"அம்மா பிறந்தநாளில் `வலிமை' ரிலீஸ்… காரணம் இதுதானா?"- ஜெயலலிதாவின் முன்னாள் உதவியாளர் பூங்குன்றன்

‘வலிமை’ பிப்ரவரி 24 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. நடிகர் அஜித்தின் ரசிகர்கள், பல நாள்கள் காத்திருப்புக்கு பிறகு இந்தப் படத்தை வரவேற்க ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறார்கள். ஜெயலலிதாவின் உதவியாளராக பணியாற்றிய பூங்குன்றன் ஜெயராமன் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் அஜித் குறித்தும், ‘வலிமை’ ரிலீஸ் குறித்தும் பதிவு செய்திருக்கிறார். பூங்குன்றன் “புரட்சித்தலைவியின் மீது அதீத அன்பும், மரியாதையும் கொண்ட அஜித் அவர்கள் அரசியலுக்கு வருவதற்கு தன்னை ஆயத்தம் செய்து கொள்கிறார் என்றே நினைக்கத் தோன்றுகிறது. அம்மாவின் தொண்டர்களை அரவணைக்க … Read more

உக்ரைன் பதற்றம்; 100 டாலரைத் தொட்ட கச்சா எண்ணெய்; இந்தியாவை எப்படி பாதிக்கும்?

ரஷ்யா – உக்ரைன் போர் பதற்றத்தால் சர்வதேச சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணெயின் விலை 100 டாலரை நெருங்கியுள்ளது. இதனால் இந்தியாவில் பெட்ரோல் விலை 7- 8 ரூபாய் வரை உயர வாய்ப்புள்ளது எனச் சொல்லப்படுகிறது. அதே சமயம் இந்தியா, ரஷ்யாவிலிருந்து மேற்குப் பாதை வழியாக எண்ணெய் இறக்குமதி செய்வதால், விநியோகத்தில் எந்தத் தடையும் இருக்காது என்றும் கருதப்படுகிறது. 2020-ல் கொரோனா தொற்று பரவ ஆரம்பித்ததும், பல நாடுகளில் முழுமையான ஊரடங்கு போடப்பட்டது. அதனால் மக்கள் … Read more

“பருத்தி வீரன் க்ளைமாக்ஸ்ல என்னால பேசவே முடில!"- பிரியாமணி #15 years of Paruthiveeran

‘பருத்தி வீரன்’ வெளியாகி இன்றோடு 15 ஆண்டுகள் ஆகின்றன. இன்றைக்கும் கல்ட் படங்களில் அந்தப் படத்திற்கு எப்பவும் தனி இடம் உண்டு. கார்த்தி முதல் படத்திலேயே தனிப்பட்ட கதாநாயகன் அந்தஸ்து கிடைக்கவும் இதுதான் காரணம். கார்த்தியை செதுக்கியதில் அமீருக்கு பெரும் பங்கிருக்கிறது. அதில் முத்தழகாக நடித்து, தேசிய விருது பெற்று மொத்த தமிழ் சினிமாவையையும் திரும்பிப் பார்க்க வைத்த ப்ரியாமணியிடம் பேசினேன். மும்பையில் இடைவிடாத படப்பிடிப்பில் இருந்தாலும் கூட ‘பருத்தி வீரன்’ நினைவுகளில் கரைந்தார். ”பருத்திவீரன்’ வெளியாகி … Read more

“பாஜக தான் தமிழகத்தின் 3-வது மிகப்பெரிய கட்சி!" – ராகுல் கருத்துக்கு அமித் மல்வியா பதில்

மக்களவையில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, “பா.ஜ.க-வால் தமிழகத்தை ஒருபோதும் ஆட்சி செய்ய முடியாது” என்றார். இவரின் பேச்சு இந்திய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தமிழக பா.ஜ.க மாநகராட்சியில் 15 வார்டுகள், நகராட்சியில் 56 வார்டுகள் மற்றும் பேரூராட்சியில் 230 வார்டுகள் என மொத்தம் 301 வார்டுகளில் வெற்றிபெற்றுள்ளது. ராகுல் காந்தி – நாடாளுமன்றம் தமிழக … Read more

கதாநாயகனா கதையின் நாயகனா… கார்த்தியின் நாயக பிம்பம் எத்தகையது? | 15 years of Karthi

நூறாண்டைக் கடந்த தமிழ் சினிமாவில் வியாபார ரீதியாகவும், திரைப்பட உருவாக்க ரீதியாகவும் பல மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. திரையரங்கத்தின் திரைகள் ஆயிரக்கணக்கான படங்களை, நூற்றுக்கணக்கான நடிகர்களைக் கடந்து ஒளிர்ந்துகொண்டிருக்கின்றன. சில படைப்புகளும், சில நடிகர்களும் திரையோடில்லாமல், மக்களின் வாழ்வோடும் கலந்திடும் விந்தை அவ்வப்போது நிகழ்கிறது. வழமையான கதைகள், ஒன்றாத காட்சியமைப்புகள் என படைப்புலகமும் மக்களும் சோர்வாகும்போது கலை மீதான நம்பிக்கையைத் தளரவிடாதிருக்க ஒரு படைப்பு வெளியாகும். அந்தப் படைப்பு ஒட்டுமொத்த படைப்பாளிகளுக்கும் நம்பிக்கைத் தரக்கூடியதாக அமைந்துநிற்கும். 2007 அப்படியானதொரு … Read more

