26 பாக்கெட்டுகள்… 46 கிலோ – ரயிலில் கஞ்சா கடத்திய தம்பதி கைது

மயிலாடுதுறை ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸார்   பாஸ்கரன், சதீஷ்குமார், சரவணன், பஞ்சவர்ணம், ஆகியோர்  திருச்செந்தூர் – சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ரயில் பெட்டியில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் இருந்த பைகளை சோதனை செய்தனர். அதில் ஒரு பையில் பண்டல் பண்டலாக கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. கஞ்சா மேலும் ரயிலில் சந்தேகப்படும் வகையில் பைகள் அருகே அமர்ந்திருந்த திருச்சி தாராநல்லூரைச் சேர்ந்த சிவசங்கர் (வயது 25)  அவர் மனைவி சத்யா (வயது 20), சரபேஸ்வரர் … Read more

`மெஹருசைலா அழகி' க்யூட் கல்யாணி பிரியதர்ஷன் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்! | HBD Kalyani Priyadarshan

Kalyani Priyadarshan | கல்யாணி பிரியதர்ஷன் மாநாடு, மரைக்காயர், ஹிருதயம் என தமிழ், மலையாள திரையுலகில் கல்யாணி பிரியதர்ஷன் வளர்ந்துவரும் நடிகை. இவரது இன்னொரு பக்கம் சுவாரஸ்யமானது. Kalyani Priyadarshan | கல்யாணி பிரியதர்ஷன் கல்யாணி முதன்முதலாக சினிமா துறைக்குள் வந்தது தயாரிப்பு வடிவமைப்புக்காக. ஹிந்தியில் ‘கிரிஷ் 3’ படத்தில் சாபு சிரிலுக்கு உதவியாளராகத் தயாரிப்பு வடிவமைப்பில் பணியாற்றினார். Kalyani Priyadarshan | கல்யாணி பிரியதர்ஷன் தமிழில் விக்ரம், நயன்தாரா நடித்த ‘இருமுகன்’ படத்திலும் தயாரிப்பு வடிவமைப்பு … Read more

அரசியல் கட்சிகளுக்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் அளித்த நன்கொடை – ரூ.720 கோடி பெற்று பாஜக முதலிடம்!

அரசியல் கட்சிகளுக்கு ஒவ்வொரு கார்ப்பரேட் நிறுவனமும் தேர்தல் நேரத்தில் கோடிக்கணக்கான ரூபாய் நன்கொடையாக வழங்குகின்றன. தேர்தலில் வெளிப்படைத் தன்மைக்காகப் போராடும் தொண்டு நிறுவனம் ஒன்று, ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் எவ்வளவு நன்கொடை பெற்றிருக்கின்றன என்பது குறித்து அறிக்கை ஒன்று வெளியிட்டிருக்கிறது. அந்த அறிக்கையில், 2019-20-ம் ஆண்டு பா.ஜ.க ரூ.720.407 கோடி நன்கொடை பெற்றுள்ளது. மொத்தம் 2,025 கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து இவை கிடைத்துள்ளது. தேசிய கட்சிகளுக்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் கொடுத்துள்ள நன்கொடையின் அளவு 2017-18-ம் ஆண்டை விட 2018-19-ம் … Read more

`கடவுளுக்கும் கண்ணில்லையா..?' – விழிச்சவால் மகன்களுடன் வறுமையில் வாடும் விசாலாட்சி

குடும்பத்தின் வறுமையையும், துயரங்களையும் தங்கள் தலைமீது வைத்து சுமக்கும் பெண்களின் மனவலிமை எப்போதும் பிரமிப்பை ஏற்படுத்தக்கூடியது. அதோடு முதுமையும் சேர்ந்துகொண்டபோதும், வாழ்க்கையை வாழ்வதற்கான எல்லா வழிகளும் அடைக்கப்பட்டபோதும், பிள்ளைகள் மீது கொண்ட ஒப்பற்ற பாசத்தால் இன்று வரை முட்டிமோதி குடும்பத்தை நடத்தி வருகிறார் விசாலாட்சி. விசாலாட்சி கணவரால் கைவிடப்பட்டவர். இந்நிலையில், அவரின் இரண்டு பிள்ளைகளுக்குத் திடீரென கண்பார்வை பறிபோய்விட்டது. மூன்றாவது பிள்ளை ரயில் விபத்தில் திடீரென இறந்துவிட்டார். இப்படி சோகங்களையும் துயரங்களையும் மட்டுமே வாழ்வாக வாழ்ந்துவரும் விசாலாட்சிக்கு … Read more

மாணவர் சேர்க்கைக்கு ரூ.1.5 லட்சம் லஞ்சம்! – கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல்வருக்கு 5 ஆண்டுகள் சிறை

சென்னைக்கு அருகில் உள்ள நெற்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் கடந்த 2018-ம் ஆண்டு, தனது மகனைச் சென்னை அசோக் நகரில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் சேர்க்க விண்ணப்பித்திருந்தார். அப்போது அந்த பள்ளியின் முதல்வராக இருந்த ஆனந்த், மாணவரைச் சேர்க்க 1.5 லட்சம் ரூபாய் லஞ்சமாகக் கேட்டுள்ளார். மாணவரைப் பள்ளியில் சேர்க்கும்போது ஒரு லட்சம் ரூபாயும், அதன்பின், 15 நாள்களுக்குப் பிறகு மீதமுள்ள 50 ஆயிரத்தை வழங்கும்படியும் தெரிவித்துள்ளார். ஆனந்த் ராஜேந்திரன் பள்ளி முதல்வர் லஞ்சம் … Read more

