இரவு நேர விருந்தில் கலந்துகொண்ட ராகுல்? – வைரலான வீடியோ… சாடிய பாஜக, விளக்கமளித்த காங்கிராஸ்!

ராகுல் காந்தி நேபாளில் உள்ள கிளப்பில் இரவு விருந்து நிகழ்ச்சி ஒன்றில் நிற்பது போன்றும், அவரைச் சுற்றி பலர் மது அருந்துவது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. காங்கிரஸ் கட்சி தொடர்ச்சியாக தேர்தல்களில் தோல்வியைச் சந்தித்துவரும் வேளையில், ராகுல் காந்தியின் இத்தகைய வீடியோ அரசியல் அரங்கில் சர்ச்சையைக் கிளப்பியது. பல்வேறு அரசியல் கட்சியினரும் சமூக வலைதளங்களில் இந்த வீடியோவைப் பகிர்ந்து, ராகுலை விமர்சித்து வருகின்றனர். அந்த வகையில், பாரதிய ஜனதா … Read more

அஜித் படங்களின் படப்பிடிப்பு; தொழிலாளர்கள் பாதிப்பு; `பொறுமையை மீறி கோரிக்கை வைக்கிறோம்' – ஃபெப்சி

”தயாரிப்பாளர் சங்கமும், தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர் சங்கமும், தென்னிந்திய தொழிலாளர்கள் சம்மேளனமும் இணைந்து பணிபுரிவதற்கான விதிமுறைகளையும், பொதுவிதிகளையும் சம்பள உயர்வையும் பேசி முடித்துக் கையெழுத்திடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் நடப்பு தயாரிப்பாளர் சங்கம் மற்றும் கில்டு அமைப்பிற்கும் செல்லும் என ‘ஃபெப்சி’ தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்திருக்கிறார். இதன் பத்திரிகையாளர் சந்திப்பில் ”அஜித்தின் படங்களுடைய படப்பிடிப்புகள் தொடர்ந்து வெளி மாநிலங்களில் நடந்து வருவது குறித்து கேள்வி எழுப்பட்டது. இதுகுறித்து ஆர்.கே.செல்வமணி பேசியதாவது, ”பத்திரிகையாளர்கள் இப்படி ஒரு குரல் எழுப்பியதற்கு வணக்கத்தை தெரிவிச்சுக்கறோம். … Read more

சூரியன் be like: “இன்னும் அடிக்கவே ஆரம்பிக்கல; அதுக்குள்ள அலர்றீங்க!'' – கலக்கல் Summer மீம்ஸ்

‘பயமா இருக்கா… இதுக்கப்புறம் இன்னும் பயங்கரமா இருக்கும்’ என்ற ரேஞ்சில், கத்தரி வெயில் தொடங்குவதற்கு முன்பே வெயில் பட்டையைக் கிளப்பி வருகிறது. எல்லா கஷ்டங்களையும் மீம்ஸ் போட்டு சிரித்துக் கடப்போர் சங்கம் சார்பா… அக்னி நட்சத்திரம் மீம்ஸ் கலெக்‌ஷன் இங்கே! Summer மீம்ஸ் Summer மீம்ஸ் Summer மீம்ஸ் Summer மீம்ஸ் Summer மீம்ஸ் Summer மீம்ஸ் Summer மீம்ஸ் Summer மீம்ஸ் Summer மீம்ஸ் Summer மீம்ஸ் Summer மீம்ஸ் Source link

`வலிமை' கொடுக்கும் மூலிகை `நண்பன்' – முருங்கை மகத்துவம் அறிவோம்! – மூலிகை ரகசியம் – 5

முருங்கை மரம் என்றதுமே, மரம் நினைவுக்கு வருகிறதோ இல்லையோ, அதன் மரக்கிளைகளில் ஊர்ந்துகொண்டிருக்கும் கம்பளிப் பூச்சிகள் நிச்சயமாக உங்கள் நினைவில் வந்து செல்லும். முருங்கை மரத்திலுள்ள மருத்துவக் குணங்களைத் தெரிந்து வைத்துக்கொண்டுதான் என்னவோ, கம்பளிப் பூச்சிகள் அங்கேயே குடித்தனம் நடத்துகின்றன போலும்! சரி அதைக் கம்பளிப் பூச்சிகளிடமே ரகசியமாகப் பிறகு கேட்டு தெரிந்துகொள்ளலாம். கிராமத்து முருங்கை: கிராமங்களில் உள்ள அனைத்து வீடுகளிலும் ஒரு முருங்கை மரமாவது நின்றுகொண்டிருப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம். காரணம் என்ன தெரியுமா? முருங்கை மரத்தின் … Read more

குஜராத் காங்கிரஸிலிருந்து விலகும் ஹர்திக் பட்டேல்… எந்தக் கட்சியில் இணையப் போகிறார்?

