பரபரப்பு அரசியலில் புயலைக் கிளப்பிய தருமபுரம் பட்டினப்பிரவேசம்! – நடந்தது என்ன?

தமிழக அரசியலில் பரபரப்பு புயலைக் கிளப்பியிருக்கிறது தருமபுரம் ஆதீன பட்டினப் பிரவேசத் தடை! ஒருபக்கம் `இந்து மத சாஸ்திரங்களில் அரசு தலையிடக்கூடாது, இது எங்கள் பாரம்பர்யம்” எனத் தடையை எதிர்த்தும், மறுபக்கம் `மனித உரிமை மீறலைத் தடுத்து, மாற்றத்தை ஏற்கச் செய்யும் முயற்சி’ எனப் பாராட்டியும் கருத்து மோதல்கள் வெடித்திருக்கின்றன. இந்த நிலையில், பட்டினப்பிரவேசத்தில் இதுவரை என்ன நடந்தது என்பதைப் பார்ப்போம்! தருமபுரம் ஆதீனம் “பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சியை முதல்வரே நேரில் வந்து தலைமை தாங்கி நடத்த … Read more

சர்ச்சைப் பேச்சு; கைதுசெய்யப்பட்ட பாஜக பிரமுகர்… பரபரப்பான டெல்லி – என்ன நடந்தது?

பாரதிய ஜனதா கட்சியின் யுவ மோர்ச்சா (BJYM) அமைப்பின், தேசிய செயலாளர் தஜிந்தர் பால் சிங் பக்கா வெறுப்பைத் தூண்டும்விதமான அறிக்கைகளை வெளியிட்டதாகவும், வதந்திகளைப் பரப்பி, மத மற்றும் வகுப்புவாதக் கலவரங்களை உருவாக்க முயன்றதாக… ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் சன்னி சிங் புகார் அளித்திருந்தார். இது தொடர்பாக, கடந்த மாதம் அவர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டிருந்தது. தஜிந்தர் பால் சிங் பக்கா அதைத் தொடர்ந்து, கடந்த மார்ச் 30 அன்று `தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்தைப் … Read more

கிரிப்டோ கரன்சியில் ₹1.44 கோடியை இழந்த காவலர்கள்; அவசர சுற்றறிக்கை அனுப்பிய கமிஷனர்!

வேலியே பயிரை மேய்ந்தது எனச் சொல்லி கேட்டிருக்கிறோம். ஆனால் இங்கு பயிர் வேலியை பதம் பார்த்திருக்கிறது. கிரிப்டோ கரன்சியில் காவல் துறையைச் சேர்ந்த இரண்டு அதிகாரிகள் ரூ.1.44 கோடி முதலீடு செய்து ஏமாற்றம் அடைந்திருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து `இனி சமூக வலைதள விளம்பரங்களை நம்பி கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்ய வேண்டாம்’ என்று போலீசாருக்கு சென்னை கமிஷனர் சங்கர் ஜிவால் அவசர சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறார். அதில், “கடந்த 10.9.2021 அன்று காவலர் ஒருவர் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் ஈடுபட்டு தான் … Read more

திமுக அமைச்சரவை ஓராண்டு நிறைவு… சாதித்தது யார்?சறுக்கியது யார்?!

2021 மே மாதம் 7-ம் தேதி ஆளுநர் மாளிகையில், ‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்’ என்றவாறு முதலமைச்சராகப் பொறுப்பேற்றார் ஸ்டாலின். அப்போது, ஸ்டாலினுடன் 33 அமைச்சர்களும் பொறுப்பேற்றனர். ஓராண்டு வரை எந்த ஒரு அமைச்சரும் நீக்கப்படவில்லை. ராஜகண்ணப்பன் உள்ளிட்டச் சிலரின் இலாக்காக்கள் மட்டும் மாற்றப்பட்டது. இந்நிலையில், ஓராண்டு ஆட்சியில் எந்தெந்த அமைச்சர்கள் தங்களது துறைகளில் சாதித்தனர்? சறுக்கினார்கள்? என்பது குறித்து தமிழக அரசியலைக் கூர்ந்து கவனித்துவரும் அரசியல் பார்வையாளர் ஒருவரிடம் பேசினோம். “அமைச்சர்கள் சாதித்தனர் என்று … Read more

கோலிவுட் ஸ்பைடர்: சமந்தாவின் பாலிவுட், ஹாலிவுட் பிளான்; வெற்றிமாறனுக்கு நோ சொன்னாரா டாப்ஸி?!

* இனி தமிழில் கவனம் செலுத்த முடிவு செய்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ். மலையாளத்தில் டொவினோ தாமஸுடன் நடித்த ‘வாஷி’, தெலுங்கில் மகேஷ் பாபுவுடன் நடித்த ‘சர்க்காரு வாரி பாதா’ ஆகிய படங்கள் ரிலீஸூக்கு வெயிட்டிங். தவிர, தெலுங்கில் சிரஞ்சீவி, நானியின் படங்கள் மட்டுமே கைவசம் வைத்திருக்கும் கீர்த்தி, தமிழில் உதயநிதியின் ‘மாமன்னன்’ படம் தவிர, ஜெயம் ரவியுடன் ஒரு படத்திலும் நடிக்க உள்ளார். அதை ‘இரும்புத்திரை’ படத்திற்கு வசனம் எழுதிய ஆண்டனி இயக்குகிறார். கீர்த்தி சுரேஷ் * … Read more

