களிலும் ஆண்களுக்கு நிகராக வேலை செய்தாலும், ஊதியத்திலும் உரிமைகளிலும் பெண்களுக்குக் காலங்காலமாக … Read more

உ.பி தேர்தல்: “எங்களால் முடிந்தவரைப் போராடினோம்; பொறுத்திருந்து பார்ப்போம்!'' – பிரியங்கா காந்தி

உத்தரப்பிரதேசத்தில் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் மொத்தம் 403 தொகுதிகள் இருக்கின்றன. அதிக சட்டமன்றத் தொகுதிகள் மட்டுமின்றி, அதிக மக்களவைத் தொகுதிகளைக்கொண்ட மாநிலம் என்பதால் இந்த மாநிலத் தேர்தல் தேசிய அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா டுடே வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் பா.ஜ.க கூட்டணி – 288 முதல் 326 இடங்கள் வரையும், சமாஜ்வாடி கூட்டணி – 71 முதல் 101 இடங்கள் வரையும், பகுஜன் சமாஜ் … Read more

எதற்கும் துணிந்தவன் படத்துல வில்லனா நடிக்க வாய்ப்பு வந்தது; ஆனால்… – ஆரவ் ஷேரிங்ஸ்!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசன் டைட்டில் வின்னர் ஆரவ், அப்போது செம சென்சேஷன். அடுத்தடுத்து படங்களில் கமிட்டானவர், பிறகு, சைலன்ட் மோடுக்கு போய்விட்டார். தற்போது, இவர் சிக்ஸ் பேக் வைத்திருக்கும் போட்டோ இணையத்தில் செம வைரல். திருமண வாழ்க்கை, அடுத்தடுத்த படங்கள், சிக்ஸ் பேக் கொண்ட சேஞ்ச் ஓவர் என அவரிடம் பேசியதிலிருந்து… “இப்போ என்னென்ன படங்கள் கைவசம் இருக்கு?” ”பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு, ‘மார்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்’, ‘ராஜ பீமா’ ரெண்டு படங்கள் … Read more

Heart of Stone: நெட்ஃபிளிக்ஸ் படத்தில் `வொண்டர் வுமன்' கல் கடோட்டோடு இணையும் அலியா பட்!

அலியா பட் நடித்த ‘கங்குபாய் கத்தியவாடி’ திரையரங்குகளில் வெளியான ஒரு வாரத்தில் 100 கோடி வசூல் செய்து சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது. ‘கண்ணா, லட்டு தின்ன ஆசையா’ எனச் சந்தோஷத்தில் இருந்தவருக்கு ‘கண்ணா இன்னொரு லட்டு’ என நெட்ஃபிளிக்ஸ் அறிவிப்பு வந்திருக்கிறது. அலியா ஹாலிவுட்டிற்கு போகிறார் என்கிற செய்தியோடு அவரது ரசிகர்களுக்கு இன்றைய நாள் தொடங்கியிருக்கிறது. அதுவும் நம்ம ‘வொண்டர் உமன்’ ஹீரோயின் கல் கடோட் (Gal Gadot) மற்றும் ’50 ஷேட்ஸ்’ புகழ் ஜேமி … Read more

புத்தம் புது காப்பி #MyVikatan

“சிந்தனைத் திறன்” (அ) “கற்பனைத்திறன்” என்று சொல்லப்படுகிற ஆறாம் அறிவின் தனித்தன்மை கொண்டே மனிதன் உலகத்தின் சக்தி வாய்ந்த உயிரினமாக மாறி ஆணவம் கொண்டான். ஆனால் இன்றோ ஒரு நுண்ணுயிரி அந்த ஆணவத்தை உடைத்திருக்கிறது அதே ஆறாம் அறிவின் துணைகொண்டு இதையும் கடந்து இன்னும் பல கடந்து மனித குலம் நிலைபெறப்போவதில் துளியும் ஐயமில்லை. இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் இத்தனை சக்தி வாய்ந்த ஆறாம் அறிவை மனிதனுக்கு தந்த இயற்கை அதற்குத் தீனி போடுவதற்கு வெறும் 2 … Read more

“ரஷ்ய ராணுவ ஜெனரல் மேஜர் கொல்லப்பட்டார்!” – உக்ரைன் ராணுவ புலனாய்வு அமைப்பு

உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே பிப்ரவரி 24-ம் தேதி தொடங்கிய போர் 13-வது நாளாக இன்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் ரஷ்யா, உக்ரைன் என இரு தரப்பிலிருந்தும் பல்வேறு ராணுவ வீரர்கள், பொதுமக்கள் உயிரிழப்புகள் பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும் பல லட்சம் உக்ரேனியர்கள் சொந்த நாட்டிலிருந்து அண்டை நாடுகளுக்கு அகதிகளாகப் படையெடுத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில், உக்ரைன் கார்கிவ் நகரில் ரஷ்யப் படைக்கும், உக்ரைன் படைக்கும் நடைபெற்ற தாக்குதல்களில் ரஷ்ய ராணுவத்தின் மூத்த அதிகாரி ஒருவர் … Read more

இங்கு எல்லாமே தொடர்கதைதானே! #MyVikatan

இந்தப் பூவுலகில் நடப்பவை அனைத்தும் தொடர்கதைதான்!பிறப்பு இனிப்பான தொடர்கதை என்றால், இறப்பு ஏற்றுக் கொள்ள முடியாத தொடர்கதை.இரண்டிற்கும் இடைப்பட்ட வாழ்க்கையோ,வளமும்,வம்பும் நிரம்பிய வலிய தொடர்கதை.காயும் வெயிலும்,கனன்றடிக்கும் மழையும்,வளரும் பிறையும்,தேயும் நிலவும் என்றென்றும் இயற்கையின்தொடர்கதை.தாலாட்டும் தென்றலும்,தகிக்க வைக்கும் புயலும்,கால் தழுவும் கடலும்,கட்டிட உயர ஆழிப்பேரலைகளும் (சுனாமி)தொடர்ந்து வருபவைதாமே. உறவும்-பிரிவும், இன்பமும்-துன்பமும்,காதலும்-சோகமும்,மேடும்-பள்ளமும், இப்படி, இங்கே எல்லாமே தொடர்கதைதான்.வாழ்க்கையின் சூட்சுமத்தை அறிந்து கொண்டவர்கள் இந்தத் தொடர்கதைகளோடு ஒன்றிப் போய்த்தான் ஆக வேண்டும்.அப்புறம் அவள் மட்டும் சிறுகதையாகச் சிறிது நேரத்தில் முடிந்து போய்விடுவாளா…என்ன? … Read more