தேனி: சட்டவிரோத பி.எஸ்.என்.எல் இணைப்பு; வெளிநாடுகளுக்குப் பேசிய கேரள இளைஞர்கள் கைது!
தேனியில் பி.எஸ்.என்.எல் அலுவலக இளநிலை தொலை தொடர்பு அலுவலராகப் பணியாற்றி வருபவர் முனியாண்டி. இவர், பி.எஸ்.என்.எல் அலைகற்றையை சட்ட விரோதமாகப் பயன்படுத்தி சிலர் வெளிநாடுகளுக்குப் பேசி வருவதாக தேனி டவுன் போலீஸாரிடம் புகார் அளித்தார். அதனடிப்படையில் தேனி போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணையைத் தொடங்கினர். தேனி நகர் காவல் நிலையம் கேரள மாநிலம், மலப்புரத்தைச் சேர்ந்த சஜீர் (40) ஆண்டிபட்டியிலும், முகமது ஆசிப் (27) தேனியிலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளனர். … Read more