“அரசியல்வாதி என்னவேண்டுமானாலும் பேசலாம், ஆன்மிகவாதி பேசக்கூடாதா..?!" – மதுரை ஆதீனம்

கன்னியாகுமரி மாவட்டம், பாலபள்ளம் முத்துமாரி அம்மன் கோயில் கும்பாபிஷேக நிகழ்சியில் மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிய பரமாச்சாரிய சுவாமிகள் கலந்து கொண்டு ஆசியுரை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மதுரை ஆதீனம், “மஹா சிவராத்திரிக்கு இந்தியா முழுவதும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கும் போது, தமிழகத்தில் விடுமுறை அளிக்கபடாதது குறித்து பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைக்கப்படும். தமிழக அரசிடம் கேட்டாலும் பயன் இல்லை. மதுரை ஆதீனம் சங்கபரிவார் இயக்கங்களுக்கு சாமரம் வீசுவதாக நாஞ்சில் சம்பத் கூறியிருப்பதாக … Read more

How to: தங்க, வைர நகைகளை சுத்தம்செய்வது எப்படி? How to clean gold, diamond jewels at home?

தங்க நகைகளின் மீது ஆர்வம் இல்லாதவர்கள் மிகக் குறைவு. ஆனால், அதன் பராமரிப்பின் மீதும் ஆர்வம் கொள்வது அவசியமானது. நகையை சுத்தம் செய்வது என்பது, நகை பராமரிப்பில் முக்கியமான வழிமுறை. Gold தங்கம் மட்டுமல்லாமல், வைர நகைகளையும் வீட்டிலேயே எளிய முறையில் சுத்தம் செய்வதற்கான வழிகாட்டல்கள் இங்கே. தங்க நகைகள் * வளையல்கள், செயின்கள், மோதிரங்கள், காதணிகள் போன்ற தங்க நகைகளை சுத்தம் செய்ய, வெதுவெதுப்பான நீரை எடுத்துக்கொள்ளவும். அதில் இரண்டு சொட்டு பேபி ஷாம்பூ சேர்த்துக் … Read more

வரலாற்றில் மட்டுமே இருந்திருக்க வேண்டிய டாடா ஸ்டீல், வரலாறு படைத்த கதை தெரியுமா! – திருப்புமுனை – 10

டாடா குழுமத்தில் டி.சி.எஸ் நிறுவனத்துக்கு மிக முக்கியமான பங்கு உண்டு. மிக அதிகமான சந்தை மதிப்பு கொண்ட அந்த நிறுவனம் சம்பாதிக்கும் லாபத்தைவிட அதிகமாக லாபம் ஈட்டி, இப்போது பிசினஸ் மீடியாக்களின் பேசுபொருளாக மாறியிருக்கிறது டாடா ஸ்டீல். கடந்த நிதி ஆண்டில் டி.சி.எஸ் நிறுவனம் ரூ.38,449 கோடி அளவுக்கு லாபம் ஈட்டியது. இதே நிதி ஆண்டில் டாடா ஸ்டீல் நிறுவனம் ரூ.41,749 கோடி அளவுக்கு லாபம் ஈட்டி, டி.சி.எஸ்.யைப் பின்னுக்குத் தள்ளி இருக்கிறது. அதே போல, நிறுவனத்தின் … Read more

சாணிக் காயிதம்: இது கீர்த்தி சுரேஷின் `ரத்தம், ரணம், ரௌத்திரம்'… ஆனா, பிரச்னை என்னன்னா?

தன்னையும், தன் குடும்பத்தையும் நிர்கதியாக்கியவர்களை பொன்னி எப்படி பழி வாங்குகிறார் என்பதுதான் அமேசான் ப்ரைமில் வெளியாகியிருக்கும் சாணிக் காயிதம் படத்தின் ஒன்லைன். சாதிய அடுக்குமுறை சூழலில் வாழ்கிறார்கள் மாரியும், பொன்னியும். தேர்தலில் நிற்க தன் உடன் இருப்பவர்களை நிர்பந்தப்படுத்தும் மாரியை ஆதிக்க சாதியினர் வெறுக்கிறார்கள். காவல்துறையில் பணியாற்றும் மாரியின் மனைவியான பொன்னி குறித்தும் தகாத வார்த்தைகள் வந்து விழ, பேச்சு அடிதடியாக மாறுகிறது. சாதி வெறியாட்டத்தில் குடிசை கொளுத்தப்படுகிறது, பொன்னி பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்படுகிறார். காவல்துறையிலும், நீதித்துறையிலும் … Read more

வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளராகும் முதல் ஆப்பிரிக்க – அமெரிக்க பெண் கரீன் ஜீன்-பியர்!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது புதிய செய்தி தொடர்பாளராக கரீன் ஜீன்-பியரை (Karine Jean-Pierre) நியமித்துள்ளார். ஆப்பிரிக்க – அமெரிக்கரை, அதிலும் தன் பாலீர்ப்புடைய பெண் செய்தித் தொடர்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது இதுவே முதல்முறை. 44 வயதான ஜீன்-பியர், பைடன் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து முதன்மை துணைச்செய்திச் செயலாளராகப் பணிபுரிந்து வந்தார். Karine Jean-Pierre அமெரிக்க வணிகத்துறையின் துணை செயலாளர் பதவி; இந்திய – அமெரிக்கர் அருண் வெங்கடராமனை நியமித்த பைடன்! முதன்மை துணைச்செய்திச் செயலாளராகப் பணிபுரிந்த 43 … Read more