உடல் எடையைக் குறைக்கும் பேலியோ டயட்; சாப்பிட வேண்டிய, தவிர்க்க வேண்டிய உணவுகள் என்னென்ன?

Doctor (Representational Image) கற்கால உணவுகளை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டதே பேலியோ டயட். இதை `பேலியோலித்திக் டயட் (Paleolithic Diet)’, `கற்கால டயட்’ என்றும் அழைப்பர். பேலியோ டயட்டை மருத்துவரின் ஆலோசனை பெற்ற பின் தொடங்குவது நல்லது. vegetable நன்மைகள்: ஃபிரெஷ்ஷான காய்கறிகளைச் சாப்பிடுவதால், நோய் எதிர்ப்பு சக்தி மேம்படும். செடிகளில் உள்ள ஆன்டி-இன்ஃப்ளேமேட்டரி எனும் நன்மை தரும் பொருள் கிடைக்கும். Mutton `ரெட் மீட்’ எனப்படும் ஆடு, மாட்டிறைச்சி உண்பதால், உடலில் அதிகளவு இரும்புச்சத்து சேரும். … Read more

"அரசியலுக்கு வந்தா பொய்யெல்லாம் பேசணும்பா…"- `டான்' டிரெய்லர் வசனமும் உதயநிதியின் ரியாக்ஷனும்!

சிவகார்த்திகேயன் நடித்த டான் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சிபிசக்கரவர்த்தி இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் தயாரிப்பு லைகா நிறுவனம். தமிழ்நாட்டில் திரையரங்குகளில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பில் வெளியிட இருக்கிறார்கள். உதயநிதி ஸ்டாலின் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு பேசினார். அதில், “சினிமாவோட டான் சிவா. ஆனால் படத்தின் டிரெய்லரில் ஒரு டயலாக் வச்சு இருக்கீங்க…” எனச் சிரித்தார். டிரெய்லரின் கடைசியில் … Read more

கணவன் இறந்ததை மறைத்த மாமியார்… கதறி அழுத மனைவி – 16 நாள்கள் கழித்து தோண்டியெடுக்கப்பட்ட சடலம்!

வேலூர் சாய்நாதபுரம் பொன்னியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சோமசேகர். இவருக்குத் திருமணமாகி, பெண் குழந்தை உள்ள நிலையில், அவர் மனைவி விவகாரத்து செய்துவிட்டார். பெண் குழந்தையை அவர் மனைவியே அழைத்துச் சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால், தனியாக வசித்துவந்த சோமசேகர், சென்னை பாடி புதுநகரைச் சேர்ந்த 40 வயதாகும் பேபிகலா என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார். இவர்களின் திருமணம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஒன்பதாம் தேதி சென்னை முகப்பேரிலுள்ள கோயிலில் நடைபெற்றது. இரண்டாவது மனைவி ஏற்கெனவே … Read more

Doctor Strange in the Multiverse of Madness: நிறைய கேமியோ, பிரமாண்ட VFX, இது மார்வெல் ஹாரர் சினிமா!

இவ்வுலகத்தில் இழந்த வாழ்க்கையை வெவ்வேறு பிரபஞ்சங்களில் தேடும் தாய்ப்பாசம் நிறைந்த ஹாரர், ஆக்ஷன், சூப்பர்ஹீரோ சினிமா இந்த Doctor Strange in the Multiverse of Madness. மல்டிவெர்ஸ் பயணம் மேற்கொள்ளும் அளவுக்குச் சக்தி படைத்த அமெரிக்கா சாவெஷ் என்ற டீனேஜ் பெண்ணை விதவிதமான மான்ஸ்டர்களும், டீமன்களும் துரத்துகின்றன. அவரைக் காக்க நினைக்கும் டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் இந்த விஷயத்தில் விட்ச்கிராஃப்ட் என்னும் மாயமந்திரங்கள் இருப்பதை உணர்ந்து அதில் கைதேர்ந்தவரான வாண்டாவின் உதவியைக் கேட்கிறார். அடுத்தடுத்த திருப்பங்கள் அமெரிக்கா … Read more

விசித்திரன் விமர்சனம்: அதே இயக்குநர்தான்… ஆனால், மலையாள `ஜோசப்' படத்தின் தமிழ் வெர்ஷன் ஈர்க்கிறதா?

மலையாளத்தில் வரவேற்பையும் சர்ச்சைகளையும் ஒருசேர ஈர்த்த ‘ஜோசப்’ படத்தின் தமிழ் ரீமேக்தான் இந்த ‘விசித்திரன்’. தமிழிலும் அதே அளவிற்கு ஈர்க்கிறதா? காவல்துறையிலிருந்து வி.ஆர்.எஸ் வாங்கிவிட்டு தினமும் குடியே கதி எனக் கிடக்கிறார் மாயன். ஆனாலும் அவரின் புத்திக்கூர்மையை நம்பும் காவல்துறை, சிக்கலான க்ரைம் வழக்குகளுக்கு மாயனின் உதவியை நாடுகிறது. ஒருநாள் திடீரென மாயனின் முன்னாள் மனைவி விபத்தில் மூளைச்சாவு அடைந்துவிட, ஏற்கெனவே இருளில் கிடக்கும் மாயனின் வாழ்க்கை மேலும் சூன்யமாகிறது. பிடிப்புகளற்றுத் திரியும் அவருக்கு திடீரென பொறிதட்டுகிறது. … Read more

பிரதமர் பெயரைப் பயன்படுத்தி விதிமீறும் வேந்தர்? -காந்தி கிராமிய பல்கலைக்கழக சர்ச்சையும், விளக்கமும்!

