பிரமோத் சாவந்த்: நீண்ட கால திட்டம்; ஆர்.எஸ்.எஸ் தயவு… மீண்டும் முதல்வராவாரா ஆயுர்வேத மருத்துவர்?

கோவாவில் யாராலும் அசைக்க முடியாத சக்தியாக விளங்கிய மனோகர் பாரிக்கர், கடந்த 2019-ம் ஆண்டு உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இதனால் சபாநாயகராக இருந்த பிரமோத் சாவந்த் முதல்வர் பதவிக்கு வந்தார். ஆயுர்வேத டாக்டரான பிரமோத் சாவந்த் தனது இளம் வயதிலேயே ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் தன்னை இணைத்துக்கொண்டார். கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் 1973-ம் ஆண்டு ஏப்ரல் 23-ம் தேதி பிறந்த பிரமோத் சாவந்த், 2017-ம் ஆண்டு கோவா சட்டமன்றத்தின் சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2019-ம் ஆண்டு மனோகர் … Read more

“ரஷ்யா – உக்ரைன் போரில் இந்தியா நடுநிலை வகிப்பது ஏன்?” – விளக்கிய பிரதமர் மோடி

நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தலில், உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய நான்கு மாநிலங்களில் பா.ஜ.க ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. இதிலும் முக்கியமாக உத்தரப்பிரதேசத்தில் 37 ஆண்டுகளாக எந்த கட்சியினாலும் அரங்கேறாத சாதனையாக பா.ஜ.க இரண்டாவது முறையாக உத்தரப்பிரதேசத்தில் ஆட்சியமைக்க உள்ளது. பா.ஜ.கவின் இந்த வெற்றியை இந்தியா முழுவதும் உள்ள பா.ஜ.கவினர் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில், டெல்லியில் உள்ள கட்சி தலைமையகத்தில் பா.ஜ.கவின் வெற்றி கூடத்தில் பேசிய பிரதமர் மோடி, உக்ரைன் விவகாரத்தில் இந்தியா … Read more

அம்பர்கிரிஸ்: பல கோடி ரூபாய் மதிப்பு; ரகசிய தகவலால் சிக்கிய 5 பேர்! – தப்ப முயன்றவர் படுகாயம்

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் மருத்துவமனை சாலையில் உள்ள ஒரு வீட்டில், பல லட்ச ரூபாய் மதிப்பிலான திமிங்கல கழிவு (அம்பர்கிரிஸ்) பதுக்கி வைத்திருந்து விற்பனை செய்ய முயல்வதாக ரோசனை காவல் நிலையத்திற்கு நேற்று முன்தினம் (9.03.2022) ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்படி ரோசனை உதவி ஆய்வாளர் அருள்தாஸ், திண்டிவனம் நகர காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஆனந்தராசன் தலைமையிலான காவல்துறை குழுவினர் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று மறைந்திருந்து கண்காணித்துக் கொண்டிருந்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்கள் ரத்தக் கடலான … Read more

`மக்களின் உயிரை காப்பாற்றிய ஹீரோ’ – மோப்ப நாய் சிம்பாவுக்கு 21 குண்டுகளுடன் அரசு மரியாதை

மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ம் தேதி பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடல் மார்க்கமாக வந்து மிகப்பெரிய அளவில் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து மும்பையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. வெடிகுண்டுகளை கண்டுபிடிக்க மோப்பநாய் படை விரிவுபடுத்தப்பட்டது. இதில் 2013-ம் ஆண்டு மும்பை போலீஸின் மோப்ப நாய் படைப்பிரிவில் சிம்பா என்ற நாய் சேர்க்கப்பட்டது. இந்த நாய் விஐபிக்களின் பாதுகாப்பிலும், வெடிகுண்டுகளை கண்டுபிடிப்பதிலும் முக்கிய பங்கு வகித்தது. கடந்த 9 ஆண்டுகளாக மும்பை போலீஸின் … Read more

“ஏழைகள் உரிமைகளைப் பெறும் வரை நான் ஓய்வெடுக்கப் போவதில்லை!" – வெற்றி கூட்டத்தில் பிரதமர் மோடி

ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல் முடிவுகளில், உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களில் அமோக வெற்றி பெற்றதை அடுத்து, டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் கொண்டாட்டங்கள் நடைபெற்றன. பிரதமர் மோடி வியாழக்கிழமை மாலை பா.ஜ.க-வின் தேசிய தலைமையகத்திற்குச் சென்றார். நான்கு மாநிலங்களில் பா.ஜ.க-வினர் சிறப்பாகச் செயல்பட்டதாகப் பிரதமர் மோடி பாராட்டினார். வெற்றி கூட்டத்தில் பிரதமர் மோடி அதைத் தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, “இது உற்சாகமான பண்டிகைகளின் நாள். இந்த உற்சாகம் இந்தியாவின் ஜனநாயகத்திற்கானது. … Read more

இன்றைய ராசி பலன் | 11/03/2022 | Daily Rasi Palan | Daily Horoscope | Astrology Sakthi Vikatan

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். #இன்றையராசிபலன் Today’s Horoscope | rasi palan #DailyHoroscope​ | #Rasipalan​ | #Horoscope​ #Raasi​ #Raasipalan #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #சந்திராஷ்டமம் #chandrastamam 12 ராசிகளுக்கான ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் 2022 : https://bit.ly/3srMOs 12 ராசிகளுக்கான ராகு – கேது புத்தாண்டு பலன்கள் … Read more

BJP வெற்றி பெற்ற ரகசியம்! – ShareChat-ல் Saran-cibi

2024-ம் ஆண்டு நடக்கப்போகும் நாடாளுமன்ற தேர்தலுக்கு ஒரு டிரைலராகப் பார்க்கப்பட்டதுதான் இந்த 5 மாநில தேர்தல் முடிவுகள். உ.பி-யில் பா.ஜ.க மீண்டும் வெற்றி பெறுமா? கோவா & மணிப்பூரில் இந்தமுறையாவது காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றுமா? பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சிக்கு திடீரென இவ்வளவு வளர்ச்சி வந்தது எப்படி? உத்தரகாண்டில் முந்துவது யார்? -போன்ற பல்வேறு கேள்விகளுக்குமான விடை இன்று தெரிந்துவிட்டது. 5 state election results இந்த முடிவுகளின் தரவுகள் அடிப்படையில் ‘The Imperfect Show’ டீமை … Read more

“உக்ரைன் சரணடையாது, ஆனால்…!" – உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் தகவல்

கடந்த மாதம் 24-ம் தேதி ரஷ்ய அதிபர் புதின் உத்தரவின்பேரில் உக்ரைனில் ரஷ்யப் படையினர் தொடங்கிய போர் 15-வது நாளாக தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. பல்வேறு நாடுகள் ரஷ்யாவுக்கு கண்டனம் தெரிவித்து ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதித்திருந்தாலும், ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான போர் இன்னும் முடிவுக்கு வராமலே இருக்கிறது. போர் நிறுத்துவது தொடர்பாக பெலாரஸில் மூன்று முறை உக்ரைனும், ரஷ்யாவும் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தியும் இரு தரப்பிலிருந்து சுமுகமான முடிவுகள் ஏதும் எட்டப்படவில்லை. இந்த நிலையில், நான்காவது … Read more

திருச்சி குழுமாயி அம்மன் திருவிழா: பலி கொடுக்கப்பட்ட ஆயிரக்கணக்கான ஆடுகள்; பரவசமடைந்த பக்தர்கள்!

திருச்சி உய்யக்கொண்டான் ஆற்றங்கரையில் ஆறுகண் பாலம் அருகே அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற குழுமாயி அம்மன் கோயில். இங்கு ஆண்டுதோறும் மாசி மாதம் நடைபெறும் திருவிழா மிகவும் விஷேஷம். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த மாதம் 27-ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. மார்ச் 7-ம் தேதி இரவு மறுகாப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து 8-ம் தேதி இரவு காளியாவட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பக்தர்கள் அம்மனை கோயிலில் இருந்து மேளதாளம் முழங்க ஊர்வலமாக புத்தூர் மந்தைக்கு … Read more