ஓராண்டு ஆட்சி: திமுக அரசு Vs மத்திய பாஜக அரசு! – மினி ஃபிளாஷ்பேக்

தமிழகத்தில் எதிர்க்கட்சியாக இருந்தபோதே, பா.ஜ.க எதிர்ப்பு அரசியலில் தி.மு.க தீவிரமாக இருந்தது. பிரதமர் மோடி தமிழகம் வந்தபோதெல்லாம் #GoBackModi ஹேஷ்டேக்கை தி.மு.க-வினரும் தி.மு.க ஆதரவாளர்களும் சமூகவலைதளங்களில் ட்ரெண்டு செய்துவந்து, எதிர்ப்பைத் தெரிவித்தனர். பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி அமலாக்கம், இந்தி விவகாரம், தேசிய கல்விக் கொள்கை போன்ற பல பிரச்னைகளில் மத்திய அரசை தி.மு.க கடுமையாக விமர்சித்துவந்தது. ஸ்டாலின், மோடி மத்திய பா.ஜ.க அரசை கடுமையாக எதிர்த்துவரும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் … Read more

உத்தரகாண்ட்: திருமண ஊர்வலத்தின்போது பட்டியலினத்தவரை குதிரையிலிருந்து இறக்கிய மாற்றுச் சமூகத்தினர்?

உத்தரகாண்ட் மாநிலம், அல்மோரா மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் கடந்த திங்கள்கிழமை தர்ஷன் லால் என்பவரின் மகனுக்கு திருமணம் நடைபெற்றது. தர்ஷன் லால் பட்டியலினத்தவர் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், திருமணத்தின்போது மணமகன் குதிரையில் அமர்த்தப்பட்டு ஊர்வலமாக ஊருக்கு அழைத்து வரப்பட்டிருக்கிறார். அப்போது, மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த சிலர், மணமகன் பட்டியலினத்தவர் என்பதால் அவரை குதிரையிலிருந்து கீழே இறங்கிச் சொல்லி கட்டாயப்படுத்தியிதாகக் கூறப்படுகிறது. அதற்கு மணமகன் வீட்டார் மறுப்பு தெரிவிக்கவே, “குதிரையிலிருந்து கீழே இறங்கவில்லை என்றால், மணமகனை … Read more

37 ஆண்டு கால நடிப்பு; தமிழ் சினிமாவின் மாயன்; நாசர் பிறந்தநாள் பகிர்வு!

படிப்பில் கோட்டைவிட்ட எளிய குடும்பத்தைச் சேர்ந்த இளைஞன். தன் குடும்பத்தைப் பொருளாதார ரீதியாக வலுப்படுத்திக்கொள்ள நினைக்கிறார். விமானத்துறையில் இன்டர்ன் ஆக ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. அந்த வேலையை நிரந்தரமாக்கி வாழ்வில் முன்னேறிவிட முடிவெடுக்கிறார். அப்போது, அவன் தந்தையின் ஆசைக்காக அந்த வேலையைக் கைவிட்டு நடிப்புப் பயிற்சிக்காக கல்லூரியில் சேர்கிறார். ஒல்லியான தேகம், நீண்ட மூக்கு, பெரிய நெற்றி என தன் மீதான தாழ்வுணர்ச்சி அவருக்கு அதிகமிருந்தது. நடிகன் என்பவன் திடகாத்திரமான உடல், பொலிவான முகம் கொண்டிருக்கவேண்டுமென அப்போது … Read more

மேற்கு வங்க அரசுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்த காங்கிரஸ் – சொந்த கட்சிக்கு எதிராக ஆஜரான ப.சிதம்பரம்!

மேற்கு வங்கத்தில், மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸின் ஆட்சி நடைபெற்றுவருகிறது. 2024-ல்  நடைபெறவிருக்கும் லோக் சபா தேர்தலில் காங்கிரஸ் விரும்பினால் கூட்டணி வைக்கலாம் என்று மம்தா கூறினாலும், மேற்கு வங்கத்தில் என்னவோ காங்கிரஸும், திரிணாமுல் காங்கிரஸும் எதிரெதிராகவே இருக்கின்றன. இதற்கேற்றார் போல, மேற்கு வங்க அரசு பால் நிறுவனத்தின் பங்குகளைத் தனியார் நிறுவனத்துக்கு விற்பதை எதிர்த்து, அந்த மாநில காங்கிரஸ் தலைவர் ஆதிர் சவுத்ரி வழக்குத் தொடுத்திருந்தார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் … Read more

மக்களவை சபாநாயகர் பெயரில் போலி வாட்ஸ்அப் – சைபர் க்ரைம் குற்றவாளிகளுடன் தொடர்புடைய 3 பேர் கைது

மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, சில குற்றவாளிகள் தம்முடைய பெயரில் போலி வாட்ஸ்அப் கணக்கை உருவாக்கி, எம்.பி-க்களுக்கு மெசேஜ் அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறியதையடுத்து, சைபர் க்ரைம் குற்றவாளிகளுடன் தொடர்புடைய 3 பேரை ஒடிசா போலீஸ் கைது செய்துள்ளது. இது தொடர்பாக ஓம் பிர்லா, “சில குற்றவாளிகள் என் பெயரில், என் புகைப்படத்துடன் கூடிய போலி வாட்ஸ்அப் கணக்கை உருவாக்கி, எம்.பி-க்கள் மற்றும் பிறருக்கு 7862092008, 9480918183 9439073870 ஆகிய எண்களிலிருந்து மெசேஜ் அனுப்பியுள்ளனர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் … Read more

Doctor Vikatan: மாதத்தில் இருமுறை பீரியட்ஸ்; PCOD பிரச்னையும் உள்ளது; தீர்வு உண்டா?