குஜராத் மாநிலத்தில், இந்த ஆண்டு இறுதியில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவிருப்பதால், அங்கு அரசியல் களம் பரபரக்கத் ஆரம்பித்திருக்கிறது. பா.ஜ.க, காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் தேர்தல்களுக்கான வேலைகளில் தீவிரமாக இறங்கியிருக்கின்றன. இந்த நிலையில், குஜராத் மாநில காங்கிரஸின் செயல் தலைவராக இருந்த ஹர்திக் பட்டேல் கட்சியிலிருந்து விலகப்போவதாகச் செய்திகள் வெளியாகிப் பரபரப்பை உண்டாக்கியிருக்கின்றன. யார் இந்த ஹர்திக் பட்டேல்? குஜராத் மாநிலத்திலுள்ள ஓ.பி.சி சமூகங்களுள் ஒன்றான பட்டிதார் சமூகத்தைச் சேர்ந்தவர்தான் ஹர்திக் பட்டேல். 2012-ம் ஆண்டு … Read more

சென்னை: சிகிச்சைக்காக சென்றவர் மர்ம மரணம் – போதை மறுவாழ்வு மையத்தில் நடந்தது என்ன?

சென்னை ராயப்பேட்டை டாக்டர் அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் ராஜி (45). இவர் ஆட்டோவுக்கு கூண்டு கட்டும் வேலை செய்து வந்தார். குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவரை ராயப்பேட்டை பகுதியில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் அவரின் குடும்பத்தினர் சேர்த்தனர். இந்த நிலையில், இன்று அதிகாலை ராஜியை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்திருப்பதாக போதை மறுவாழ்வு மையத்தின் ஊழியர்கள் அவரின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த ராஜிவின் மனைவி கலா, குடும்பத்தினர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு வந்தனர். அங்கு … Read more

பாலியல் குற்றச்சாட்டில் விஜய் பாபு மீது நடவடிக்கை எடுக்க மறுப்பு; ராஜினாமா செய்த மாலா பார்வதி!

மலையாளத் திரைத்துறையில் தயாரிப்பாளராகவும் நடிகராகவும் பணியாற்றிவரும் விஜய் பாபு என்பவர் பெண் நடிகையை பாலியல் தொந்தரவுகள் செய்ததாக அவர்மீது பாலியல் புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடந்துவருகிறது. இந்நிலையில் `அம்மா’ என்று அழைக்கப்படும் மலையாளத் திரைப்படக் கலைஞர்கள் சங்கம் விஜய் பாபு மீது நடவடிக்கை எடுக்க முடியாது என்று தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்திவருகிறது. மேலும் இது பற்றிக் கூறிய `அம்மா’ அமைப்பின் துணைத் தலைவர் மணியன் “ஒருவர் மீது புகார் இருப்பதன் காரணமாகவே அவரை சங்கத்தை விட்டு நீக்கிவிட … Read more

விழிச்சவாலைப் போக்கும் `ஸ்மார்ட் விஷன் கண்ணாடிகள்' – நம்பிக்கை அளிக்கும் புதிய தொழில்நுட்பம்!

பார்வை இழந்தவர்களுக்கும், பார்வைக் குறைபாடு உள்ளவர்களுக்கும் சாதாரணமாகச் செய்யும் வேலைகளுக்கும்கூட பிறரை எதிர்பார்த்திருக்கும் சூழல் உள்ளது. பஸ் ஏறுவதற்கும், தேர்வு எழுதுவதற்கும், படிப்பதற்கும் என பிறரைச் சார்ந்து வாழும் சூழலில், அலெக்சாவை போல ஒரு குரல் இவர்கள் கேட்கும் அனைத்தையும் வழங்கும். பார்வையை இழந்தவர்கள் தங்கள் வாழ்க்கையில் பிறரைச் சாராமல் இருக்க, நடக்க, படிக்க, பிறரிடம் பேச என முற்றிலும் அவர்களின் தேவையைப் புரிந்துகொண்டு உருவாக்கப்பட்டதே `ஸ்மார்ட் விஷன் கண்ணாடிகள்’ (Smart Vision Glasses). பார்வையை இழந்தோர் … Read more