"`பீஸ்ட்' ஷூட்டிங் ஸ்பாட் பார்த்து விஜய்க்கு பெரிய ஷாக்! ஆனா, எங்க டீம்…"- நெல்சன் Exclusive

ஹாட்ரிக் அடிக்க ரெடியாகிவிட்டார் இயக்குநர் நெல்சன் திலீப்குமார். ‘கோலமாவு கோகிலா’, ‘டாக்டர்’ வெற்றிகளைத் தொடர்ந்து விஜய்யுடன் இப்போது ‘பீஸ்ட்’ வருகிறது. டிரெய்லர் எதிர்ப்பார்ப்பைக் கிளப்பியிருக்க, ரிலீஸ் பரபரப்பிலும் முகம் மலர்ந்து வரவேற்கிறார். நெல்சன் ஷூட்டிங் ஸ்பாட்ல எப்பவும் சிரிப்பு சத்தம் கேட்டுட்டே இருக்குமாமே..? விஜய் ஷாக் ஆனாரா? “உண்மைதான். ‘பீஸ்ட்’க்கு முன்னாடி படமான ‘டாக்டர்’ ஸ்பாட்டும் அப்படித்தான் இருந்துச்சு. ‘பீஸ்ட்’ல இந்த ஜாலி இன்னும் அதிகமாகிடுச்சு. விஜய் சார், ஸ்பாட்ல செம கூல் ஆக இருப்பார். அதுவே … Read more

`எரிபொருள் விலை உயர்வுக்கு பாஜக தான் காரணம்; அனைத்து கட்சி கூட்டத்தைக் கூட்டுங்கள்' – மம்தா பானர்ஜி

இந்தியாவில் உத்தரப்பிரதேசம், கோவா, மணிப்பூர், பஞ்சாப், உத்தரகாண்ட ஆகிய ஐந்து மாநிலத் தேர்தல் அறிவிப்புக்குப் பின்னர் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்த்தப்படாமல் இருந்துவந்தது. தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் கடந்த சில நாள்களாகவே பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளது. இதனால் பொது மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். மோடி – மம்தா பானர்ஜி மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இது தொடர்பாக நேற்று செய்தியாளர்களிடத்தில் பேசுகையில், “எரிபொருள் விலை உயர்வைச் சமாளிக்க மத்திய அரசிடம் எந்த … Read more

டெல்லியை ஆட்டுவிக்கும் டின்னர் சென்டிமென்ட்… ஸ்டாலினின் தேசிய அளவிலான கணக்கு பலிக்குமா?

“தேசிய அளவில் பா.ஜ.க-வை எதிர்க்கும் கட்சிகள் எல்லாம் ஓர் அணியில் திரளவேண்டும். தமிழ்நாட்டில் தி.மு.க-வுடன் காங்கிரஸ் கட்சி இருப்பதைப் போன்று அகில இந்திய அளவில் கொள்கை அளவிலான கூட்டணியை காங்கிரஸ் கட்சி வலுப்படுத்த வேண்டும்” என்று தலைநகர் டெல்லியிலிருந்து ஸ்டாலின் வெளியிட்ட கருத்துக்கள் தேசிய அளவில் கவனத்தைப் பெற்றன. முதல்வர் ஸ்டாலின் ஒரே நாடு, ஒரே தேர்தல் என்கிற கோஷத்தை பா.ஜ.க முன்னிறுத்திவரும் நிலையில், மாநில கட்சிகளுக்கான அதிகார வரம்புகளையும் எதிர்காலத்தில் பாஜக காலிசெய்துவிடும் என்கிற அச்சம் … Read more

மௌனமாய் சில 'Non-Linear' கீதங்கள் | புத்தம் புது காப்பி

பிரிவுகள் இன்றளவும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அதை ஜனரஞ்சகமான திரைக்கதையாக்கிய விதத்தில்தான் பாக்யராஜ் தனித்து ஜொலிக்கிறார். புத்தம்புது காப்பியின் இந்த வார அத்தியாயம் ஒரு திரைக்கதை அல்ல. தமிழ் சினிமாவில் நான் பார்த்து, ரசித்த ஒரு திரைக்கதை பற்றிய, அதன் நுணுக்கங்கள் பற்றிய விரிவுரை! அதன் படைப்பாளி பற்றிய புகழுரை! தமிழ் சினிமாவில், திரைக்கதை பற்றிய தொகுப்பு எனும்போது இவரைப் பற்றி குறிப்பிடாமல், அந்த தொகுப்பு முழுமை பெற முடியாது. அவர் வேறு யாருமல்ல இயக்குநர் கே.பாக்யராஜ் … Read more

Doctor Vikatan: தினமும் கடுக்காய் பொடி சாப்பிடுவது ஆரோக்கியமானதா?

தினமும் இரவில் கடுக்காய்ப் பொடியும் திரிபலா பொடியும் சாப்பிடுவது நல்லதா? இந்த இரண்டும் எடைக்குறைப்புக்கு உதவும் என்பது சரியா? இதை எல்லா வயதினரும் எடுத்துக்கொள்ளலாமா? எவ்வளவு, எப்போது எடுத்துக்கொள்ள வேண்டும்? – ருத்ரா (விகடன் இணையத்திலிருந்து) அரசு சித்த மருத்துவர் வரலட்சுமி பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் வரலட்சுமி. “இரவில் தினந்தோறும் கடுக்காய்ப் பொடி எடுத்துக் கொள்ளலாமா என்று கேட்டிருக்கிறீர்கள். ஆனால் அந்த கடுக்காய்ப் பொடியின் தயாரிப்பு முறை ரொம்பவே முக்கியம். பிஞ்சு … Read more