என் வயது 30, நான் இரண்டு குழந்தைகளின் தாய். எனக்கு டீன்ஏஜில் இருந்தே பிசிஓடி (PCOD) பிரச்னை இருந்தது. பிசிஓடிக்கும், குழந்தையின்மைக்கும் சிகிச்சை எடுத்துக்கொண்ட பிறகுதான் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த பிறகும் முறையற்ற மாதவிடாய் இருந்தது. நான் எந்த மருத்துவ சிகிச்சையும் எடுத்துக்கொள்ளவில்லை. இரவில் 2 பேரீச்சம் பழம் மட்டும் எடுத்துக்கொண்டேன். கடந்த இரு மாதங்களாக எனக்கு பாலாடை போல் வெள்ளைப் படுதல் இருந்தது. கடந்த இரண்டு மாதங்களில் எனக்கு 3 முறை மாதவிடாய் வந்தது. … Read more

ஸ்ரீராமாநுஜ ஜயந்தி: நாராயணனுக்கு மட்டும் அல்ல, எல்லோருடைய அன்புக்கும் உரியவர் ஸ்ரீராமாநுஜர்!

1017-ம் ஆண்டு, சித்திரை திருவாதிரை நன்னாளில் ஸ்ரீபெரும்புதூரில் ஆசூரி கேசவசோமயாஜி – காந்திமதி தம்பதியருக்கு ஸ்ரீஆதிசேஷனின் அம்சமாக, திருமாலவன் அருளால், ஒரு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையின் மாமா பெரிய திருமலைநம்பி. அந்தக் குழந்தைக்கு ராமாநுஜன் என்றும், லக்ஷ்மணனின் பெயரான இளையாழ்வார் என்றும் பெயர் சூட்டினார். அந்தக் குழந்தையே வைஷ்ணவத்தின் மாபெரும் ஞானியாக, 1000 ஆண்டுகளுக்கு முன்பே சாதி ஏற்றத்தாழ்வுகளை புரட்டித் தள்ளிய மாபெரும் புரட்சியாளராக உருவெடுத்தது. சிறுவயது முதலே ஸ்ரீராமாநுஜரின் வைஷ்ணவப் பற்றும் பக்தியும் தீவிரமாக … Read more

குடியரசுத் தலைவர் தேர்தல்: பாஜக-வுக்கு டஃப் கொடுக்க, எதிர்க்கட்சிகளின் வியூகம் என்ன?!

தற்போதைய குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் வரும் ஜூலை மாதம் முடிவடைகிறது. எனவே, புதிய குடியரசுத்தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் விரைவில் நடைபெறவிருக்கிறது. அதைத் தொடர்ந்து, குடியரசு துணைத் தலைவர் தேர்தலும் நடைபெறவிருக்கிறது. 2017-ம் ஆண்டு நடைபெற்ற குடியரசுத்தலைவர் தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக நிறுத்தப்பட்டு, வெற்றிபெற்றவர் ராம்நாத் கோவிந்த். இரண்டாவது முறையாக அவருக்கு பா.ஜ.க வாய்ப்பு கொடுக்குமா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. வெங்கய்ய நாயுடு காரணம், `75 வயதைக் கடந்தவர்களுக்கு அரசுப் பதவிகள் … Read more

RCB v CSK: தீக்ஷனா, கான்வே ஆட்டம் வீண், சொதப்பிய சிஎஸ்கே; பிளேஆஃப் கனவை நோக்கி நகரும் பெங்களூரு!

முதல் பாதியில், பவர்பிளேயை விந்தையான விஷயங்களின் குவியலாகவே இரு அணிகளும் ஆக்கியிருந்தன. புதுப்பந்தில் நன்றாக ஸ்விங் செய்யும் தீபக் சஹார் இல்லாத குறையை முகேஷ் செளத்ரி ஓரளவு தீர்த்துக் கொண்டுள்ளார். இத்தொடரில் அவர் எடுத்திருந்த 11-ல் 8 விக்கெட்டுகள், பவர் பிளேயிலேயே வந்திருக்கின்றன. இருப்பினும், அவரது சுமையைப் பங்கிட்டுக் கொள்ள இத்தொடரில் பெரும்பாலும் பவர்பிளேயில் இரண்டு ஓவர்களுக்காவது ஸ்பின்னர்களை நாடியிருந்தது சிஎஸ்கே. கோலி – டு ப்ளெஸ்ஸியின் டிராக் ரெக்கார்டுகளை வைத்து பார்க்கையில் அவர்களுக்கான தூண்டில் ஸ்பின்னர்களால் … Read more