இதுவரை இல்லாத அளவு; 2020-2021 நிதியாண்டில் இந்திய பாதுகாப்புத் துறையின் ஏற்றுமதி எவ்வளவு தெரியுமா?

இந்தியாவில் பாதுகாப்புத் துறை சார்ந்த தொழில்நுட்பங்கள், சாதனங்களை பொதுத்துறை மற்றும் தனியார்த்துறை நிறுவனங்கள் உற்பத்தி செய்து வருகின்றன. அவற்றை இந்தியா மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருவாய் ஈட்டி வருகிறது. இந்த நிலையில், 2021-2022 ஆண்டுக்கான வருவாயைப் பாதுகாப்பு உற்பத்தித் துறையின் (Dept Of Defence production) செயலாளர்களான அஜய்குமார், சஞ்சய் ஜாஜூ இருவரும் வெளியிட்டிருக்கின்றனர். அதன்படி 2021-2022 நிதியாண்டில் இந்தியாவின் மொத்த ஏற்றுமதி 13,000 கோடி ரூபாய் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இது கடந்த நிதியாண்டுகளை விடவும் … Read more

“ஸ்டாலின் போன்றவர்கள் சாதி, மத அடிப்படையில் அரசியல் செய்கிறார்கள்..!" – பாஜக எம்.பி சாடல்

பா.ஜ.க தலைவரும், தெலங்கானவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினருமான கே.லட்சுமணன், `ஸ்டாலின் போன்றவர்கள் சாதி, மத அடிப்படையிலான அரசியல் செய்கிறார்கள்’ என விமர்சனம் செய்துள்ளார். திருவண்ணாமலையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், “ஆன்மிகத்தின் பெயரால் இன்றைக்கு அவர்கள் அரசியல் நடத்த முயற்சிக்கிறார்கள். ஆன்மிகத்தின் பெயரால் மனிதர்களைச் சாதியால், மதத்தால் பிளவு படுத்துபவர்களுக்குத்தான் நாங்கள் எதிரிகள்” என பா.ஜ.க-வை மறைமுகமாகச் சாடியிருந்தார். பாஜக எம்.பி கே.லட்சுமணன் இந்த நிலையில் ஸ்டாலினின் இத்தகைய பேச்சுக்கு, பா.ஜ.க எம்.பி கே.லட்சுமணன் … Read more

ஹைதராபாத்: பண்ணைவீட்டு ஊழியரின் மனைவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை – தலைமறைவான போலீஸ் அதிகாரிக்கு வலை

ஹைதராபாத்தில், தனது பண்ணை வீட்டில் வேலைபார்த்து வந்தவரின் மனைவியை, போலீஸ் அதிகாரி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில், பாதிக்கப்பட்ட பெண்ணால் குற்றம்சாட்டப்பட்ட, மேற்கு மாரெட்பள்ளி காவல் நிலைய அதிகாரி கே.நாகேஷ்வர் ராவ்மீது, பாலியல் வன்கொடுமை, குற்றவியல் அத்துமீறல், கொலை முயற்சி, கடத்தல் மற்றும் ஆயுதச் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது. அதுமட்டுமல்லாமல், போலீஸ் கமிஷனர் சி.வி.ஆனந்தால், நாகேஷ்வர் ராவை இடைநீக்கம் செய்திருக்கிறார். விசாரணை … Read more

உயிரைப் பறிக்குமா உடலுறவு? – காமத்துக்கு மரியாதை S 2 E 28

‘நாக்பூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், காதலியுடன் உறவு கொள்ளும்போது ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு உயிரிழந்து விட்டார்’ என்ற சமீபத்திய செய்தி, பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்திவிட்டது. இறந்தவர் இளைஞர் என்பதால், ‘உயிரைப் பறிக்குமா உடலுறவு’ என்று இளவயதினர் அதிர்ந்து போயிருக்கிறார்கள். நடுத்தர வயதுக்காரர்களும், இதயத்தில் பிரச்னை இருப்பவர்களும் ‘இப்படி நிகழாமல் இருக்க என்ன செய்வது’ என்று தவித்துக் கொண்டிருக்கிறார்கள். உடலுறவின்போது ஹார்ட் அட்டாக் வருவதற்கு யாருக்கெல்லாம் வாய்ப்பிருக்கிறது; அவர்கள் எப்படியெல்லாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பது பற்றி விளக்கமாகப் … Read more

துப்பாக்கி தயாரிப்பது குடிசைத் தொழில்; நீலகிரியை பதறவைத்த பலே ஆசாமியை தீவிரமாக தேடும் போலீஸ்!

