கண் சிவக்கலாம்… மண் சிவக்கலாமா?
‘கண் சிவந்தால் மண் சிவக்கும்’ என்பார்கள். இரண்டும் சிவப்பாவதைத் தடுத்து விட்டால் உலகில் அமைதி நிலவும். ஏனெனில், கோபத்தில் சிவக்கின்ற கண்களுக்கு அதிக ரத்தம் போய் விடுவதாலேயோ என்னவோ, மூளை தேவையான ரத்தமின்றி உக்கிரமாக யோசித்து, ஆபத்தான முடிவுகளை அவசரமாக எடுக்க, ரத்தக் களறியில் மண்ணும் சிவக்கும் மடமை அரங்கேறி விடுகிறது. மனித சமுதாயம், போர்களின் நிகழ்வால் ஏற்படும் வேதனைகளை விளக்கமாக அறிந்திருந்தாலும், அதனைத் தடுக்கத் தவறி விடுகிறது. ‘நான்தான் சூப்பர்’ என்ற ஈகோ காரணமாகவே எப்பொழுதும் … Read more