கிராமப்புற வளர்ச்சிக்காகவும் காந்திய சிந்தனைகளை கற்பிப்பதற்கும் இந்தியாவில் உருவான முதல் பல்கலைக்கழகம், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காந்தி கிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகம்.இந்தப் பல்கலைக்கழகம் 1976-ம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வருகிறது. 70 பேராசிரியர்கள், 140 அலுவலக ஊழியர்கள், 4,000 மாணவர்கள் எனப் பிரமாண்டமாக இருக்கும் பல்கலைக்கழகத்தின் வேந்தர் கே.எம்.அண்ணாமலையின் மீதுதான் தற்போது சர்ச்சை கிளம்பியிருக்கிறது. அண்ணாமலை “ `நான் பிரதமருக்கு வேண்டியவர்’ என்று சொல்லிக் கொண்டு விதிகளை மீறி பல்கலைக்கழக நிதியில் கோடிக்கணக்கில் ஆடம்பர செலவுகள் செய்கிறார். … Read more

ஜூன் 9ல் நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமணம்? – திருப்பதியில் நடந்த ஏற்பாடு!

கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக லிவிங் டு கெதர் ரிலேசன்ஷிப்பில் இருக்கும் நடிகை நயன்தாராவும், இயக்குநர் விக்னேஷ் சிவனும் ஜூன் 9-ம் தேதி திருப்பதியில் திருமணம் செய்து கொள்ளப்போவதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. தொடர்ந்து, ஆன்மிகப் பயணத்திலிருக்கும் இந்த ஜோடி, கடந்த வாரம் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற திரைப்படம் ரிலீசானபோது, திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர். இந்த நிலையில், நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் இன்று காலை மீண்டும் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்தனர். … Read more

சேலம்: குற்றவியல் நீதிபதி வீட்டில் கைவரிசை காட்டிய கொள்ளையர்கள் – போலீஸ் தீவிர விசாரணை

சேலம், வாழப்பாடி குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாகச் சமீபத்தில் நியமிக்கப்பட்டவர் சன்மதி. இவர் வாழப்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரே உள்ள தெருவில், வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கியுள்ளார். இந்த நிலையில், நேற்று முன் தினம் இரவு வீட்டைப் பூட்டிவிட்டு, உறவினர்கள் வீட்டுக்குச் சென்றுவிட்டு, நேற்று காலை திரும்பியிருக்கிறார். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்ட நிலையில் இருந்ததைப் பார்த்துப் பதறிப்போய் வீட்டுக்குள் சென்று பார்த்திருக்கிறார். கொள்ளை அப்போது வீட்டில் வைக்கப்பட்டிருந்த பணம், லேப்டாப் உள்ளிட்டவை திருடு போயிருந்தது தெரியவந்தது. … Read more

வடமாநிலங்களைப் பீதியில் வைத்திருக்கும் புல்டோசர், ஒலிபெருக்கி – தமிழகத்தில் தாக்கத்தை ஏற்படுத்துமா?!

பிப்ரவரி மாதம் இறுதியில் கர்நாடகா மாநிலம் உடுப்பியில் உள்ள குந்தாப்பூர் அரசு பியூ கல்லூரியில், ஹிஜாப் அணிந்து வந்த 6 இஸ்லாமிய மாணவிகள் வகுப்பறைக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், `ஹிஜாப் அணிவது எங்கள் உரிமை’ எனக் கூறி அந்த 6 மாணவிகளும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இஸ்லாமிய மாணவர்களுக்கு எதிராகச் சில இந்து அமைப்பினர், மாணவர்களுக்கு காவி துண்டு அணிந்து போராட்டத்தில் ஈடுபட வைத்ததால் விவகாரம் பெரிதானது. சிறிது நாட்களிலேயே இந்தப் பிரச்னை கர்நாடகாவில் சட்டம் … Read more

திண்டுக்கல்லை ஆட்டிப்படைத்த குட்டைக்கொம்பன் யானை; 100வது ஆபரேஷனில் வெற்றி பெறுமா கும்கி யானை கலீம்?

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல், தாண்டிக்குடி, ஒட்டன்சத்திரம், கன்னிவாடி, சிறுமலை, வத்தலக்குண்டு, நத்தம் ஆகிய பகுதிகளில் யானைகள் நடமாட்டம் அதிகம் உண்டு. இந்த வனப்பகுதிக்குள் யானை மட்டுமல்லாது சிறுத்தை, மான், காட்டுப்பன்றி, காட்டுமாடு உள்ளிட்ட வனவிலங்குகளும் அதிகமாக வசிக்கின்றன. பொதுவாக, கோடைக்காலங்களில் வறட்சி மற்றும் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக வனவிலங்குகள் மலை அடிவாரங்களில் உள்ள விளைநிலங்களிலும் குடியிருப்புகளிலும் புகும். இதில் வனவிலங்கு-மனித எதிர்கொள்ளல் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மலையடிவாரப் பகுதிகளில் அதிகம் நடந்து வருகிறது. குளிக்கும் சின்னத்தம்பி திண்டுக்கல்: … Read more