இன்றைய ராசி பலன் | 12/03/2022 | Daily Rasi Palan | Daily Horoscope | Astrology | Sakthi Vikatan

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். #இன்றையராசிபலன் Today’s Horoscope | rasi palan #DailyHoroscope​ | #Rasipalan​ | #Horoscope​ #Raasi​ #Raasipalan #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #சந்திராஷ்டமம் #chandrastamam 12 ராசிகளுக்கான ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் 2022 : https://bit.ly/3srMOs 12 ராசிகளுக்கான ராகு – கேது புத்தாண்டு பலன்கள் … Read more

“திருச்சி விமான நிலையத்துக்கு அடுத்தபடியாக சேலம் விமான நிலையம்" – எஸ்.ஆர்.பார்த்திபன் திட்டவட்டம்

சேலம் விமான நிலைய ஆலோசனைக் குழு கூட்டம் இன்று நடைப்பெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய எம்.பி எஸ்.ஆர்.பார்த்திபன், “எதிர்வரும் காலங்களில் திருச்சிக்கு அடுத்து சேலம் விமான நிலையம்தான் பன்னாட்டு விமான நிலையமாக விளங்கும். அதற்கான கட்டமைப்பு வேலைகளை தற்போது தொடங்கி விட்டோம். சேலத்திலிருந்து இரவு நேர விமான சேவை துவங்குவதற்கும், கூடுதல் விமானங்கள் நிற்பதற்கும் பார்க்கிங் வசதி ஏற்படுத்தும் வகையில், இந்திய விமானப் போக்குவரத்து துறை 6.5 கோடி மதிப்பீட்டில் திட்டத்தை நிறைவேற்ற ஒப்பந்தப் புள்ளி போடப்பட்டுள்ளது. … Read more

இலங்கை பதிவெண் கொண்ட படகு; தமிழக மீனவர்களைக் கண்டதும் தப்பியோடிய மர்ம நபர்கள் – போலீஸ் விசாரணை!

ராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டினம் ஜமீன்தார் வலசை கடற்கரைப் பகுதியில் இன்று காலை மர்ம நபர்கள் சிலர் படகில் வந்திருக்கின்றனர். அவர்கள் அங்கு மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை கண்டவுடன் படகிலிருந்து குதித்து தப்பி ஓடிவிட்டனர். பின்னர் கரை ஒதுங்கிய அந்த படகை பார்த்த மீனவர்கள், அதில் இலங்கை பதிவு எண் இருந்ததைத் தொடர்ந்து, தேவிப்பட்டினம் கடலோர காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் ஆய்வாளர் கனகராஜ் தலைமையிலான போலீஸார் ஜமீன்தார் வலசை கடற்கரைப் பகுதிக்குச் சென்றனர். … Read more

உக்ரைன் போர்: “பேச்சுவார்த்தையில் நேர்மறை மாற்றங்கள்…" – புதின் தகவல்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவின் பேரில் கடந்த பிப்ரவரி மாதம் 24-ம் தேதி ரஷ்யப் படைகள் உக்ரைனில் போரைத் தொடங்கின. போரை நிறுத்துவதற்காக ரஷ்யத் தரப்பினரும், உக்ரைன் தரப்பினரும் ஏற்கெனவே மூன்றுமுறை அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் இரண்டுமுறை நடந்த பேச்சுவார்த்தையில் எந்தவொரு முடிவுகளும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில், ரஷ்ய அதிகாரிகள் மற்றும் உக்ரைன் அதிகாரிகள் அடங்கிய பேச்சுவார்தைக்குழு நடத்திய மூன்றாவது பேச்சுவார்த்தையை கடந்த 7-ம் தேதி பெலாரஸில் நடத்தியது. ரஷ்யா உக்ரைன் போர் பேச்சுவார்த்தைக்குப் … Read more

"அவரின் இழப்பு என்னை…"- ரசிகர் முத்துமணியின் மரணம் குறித்து போனில் துக்கம் விசாரித்த ரஜினி!

ரஜினிகாந்தின் அதி தீவிர ரசிகர் என்றால் நமக்கு டக்கென நினைவுக்கு வருவது மதுரையைச் சேர்ந்த ரஜினி முத்து என்று அன்புடன் அழைக்கப்பட்ட ஏ.பி.முத்துமணிதான். இவர்தான் ரஜினிக்காக முதன் முதலில் ரசிகர் மன்றத்தையும் தொடங்கினார். இவர் சமீபத்தில் உடல்நலக்குறைவால் மரணமடைந்த சம்பவம் ரஜினி ரசிகர்களையும் மதுரை மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. முத்துமணி தன் முதல் ரசிகர் மன்றத்தை உருவாக்கியவர் என்பதால் ரஜினியின் மனதுக்கு நெருக்கமானவராக இருந்தார் இந்த முத்துமணி. அவரின் திருமணம்கூட ரஜினிகாந்த் வீட்டின் பூஜையறை முன்புதான் நடைபெற்றது. … Read more