நீலகிரி மாவட்டம், கூடலூர் மற்றும் பந்தலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சட்டவிரோத துப்பாக்கி மற்றும் தோட்டாக்களின் புழக்கம் அதிகரித்திருக்கிறது. இது குறித்து நமது ஜூனியர் விகடனில் தொடர்ந்து செய்தி வெளியிட்டு வருகிறோம். இந்த நிலையில், சட்டவிரோத துப்பாக்கிப் புழக்கத்தை கண்டறியும் வகையில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட பொருள்கள் பந்தலூர் பகுதியைச் சேர்ந்த ஒருவர் வீட்டிலேயே துப்பாக்கி தயாரித்து விற்பனை செய்து வருவதாக காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்திருக்கிறது. அந்தத் தகவலின் அடிப்படையில் அந்தப் … Read more

தேனி: சட்டவிரோத பி.எஸ்.என்.எல் இணைப்பு; வெளிநாடுகளுக்குப் பேசிய கேரள இளைஞர்கள் கைது!

தேனியில் பி.எஸ்.என்.எல் அலுவலக இளநிலை தொலை தொடர்பு அலுவலராகப் பணியாற்றி வருபவர் முனியாண்டி. இவர், பி.எஸ்.என்.எல் அலைகற்றையை சட்ட விரோதமாகப் பயன்படுத்தி சிலர் வெளிநாடுகளுக்குப் பேசி வருவதாக தேனி டவுன் போலீஸாரிடம் புகார் அளித்தார். அதனடிப்படையில் தேனி போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணையைத் தொடங்கினர். தேனி நகர் காவல் நிலையம் கேரள மாநிலம், மலப்புரத்தைச் சேர்ந்த சஜீர் (40) ஆண்டிபட்டியிலும், முகமது ஆசிப் (27) தேனியிலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளனர். … Read more

Rajamouli: வெட்கப்பட்ட பிரபாஸ்; ராஜமௌலி கேட்ட கேள்வி- நினைவுகள் பகிரும் ஸ்வர்ணா மாஸ்டர்

இயக்குநர் பாரதிராஜாவின் `பசும்பொன்’ படத்தின் மூலம் டான்ஸ் மாஸ்டராக அறிமுகமானவர் ஸ்வர்ணா. தொடர்ந்து விஜயகாந்தின் `தமிழ்ச்செல்வன்’, சத்யராஜின் `வில்லாதி வில்லன்’ உள்பட 50-க்கும் மேற்பட்ட படங்கள் தமிழிலும் தெலுங்கு உள்பட இதர மொழிகளில் மொத்தம் 900 படங்களுக்கு மேல் நடன இயக்குநராக அசத்திய ஸ்வர்ணா, இப்போது முதல் முறையாக `நாதிரு தின்னா’ என்ற படத்தை இயக்கியுள்ளார். ” தெலுங்கில் சேகர் கம்முலா, வம்சி, ‘வானம்’ க்ரிஷ் உள்பட பல டாப் இயக்குநர்களின் படங்களுக்கு நடனம் அமைச்சிருக்கேன். என்னோட … Read more

விஜயேந்திர பிரசாத் வைரல் வீடியோ – நேரு, காந்தி குறித்து அவர் சொல்வதில் எதெல்லாம் உண்மை? | Factcheck

வரலாறு என்பது நிகழ்ந்த ஒன்று. ஆனால், வரலாற்றை அடுத்த தலைமுறைக்குச் சொல்வதில் அவர் அவர்க்கு ஓர் ஆதாயம் எப்போதும் உண்டு. பட்டேலுக்கு அவர் விரும்பும் அதிகாரத்தை வழங்கியிருந்தால், ஒருங்கிணைப்பட்ட இந்தியாவை அவர் எப்போதோ உருவாக்கியிருப்பார் என்கிற செய்தி கடந்த சில ஆண்டுகளாகவே வெவ்வேறு வடிவங்களில் இணையத்தில் வட்டம் அடித்துக்கொண்டிருக்கின்றன. இப்போது, மீண்டும் அதைப் பேசுபொருளாக்கியிருக்கிறார் பாரதப் பிரதமர் மோடியால் நியமன எம்.பி-யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் பிரமாண்டப் படங்களின் கதையாசிரியர் விஜயேந்திர பிரசாத். இவர் இயக்குநர் ராஜமௌலியின் தந்தை. RRR … Read more

ENG vs IND: `பவர்ப்ளே தாக்குதல்' – டி20 உலகக்கோப்பைக்கான இந்தியாவின் புதிய யுக்தி இதுதானா?

அட்டாக்கிங் பேட்டிங், பௌலிங் மூலம் கடந்த ஆட்டத்தில் பவர்பிளேவிலேயே இங்கிலாந்து அணியை நிலைகுலையச் செய்திருந்தது இந்தியா. விக்கெட்டுகள் ஒருபுறம் சரிந்தாலும் அதைச் சற்றும் பொருட்படுத்தாமல் தொடக்கம் முதலே அதிரடியை வெளிப்படுத்தினர் இந்திய பேட்டர்கள். ஹர்திக் பாண்டியா அரை சதத்தை அடித்திருந்தாலும் அவருக்கு முன் வந்த அனைவரின் அதிரடியாலும் ஆட்டத்தின் போக்கு இந்தியாவின் கையிலேயே இருக்குமாறு பார்த்து கொண்டனர். ENG vs IND நேற்றைய ஆட்டத்தில் அணியின் முன்னணி வீரர்களான விராட் கோலி, ரிஷப் பண்ட் அணிக்குத் திரும்புவதால் … Read more