உக்ரைன் விவகாரம்: “கிழக்கு ஐரோப்பாவுக்கு கனேடிய படை அனுப்பப்படும்" – ஜஸ்டின் ட்ரூடோ

கடந்த சில நாள்களுக்கு முன்பு உக்ரைன் எல்லையிலிருந்து ரஷ்யா தனது படைகளின் ஒரு பகுதியினை திரும்பப்பெற்றதாக அறிவித்திருந்தது. ஆனால், உக்ரைன் எல்லையில் முன்பு இருந்ததை விடவும் தற்போது அதிக ராணுவ வீரர்களை ரஷ்யா குவித்து வைத்துள்ளதாக பல நாடுகள் ரஷ்யாவுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றன. இதனால் போர் பதட்டமும் அதிதீவிரமாகியுள்ளது. இந்த நிலையில், கடந்த திங்கள்கிழமை ரஷ்ய அதிபர் புதின், பிரிந்து சென்ற டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் ஆகிய குடியரசு மக்களின் சுதந்திரத்தை அங்கீகரிப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு … Read more

Chennai Book Fair: "வடசென்னைக்கும் மதுரைக்கும் ஒரே நிறம்" – எழுத்தாளர் பாக்கியம் சங்கர்!

‘வடசென்னை இன்னும் விரிவாக இலக்கியத்தில் பதியப்பட்ட வேண்டும்’ எனச் சொல்லும் எழுத்தாளர் பாக்கியம் சங்கர், அறியப்படாத சென்னையின் பக்கங்களையும் அதன் எளிய மனிதர்களின் கதையையும் தொடர்ச்சியாக எழுதி வருபவர். அவரிடம் புத்தகக் காட்சி குறித்து உரையாடினோம். “புத்தகக் கண்காட்சிக்கும் உங்களுக்குமான உறவு பற்றி…” “எனக்கும் புத்தகக் கண்காட்சிக்குமான உறவு குறைந்தது 20 வருடங்கள் இருக்கும். அப்போதெல்லாம் புத்தகம் வாங்க காசு இருக்குமா எனத் தெரியாது. அங்க போனால் நிறைய சீனியர் எழுத்தாளர்களை பார்க்க முடியும் என மட்டும் … Read more

கோவை: சொல்லியடித்த செந்தில் பாலாஜி… வேலுமணி சறுக்கியது எங்கே?!

2021 மே 2-ம் தேதி 10 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாட்டில் மீண்டும் ஆட்சியை பிடித்தது தி.மு.க. ஆட்சியைப் பிடித்தாலும், கோவை மாவட்டத்தில் ஒரு தொகுதியை கூட பிடிக்க முடியாதது முதல்வர் மு.க. ஸ்டாலின் மனதில் கவலையை ஏற்படுத்தியது. ஸ்டாலினுக்கும், தி.மு.க-வுக்கும் சிம்மசொப்பனமாக இருந்தார் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி. எஸ்.பி வேலுமணி ‘கோவை ஃபார்முலா’ – ரூ.750 கோடி… கேலிக்கூத்தான தேர்தல்! இந்தப் பிரச்னைகளை போக்க ஸ்டாலின் கோவைக்கு அனுப்பிய அஸ்திரம் அமைச்சர் செந்தில் பாலாஜி. … Read more

550 படங்கள்; தலைமுறைகள் கடந்த குணச்சித்திர நடிகை KPAC லலிதா மறைந்தார்; கண்ணீரில் கேரள திரையுலகம்!

550 க்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்த மலையாள நடிகை KPAC லலிதா உடல்நலக் குறைவால் நேற்று இரவு மறைந்தார். அவருக்கு வயது 74. தன்னுடைய ஆரம்ப காலங்களில் நாடங்களில் நடித்தார் லலிதா. அவர் பணிபுரிந்த கேரளா இடதுசாரி நாடக நிறுவனத்தின் பெயர் KPAC என்பதே பின்னாளில் அவர் பெயரின் முன்னொட்டாக மாறிப்போனது. தன்னுடைய வெள்ளந்தியான பாவனை, நகைச்சுவை நடிப்பின் வழியாகத் திரைப்படங்களின் கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்தவர். “நான் கதாநாயகி போல முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க … Read more

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மேலும் ஒரு வழக்கில் கைது!

தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின் வாக்குப்பதிவானது கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. அன்று சென்னை ராயபுரம் பகுதியில், திமுக பிரமுகர் ஒருவர் கள்ள ஓட்டு செலுத்த வந்ததாக கூறி, அ.தி.மு.கவினர் பலர் அந்த திமுக நபரை அரைநிர்வாணமாக்கி தாக்கியுள்ளனர். இந்த சம்பவத்தின் போது, அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும் அங்கு இருந்தார். இது தொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலானது. மேலும் ஒரு வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது இதையடுத்து, சென்னை தண்டையார்பேட்டை காவல்துறையினர் ஜெயக்குமார் உட்பட … Read more