உச்சத்தில் உக்ரைன் போர்; ராணுவ வீரர்களுக்கு அழகு போட்டி நடத்திய ரஷ்யா? – ராணுவ இதழ் தகவல்

உக்ரைன் ரஷ்யா இடையே போர் தீவிரமாக நடந்து வரும் சூழலில் ரஷ்யா தனது நாட்டின் பெண் ராணுவ வீரர்களுக்கு அழகு போட்டி நடத்தியிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது . விளாடிமிர் புதினின் படைகள் உக்ரைனின் போர் மண்டலத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், ‘Makeup Under Camouflage’ எனும் தலைப்பில் ஒரு அழகு போட்டி நடத்தப்பட்டதாகவும், அதில் கலந்துகொண்டவர்களில் ஏவுகணைப் படைகளைச் சேர்ந்த பெண் ராணுவ வீரர்களும் அடங்குவர் என்றும் கூறப்படுகிறது. அழகி போட்டி-யின் ஒரு பகுதி … Read more

கோலிவுட் ஸ்பைடர்: ரிலீஸுக்குக் காத்திருக்கும் த்ரிஷா படங்கள்; `வலிமை'யிலிருந்து யுவன் விலகியது ஏன்?

* கன்னடத்தில் ‘கப்ஸா’ என்ற படத்தில் நடிக்கிறார் ஸ்ரேயா. இது 1970களில் நடந்த கொடூரமான கேங்க்ஸ்டர் கதையாம். அதில் அரசி மதுமதியாக மெயின் ரோலில் பளபளக்கவிருக்கிறார். இப்படத்தில் ஸ்ரேயாவுடன் கிச்சா சுதீப், உபேந்திரா நடிக்கிறார்கள். ஏழு மொழிகளில் வெளியாகும் இப்படத்தின் பூஜை பெங்களூருவில் தொடங்கி, அங்கேயே தொடர்ந்து ஷூட்டிங் நடக்கவிருக்கிறது. ராஜமௌலியின் ‘ஆர்.ஆர்.ஆர்.’ படத்திற்குப் பிறகு இனி பெரிய புராஜெக்ட்களில் மட்டும் கவனம் செலுத்த முடிவு செய்திருக்கிறார் ஸ்ரேயா. ஸ்ரேயா சரண் * விஷாலுக்கு இந்த வருடம் … Read more

How to: கேசத்துக்கு சீரம் பயன்படுத்துவது எப்படி? | How to use serum for hair?

கேசப் பராமரிப்பில் ஷாம்பூ, கண்டிஷனர் போன்று சீரம் பயன்படுத்துவதும் மிகுந்த நன்மையைத் தரக்கூடியது. கேசத்தை மென்மையாகவும், பளபளப்பாகவும் வைத்திருப்பது, கேசம் உதிர்வில் இருந்து பாதுகாத்து ஊட்டம் தருவது என சீரத்தின் பங்கு கேசப் பராமரிப்பில் அதிகம். சீரம் பயன்படுத்துவது தொடர்பாக சில சந்தேங்கங்கள் நிலவி வருகின்றன. அதிக பலன்களைத் தரக்கூடிய சீரத்தை எப்படிப் பயன்படுத்துவது என்பது குறித்து இங்கே பார்க்கலாம். How to: முல்தானி மெட்டியைப் பயன்படுத்துவது எப்படி? | How to use multani mitti? … Read more

இந்தியா முழுவதும் நாளை நடக்கவிருக்கும் லோக் அதாலத் – அதன் பயன்கள் என்ன?!

லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றம் இந்தியா முழுவதும் நாளை (மார்ச் 12-ம் தேதி) நடைபெறவிருக்கிறது. லோக் அதாலத் பற்றியும், அதன் பயன்கள் பற்றியும் பல முக்கியத் தகவல்களை நாகப்பட்டினம் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் செயலாளரும் சார்பு நீதிபதியுமான செ.சுரேஷ்குமார் நம்மிடம் பகிர்ந்துகொண்டார். “நீதிமன்றத்தில் வழக்குகள் அதிகப்படியாகத் தேங்குவதைத் தவிர்ப்பதற்கும், நீண்டகாலமாக நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு எளிதாக தீர்வுகாணவும் லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றம் உதவுகிறது. இதில், சட்டப் பணிகள் ஆணைக் குழு … Read more

“ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகளால் உலகளாவிய உணவுப் பொருள்களின் விலை உயரும்!" – புதின் எச்சரிக்கை

ரஷ்யா மீது அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளதால் ரஷ்யா பெரும் நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறது. பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டால் எந்த நாட்டின் மீது விதிக்கப்பட்டதோ அந்த நாட்டுடன் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி செய்ய இயலாது. அந்த வகையில், அண்மையில் ரஷ்யாவின் கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு அமெரிக்கா தடைவிதித்தது. உணவுப் பொருள் இந்த நிலையில், ரஷ்ய அதிபர் புதின் தங்கள் நாட்டின் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகள் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். இதுதெடர்பாகப் பேசிய … Read more